போய்ச் சேர் வீடு நோக்கி....
----------------------
காலாற நடை பயிலப் பூங்கா சென்றிருந்தேன்.
ஆங்கே, பொன்காட்டும் நிறம் காட்டிப்
பூ காட்டும் விழி காட்டி, இரு தனங்கனக்க,
இடையொடிய மனங்கிளர்க்க மாதொருத்தி,
கண் காட்டி மொழி பேசி,ஆடவர் மனங்கனக்க
விழியாலேவலைவீசி வழி நோக்கிக் காத்திருந்தாள்காலன் கயிறு கொண்டு கடத்திச் செல்லக்
காத்திருக்கும் காலம்தான் என்றாலும் உள்மனதில்
காமம்தான் முற்றும் ஒழியாத மன நிலையில்
நெஞ்சே நீயும் எத்தனை நாள்நெருப்பில் மூழ்கிடுவாய்
தஞ்சமாகத் துணையுடனே தழைக்கும்
பூஞ்சோலை இங்கிருக்க நீ அதனில்கொஞ்சவே
எண்ணுகின்றாய்,இது த்குமோ, முறையோ முரணன்றோ?
எண்ணிப் பார்க்கிறேன் எனக்கென்ன வயசு
எண்ணில் அடங்குவதோ மனசின் வயசு
காதலுடன் கழிந்த காலம் உன்னும்போது
உணர்கின்றேன் எனக்கென்றும் இளமைதான் என்று.
என்னதான் நடக்கும் நோக்கலாமே என்றே எழுச்சியுடன்
ஓரடி ஈரடி நாலடி நான் நடந்தவள் முன் செல்ல
எனைக் கண்டெழுந்தவளிடம் நானறியாதே கூறிவிட்டேன்
உள்ளம் சொன்னதை அநுபவம் கற்றதை..
பொய்க் கனவாய்ப் புகுந்துன் பெண்மை புணர்ந்து
மெய்க்கனவாய் ஆக்கிடுவர் உன் இளமையதை.
கூத்தாள் எனக் கொள்வர், இரவி மறையுமுன் உன்
ஆத்தாள் உனைத் தேடுமுன் போய்ச் சேர் வீடு நோக்கி.
---------------------------------------------
கவிதையை விட லேபிள் அருமை.
பதிலளிநீக்குமனதை அலை பாய வைத்த கவிதை அய்யா, அருமை.
போய்ச் சேர் வீடு நோக்கி....
பதிலளிநீக்குபூங்காவில் புயல்!
ரொம்பவும் ரசித்தேன். தமிழ் அழகு கவிதையில் மின்னுகிறது.
பதிலளிநீக்கு//பொன்காட்டும் நிறம் காட்டிப்பூ காட்டும் விழி காட்டி, இரு தனங்கனக்க,இடையொடிய மனங்கிளர்க்க மாதொருத்தி,கண் காட்டி மொழி பேசி,ஆடவர் மனங்கனக்கவிழியாலேவலைவீசி //
//பொய்க் கனவாய்ப் புகுந்துன் பெண்மை புணர்ந்து
மெய்க்கனவாய் ஆக்கிடுவர் உன் இளமையதை.
கூத்தாள் எனக் கொள்வர், இரவி மறையுமுன் உன்
ஆத்தாள் உனைத் தேடுமுன் போய்ச் சேர் வீடு நோக்கி.
//
அருமை பாராட்டுக்கள்!! கவியின்பத்துடன் தமிழின்பமும் பருகினோம்.
ஆத்தாள் உனைத் தேடுமுன் போய்ச் சேர் வீடு நோக்கி.
பதிலளிநீக்குஅருமை
wish you a happy New year 2011
பதிலளிநீக்குsorry 2012.
கவித்துவமான சொற்களை அதிகம்
பதிலளிநீக்குபயன்படுத்திச் செய்த அற்புதமான கவிதை
கருதான் கொஞ்சம்....
@திரு.ஏ.ஆர். ராஜகோபாலன்
பதிலளிநீக்கு@திருமதி.இராஜராஜேஸ்வரி,
@திருமதி ஷக்திப்ரபா,
@திரு. ரத்னவேல்,
@சசிகலா,
@சமுத்ரா,
திரு.ரமணி.
அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மனம் அலைபாயும் நேரம் அனுபவமும் கற்றதும் துணை நிற்பதை எழுதினேன் சில நேரங்களில் எதிர்பாராத வகையில் எழுதும் போது வார்த்தைகள் வந்து விழும். அது தமிழ் கற்றதின் பலன் என்று நினைக்கிறேன். ரமணி அவர்களே, கருஅடல்ட்ஸ் ஒன்லி மாதிரி இருக்கிறதோ.?சமுத்ரா Do you mean to wish me a sorry 2012?( in lighter vein!)
''எனைக் கண்டெழுந்தவளிடம்
பதிலளிநீக்குநான்றியாதே கூறிவிட்டேன்
உள்ளம் சொன்னதை அநுபவம் கற்றதை'' தக்க தருணத்தில்
தடுத்தாளப் பட்டுவிட்டீர்களா?
''கூத்தாள் எனக்கொள்வர் இரவி மறையுமுன், உன் ஆத்தாள் தேடுமுன்
போய்ச்சேர் வீடு நோக்கி.
''
என்னே அறிவுரை,தன்னறியாது
வந்துவிட்டதென நினைக்கிறேன்
இனிய 'அ 'கவிதைக்கு நன்றி சார்
மிக ரசித்தேன்.நடையழகை. கவிதையை சொல்றேங்க. வயசு,வாலிபம்,இயக்குற மனசு சீர்தூக்கி தெளிகின்ற மனம்..
பதிலளிநீக்கு