Monday, June 29, 2020

என்னென்ன்வோ எண்ண்ங்கள்



                                   என்னென்னவோ  எண்ணங்கள்
                                    ==============================


ராண்டம் தாட்ஸ்
 எதையாவது எழுது என்கிறது மனம்  ஆனால் எதை எழுதினாலும் பெரும்பாலும்என் எழுத்துகள்   சரியாகப் புரிந்துகொள்ள்ப் படுவதில்லை மேலும் எழுதுவதே எண்ணங்களைப் பகிரத்தானே நான் எழுதுவதெல்லாம் என் உள்ளக்கிடக்கைகளை  கொட்டிதீர்க்கதானே ஆனால் எல்லோரையும் திருப்தி படுத்தும் வகையில் எனக்குஏனோ எழுத தெரிய வில்லை  சிலருக்கு மதம் பற்றி நம் கருத்துகளை எழுதினால் பிடிக்காது  சிலருக்கு அரசிய்ல் பற்றி எழுதினால் பிடிக்காது சிலர் எழுதுவது நேர் மறையாக  இருக்கவேண்டும் என்கின்றனர்  எத்ர்மறை கருத்துகள் பிறர் மனதைப்புண் படுத்துமாம் அதனால்தானோ என்னவோ என்னைப்பற்றியே  எழுதி வந்தேன்  நான் என்ன பெரிய புள்ளியா  என்னைப் பற்றி எழுதினாலும் போரடிக்கிறதாம் ஆனால் என்பாட்டிச்சொல்வது போல்  எதற்கும்  முக பாக்கியம்  வேண்டும் சரி போகட்டும் கரெண்ட்  டாபிக் கொரோனா பற்றி எழுதலாம்  கொரோனாவால் கோவில்கள் எல்லாம் மூடினார்கள்  அல்லவா அதையே பக்த கோடிகள் கோவில் திறக்கா விட்டாலென்ன அவன் எல்லோர் உள்ளங்களிலும்  குடி கொண்டு விட்டானே  என்கிறார்கள் கொரோனாவால்  அவனை நினைப்பது  அதிகமாகி விட்டது
எனக்கானால்  அவனது அடுத்த அவதாரம்வர கொரோனா ஒரு அறி குறி யோ என்னும் நினைப்பே வருகிறது
உடல் நலக் குறைவு வருவதென்பது தவிர்க்க முடியாது கொரோனாவின் ஆதிக்கம அதிகரிக்கிறது இருக்கட்டும்  அதற்கு  மருத்துவம்  பார்ப்பவரையும்  அதை தடுக்க நினைப்போரையும்   காணும் போது  யானையை அடையாளம்  காட்ட முய்லும  குருடர்கதையே நினைவுக்கு வருகிறது  கை கழுவுவதும்   சானிடைசர் தெளிப்பதும் கை கொடுக்குமா  அதற்கு மருத்துவம் பார்ப்பவரையெ பதம் பார்க்கிறதே அதற்கு ஆகும் மருத்துவச் செலவேபயமுறுத்துகிறது பணம்   இல்ர்லாவிட்டால் என்ன செய்வ்து  சந்தடி சாக்கில் பணம்பார்க்க நினைக்கும்  ஆயுர்வேதமருத்துவர்கள் எந்த பரிசோதனையும்   இல்லாமல் அதற்கான தீர்வானமருந்து என்று சொல்பவரை என்ன செய்ய ஐயாயிரம் வருஷ பாரம்பரியம் மிக்க மருந்து என்று சொன்னாலும்  நம்பும் நம்மவர்களை என்னசொல்ல
எதையாவது சொன்னால் நம்பிக்கையே முக்கியம்  என்று சொல்வோரும்  உண்டுஅல்லவா ஒருவருக்கு கொரோனா வந்தால் ஆகும் செலவே பயமுறுத்துகிற்து  ஒரு நாள் படுத்தால் கட்டிலுக்குமட்டும்  ரூபாய்  ஐந்து முதல் பத்தாயிரம் செலவாகுமே  அத்தனை செலவு  செய்ய எல்லோருக்கும் முடியுமா  அதற்கு பயந்தே சிலதற்கொலைகளும் நிகழ்கிறதோ?என்னைப்போல் இருப்பவர்  அத்தனை செலவு செய்யமுடியுமா செய்வதால் என்னபயன்  உயிர் அத்தனை விலை உள்ள்தா  கைதட்டியோ தீபமேற்றியோ  போக்கமுடியாதா  ஓஒ அதையும் செய்து பார்த்தானவர்கள்தானே நாம்  இம்மாதிரி நினைப்பதே தவறு என்று சொல்பவரும் உண்டல்லவா
 கொரோனாவையே நகைச்சுவை யாக்கி  வருவோரைக் காணும்போது  பயத்தைப்போக்க இருட்டில் விசில் அடிப்பவர்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது  
இப்படியே எழுதிக்கொண்டு போகலாம்நோய்க்கு தீர்வு என்ன இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை  ஜுரம் வ்ருவதில்லையா  வேறு நோய்கள் தானில்லையாஎல்லாவற்றையும்  தடுக்க முடிந்திருக்கிறதா வந்தபின் ஏதோ மருந்து சாப்பிட்டு குண மாவதில்லையா  அம்மைக்கு தடுப்பூசிபோல இதற்கும் ஏதாவது கண்டு பிடிக்கும்வரை பயந்துசாவோரே அதிகமாய் இருப்பார்கள்

பாலன்  எத்தனை பாலனடி


பத்து வயதில் 
பதினாறு வயதில் 


இருபத்தைந்து  வயதில் 

  
73 வயதில் 

GMB LATEST 




        





52 comments:

  1. லேட்டஸ்ட் போட்டோவிலும் சிங்க போல இருக்கிறீங்க

    ReplyDelete
  2. யாரு என்ன சொன்னால் உங்களுக்கு என்ன சார் நீங்க பாட்டூக்கு உங்க மனதில் எண்ணுவதை எழுதிக் கொண்டு போங்கள் இங்கே வந்து மொக்கை கருத்து போடுபவர்களுக்காக உங்கள் எண்ணத்திற்கு தடை போடாதீங்க...

    ReplyDelete
    Replies
    1. என் எண்ணத்துக்கு தடை பொடுவது இல்லை எழுதிதாஆக வேண்டுமா ஒரு நண்பர் குறிப்பிட்டு இருந்தார் என் ழுத்துகள் எல்லாமேஒரு அறச் சீற்றத்தின் வெளிப்பாடு என்று

      Delete
  3. எல்லோரையும் திருப்தி படுத்தும் வகையில் எழுத வாய்பே இல்லை... "நல்லவன் - எனக்கு நானே நல்லவன்" பாடலில் வரும் வரிகள் போல...

    ReplyDelete
    Replies
    1. என்றைக்கு மே என்எழுத்துகள் எல்லோரையும் திருப்தி படுத்தும் என்று நினைத்ததில்லை

      Delete
  4. நேற்று நம் வலைப்பூ நண்பர் திரு.S.P.செந்தில் குமார் அவர்கள் ஒரு காணொளி பகிர்ந்து இருந்தார் புலனத்தில் :-

    https://youtu.be/zvpnt0JcpqA

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் ஒரே ஆலோசனை மயம்

      Delete
  5. பாலகனாக இருக்கும் போதே, "என்ன சொல்கிறீர்கள்...?" என்று கேட்பதாக எனக்கு தோன்றுகிறது...!

    பாலன் என்று வாசித்தவுடன் ஞாபகம் வந்தது : இதுவரை எனது மூத்த சகோதர சகோதரிகள் ஐவரும், தனபாலன் என்றே அழைத்தது இல்லை...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு நன் முன்பு எழுடி இருந்தது நினைவுக்கு வந்தது பாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை செத்தும்,
      காமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,
      நாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.?

      .

      Delete
  6. கொரோனாவினால் பெரிய பிரச்சனை கிடையாது. எப்போவோ போகப்போறோம்...இந்தக் காரணத்தில் போவோம் என்று இருந்துகொள்ளவேண்டியதுதான். ஆனால் இதைச் சாக்கிட்டு மருத்துவமனைகள் 'பணம்' பார்க்க ஆயத்தமாவதுதான் கலக்கமா இருக்கு. நேற்றைக்கு வாட்சப்பில் பெங்களூர் மருத்துவமனை, 7 நாள் சிகிச்சைக்கு 7,000 12 நாள் சிகிச்சைக்கு 12,0000, 15 நாள் சிகிச்சைக்கு 15,000, இது வீட்டிலேயே நாம் இருந்துகொள்ளணும், சில எக்யுப்மெண்ட்ஸ் தருவாங்க, கோவிட்-19 டெஸ்ட் எதுவும் இதில் சேர்த்தி கிடையாது, காணொளி மூலம் டாக்டர் கன்சல்ட் செய்வார் என்றெல்லாம் விலாவாரியாக எழுதியிருந்தனர். நிலைமை அப்படி இருக்கு

    ReplyDelete
    Replies
    1. வியாடியை விட அதற்காகும் செலவே பயமுறுத்துகிறது அதுவும் என்னைப்போல் வருமானம் இல்லாதநிலையில்

      Delete
    2. சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் திரு வீரபாகுவின் சித்தா மருத்துவமனை எந்த செலவும் இன்றி பார்த்துக்கொள்வதாக அதில் அட்மிட் ஆகி குணமாகி வெளியில் வந்த ஒரு காங்கிரஸ் நண்பர் சொன்னார்.

      Delete
    3. சென்னை வளசரவாக்கம் சித்தா மருத்தவ மனை அங்கீகரிக்கப்பட்டதா வசடிகள்டெஸ்ட் செய்ய என்பதுபொல் இருக்கிறதா

      Delete
    4. https://www.dinamalar.com/news_detail.asp?id=2566091  

      ஆம்.  முன்னரே அரசு அலோபதி மருத்துவமனையுடன் இணைந்து சிகிச்சை கொடுத்திருக்கிறார்.  இப்போது அரசு அனுமதியுடன் வளசரவாக்கம் இல்லை, சாலிகிராமத்தில் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் வைத்திருக்கிறார்.  இணைப்பு கொடுத்திருக்கிறேன்.

      Delete
    5. வாழ்க அவர்கள் சேவை குறையட்டும் கொரோனாவின் தாக்கம்

      Delete
  7. கொரோனாவை இப்போது அடித்தட்டு மக்கள் அலட்சியமாக பார்க்கிறார்கள் ஐயா

    காரணம் பணப்பிரச்சனை சாவைக்கண்டு யாரும் பயப்படவில்லை.

    சிறு வயது படம் முதல் இன்றைய படம்வரை தந்தது அருமை.

    மனதில் பட்டதை எழுதுங்கள் நமது சிந்தனைக்கு நாமே கடிவாளம்.

    ReplyDelete
    Replies
    1. ஏனோஇந்த தொற்று அதிகம் பேசப்ப்டுகிறது

      Delete
  8. பின்னூட்டக் கருத்துகளை வைத்து இடுகை போடுவது எப்படி சரியாக இருக்கும்? இதென்ன பத்திரிகையா? வாசகர்கள் ரசனைக்கேற்றபடி விஷயங்களைச் சொல்ல?

    வலைத்தளம் என்பது நடத்துபவரின் எண்ணச் சிதறல்தான். உங்க கருத்தை எழுதறீங்க, படிக்கறவங்க அவங்க கருத்தை எழுதறாங்க என்றளவில் பார்த்தால் மனச் சங்கடம் இருக்காது

    ReplyDelete
    Replies
    1. மன்ச் சங்கடமேதுமில்லை பதிவுலகில் இவன் இப்படித்டானென்று பெயர் வாங்கிஆயிற்று

      Delete
  9. 73 வயது புகைப்படம் நல்ல கம்பீரமாகத் தோன்றுகிறது. இப்போதும் அதே கம்பீரம் இருக்கும். நீங்க புகைப்படம் எடுத்த விதம்தான் சரியில்லை. (லேடஸ்ட் படம்)

    ReplyDelete
    Replies
    1. அது 75 வயது என்று இருக்க வேண்டும் என் நூல் வாழ்வின் விளிம்பிலுக்காக எடுத்த படம்

      Delete
  10. உங்களின் லேட்டஸ்ட்...சிறப்பு ஐயா.
    உங்கள் எழுத்து எங்களுக்கு ஊக்கம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த் நக்கல்தானே வேண்டாம் என்பதுஐ லுக் சிக்

      Delete
    2. சார் அப்ப உங்களைப் பார்த்து நீங்க ரொம்ப சிக் ஆக இருக்கீங்கனு சொல்லணுமா சார்..ஹா ஹா ஹா ஹா..என்ன சார்! 'அட பரவாயில்லையெ இப்பவும் நாம நல்லாத்தானே இருக்கோம்னு சொல்றாங்களேன்னு புத்துணர்வா எடுத்துக்கோங்க சார்!!"

      ஒன்றுமில்லை நீங்க கொஞ்சம் தாடியோடு இருப்பதால் அப்படித் தோன்றுகிறது. முந்தைய 73 வயது படம் போல எடுத்திருந்தீங்கனா நல்லா வந்திருக்கும். இது ரொம்ப க்ளோஸப். மொபைலில்/கேமராவில் க்ளோசப், செல்ஃபி எல்லாம் நம்மை கொஞ்சம் வேறு மாதிரி காட்டும்...ஹா ஹா ஹா (இதுக்கு உள்ளதைத்தானே காட்டும்னு ஜோக் எல்லாம் அடிக்கக் கூடாது!!!)

      கீதா

      Delete
    3. நிஜமான எண்ணம் அல்ல என்பதுதெரிகிறது ஜோக் என்றுஎதையும் எழுதுவதை தவிர்க்கலமே என்பதே குறிப்பு

      Delete
  11. சிங்கம் குட்டியானாலும் சரி, கிழடு ஆனாலும் சரி, அதன் கம்பீரம் தனி. உங்களைத்தான் சொல்கிறேன்.

     Jayakumar

    ReplyDelete
  12. நீங்கள்சொல்வது சரியாய்த்தான் இருக்கும் சிங்கத்தின் கால்களில் குறை இருந்தாலும் சீற்றம் குறைவதுண்டோ

    ReplyDelete
  13. தங்களின் பட வரிசை அசத்தல்

    ReplyDelete
    Replies
    1. பாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை செத்தும்,
      காமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,
      நாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.?இதை நினைத்தே பட வெளியீடு

      Delete
    2. ஜி.எம்.பி சார்... பின்னூட்டங்களையும் நான் படிப்பேன். அந்த அந்தப் பருவம் வரும்போதுதான் அந்த அந்தக் கஷ்டம் என்ன என்று முழுமையாகத் தெரியும். அந்த நிலை வராமல், அல்லது தன் இரத்த சம்பந்தமுள்ளவரிடம் பார்த்தாலும் தான் அனுபவிக்காமல் அதனைப் புரிந்துகொள்வது மிகக் கடினம்.

      தலைவலியும் வாந்தியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள்.

      பக்தி இலக்கியங்களில், 'பிணி, பசி, மூப்புத் துன்பம், ஆதலால் பிறவி வேண்டேன்' என்று இருக்கும். மூப்பில் என்ன துன்பம் இருக்கு என்பது அந்த ஸ்டேஜ் வரும்போதுதான் புரியும். எங்க அப்பா, நல்லா எக்சர்சைஸ்லாம் பண்ணுவார். அவர் 68 வயசுல, என்னிடம், வலுவான கைகள் ஓஞ்சமாதிரி இருக்கு இப்போ என்றார்.

      அதுனால, உங்கள் எண்ணப்படி எழுதினாலும், பிறர் வருத்தப்படும்படி முடிந்தவரை எழுதாதீங்க. எல்லாருக்கும் அந்த அந்த ஸ்டேஜ் வரத்தான் போகிறது. இப்போதே நினைத்துக் கவலை கொள்வானேன்.

      Delete
    3. நான் எழுதுவது என் எண்ணங்ளகளை யாரையும் புண்படுத்த அல்ல தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்குவதில்லை எல்லோரிடமும் அன்பு பராட்டுவதே என் குணம்

      Delete
  14. சார் உங்கள் மன எண்ணங்களை இங்கு பிரதிபலித்து எழுதுங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து உடையவர்களாக இருப்பார்கள். யாரும் ஒரேபோல சொன்னாலும் போர்தானே சார். அவங்கவங்க கருத்தைச் சொல்லுவது நல்லதுதானே. யாருக்காகவும் எழுதாமல் உங்களுக்காக எழுதுங்கள்.

    உங்கள் ஃபோட்டோக்கள் நல்லாதான் இருக்கு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதுபவை நகைச் சுவையாக்குவதை நான் விரும்புவதில்லை அது நினைப்பது நினித்தப்சடி போய் சேருவத்ல்லை என்பதையே குறிக்கும்

      Delete
  15. உங்களுக்கென உங்கள் எழுத்துக்கென ஒரு இரசிகர் கூட்டம் உள்ளது...மனதில் பட்டதை சமரசமின்றி எழுதுவதற்காகவே...தொடர வாழ்த்துகள்...படங்களை வருட வாரியாக பதிந்ததை இரசித்தோம்...எனக்குப்பிடித்தது 25 ம் 73 ம்..

    ReplyDelete
  16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete
  17. பயத்தைப் போக்க இருட்டில் விசில் அடிப்பவர்கள் - இந்த உவமை ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ரசிக்க வைக்கும்

      Delete
  18. கொரோனா பற்றி யாருக்குமே எந்த உத்தேசமும் இல்லை.  அதிலிருந்து தப்பித்தால் உண்டு.  டெரர் ஆங்கிலபபடங்கள் எடுப்பார்களே..   அதுபோல வாழ்க்கையே டெரர் படமாகி நாமே அந்தப் படத்தின் கேரக்டர்கள் ஆகிவிட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. கொரொன ஏன் பயம் ஏற்படுத்துகிறதுநுரையீரல் பாதிப்புக்கு உள்ளானால் மரண்ம்கடினமாக இருக்கும் என்னுமெண்ணமே மரணித்து விட்டபிஎன தெரியப் போகிறது

      Delete
  19. உங்கள் லேட்டஸ்ட் படம் தாடி எடுக்காததால் டல்லாக தெரிகிறது.  மற்றபடி ஓகே.

    ReplyDelete
  20. என்மனைவிக்கு பிடிக்கவே இல்லை ஒரு சிக்லொ லுக் என்கிறாள் தாடியை மழித்துவிட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. தாடியை எடுத்து விட்டு, மீசையை ட்ரிம் செய்து நிமிர்ந்து கேமிராவைப் பார்த்து சிரித்த வண்ணம் ஒரு புகைபபடம் எடுத்து உடனே இதிலேயே இணையுங்களேன்...

      Delete
    2. செய்ய வேண்டும் செய்வேன் விரைவில்

      Delete
  21. பாலன் எத்தனை பாலனடி
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது சார்.லேட்டஸ்ட் படம்
    உங்கள் மனைவி சொன்னது போல் தான் இருக்கிறது.

    ReplyDelete
  22. வெகு நாட்களுக்குப் பின் ( ? ) வருகை மகிழ்ச்சி

    ReplyDelete
  23. எண்ணங்கள் எப்போதுமே என்னன்னவோவாகத் தான் இருக்கும்.
    அதை ஒழுங்குபடுத்துவது தான் நம்மைச் சிறக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அவற்றை ஒழுங்கு படுத்தமுயன் றிருக்கிறேன்

      Delete
  24. /கொரோனாவையே நகைச்சுவை யாக்கி  வருவோரைக் காணும்போது  பயத்தைப்போக்க இருட்டில் விசில் அடிப்பவர்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது//  உண்மைதான். மனதில் பட்டதை பேசவும், எழுதவும் எல்லோராலும் முடியாது. எனவே அதை மாற்றிக் கொள்ள வேண்டாம். சமீப படத்தில் சற்று தள்ளாமை தெரிகிறது. 

    ReplyDelete
    Replies
    1. வயதாகிறதே தள்ளாமையை நானே உண்ர்கிறேன்

      Delete
  25. தங்கள் மீசையின் பரிணாம வளர்ச்சி அழகாயிருக்கிறது! சிங்கம் போல இருக்கிறீர்கள்! சென்னையில் தற்போது சித்தா சிகிச்சையில்தான் அதிகம்பேர் கொரோனாவில் இருந்து விடுதலை ஆகிவருகிறார்கள். குறைந்த செலவில் தரப்படுவதால் மக்களில் சிலர் சித்தாவை இகழ்ச்சியாகப் பார்ப்பது சரியில்லை.

    ReplyDelete
    Replies
    1. என் மூத்த மகனின் திருஆனம்போது ஈசை இருக்க வில்லை என்னைப்பார்த்து நானே பரிதாபப்ப்ட்டேன் பின் வளர்க்காஆரம்பித்ததுதான் இந்த மீசை சித்தா பற்றி ஏதும்தெரியாது

      Delete