Tuesday, July 14, 2020

கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்


                   

    கடைசியில்  சில பக்கங்கள் மிஸ்ஸிங்
  ---------------------------------------------------
நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன்  இருக்கும் வரை பதிவிடுவது  கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக  முடிக்கிறார்களோ  அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம்  என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும்  கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே தூற்றி கொள்ளட்டும்


                             திரை
காட்சி  6
ஈ9
இடம்  அருணா மாளிகை
 பாத்திரங்கள் ------அருணா  தாத்தா
( திரை உயரும்போது  நிலை கொள்ளாமல் தவிக்கிறாள் அருணா காலண்டரில் தேதி பார்ப்படும்  குழம்புவதுமாக இருக்கிறாள் மணி இரவு 11-55 தாத்தா அங்கு வர )
அருணா--- யார் நீ  ஏனிங்கே வந்தே
 தாத்தா----அருணா
அருணா --- தாததா  என்னை மன்னிச்சுடு தாத்தா யாரோன்னு நெனச்சு பயந்திட்டேன்
தாத்தா  ----உன் உடம்பு நெருப்பாகொதிக்குதே காப்பி எடுத்திட்டு வரேன் குடிச்சா தெம்பாஇருக்கும்
அருணா -----தாத்தா அதைவிட விஷத்தைக் குடிச்சா நல்லா இருக்கும்
தாத்தா ---அப்படி என்னம்மா  கஷ்டம்வந்துட்டுது  இப்போமனசுல இருக்கிற்றத வாய் விட்டுச் சொன்னா மனசு கொஞ்சம் ஆறும்மா  சொ;ல்லு  அருணா
அருணா---கொஞ்சங்கூட நிம்மதியா  இருக்க விட மாட்டீங்களா தாத்தாநன்வெளியே போறேன்
தாத்தா----இல்லே அருணா நானே போறேன் இன்னக்கி தேதி  இருபத்தொன்பதுஆச்சு காலண்டர்ல தேதி கூடகிழிக்காம் அப்படி என்னம்மா கவலை (தேதியை கிழிக்க முயல)
அருணா ----ஐயையோ தாத்தா  அதைக் கிழிக்காதிங்க  வேணும்னுதான்  கிழிக்காம விட்டிருக்கேன்
 தாத்தா --- ஏம்மா
அருணா--- ஐயொ தாத்தா  படாத பாடுபட்டு எதை மறக்க  முடியாம தவுஇக்கிறேனோ  அதையே மறுபடியும்  மறுபடியும்  ஞாபகப் படுத்தறீங்ககேள்வி மேல் கேள்வி கேக்கறீங்க  இந்த வீட்டுல உங்க கிட்ட மட்டும்தான் நான் கோபப்படாம இருக்கேன்  என்னை தனியா இருக்க விடுங்க
தாத்தா---ம்ம்ம்ம் என்ன மாயமோ   (போகிறார்)
அருணா--- இந்த முப்பதாம் தேதி வராமைருக்கக் கூடாதா
குமரே குரல் ---வாவென்றால்  வரவு போ என்றால்  போகவு  காலமென்ன உங்கள் வேலையாளா  யாருக்காகவும் காத்திராமல் காலம் போய்க்கொண்டுதான்  இருக்கும் 
தாத்தாகுரல் –மயில் கழுத்தைவிட அழகாக இருந்தாலும் அதில் மஞ்சக் கயிறும் மாங்கல்யமும் இருந்தாத்தானம்மா ஒரு பெண்ணுக்கு பெருமை  மகிமை
அருணா---தாத்தா
கும குரல் ---காகிதக்கதை அல்ல வாழ்க்கை அருணா தவறி எழுதியதை அழிக்கவும்  திருத்தவும்    உன்னை பழி வாங்கப் புறப்பட்டு விட்டது இனி நீ தப்ப முடியாது  அருணா
அருணா --- ஆவேசத்தில்  என்ன செய்கிறொமென்படே தெரியாம எடேதோ செய்து விட்டேனே அம்மா
குமகுரல் –உற்றார் உறவினர் புடை சூழ  நடக்க வேண்டிய உன் திருமணம் யாருக்கும் தெரியாம சிறையிலா நட்க்க வேண்டும்  நீ கொடுத்த கூலிக்காக  ஒருவன் கட்டிய தாலியை பொழுது விடிந்தால் நீ இழக்கப்போகிறாய்  அருணா
அருணா –பொழுது விடியாமலே இருக்கக்கூடாதா
கும க்ரல் --- நாளை பொழுது விடியக்கூடாது  என்று  சபிக்கப்போகிறாயா  அருணா
நாளை உலச்கத்துக்கு  விடிகிறபோதுநீ அழுது வடியப்போகிறாய்
அருணா --- இல்லை இல்லை  கூடாது நிங்கள் சாகக் கூடாது ஏதாவடு அற்புதம்நிகழ்ந்து  நீங்கள் பிழைத் விடக் கூடாதா
கும குரல் ---நிரபராதி என்னை தூக்கிலிடும்போது  சத்தியம் வந்து எனை காப்பாற்றி விடப்போகிறதா பைத்தியக்காரி சட்டமென்னைக் கொல்லப் போகிறது நீயாகவே உன்னை சாகடித்துக் கொள்ள்ப்போகிறாய் அடோ மணி பன்னிரண்டுஉனக்குள்ள  மாங்கல்ய பாக்கியம்  இன்னும் ஆறே ஆறு மணிநேரம்  அருணா நாளை முதல் நீ விதவை  நீயாகவே உனக்களித்துக் கொண்ட கல்யாணப்பரிசுஉத்திரவாதமான விதவை கோலம் பொழுது விடியப்போகிறது விடிந்து கொண்டே இருக்கிறதுஅருணா நீ விதவை  நீவிதவை
அருணா--- போதும்போதும் நெஞ்சைப்பிளந்து  நெருப்ப்சைக்கொட்டாதே  போ போ
தாத்தா –ஓடி வந்து என்ன அருணா  என்னாஆச்சு
அருணா ---ஒண்ணுமில்ல தாத்தா ஒண்ணுகில்ல ஏதோ கெட்ட கனவு
                       திரை





      






10 comments:

  1. உரையாடல்கள் இயற்கையாக உள்ளன ஐயா.

    ReplyDelete
  2. அருணாவின் அடுத்த நிலையென்ன ?
    ஆவலுடன் தொடர்கிறேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அதை நீங்கள் தீர்மானிக்கும்நிலைவந்து விட்டது

      Delete
  3. அருணாவிற்கு எல்லாமே விரக்தியாக இருக்கே...!

    ReplyDelete
  4. //–மயில் கழுத்தைவிட அழகாக இருந்தாலும் அதில் மஞ்சக் கயிறும் மாங்கல்யமும் இருந்தாத்தானம்மா ஒரு பெண்ணுக்கு பெருமை மகிமை//

    தாத்தாவிற்கு தெரியவில்லையே! பேத்திக்கு மஞ்ச கயிறு ஏறியதும் இப்போது இறங்க போவதும்!

    ReplyDelete
    Replies
    1. கதையின் போக்கை நீங்களே தீர்மனிக்கும் நேரம்வந்து விட்டதோ

      Delete
  5. இறங்கினால் சுவாரஸ்யமில்லை.  எதிர்பாராதது நடக்கும்போதுதான் கதை, சம்பவம்!  எனவே...

    ReplyDelete
    Replies
    1. சுவாரசியமாகஎடுத்துச்செல்ல சான்ஸ்

      Delete