Sunday, July 12, 2020

அன்றுபோல் ஆகுமா                                                        அன்று போல் ஆகுமா
                                                       --------------------------------------


நான் பயணித்து  ஏறத்தாழ ஐந்து  ஆண்டுகள் ஆகின்றன பயணத்துக்கு யாரையாவது நம்பவேண்டி இருக்கிறது  எனக்கானால் பயணிப்பது மிகவும்பிடிக்கும் முன்பெல்லாம் ஒவ்வொறு ஜூலை மாதமும் பயணம்  மேற்கொள்ளுவோம்   என்மனைவியின் பி றந்தநாள்  அன்று ஏதாவது கோவிலில்  இருக்க விரும்புவாள் எங்கள் பயணதிட்டத்தில் திருச்சி  சிதம்பரம் வைத்தீஸ்வரன்கோவில் நிச்சயம் இருக்கும் பிறகு எதாவது  போகாத இடமும் அடங்கும்  இவ்வாறாக நாங்கள் நிறைய இடங்களுக்குச் சென்றிருக்கிறோம் இப்போது அந்த நினைவுகளுக்குக் காரணம்ஜூலை மூன்றாம் நாள் என் மனைவியின்  பிறந்தநாளுக்கு  எங்கும் செல்லமுடியாவிட்டாலும்  பொதுவாகஎன்மக்கள் எங்களைக்காண வருவார்கள் இப்போது இந்தக் கோரொனாக்காலத்தில் யாருக்கும்  பயணிக்க முடிவதில்லை ஆக என்  இரண்டாம்  மகனும் என் மூத்தபேரனு ம் எங்களைக் காண்வந்தது பெரு மகிழ்ச்சி அளித்தது என் மருமகள் ஒரு கேக் செய்து அனுப்பி இருந்தாள் என்பேரனின்மனைவி ஒரு ப்ரெட் ரோல்செய்து அனுப்பி இருந்தாள் என்மனைவி  பாயசம்செய்திருந்தாள்  ஒருவழியாய் என்மனவியி  பிற்ந்த நாள் கொண்டாட்டம் நடந்தது


கேக் கட்டிங்


பிறந்தநாள் கேக் 
 வ்யசானால் குழந்தைகளுக்கு நம்மை மிகவும்பிடிக்கிறது மாடியில் வந்திருக்கும்குடித்தன்க்காரர்களூக்கு ஒரு குழந்தை  அதற்கு என்னை  மிகவும் பிடிக்கும்   தாத்தா  தாத்தா என்று ச்ன்னைச்சுற்றும்  ஆனால் என்க்குத்தான்குழந்தையை தூக்கி கொஞ்ச முடிவத்ல்லை 


மாடி வீட்டு குழந்தை
 என் மச்சினனுக்கு இரட்டைப் பேரக் குழந்தைகள் பிறந்தது பற்றி  எழுதி இருக்கிறேன்பத்து மாதம் ஆகிறது  நான்பார்க்காத பலசங்கதிகளிருக்கின்றது அதில்  ஒருகுழந்தை  இப்போதேபத்தே மாதத்தில் நன்கு நடக்கிறாள் இரண்டும் துறு துறுஎன்று ஆண்குழந்தை 
பெண் குழந்தை 
         காணொலிகள் சுய விளக்கம் 

 

20 comments:

  1. அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை இப்போது கூறிக்கொள்கிறேன்.

    குழந்தைகள் அழகு.  குழந்தைகளை பார்ப்பதும், அவர்கள் விளையாட்டை ரசிப்பதும் தனி ஆனந்தம்.

    ReplyDelete
  2. உங்கள் மகிழ்ச்சி எங்களின் மகிழ்ச்சி ஐயா. அம்மாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அம்மாவின் ஆசியை வேண்டி...
    குழந்தைகளின் விளையாட்டு ரசிக்க கூடியது.

    கெட்டிக்காரன் பிள்ளை எட்டு மாதத்தில் நடக்கும் என்ற பழமொழி உண்டு ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நான் கேள்விப்படாத பழமொழி ஜி

      Delete
  4. அவங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அடுத்தமுறை நீங்களே கேக் செஞ்சுடுங்க.

    ட்வின்ஸ் அழகு

    ReplyDelete
    Replies
    1. நான் எதையும் செய்வதில்லை செய்ய விடுவதில்லை

      Delete
  5. அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    குழந்தைகள் அழகு...

    குழந்தைகளுக்கு வயதான குழந்தைகளை மிகவும் பிடிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. எனக்குத்தான் குழந்தைகளுடன் விளையாட முடிவதில்லை

      Delete
  6. அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  7. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    குழந்தை, பேரன் வரவு உங்கள் மகிழ்ச்சியான பொழுது .
    காணொளி மிக அருமை.

    குழந்தைகள் மகிழ்ச்சி அலைகளை பரவ செய்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் கண்டிராத வசதி குழந்தைகளை தனியாக விட என் மூட்த மகன காலை கட்டிப்போட்டிருந்த்து நினைவில்

      Delete
  8. ஒவ்வொரு வரியிலும் உங்கள் அன்பு வெளிப்ப8டுவதை உணர முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. பொதுவாகவே நான் எல்லோரிடமும் அன்புபாராட்டுவேன்

      Delete
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  10. பயணம் செய்ய முடியாதது பலருக்கும் மனக்குறைதான். என்ன செய்வது, காலம் அப்படி. உங்கள் மனைவிக்கு Belated Birthday Wishes. May the Lord continue to bless you both and your families..

    அடுத்தவீட்டுக்குழந்தை தாத்தாவைத் தேடி உங்களிடம் வருகிறது. உங்களால் தூக்கமுடியவில்லையா.. சரி, பாட்டி தூக்கிக்கொள்ளலாமே!
    குழந்தை வீட்டிற்குள் தானாகவே நுழைந்தால் குதூகலந்தான்.

    ReplyDelete
  11. என்பயணங்கள் தடைபடுவது கோரோனாவால் அலல பாட்டியும் நோ மோர் யங்கர்

    ReplyDelete