Monday, January 31, 2022

நினைத்தது

 

கண்ணில்லாத பெண் ஒருத்தி தன்னையும் வெறுத்து எல்லோரையும் வெறுத்து வந்தாள். இருந்தாலும் அவள் மேல் தனி அன்பு கொண்ட அவளது காதலனை மிகவும் விரும்பினாள். “ எனக்கு எப்படியாவது பார்வை கிடைத்தால் உன்னை மணந்து கொள்வேன் “ என்று அவனிடம் கூறினாள்..இப்படி இருக்கும்போது அவளுக்கு இரண்டு கண்கள் தானமாய்க் கிடைக்கப்பட்டு ஆப்பரேஷன் செய்யப் பட்டது. அவளது கட்டு பிரிக்கப்பட்டு அவளால் எல்லாவற்றையும் காண முடிந்தது. அவளது காதலனையும் காண முடிந்தது. அவன் அவளிடம், “இப்போதுதான் உனக்குக் கண் பார்வை வந்து விட்டதே .என்னை திருமணம் செய்து கொள்கிறாயா ?” என்று கேட்டான்.

அவள் அவளது காதலனை உற்றுப் பார்த்தாள். விழியில்லாத கண்களைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தாள். அவள் அதை எதிர்பார்க்கவில்லை. காலம் முழுவதும் ஒரு பார்வை இல்லாதவனுடன் வாழ்வா என்று யோசித்தவள் அவனை மணக்க மறுத்து விட்டாள்.

பார்வையில்லாத விழிகளிருந்து கண்ணீர் வழிந்தோட அவன் சொன்னான். “உன் கண்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். அவை உனதாகும் முன்பாக எனதாய் இருந்தது.

இப்படித்தான் கடந்து வந்த பாதையை மறந்துபோய் பலரும் நடந்து கொள்கிறோம். வாழ்வு நமக்குக் கிடைத்த பரிசு.

பிறரைக் கடிந்து பேசுமுன். பேசவே முடியாதவரைப் பற்றி நினைக்கிறோமா.?

உணவின் சுவை பற்றிக் குறை கூறுமுன், உணவே கிடைக்காமல் கஷ்டப் படும் எளியோரைப் பற்றி நினைக்கிறோமா.?

வண்டியோட்ட வேண்டிய தூரத்தைப் பற்றிக் குறை கூறுமுன், அந்த தூரத்தை நடந்தே கடக்க வேண்டி இருப்பவர் பற்றி சிந்திக்கிறோமா.?



19 comments:

  1. அருமையான கருத்து ஐயா.

    ReplyDelete
  2. தெரிந்த கதையைத் தொடர்ந்து நல்ல கருத்துக்கள்.

    ReplyDelete
  3. சார் அருமையான கதை. பின்னான கருத்துகளும் செம. நான் அடிக்கடிச் சொல்வது உணவைக் குறை கூறக் கூடாது...எத்தனையோ பேர் உணவின்றி தவிப்பதோடு, மணம், சுவை அறியும் உணர்வை இழந்ததால் கிடைத்த உணவையும் ருசித்துச் சாப்பிட முடியாமல் கஷ்ட்ப்படுபவர்களையும் நினைக்க வேண்டும் என்று.

    கீதா

    ReplyDelete
  4. நாம் வந்த பாதையை மறந்து விடுகிறோம் என்பது உண்மை, அது மிகவும் தவறானது

    ReplyDelete
  5. மனதில் நின்ற கதையும், உங்கள் கருத்துகளும், சார்

    துளசிதரன்

    ReplyDelete
  6. தமிழ் எழுத்துகள் சரியாக வராததால் ஆங்கிலத்தில்மறு மொழி எழுட வேண் டி வ்ந்தது

    ReplyDelete
  7. நல்ல கருத்துக்கள் எல்லோருமே மறந்து விடுகிறோம் என்பது உண்மை .

    ReplyDelete