சனி, 17 நவம்பர், 2018

ஆயிரம் பிறை கண்டவனின் ஆயிரமாவது பதிவு


                       ஆயிரம்பிறை கண்டவனின்  ஆயிரமாவதுபதிவு
                        ---------------------------------------
இது என் ஆயிரமாவது பதிவு  சற்றே வித்தியாசமாகப்பதிவுசெய்ய  விரும்புகிறேன் வெற்றியா  இல்லையா தெரியவில்லை
  பிறந்த நாளும்  மணநாளும் ஒரே நாள்  என் மண நாளுக்கு என்ன பரிசு வேண்டும் என்று என் மகன் கேட்டிருந்தான்  அதற்கு நான்  என் மணநாளின்  விளைவுகள் கூட ஒன்றாய் நாளைக்கழிக்கவே  விரும்புகிறேன் என்றேன்  பூர்த்திசெய்ய வாக்குறுதி  கொடுத்திருக்கிறான்  எனக்கு  ஒரு செய்தியை என்மகன் அனுப்பி இருந்தான் அது கீழே


பத்திரிகை செய்தி n
        
 அதே செய்தியை  வேறு விதமாக என்  ஸ்டைலில் பதிவிட்டிருந்தேன்
பெண்களின் கண்ணீருடன் கம்பலையும் சேரும்போது,
ஆண்களுக்குப் போக்கிடம் ஏதுமில்லை.
அறிந்து கொள்ளுங்கள் ,பொதுவாகப் புரிந்து கொள்ளப்
படுவதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது..
திருமண பந்தத்தில் ஆண் இழப்பது அப்பட்ட சுதந்திரம்..
மீறி நிலை நிறுத்த முயன்றால் முன் வருவது
பெண்களின் கண்ணீர்ப் பிரளயம்.. அதற்காகப்
போக்கிடம் ஏதுமின்றி டாஸ்மாக்கில் தண்ணீரில் மிதக்க வேண்டாம்.
ஆண்களே குனிந்து சென்று விடுங்கள்..வழ்வில்
தேவை நிம்மதி.- சுதந்திரம்,ஆண்மை எல்லாம்
அப்பட்டப் பொய்.. பெண்ணடிமைத்தனம்,ஆணாதிக்கம்
எல்லாம் கானல் தோற்றமே;கருத்துப் பிழையும்
காட்சிப் பிழையுமே..உண்மையில் ஆணே அடிமை
அறியாமல் பெண்ணே ஆதிக்கம் செலுத்துகிறாள்.

ஆணின் சுதந்திரம் திருமணம் வரையில்-அதன்பின்
அவனது பலவீனம் பெண்ணின் பலமாக மாறும்.
கன்னியவள் கண்ணசைவிலே விண்ணையும் சாடுவான்.
அதுவே இன்பம் இன்பம் என்று மாய்ந்து மருளுவான்.
அது தவறு என்று உணரும்பொது காலம் கடந்து விடுகிறது.

உடல் வேட்கை இருபாலருக்கும் பொது.
ஆணுக்கு அது பெரிய பலவீனம்;-ஆனால்
பெண்ணுக்கோ அதுவே பெரும்பலம்.
ஆணின் ஆளுமை எல்லாம் ஆதவன் இருக்கும் வரை;
இரவு துவங்க இருவரும் இணைய இன்பம் பொதுவென்றாலும்
பெண்ணுக்கு அது ஆயுதப் பிரயோகம் செய்யும் நேரம்.
தற்காலப் பெண்களுக்கு கூடுதல் ஆயுதம் அவர்கள்
படிப்பும் பொருளீட்டும் திறனும். அழகென்பது
இன்னுமொரு ஆயுதம். மணவினைச் சிறையில்
எப்போதாவது ஆணுக்குக் கிடைக்கலாம்பரோல்.”
தமாஷ்போலத் தோன்றினாலும் இதுவே அப்பட்ட உண்மை  மண வாழ்வில் விட்டுக் கொடுத்துப்போகும்  மனப்பான்மை வேண்டும் யாருக்கு யார் விட்டுக் கொடுப்பது  பெரும்பாலும்  ஆண்களே மண வாழ்வின் துவக்கத்தில் என்  மனைவி ஒரு பச்சை மண்போல் இருந்தாள் ஆனால் நாட்பட நாட்பட என்னையே வனைபவள் ஆகி விட்டாள் எனகு நோ ரிக்ரெட்ஸ் வயதாக ஆக  நான் அவளையே சார்ந்திருப்பது கண்கூடு  வாழ்க்கையை அணுகும்  முறையில் நாங்கள் நேர் எதிர் நானும் என்கொள்கைகளும்   என்னோடுதான் நான்  திணிப்பதில்லைபதிவுகளிலும் அப்படித்தான் சொல்வேன் கேட்டுத்தானாக வேண்டுமென்றில்லை என் ம்னைவிக்கு என் கொள்கைகள் புரியும் பல முறை சொல்லி இருக்கிறாள் கோவில்களில் பலரது பிரசங்கங்களில்  என் பேச்சையே அவர்கள்  பிரதிபலிப்பதாகவும் கூறு வாள் 
இனி இரண்டு  exotic birds



  யார் இவர்கள்  வேற்று கிரக வாசிகளா

ஆயிரமாவது பதிவு அல்லவா  வித்தியாசமான  காணொளிகள்  அவசியம் பாருங்கள்


against gravity ?



செவ்வாய், 13 நவம்பர், 2018

சில மறக்க முடியாதபாடல்கள்



                                சில மறக்க முடியாதபாடல்கள்
                                -------------------------------------------------

 
இந்த முறை பதிவில் சற்றே வித்தியாசமாக அடிக்கடி நினைவுக்கு வரும்  இரு பாடல்கள் முதல் பாடல் “தாயே யசோதா உந்தன் “ என்னும் பாடல்  எனக்கு நன்றாக நினைவுக்கு வருகிறது நாங்கள் அரக் கோணத்தில் இருந்த காலம்  என் வயது ஆறிலிருந்துபத்துக்குள் இருக்கும்   அந்த கால கட்டமே நாங்கள் அரக் கோணத்திலிருந்தது என் தந்தைக்கு கர்நாடக இசை மிகவும் பிடிக்கும்   ஒரு முறை அவருடைய நண்பர் ஒருவரை  வீட்டுக்கு அழைத்திருந்தார்  அவரிடமொரு பாடல் பாடக் கேட்ட  போது அவர் பாடிய பாடல்தான்  தாயே யசோதா  அடிக்கடி என் மனதில் தோன்றும் பாடலும் அது  அதையே முதல் பாடலாகப் பதிவிடுகிறேன்   ஏனோ என்னை மிகவும் கவர்ந்தபாடல் அது


அடுத்தது நாங்கள் திருச்சிக் குடியிருப்பில்  இருந்தபோது கேட்டது/ கோவிலில் ஏதோ நிகழ்ச்சிக்காகஒருவர் பாடிக் கொண்டிருந்தார்  அவர் கண்ணனை உருகி உருகி பாடலில் அழைத்ததை இன்னும்  என்னால் மறக்கமுடியவில்லை எப்போது அந்தப் பாடலைக்கேட்டாலும் அவரது உருக்கமான அழைப்புதான்  எனக்கு கேட்கும் மறக்க முடியாத அந்தப்பாடலும் பதிவாகிறது யார்யாரோ பாடிக்கேட்டாலும் அவர் அன்றுபாடிய போது கண்ணனை உருக்கமாக அழைத்த மாதிரி இன்னும் கேட்கவில்லை



பிறந்த நாள் புகைப்படங்கள் சில 
பேத்தியுடன்
பேரன்  அவன் மனைவியுடன்n
சின்ன பேரனுக்கு கேக் 


கேக் கட்டிங்
வீட்டின் மகளிர் சக்தி 
மகன்களுடன் 




கேக்குகள் பிள்ளைகள் வாங்கியது  ஒன்று  மனவி செய்ததுஒன்று







                                --------------   

ஞாயிறு, 11 நவம்பர், 2018

பிறந்த நாள்



                                                                பிறந்த நாள்
                                                                ---------------------

 இன்று என் பிறந்த நாள்  எண்பது ஆண்டுகள்  பூர்த்தியாகிறது இது நம் வழக்கத்தில் இருக்கும்  ஆங்கில  வருடக் கணக்கு  இம்மாதிரி நவம்பர் மாதம்  பதினொன்றாம்நாள் பிறந்த நாள் என்பது (11-11- 11-) என்பது நூறாண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும் நான் விளக்கப்  போவதில்லை  இந்த நாளை நான்   என்  வாழ்வை இன்ட்ராஸ்பெக்ட் செய்து பார்க்கப் போகிறேன்  நம் சமூகத்தில் எண்பது ஆண்டு என்பது சற்றே விசேஷம் வாய்ந்தது ஆயிரம் பிறை கண்டவர் எனப் பேசப்படுபவர்கள்  ஆனால் அதிலும் வித்தியாசமான கணக்குகள்  எப்படி யானால் என்ன  எண்பது ஒருநீண்ட காலம்தான்வலைதளத்தில் எழுதவந்தபின்  என்  எண்ணங்களை  பதிவு செய்து வந்திருக்கிறேன்
என் வாழ்வின் நாட்களை எட்டெட்டாகப் பிரித்து நான் அதிகம்ரசித்தகாலம்  பற்றியும்எழுதி இருக்கிறேன் தொடரும்  எட்டெடையும்  பார்க்க  

காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி
போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..என்றெல்லாம்  எழுதி இருக்கிறேன்  திரு ரமணி அவர்கள் கவிதையை ஒட்டக் காய்ச்சிய உரை நடை என்பார்  திரு விஜு ஊமைக்கனவுகள் கவிதை அனாவசியஎழுதுக்களை ஒடுக்க வேண்டும்  என்பார் அம்மாதிரி எழுதிய காலமும் உண்டு

 பாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை
 செத்தும் காமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,
நாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.?

ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?
கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?
வாழ்வியலை ஒட்டக் காய்ச்சி எழுதியதாக நான் நினைக்கும் வரிகள் இவை
 ஆனால் இதெல்லாம்  பழம்பெருமைபேசுவது போல் இருக்கும்
சில நெரங்களில் நான் எழுதியதை நானே ரசித்துப்பார்ப்பதும் சரிதானே  என்றும்  தோன்றும் ஆனால் இப்போதெல்லாம்  அம்மாதிரி எழுத முடியும் என்று தோன்றவில்லை வயது ஏற ஏற கற்பனை வளம் குறைகிறதோ என்னவோ  
என்னைப் பற்றி நான் அதிகமாகவே பதிவிட்டு வந்திருக்கிறேன் எது வரை  என்றால்  பதிவுலக வாசகர்களுக்கு என்னை விட  என்னைப்பற்றி அதிகம் தெரியும் அளவுக்கு என்று சொல்லலாமா இதில் ஒரு குறையும்   இருக்கிறது பலருக்கும்  என்னைப் பற்றி  தப்பு தப்பாகப் புரியும் அளவுக்கு  யார் குறை இது?

நிறை வாழ்வு வாழ்ந்தாகி விட்டது வாழ்ந்த வாழ்க்கை வாழ்ந்தது தான்   அதை இனி மாற்றி அமைக்கமுடியாது ஆனால் இன்னொரு வாழ்க்கை அமையுமனால்  நான் இதையே  தேர்ந்தெடுப்பேன்  நோ ரிக்ரெட்ஸ் என் குணம் நல்லது தான் என்று நம்புகிறேன்  அனாவசிய மூட நம்பிக்கைகளுக்கு  எதிராக எழுதி இருக்கிறேன் நம்பெற்றோர் கடை பிடித்து வந்ததால் அவை சரியாகத்தான் இருக்கும்   என்று நம்புகிறவர்கள் நடுவே நான் வித்தியாசமானவன்தான் எதையும் கேள்வி கேட்டுப்பழகியவன்    சரியான பதில்வந்தால் ஏற்றுக் கொள்பவன்

 எனக்கு ஒரு ஆசை  நான் இறந்தபின்   என் உறுப்புகளை  தானம்  செய்ய விரும்புகிறேன் ஆனால் நான் இறந்தபின்   அது கடைபிடிக்கப்படுகிறதா எப்படித் தெரியும்?

சில நேரங்களில் நான் எழுத்தில் தொடாத  சங்கதிகளே இல்லையோ என்றும்  தோன்றும்கதை கட்டுரை நாவல் நாடகம்  கவிதை இலக்கியம் இன்னபிற சங்கதிகள் சிலவற்றைப் படிக்கும்போதுநான் எழுதியதா என்றுகூடத் தோன்றும் எழுதத் தொடங்கி விட்டால் எழுதிக் கொண்டே இருப்பேன்   முக்கியமாகஒரு பதிவு நினைவுக்கு வருகிறது  என்னை நானே உணர வை   https://gmbat1649.blogspot.com/2011/11/blog-post_27.html  
 பலருக்கும் தெரிந்திருக்கலாம் என்மண நாளும்  இன்றுதான்  என்னை சகித்துக் கொண்டு 54 ஆண்டுகளாக  என்னுடன் வாழும் என்மனவிக்கு வந்தனம் பாவைக்கு ஒருபாமாலையேசூட்டி எழுதி இருக்கிறேன்     
       




வெள்ளி, 9 நவம்பர், 2018

ஒரு விளையாட்டும் சில புதிர்களும்


                                            ஒரு விளையாட்டும்  சிலபுதிர்களும்
                                             ---------------------------------------------------------
  சில பதிவுகளில் சில புதிர்கள்  காண்கிறேன் பொழுது போக்க ஒரு விளையாட்டும்  சில புதிர்களும் இப்பதிவில்  பொழுதுபோக்க என்றுதான்  சொல்லி இருக்கிறேன்
யாரையும் சோதித்துப்பார்க்க அல்ல
  ஒருவருடைய வயதைக் கண்டு பிடிக்க, அவரிடம் அவர் வயதை பத்தால் பெருக்கச் சொல்லுங்கள். அத்துடன் பத்தை கூட்டச் சொல்லுங்கள். வந்த விடையை பத்தால் பெருக்கச் சொல்லுங்கள்வந்த விடையுடன் அவருடைய மனைவியின் வயதை கூட்டச் சொல்லுங்கள்.. கிடைதத விடையில் இருந்து நூறைக் கழிக்கச் சொல்லுங்கள். கடைசியாகக் கிடைத்த விடையை கேளுங்கள். அதில் முத்ல் இரண்டு எண்கள் அவருடைய வயது. அடுத்த இரண்டு எண்கள் அவருடைய மனைவியின் வயது.
குழந்தைகள் சுவாரசியமாகக் கேட்பார்கள்
.
ஒரு விளையாட்டு ப்ளாக் மேஜிக்

 குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க ஒரு BLACK MAJIC ஷோ..குறைந்தது மூன்று பேர் வேண்டும். ஒருவர் ஒரு அறையில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை நினைத்துக் கொள்ள வேண்டும். அதை அவர் மற்றவரிடம் மூன்றாம் நபருக்குத் தெரியாமல் கூற வேண்டும். இப்போது இரண்டாமவர் மூன்றாம் நபரை அந்தப் பொருளை அடையாளம் காண்பிக்க வைப்பார். அறையில் இருக்கும் பொருளின் பெயரைச் சொல்லி இதுவா இதா என்று கேட்டுக் கொண்டே வருவார். முதலாமவர் சொன்ன பொருளின் பெயரை குறிப்பிட்டுக் கேட்கும் முன் ஒரு கருப்பு நிறமுடைய பொருளைக் காட்டி இதுவா என்பார். இல்லை என்று பதில் வரும் அடுத்து முதலாம் நபர் குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி இதுவா என்று கேட்பார். ஆம் என்று பதில் வரும் பொருளை நினைத்துக் கொண்டவர் ஆச்சரியப் படுவார். இதில் முக்கியம் என்னவென்றால் ஒரு கருப்பு நிறப் பொருளுக்குப் பிறகு சரியான பொருள் காட்டப் படவேண்டும். இரண்டு குழந்தைகள் சேர்ந்து மற்றவரை வியப்பில் ஆழ்த்தலாம்
. சில எளிமையான கேள்விகள்.

1.) ஒரு பொருளை 16 அடி உயரத்தில் இருந்து போட்டால் அது தரையைத் தொட ஒரு செகண்ட் ஆகும். அதே பொருளை 64 அடி உயரத்தில் இருந்து போட்டால் தரையைத் தொட நான்கு செகண்டுகள் ஆகும். சரியா தவறா.,ஏன்.?

2) ஒரு பேக்கர்ஸ் டஜன் என்பது எவ்வளவு.?

3) ரெயில்வே தண்ட வாளங்களில் நேரோ கேஜ் தண்டவாளங்களின் இடைவெளி 0.76 மீட்டர். ப்ராட் கேஜ் தண்டவாளங்களின் இடைவெளி 1.67 மீட்டர்.  மீட்டர் கேஜ் தண்டவாளங்களின் இடைவெளி என்ன.?

4 ) எட்டு பேர் பதினாறு குழிகளை வெட்ட 32 தினங்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.  நான்கு பேர் எட்டு குழிகளை வெட்ட எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்வார்கள்.?

5 ) இதில் எந்த எண்ணில் ஒரு சதுரத்தின் சுற்றளவும் பரப் பள்வும் சமமாக இருக்கிறது. ?
   a) 25   b)16    c)64    d)121

6 ) ஒரு பெரிய மரத்தை 12 அடி நீளங்களாக அறுக்கிறார்கள். ஒரு துண்டு அறுக்க ஒரு நிமிஷமாகிறது. 12 துண்டுகள் அறுக்க எவ்வளவு நேரமாகும்.?

7 ) எந்த எண்கள் தலை கீழாக நிறுத்தினாலும் ஒரு எண்ணாக இருக்கும். ?

8 ) ஒரு மைல் தூரத்தை நான்கு வினாடிக்குள் ஓடிய முதல் வீரர் யார்.?

9 ) முதல் இதய மாற்று சிகிச்சை செய்த டாக்டர் யார்.?

கேள்விகளுக்கான பதில்கள்
கே. 1.  பதில் .. தவறு. ஒரு பொருள் பூமியை நெருங்கும்போது அதன் வேகம் அதிகரிக்கும். ( A falling body naturally accelerates its velocity.)

கே. 2.  பதில். --13--ஒரு காலத்தில் ஒரு டஜன் ரொட்டிகள் வாங்கினால் ஒரு ரொட்டி இனாமாகக் கொடுக்கப்பட்டதாம் அதுவே நாளடைவில் மருவி பேக்கர்ஸ் டஜன் என்று கூறப்பட்டது. எண் 13 பற்றிய பயம் வந்தபோது அதுவே டெவில்ஸ் டஜன் என்றும் கூறப்பட்டது..

கே.3  பதில்.   ஒரு மீட்டர். 

கே.4.  பதில்.. 32 நாட்கள்.

கே.5 . பதில்..   16.

கே.6  பதில்    11  நிமிடங்கள். 12- வது துண்டை அறுக்கத் தேவையில்லை.

கே.7  பதில்.   0, 1, 6, 8, 9.

கே.8. பதில்......ரோஜர் பானிஸ்டர் என்ற ப்ரிடிஷ் டாக்டர் கேள்வியில் நான்கு வினாடிக்குள்
             என்று தவறு நேர்ந்துவிட்டது. அது நான்கு நிமிடங்களுக்குள் என்று 
             இருந்திருக்கவேண்டும். ( மன்னிக்க வேண்டுகிறேன் )

கே.9 பதில்.  டாக்டர் க்ரிஸ்டியன் பார்னார்ட் ( Dr,Christian Barnard ) என்ற தென் ஆஃப்ரிக்க  மருத்துவர்



                           --------------      

புதன், 7 நவம்பர், 2018

மந்திரங்கள் கேள்விகளும் பின்னூட்டங்களும்

           

                          மந்திரங்கள்  கேள்வியும்பின்னூட்டங்களும்
                          ----------------------------------------------------------------------

நான் வலைத்தளத்தில் எழுதத் தொடங்கி ஆகிறது பத்தாண்டுகள்  இடுகைகளை  என் எண்ணங்களைப் பகிர்வே நான் உப்யோகப் படுத்தினேன்   ஆரம்ப காலத்தில் என்  இடுகைகளைப் படித்தவர்கள் எனக்கு உற்சாக மூட்டினார்கள்  எந்த எழுத்தையும் பொதுவாக அவர்களது கோட்பாடுகளுக்குப் புறம்பாக இருந்தாலும்  அதை அவர்களுக்கு எதிரானது என்று கருத வில்லை ஆனால் இப்போதெல்லாம்  என் எழுத்துகளை கருத்துப் பகிர்தல் என்று எண்ணாமல்  ஏதோ குற்றம் புரிந்தவனைப்போல்  பார்க்கிறார்கள் என் எழுத்துகள் வெகுஜன புரிதலுக்கு மாறு பட்டிருக்கும்  அவை என்  எண்ணங்களின் வெளிப்பாடே யாரையும் குறைகூறுவதற்கல்ல எல்லோரும் ஒரே[போல் நினைக்க முடியாது  என்சந்தேகங்கள் சரிவரப் புரிந்து கொள்ள வில்லையோ என்றும் தோன்றுகிறது  யாராவது  என் சந்தேகங்களை சரியாக அணுகி  எனக்குப்பின்னூட்டம் தர மாட்டார்களா என்னும் ஆதங்கம் எனக்கு உண்டு. பல பின்னூட்டங்கள் என் மனதைப் புண்படுத்தும்  நோக்கத்துடனேயே எழுதப்படுகிறதோ என்னும் சந்தேகமும் உண்டு பழைய பதிவுகளைப் படிப்பதில் எழுந்த எண்ணங்களின் வெளிப்பாடே இந்த எழுத்துகள் எந்தக் கோட்பாட்டையும்  அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலை எனக்கில்லைகேள்விகள் கேட்பேன்  அவை எனக்கு யாராவதுஏற்றுக் கொள்ளும்   விதத்தில் பதில் தருகிறார்களா  என்று நோக்க வைக்கும்யாரையும் யாருடைய  கொள்கையையும் குறை சொல்ல அல்ல  சில நம்பிக்கைகள் பகுத்தறிவுக்கு புறம்பாக இருக்கும்போது கடுமையாகச் சாடி இருக்கிறேன் பலருக்கும்  அது சரியாகப் பட்டாலும்   ஏனோ அவற்றை சரி என வாதிடுகிறார்கள்  என்றும்தோன்றும் எனக்கு நமது சமுதாயத்தில் நிலவி வரும் ஏற்ற தாழ்வுகள் மனசை காயப்படுத்தும்  அதை சீர்செய்ய என் எண்ணங்களையும்  பதிவு செய்து இருக்கிறேன்  அவற்றின்  தாக்கம்வெளிப்பட என் எழுத்துகள் மீண்டும் மீண்டும் அவற்றை வெளிப்படுத்தும் நாம் யூனிடி இன் டைவர்சிடி  என்று சொல்வதை நான் என்வாழ்விலேயே உண்ர்கிறேன்  எல்லோரும்  நன்றாகவே  ஏற்றுக் கொள்கிறார்கள்  நானும் ஏற்றுக் கொள்கிறேன் எனக்குஎழும் சந்தேகங்களுக்கு  பதில் கூற பலரும்  முயன்றிருக்கிறார்கள் நானும் புதிதாகக் கற்றிருக்கிறேன்  சான்றுக்கு ஒன்றாக  மந்திரம் என்றால் என்ன  என்றுகேள்வி கேட்டிருந்தேன் மந்திர வழிபாடுகள்மந்திர வழிபாடுகள்பற்றி தெளிவு பெற முயன்றிருக்கிறேன் அதற்கு  வந்த பின்னூட்டங்கள் ஒன்றிரண்டை இங்கே பதிவிடுகிறேன் பார்க்க மந்திர வழிபாடுகள்

 அகத்திலே ஆண்டவனை இருத்தியவர்க்கு
ஆயிரம் நாமாக்கள் தேவையில்லை தான்

ஆயினும் ஒரு கணம் அவனை நினைந்து 
அடுத்த கணம் அவனை நினைப்பதற்குள்
இடையிலே ஈராயிறம் எண்ணங்கள் 
உங்க்ள் அனுமதி பெறாது உள் வருதே !!

அதனாலே 
ஓம் என்ற ஒரு சொல் சொல்லி 
அடுத்த ஓம் சொலலும் முன்னால்
சரவண பவ என்று சொல்லு.
சிந்தையில் அந்த சரவணன்
பால் மணம் மாறா
பால சுப்பிரமணியன் 
பளிங்கு போல் நெஞ்ச்த்தில் 
பரவி நிற்கட்டும்

ஓம் சரவண பவ !!

 மந்திரம் என்றால் என்ன ?
கொஞ்சம் சீர்யஸான விஷயம் தான்

பகவான் கீதைலே சொல்றார்.
மந்திரங்களிலே நான் காயத்ரி

அந்த காயத்ரி மந்திரத்தோடு தான் நீங்க்
இந்த பதிவினை துவங்கியிருக்கிறீர்கள்

மந்த்ரா என்ற வடமொழிச்சொல்லை
வகுத்துப்பார்த்தால், விகரஹ சமாஸம் 
என்று சொல்வார்கள் அந்த ப்ராஸஸை.

மனதினால் அறிந்துகொள்ளக்கூடியது
மனசினால் க்ரஹித்துக்கொள்ளக்கூடியது
மனம் என்பது ஒரு திரை . அவ்வளவே.
ஐம்புலங்கள் மூலமாக என்ன நம்மால் க்ரஹித்துக்கொள்ளப்படுகிறதோ..
அது தான் மனத்திரையில் படிகிறது எனலாம்

மனதினால் புரிந்துகொள்ளக்கூடியது என்றால்,
அது பார்க்கப்படுகிற வ்ஸ்துவோ, கேட்கப்படுகிற வஸ்துவோ,
உணரப்படுகிற வஸ்துவோ, நுகரப்படுகிற வஸ்துவோ,
ருசிக்கப்படுகிற வஸ்துவோ, அது எதுவோ 

மந்திரமாவது நீறு ...( பார்க்கப்படுகிறது, உணரப்படுகிறது, நுகரப்படுகிறது, ருசிக்கப்படுகிறது, ஏன் அதை உச்சரிக்கையில் கேட்கப்படுகிறது)
அஞ்சு குணாதீசங்க்ளையும் அடக்கியதால், நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதியை, நீறை, மந்திரம் என்று சொல்கிறோம்


அந்த பிரமன் என்று எதை சொல்கிறோமோ, அதை, அவனை
இந்த ஐம்புலங்களின் மூலம் புரிந்துகொள்ளக்கூடிய
அளவுக்கு கன்வர்ட் பண்ணித் தருவது மந்திரம்

இந்து மதத்தைப் பொறுத்தவரையில் 
யூனிடி இன் டைவர்சிடி
நீ என்னென்ன மாதிரி வேணுமானாலும் 
மனசுக்குப் புடிச்ச மாதிரி புரிஞ்சுக்கற மாதிரி 
என்னை நினைத்துக்கொண்டாலும் 
நான் ஒண்ணு தான்

ஆகாசாத் பதிதம் தோயம் 
யதா கச்சதி ஸாகரம்
ஸர்வ தேவ நமஸ்காரஹ
கேசவம் பிரதிகச்சதி

மந்த்ரம் அப்படின்னு சொல்றது 
ஒரு உபாயம். ஒரு கருவி
ஒரு இன்ஸ்ட்ருமெண்ட்

ரொம்ப பொடி எழுத்தா இருக்கு
வெள்ள எழுத்து வந்துடுத்து.
படிக்கணுமே ...அதுக்கு கண்ணாடி போட்டுக்கறோமே
அது போலத்தான்
மனசுக்குள்ளே இல்ல
இந்த ஆத்மாவுக்குள்ளே
அவனாக இருக்கறவனை
புரிஞ்ச்சுக்கறதுக்கு 
மந்த்ரம் ஒரு சாதனம்

ரமணர் ஞானி.
அவருக்கு மந்த்ரம் தேவையில்லை.

நம் எப்போ ரமணர் ஆகிறது !
அதுவரைக்கும் மந்த்ர ஜபம் தேவைதான் அப்படின்னு தோண்றது.
இதெல்லாம் ஒரு இண்ட் ரொடக்ஷன்

போரடிச்சுதுன்னா
டெலிட் பண்ணிடுங்க்..

மந்திரத்தை இல்ல,
என்னை.

நல்ல பதிவு.என்னுள் மாற்றமும் ஏற்படவில்லை என்று சொன்னது நல்ல விஷயம். நிறைய பேர் அடடா அது தெரியுது இது தெரியுது என்று புருடா விட்டு மேற்கொண்டு தொடரமுடியாமல் போவார்கள். அதற்கு கேள்விகளோடு இருப்பது நல்லது.

மந்திர ஜெபம் என்பது மிக மிக எளிமையான ஒன்று.ஆனால் இதற்கு தேவை விடாமுயற்சி.சரியான வார்த்தை சிரத்தைதான்.

தொடர்ந்து சொல்லும்போது கடைசியில் (பல வருடங்களுக்குப் பிறகு) அது ஒரு வகையான பித்து நிலையில்-மற்றவர் பார்வையில் பைத்தியம் என்றும் சொல்லலாம்-கொண்டு விடும்.

இந்த மந்திரம் ஒளியைப் பற்றியதால் பார்க்கும்,தொடும், கேட்கும் (ஆம்...கேட்பது கூட) எல்லாமே ஒளி வடிவத்தில் போய் கடைசியில் மந்திர ஜெபம் தானாகவே நின்றுவிடும். அப்போது ரமணர் மற்றும் ஞானிகளுக்கு நடந்தது நிகழும் என்பதே இதன் இயங்கும முறை.

இதற்கு பதிலாய் ஏதாவது கடவுளின் பெயரை சொன்னால் அந்த உருவமே எல்லாமாய் மாறி தெரியும,கேட்கும்.

ஆனால் தேவை விடாப்பிடியாய் நிதானமாய் சொல்லிக் 
கொண்டே இருப்பது

சிலர்  தெளிய வைக்க முயன்றிருக்கிறார்கள்என்று தெரிகிறது ஆனல் தெளிவு கிடைத்ததா  சந்தேகமே மனதினாலும் அறிவினாலும் எனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை  என் பதிவு ஒன்றுக்கு  வந்த பின்னூட்டம் நினைவுக்கு வருகிறது  ஏதவது சர்ச்சைக்கு உரிய பதிவு போட வேண்டியது  அதை வைத்தே  இரண்டுநாட்களோட்டி விடுவீர்கள் இப்படியும் என்னைப் பற்றிய புரிதலுண்டு