வெள்ளி, 27 ஜனவரி, 2012

நினைக்கவும் நகைக்கவும்.....


                  நினைக்கவும் நகைக்கவும்
                  ------------------------------------
                             ( கடி ஜோக்ஸ் )

    எனக்கு ஒரு நண்பன் இருக்கிறார். அவரிடம் பேசுவதில்
நேரம் போவதே தெரியாது. நொடிக்கு ஒரு ஜோக் சொல்லுவார்.
எங்கிருந்துதான் அவ்வளவு ஜோக்குகள் கிடைக்கிறதோ
தெரியாது. அவர் சொல்லி நான் ரசித்த சிலவற்றை உங்களிடம்
பகிர்ந்து கொள்ளுகிறேன்,

அதி மேதாவி ஜோக்ஸ்-----.கேள்வி பதிலாக.

கே.1.--எந்தப் போரில் நெப்போலியன் இறந்தான்.
ப.------அவனுடைய கடைசிப் போரில்.

கே.2--சுதந்திரப் பிரகடனம் எங்கு கையெழுத்திடப் பெற்றது.?
ப------பிரகடனப் பத்திரத்தின் கடைச்யில்.

கே.3--தோல்வியின் முக்கிய காரணம் என்ன.?
ப,-----பரீட்சைகள்.

கே.4--காலைச் சிற்றுண்டியில் எதை சாப்பிட முடியாது.?
ப..-----மதிய இரவு உணவுகளை.

கே5.--அரை ஆப்பிள் மாதிரித் தெரிவது எது.?
ப.------மற்ற பாதி.

கே.6--ஒரு சிவப்புக் கல்லை நீலக் கடலில் எறிந்தால் என்னாகும்.?
ப.-----அது ஈரமாகும்.

கே.7--ஒருவர் எட்டு தினங்கள் தூங்காமல் இருந்தால் என்னாகும்.?
ப.------ஒன்றுமாகாது. அவர் இரவில் உறங்கலாம்.

கே.8--உன் ஒரு கையில் நான்கு ஆப்பிள்கள் மூன்று ஆரஞ்சுகள்.
             மறு கையில் மூன்று ஆப்பிள்கள் நான்கு ஆரஞ்சுகள்
             இருந்தால் உன்னிடம் இருப்பது என்ன.?
ப.------இரண்டு பெரிய கைகள்.

கே.9--ஒரு யானையை ஒரு கையால் தூக்குவது எப்படி.?
ப.-----ஒரு கையுள்ள யானையே கிடையாது.

கே.10-எட்டுபேர் ஒரு சுவற்றை எட்டு மணி நேரத்தில் கட்டினால்
             நான்கு பேர் அச்சுவற்றைக் கட்ட எவ்வள்வு நேரமாகும்.?
ப.-----நேரமே வேண்டாம். சுவர் ஏற்கனவே கட்டியாயிற்றே

கே11--ஒரு முட்டையை காங்கிரிட் தளத்தில் விரிசலாகாமல்
              போடுவது எப்படி.?
ப.-----சாதாரணமாக காங்கிரீட் தளங்கள் விரிசலாவதில்லை.

கே.12.-River Raavi flows in which state.?.    
ப.------In liquid state.
------------------------------------------------------------


6 கருத்துகள்:

  1. சிலர் இதுபோல அடிக்கடி ஜோக்’கடி’ப்பதுண்டு.

    சமயத்தில் நமக்கே அலுத்துப்போவதும் உண்டு.

    பதிலளிநீக்கு
  2. "நினைக்கவும் நகைக்கவும்....."

    எங்கள் இல்லத்தில் எப்பவும் உண்டு..

    பதிலளிநீக்கு
  3. ஒரு சீரியஸான நாவல் பதிவுகளுக்கிடையில் சற்றே தமாஷான ஒரு பதிவு. வருகை தந்து ஊக்குவிக்கும் கோபு சார், டாக்டர் கந்தசாமி, ரத்னவேல், இராஜராஜேஸ்வரி, காளிதாஸ் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  4. எட்டும் பத்தும் டாப்ஸ். கணக்குப் பரீட்சையின் போது இது தெரியாம போச்சே!

    பதிலளிநீக்கு