Friday, March 9, 2012

சொல்லாமல் விடுவதே நன்று,



                                     சொல்லாமல் விடுவதே நன்று.
                                     ------------------------------------------

             வெங்காயச் சருகுச் சேலை வெண்பட்டு மேனி தழுவ
       சீயக்காய் ஷாம்பு கண்ட செம்பொன்முடி காற்றில் படபடக்க,
       அழகை இன்னும் ஆராதிக்கச் சிந்தையில் எழுந்த கவிதை ஒன்று,
       அகக் கண்ணில் வரிகளாய் ஓட, எண்ணுகையில்
       மென்னகை தேங்கிற்று என் உதடுகளில்


      ---நிலவைப் பிடித்து அதன் கறைகள் துடைத்து
         குறு முறுவல் பதித்த முகம்---


        வட்ட நிலவின் கறைகள் துடைத்தால்
       ஒரு வெண் தட்டுபோலத் தோன்றலாம்.
        அதன் கறைகள் துடைத்து முறுவல் பதிக்க
       தற்காலக் கணினியில் காணும் ஸ்மைலி போல் தோன்றலாம் .!


கற்பனைச் சிறகுகள் கண்டபடி சிறகடித்தால்
கிடைக்கலாம் சில அபத்தக் கவிதைகள்.
தவறிப் போய் எழுத்தினைக் கணித்து விட்டால்
எண்ணாத எதிர்ப்புகள் ஏராளம் கிடைக்கலாம்.

          
      எண்ணியதெல்லாம் கருத்தில் தேக்கி

      சிந்தனைக் கடிவாளம் இறுக்கிப் பிடிக்காமல்

      சொல்லெல்லாம் சொல்லி நாட்டி

      சொன்னது அத்தனையும் நன்றென்று நம்பி

      நாமெல்லாம் படிக்கப் பல காதல் கவிதைகள் வடிக்க

      கருத்திட விழையும் போது, சொல் நயம் காக்க

      சொல்லாமல் விடுவதே நன்று ,சிறந்தது.
---------------------------------------------- .

        





     

12 comments:

  1. மிக நல்ல முயற்சி.

    ReplyDelete
  2. குறுஞ்சிமலரில் திரு நா .பா எழுதியிருந்த கவிதை வரிகளை மிக நேர்த்தியாக
    - தலைப்பிட்டது போல --கையாண்டிருக்கிறீர்கள்..தவறாக கருதப்படுமோ என்ற
    அச்சம் ஏற்படும்போதெல்லாம் ,
    " சொல்லற சும்மாயிரு " என்ற உபதேசமே
    கடைபிடிக்கத்தகும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள் ...மிக்க நன்று .
    மாலி -MAWLEY

    ReplyDelete
  3. \\\நிலவைப் பிடித்து அதன் கறைகள் துடைத்து
    குறு முறுவல் பதித்த முகம்-//
    ஆகா. அருமை.

    சொல்லாமல் விடுதலால் யாருக்கு லாபம்?
    சொல்லி விடுங்கள் .. கேட்காமல் போனாலும்

    ReplyDelete
  4. இப்படி ஒரு காதல் கவிதையா???? என்று எண்ணத் தோன்றினாலும்... இதை காதல் கவிதையில் வகைப் படுத்த தோன்றவில்லை.. இது எடுக்கவோ கோர்க்கவோ என்ற நிலையில் கர்ணன் இருந்த நிலையை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது தோழரே

    ReplyDelete
  5. சொல்லாமல் சொல்லுகிற கவிதைதான் நிறையச்
    சொல்லிப்போகிறது
    அருமையான பதிவு.

    ReplyDelete
  6. @டாக்டர் கந்தசாமி,
    @ தனசேகரன்,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. @ மாலி,
    உங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி. அபூர்வமாக வந்து கருத்திடுகிறீர்கள். நா.பா. வின் கவிதை வரிகளை நான் கையாண்ட விதம் ,அவருடைய வரிகளையே சற்று வித்தியாசமாக சிந்தித்தால் வரும் விளைவை எண்ணித்தான்.நினைத்ததை நினைத்தபடி எழுதினால்,வரும் எதிர்ப்புகளை சந்திப்பதைவிட, அப்பன் முருகன் அருணகிரிக்கு சொன்ன “சொல்லற சும்மாயிரு “என்ற உபாயமே சிறந்தது, என்பதை எனக்கு விளக்கிய உங்களுக்கு என் நன்றி.

    ReplyDelete
  8. @ சிவகுமாரா. சொல்லாமல் விடுதலால் யாருக்கும் லாபமில்லை என்றாலும் நஷ்டமும் இல்லையே. நினைத்ததை கருத்திடுவது சில நேரம் கத்தி முனையில் நடப்பதைபோலாகும். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. @சூர்யஜீவா, வருகைக்கு நன்றி. இது காதல் கவிதை அல்ல. சில காதல் கவிதைகள் பற்றிய அபிப்பிராயங்களை அப்படியே எழுதினால் .....வேண்டாம் என்றுதான்.

    ReplyDelete
  10. @ரமணி. உங்கள் சிந்தனை மிக்கக் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  11. சொல்லாமல் சொல்லுவதும் சுவையே.

    ReplyDelete