Saturday, December 19, 2020

GM vs GM

 

GM Vs GM

என்ன எழுதுவது என்று மனதை குடைந்து கொண்டிருந்தபோது ஒரு ட்ரெண்டி  தலைப்பில் எழுதினால் என்ன என்று தோன்றியது  ட்ரெண்டி சப்ஜெக்ட் என்றால்  இப்போது கிரிக்கட் தான்

என் கிரிக்கட் அனுபவங்களைப் பகிரலாமென்று தோன்றியதுவழக்கம் போல் நினைவுகள் துணை போயின திருச்சியில்நிகழ்ந்த விளை யாட்டு  நினைவுகள் 

அன்று ஒரு அனொஃபிஷியல்  நோட்டிஸ் வந்தது  ஒரு கிரிக்கட் மாட்ச் ஆடலாமென்றும் ஆடத்தெரிந்தவர்கள் கிளப் நிர்வாகியிடம் பெயர் கொடுக்கலாமென்றும்  எழுதி இருந்தது  நான் ஏன் பெயர் கொடுக்கக் கூடாது என்று தோன்றியது பெங்களூரில் எச் ஏஎல்லில் இருந்தபோது கிரிக்கட் கிளப் பில் உறுப்பினராயிருந்து வாரம்தோறும்   ஞாயிற்றுக்கிழமைகளில் அநேகமாக எல்லா கிரௌண்டுகளிலும் ஆடியதும் நினைவுக்கு வந்தது எங்கள் டீமில் ஆடிய ஒருவர் பிற்காலத்தில் கர்நாடக மந்திரியாக இருந்தாரென்பதும் நினைவுக்கு வந்தது அதுவா இப்போது முக்கியம் நான் ஆடலாமா வேண்டாமா  என்பதே கேள்வி

ஏறத்தாழ ஆறாயிரம் தொழிலாளிகளில்  நோட்டிஸ்  அதிகாரிகளைக் குறி வைத்திருந்தது  ஒரு டீமுக்கு  அன்றைய ஜெனரல் மானேஜர் காப்டனாக இருப்பார் என்று தெரிந்தது பெரிய கம்பனியின்  நிர்வாகி  ஒரு டீமுக்குக் காப்டன்  அவர் தனது டீம் மெம்பர்களைத் தேர்ந்தெடுத்து விட்டிருந்தார்  இன்னொரு டீமில்யார் யார் ஆடப்போகிறார்கள் என்பதே கேள்விக்குறியாகி இருந்தது ஆட விருப்பம் தெரிவித்தவர்கள் தங்களுடைய அனுபவப் பிரலாபங்களைத் தெரிவிக்க வேண்டப்பட்டு இருந்தனர் நான் என்பிரலாபங்களில் பெங்களூரில் விளையாடி இருந்தது குறித்து நிறையவே எழுதி இருந்தேன்  ஒரு லெக் ஸ்பின்  போலர் என்றும்  சிறந்தஃபீல்டரென்றும் எழுதி இருந்தேன் என்பெயரில் இனிஷியலும்  ஜீ எம்   என்று இருந்ததால் எதிர் டீமுக்கு என்னைக் காப்டன் ஆக்கினார்கள்  என் டீமில் ஆடியவர்கள் ஒரு சந்தேகம் கிளப்பினார்கள் நாம்திறமையாக விளையடினால் ஒரு வேளை ஜெனரல் மானேஜரின்  டீம்  தோல்வி யடைந்தால் அதனால் ஏதாவது விளைவுகள்  ஏற்படுமோ என்று பயந்தனர்  எதிர் டீமின்  தலைவன் என்னும் முறையில் அவர்களை தைரியப்படுத்துவது  என் வேலையாயிற்று ஆட்ட மைதானம் வேறு தொழிற்கூடம் வேறு என்று எடுத்துரைத்தேன்  உனக்கென்ன நீ ஒரு டெம்பொரரி காப்டன்தானே என்று கூறி என்னை வெறுப்பேற்றினார்கள்

  ஆட்ட மைதானம்  எல்லோருக்கும் பொதுவானது அங்கு நன்கு திறமையை காட்ட வேண்டுவதெ ஒவ்வொருவரின்கடமை என்றேன்

டீம் என்பதை நான்  நம் தின வாழ்வின்  செய்கைகளுக்கு  ஒப்பிட்டுக் காட்டினேன் டீமில் ஏற்றதாழ்வுகள் பார்க்கக் கூடாது என்று எடுத்துக் கூறினேன் ஆடுகளத்தை  வாழ்வியலுக்கு ஒப்பிட்டு கூறினேன்   வாழ்வில் வெற்றி தோல்வி சகஜம்தான் வெற்றிதோல்வி முக்கியமல்ல  வெற்றியடையநம் முயற்சிகளே முக்கியம் 

 ஆட்டம் ஆட டாஸ் போட்டார்கள்  அதில் தோல்வியே வந்தது எங்கள் டீம்  முதலில் ஃபீல்டிங் என்றாயிற்று  முதலில் பாட் செய்பவர்கள் நம்மை  முதலில் துவம்சம்செய்யப்போகிறார்கள்  என்னும்குரல் முதலில் ஒலித்தது கிரிக்கட் விளையாடியவருள் காட்ச் கோட்டை விட்டவர்கள் யார் என்று கேட்டேன் யரும் காட்ச் கோட்ட விட்டிருக்கவில்லை என்ற படி பதில் வந்தது கிரிக்கட்விளையாடி இருந்தால் ஒரு முறையாவது காட்ச் பிடிக்க முடியாமல் இருந்திருக்கும் என்னும் அடிப்படை உண்மையைச்சொல்லாமலிருந்தேன்  அவர்களுக்கு ஆடத்தெரியாது என்று சொல்லி பயமுறுத்த விரும்பவில்லை

முதலில் பாட் செய்ய வந்த பொது மேலாளர் குழுவில் அவ்ரே வந்தார்  எங்கள்டீமுக்கு அதுவே கிலி கொடுத்தது முதலில் பந்தை வீசியவுடன் அவர் எதிர் கொண்டதைப் பார்த்தபோது  அவரும் ஆடி நாட்களாகி விட்டது தெரிந்தது நம்மைப் போல்தான் என்னும் எண்ணம் உதித்தது எல்லோருக்கும் ஆடி நாட்களாகி விட்டதுஅவர்கள் ஓடுவதிலேயெ தெரிந்ததுநான் என்னை கல்லியில் ஃபீல்ட் செய்ய நிறுத்திக் கொண்டேன்

ஆட்டம்பார்க்க  பலரும் குழுமி இருந்தனர் போடப்பட்ட பந்துகள் விக்கெட்டுக் கெதிரில் வந்தால்தானே  அவர்களாலும் அடிக்க முடியும்  எப்படியோ பந்துகள் போடப்பட்டு அடிக்கப்பட்டு ரன்கள் எடுக்கப்பட்டன      

 

 ஒரு சமயம் ஒரு பாட்ஸ்மன் அடித்த பந்து என்னை நோக்கி வந்தது அடிபடாமல் காக்க கையால் முகத்தை  மறைத்துக் கொண்டேன்   என்ன ஆச்சரியம்  கையில்விழுந்த பந்தை என்னை அற்யாமல்  பிடித்துக் கொண்டேன் பாட்ஸ்மன் அவுட்  உற்சாகம்பீரிட்டது

ஆட்டத்தை  எழுத்தில் வர்ணித்தால் சுவை குறையு,ம் எங்கள்டீம்  வீரர்களுக்கு

எப்படியாவது ஆட்டம் முடிந்தால் போதுமென்று இருந்தது திறமையை வெளிப்படுத்த முடியாமல் பயம் இருந்தது பொது மேலாளர் குழு வெற்றி பெற்றது அவரை எல்லோரும் வாழ்த்தினர்

 இதன்நடுவில் மாட்சை ஒலிபரப்பினார்கள்  ஒலி பரப்பும்திறமையாளர்களுக்கு தெரியும்  பொது மேலாளரைப் புகழ்ந்து தள்ள கிடைத்த வாய்ப்பு அது நன்றாகவே செய்தார்கள்  முடிவில் ஒன்று மட்டும் தெரிந்தது  பொறுப்பில் இருப்பவர்க்கு எதிராக செயல்பட அது ஆட்டமாக இருந்தாலும் சரி பலரும் தயங்குகின்றனர் இப்போது  மோதியை எதிர்க்க பலரும்  தயங்குவதில்லையா  G M    GM தான்  இனிடிஷியல் ஜீஎம் வேறுதான்   உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது     

 

 

 

 

 

               

 

 

 









 

16 comments:

  1. கிரிக்கெட் அனுபவங்கள் சுவாரஸ்யம்தான்.  எல்லோருமே அதிகாரிகளுக்கு பயந்து ஆட மாட்டார்கள்.  அணியை கவனமாக தேர்வு செய்திருந்தால், ஐம்பது சதவிகிதம் துணிந்தவர்களைத் தெரிவு செய்திருந்தாலே போதும்!

    ReplyDelete
    Replies
    1. ஆடுவதற்கு ஆட்டக்கரர்கள் வருவதே பெரும்பாடாயிருந்த நிலையில்தேர்வு எல்லாம் எங்கே

      Delete
  2. டீம் என்பதை தின வாழ்வின் செய்கைகளுக்கு நீங்கள் அக்காலத்திலேயே ஒப்பிட்டுக் காட்டிய விதம் போற்றத்தக்கது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. எக்காலமும் பொருந்தக் கூடியது தானே சார்

      Delete
  3. தங்களது அனுபவம் சுவாரஸ்யம் ஐயா.

    எனது அலுவலகத்தில் பலசாலி யாரென்று போட்டி வைத்தார்கள். எஜிப்தியர் ஒருவர் வேண்டுமென்றே தோற்றார் என்பது எங்களுக்கு புரிந்தது காரணம் எதிர்புரம் லோக்கல் அரபியர் மேலும் மேலாளர்.

    ReplyDelete
    Replies
    1. அதற்குதான் மோதியுடன் ஒப்பிட்டேன்

      Delete
  4. நீங்கள் எந்த முகூர்த்தத்தில் கிரிக்கெட் பற்றி எழுனீர்களோ இந்தியா ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாக தோற்று விட்டது.

     Jayakumar

    ReplyDelete
  5. பராட்டுக்கு நன்றி சார்

    ReplyDelete
  6. தங்களின் கிரிக்கெட் அனுபவங்களை ரசித்தேன் ஐயா

    ReplyDelete
  7. சில கற்பனைகள் ரசிக்கப்படுகின்ற்ன

    ReplyDelete
  8. மிகச் சுவையாய் வர்ணித்திருந்தீர்கள். நீங்கள் பந்து பிடித்த நிகழ்ச்சி துப்பறியும் சாம்புவை நினைவூட்டிற்று .

    ReplyDelete
    Replies
    1. இப்பதிவில் துப்பறியும் சாம்புவ ஒப்பிட பந்து பிடிட்ட விடம் புரிந்து கொள்ள முடியவில்லை சாம்பு ஏதேனும் காட்ச் பிடித்திருக்கிறரா என்ன

      Delete
  9. //ஆட்டம்பார்க்க பலரும் குழுமி இருந்தனர் போடப்பட்ட பந்துகள் விக்கெட்டுக் கெதிரில் வந்தால்தானே அவர்களாலும் அடிக்க முடியும் எப்படியோ பந்துகள் போடப்பட்டு அடிக்கப்பட்டு ரன்கள் எடுக்கப்பட்டன//:))))

    ReplyDelete
  10. இம்மாதிரி ஆட்டங்களில் அப்படித்தான் நடக்கும்

    ReplyDelete