Sunday, December 6, 2020

பணத்தின் மதிப்பு

 value of money 

   

 

 அஞ்சு ரூபா நோட்டு கொஞ்சம் முன்னே மாத்தி, மிச்சமில்லெ, காசு மிச்சமில்லெ” “கத்திரிக்கா விலெ கூடக் கட்டுப்படியாகலே, காலங் கெட்டுப் போச்சு “இந்த பாடல் வரிகள் இப்போது கேட்கும்போது நகைச்சுவை போல் தோன்றினாலும் காலம் மாறியும் காசின் மதிப்பு குறைவது குறையவில்லை. என்பது நன்றாக விளங்குகிறது. வயதான காலத்தில் மனசுக்குத் தெம்பு கொடுக்க கையில் காசு அவசியம். ஆனால் பெரும்பாலான வயது முதிர்ந்தவர்கள் அது இல்லாமல் அவதிக்கு உள்ளாகிறார்கள். இள வயதிலேயே அரை வயிற்றுக்கு அவதிப் படுபவர் எப்படி வயதான காலத்தைப் பற்றி சிந்திக்க முடியும். வயதான காலத்துக்கு சேமிக்க வேண்டும் என்னும் ஆலோசனை சரியே. சேமிக்க முடிபவர்கள் எப்படி சில விஷய ஞானம் இல்லாமல் கோட்டை விடுகிறார்கள் என்பதையாவது சொல்லலாமே என்னும் நோக்கம்தான் இப்பதிவு.

 

அன்றைக்கு நூறு ரூபாய் சம்பாதித்தால் சுமாராக இருவர் அடங்கிய குடும்பம் ஒப்பேற்றிவிடும். ஆனால் இன்றோ.... எண்ணிப் பார்க்க முடியுமா.?அன்றைய ரூபாயால் வாங்க முடிந்த பொருள்கள் இன்றைக்கு முடியுமா. அன்றைக்கு சம்பாதித்ததைப் போல் பல மடங்கு இன்று சம்பாதிக்கிறார்கள். இருந்தும் ஏன் இந்த நிலை. இங்குதான் நமக்குப் பண வீக்கம் பற்றிய தெளிவு அவசியமாகிறது.

கிடைக்கும் சேவைக்கும், வாங்கும் பொருளின் விலைக்கும் கொடுக்க வேண்டிய அதிக பணமே பண வீக்கத்தின் காரணத்தால் விளைவது என்று கொள்ளலாமா.?பணவீக்கம்  விலை ஏற்றத்தையோ பணத்தின் மதிப்புக் குறைவையோ குறிக்கும் குறியீடு  வாரம் ,மாதம் வருடம் என்று ஒப்பிடப்பட்டுக் கணக்கிடப் படுகிறது. இதை கணக்கிட குறிப்பிட்ட தேவையான பொருட்களின் விலை ஏற்றமோ குறைவோ குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்கப் பட்டு ஒப்பிடப்பட்டு பண வீக்கம் கணக்கிடப் படுகிறது.

 

என்றால், ஒரு ரூபாய்க்கு வாங்கிய பொருளுக்கு ஒரு ரூபாய் பத்து காசு கொடுக்க வேண்டி பணவீக்கத்தின் மாற்றத்துக்கு ஏற்ப ரூபாயின் (கரன்சி )மதிப்பும் மாறும். பணவீக்கம் 10% இருக்கும். பொருளாதார வளர்ச்சி இருக்கும்போது பணவீக்கம் இன்றியமையாதது என்று கருதப் படுகிறது.

 

பணவீக்கத்தின் காரணம் இரண்டு வகையாக கருதப் அடுகிறது. 1) DEMAND PULL INFLATION. 2.) COST PUSH INFLATION  அருகிய பொருளை அதிகம் பேர் துரத்துவதால் ஏற்படுவது முந்தையது.( Demand is more than the supply. ) உற்பத்தி செலவு அதிகரிப்பால் ஏற்படுவது பிந்தையது 

 

DEFLATION, STAGFLATION, HYPER INFLATION   என்றும் பொருளாதார நிலைகள் இருக்கும். பணவீக்கம் குறைவது, எந்த மாற்றமும் இல்லாது இருப்பது, கட்டுப்பாடு இல்லாமல் பணவீக்கம் ஏறுவது போன்றவையும் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல.

 

பணவீக்கம் பலரை பல விதமாக பாதிக்கிறது. அன்றாட செலவுகளுக்கு கஷ்டப் படும் ஏழைகள் அத்தியாவசிய செலவுகளுக்குக் கடன் வாங்க வேண்டி இருக்கும் சில்லறை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், அதிக விலையை ஈடுகட்ட பொருட்களின் விலை ஏற்றத்தை சமாளிக்க அதிக சம்பளம் , அதை ஈடுகட்ட வங்கிக் கடன் அதிகமாகத் தேவைப் பட வட்டிவிகிதம் அதிகம் என்று சுழற்சியாக எல்லோரையும் பாதிக்கிறது பண வீக்கம்.

 

இந்த நிலையில் ஓய்வு காலத்துக்காக சேமித்தல் அவசியம் நான் ஓய்வு பெற விரும்பி வேலையை விட்டபோது யூனிட் ட்ரஸ்டில் 15% வட்டி சேமிப்புக்குக் கிடைத்தது. இப்போது ஒரு இலக்க வட்டி வீதமே கிடைக்கிறது. மாதம் 5000 ரூபாய் இருந்தால் மிகவும் சௌகரியமாக இருக்கலாம் என்று கணக்குப் போட்ட என்னால் இப்போது மிகவும் அவசியமான செலவு கூட சிந்திக்க வைக்கிறது. வரவு கூடாமல் செலவு அதிகமாகும் நிலையை ஓய்வு காலத்தில் அனுபவிக்கிறேன். இது அநேகமாக எல்லா முதியவர்களுக்கும் பொருந்தும். . நான் ஆரம்பத்திலேயே சொன்னபடி கைக்கும் வாய்க்கும் ஈடுகட்டவே கஷ்டப் படுபவர் சேமிப்பு பற்றி எப்படி யோசிப்பது. ஏதாவது செய்து அதிக வருவாய் ஈட்டத்தான் வேண்டும் அனாவசிய செலவினங்கள் குறைக்கப் பட வேண்டும் இதிலும் அவசியம் எது அனாவசியம் எது என்பதிலும் அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம் . இருந்தாலும் தவிர்க்கப் படக் கூடியதற்கு செய்யும் செலவு அனாவசியம். வெளியே உண்பது, நடந்து போகக் கூடிய தூரத்துக்கு ஆட்டோ என்றும் டாக்சி என்றும் செலவு செய்வது போன்றவை தவிர்க்கக் கூடியதே. இங்கு காந்திஜியின் ஒரு வாக்கு நினைவுக்கு வருகிறது. தேவைக்கு மீறி செலவு செய்பவன் எங்கோ ஓர் ஏழை அல்லது திருடனை உருவாக்குகிறான்

சேமிப்பது என்று தீர்மானித்து விட்டால் , சேமிக்க வேண்டிய தொகையும் கணக்கில் கொள்ள வேண்டும். இன்றைக்கு ஒரு ரூபாய்க்குக் கிடைக்கும் பொருளுக்கு ஒருவர் ஓய்வு பெரும்போது என்ன மதிப்பு இருக்கும் என்று ஓரளவாவது கணக்கில் கொள்ள வேண்டும் பணவீக்கம் இப்போதெல்லாம் இரண்டு இலக்கத்தில் இருக்கிறது. ஏதோ சேமிக்கிறேன் என்று இருந்தால் போதாது. எல்லாக் காலத்தையும்  சமாளிக்கும் வகையில் இருத்தல் அவசியம். இதெல்லாம் நல்ல ஆரோக்கியம் இருக்கும் வரை தான் செலாவணியாகும். நோய்நொடி என்று வந்து விட்டால் எல்லாக் கணக்கும் பணால்

 

எனக்கு வெகு நாட்களாக ஒரு ஆலோசனை. யார் மணி கட்டுவது.? வங்கிகளில் காசோலை வசதி இருக்க  குறைந்த அளவு  இவ்வளவு பணம் இருப்பில் இருக்க வேண்டும் என்பது விதி. அந்தப் பணத்துக்கும் சேமிப்பு வட்டியாக 4- லிருந்து 5 சதவீதமே கொடுக்கிறார்கள். அந்தப் பணத்துக்கு ஏன் அதிக வட்டி FIXED DEPOSIT –க்கு             

தருவதுபோல் கொடுக்கக் கூடாது. ?

 .

 18 comments:

 1. மதியத்துக்கு மேல் வருகிறேன்.

  ReplyDelete
 2. பணத்தைப்பற்றி, ஓய்வுகால சேமிப்பு பற்றி நீங்கள் எழுதியுள்ளது சரியே.

  எனக்கும் அவ்வளவு சரியான கைடன்ஸ் கிடைக்கவில்லை. என்னுடைய கொள்கையினாலும், நாளை என்ன ஆகும் என்பது தெரியாத்தாலும் ரொம்ப கன்சர்வேடிவாக இருந்துவிட்டேன்.

  We are the custodian of our funds என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கை உண்டு

  ReplyDelete
  Replies
  1. நான் எழுதியதுபெரும்பாலும் நடுத்தர வகுப்புக்கே பொருந்தும் என்பதுபோல் தெரிகிறது/We are the custodian of our funds என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கை உண்டு tobe the custodians we need to have the fundsகைக்கும் வாய்க்கும் எட்டாதபோது ஃபண்ட்ஸுக்கு எங்கே போவது
   ds

   Delete
 3. ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் ; தேவையற்ற பொருள்களை வாங்கக்கூடாது . இதற்கு மனத்தை அடக்கப் பழகவேண்டும் .

  ReplyDelete
  Replies
  1. சிலருக்கு ஆடம்பரமாகத் தெரிவது சிலருக்கு அத்த்தியாவசியமாகப் படலாம்

   Delete
 4. வயது கூடுந்தோறும் செலவுகள் குறைகின்றன என்பது ஓரளவு உண்மை. முக்கிய காரணம் மக்கள் பெரியவர்கள் ஆகி தனிக்குடித்தனம் செல்வது தான். அதற்கு அடுத்தபடியாக துணி மற்றும் ஆடம்பர அழகு சாதனங்கள் செலவும் குறைகின்றது. அதிகம் வெளியில் செல்லாத படியால் போக்குவரத்துக்கு மற்றும் கண்ணில் கண்ட பொருட்களை வாங்குவதும் மிச்சம். ஆனால் இதற்கு பதிலாக மருத்துவ செலவு அதிகரிக்கிறது. கணக்கு கூட்டி கழித்து பார்த்தால் நமக்கே நம்முடைய செலவை இவ்வளவு சுருக்கி விட்டோமோ என்று ஆச்சர்யம் தோன்றும்.  ஆக 60க்கு மேல் வீட்டு வாடகை இல்லாமல் 10000 ரூபாயில் கணவன் மனைவி இருவர் மாத செலவை சமாளிக்கலாம். முக்கிய செலவுகள் மருந்து 1500/-மின்சாரம் இணைய இணைப்பு 1500/- காஸ் 700/- பால் காபி தேயிலை சீனி 1100/- மளிகை 2500/- காய் 700/-

  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. இதுவரை என்மருத்துவச் செலவுகளை பிஎச் இஎல் கவனித்து வருகிறது மேலும்நான் ஒரு சிம்பிள் பெர்சன்ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு பார்ப்பவன்

   Delete
 5. நல்லதொரு எண்ணப் பகிர்வு.  என் அப்பா சொல்வார், 'உன் சம்பளத்தில் மிகக்குறைந்த பட்சம் இருபது சதவிகிதம் சேமிப்பில் வை' என்று.  முடிந்தவரை கடைப் பிடித்தேன்.  எல்லோருக்குமே ஆரம்ப காலங்களில் கஷ்டப்படுவதும் போகப்போக கொஞ்சம் சமாளிக்கும் திறமையும் கைவருகிறது..  சமீபத்தில் எங்கள் குடும்ப க்ரூப்பில் கூட எங்கள் மூத்த தலைமுறை இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தது.

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் வரவு இருப்பவருக்கு பெர்செப்ஷ்ன் எப்போதும்சரியவதில்லை கஷ்டம் எஃபெனிஷன் மாறும்

   Delete
 6. அரசு வேலைகளில் இருப்பவர்களுக்கு பி.எஃப், க்ராஜுடி, பென்ஷன் என்று வருவதால் சமாளிக்க முடியும். மற்றவர்கள் ஈ.எஸ்.ஐ, பிபிஎஃப் போன்றவற்றில் மாதா மாதம் குறிப்பிட்ட தொகை செலுத்தி வந்து சேமிக்கலாம். சேமிக்க எத்தனையோ வழிகள் உண்டு.

  ReplyDelete
 7. அரசுவேலையில் இருப்பவர் எண்ணிக்கை மிகவும் குறைவு சேமிக்க எத்தனையோ வழிகளிருந்தாலும்செயல்படுத்த சிரமம் அதிகம்

  ReplyDelete
  Replies
  1. மத்திய, மாநில அரசுகள், அரசு சார்ந்த பொதுத்துறைகள், வங்கிகள் என்று கணக்கெடுத்தால் கோடிக்கணக்கில் எண்ணிக்கை வரும்.

   Delete
  2. எனக்கு இருக்கும் பெர்செப்ஷனைத்தானே சொல்ல முட்யும்

   Delete
  3. யோசிச்சாலே போதும்.

   Delete
  4. பெர்செப்ஷன் யோசிக்காமல்வந்ததா

   Delete