Thursday, October 1, 2020

நாடகப் போட்டி முடிவு

கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங் 19 அத்தியாயங்கள்  நான் எழுதியது மீதி  தொடர்வது திருமதி கீதா ரங்கன்  

 இடம் ம் -----கனகசபை வீடு

பாத்திரங்கள் ---கனகசபை சபாபதி  வேதவதி

 

(திரை உயரும்போது  கனகசபை ரூபாய் நாணயங்களை

தட்டிப்பார்ப்பதும்   எண்ணிப் பார்ப்பதுமாக இருக்கிறார்  உள்ளே ரேடியோ பணமே உன்னால் என்ன குணமெ என்று பாட எரிச்சலுடன்  )

 

கனக----- வேதம்  வேதம்  ஏ வேதா 

 

வேதம்-------(கரண்டியுடன் வந்து கொண்டே ) வேதா வேதா வேதா  வேதத்துக்கு இப்ப என்னவாம்

 

கனக----சரி சரி  ரேடியோவைக் கொஞ்சம்மூடு

 

வேதம் ====ரேடியோ பாடத்தான்  இருக்கு மூட அல்ல

 

கனக----அட ஆண்டவனே  ஒரு ரேடியோவ மூட ஆசைப்பட்டு இன்னொரு ரேடியோவை திறந்திட்டேனே

 

வேதம் – என்னையா ரேடியோ ங்கறீங்க

 

கனக---சேச்சே ரேடியோவை இஷ்டப்பட்டா மூடலாம் உன் திருவாயைமூட…….

 

வேதம் ---- என்ன ……..(வந்துமிரட்ட கனகசபை தன்வாயைப் பொத்திக்கொள்ள அவர் கையில் ரூபாய் நோட்டைப்பார்த்து)பணம்பணம்    ரூபா நோட்டு (அவர் கையைப்பிடித்து)இதை  வாயில போட்டுக்க பார்த்தீங்களே காயிதம்னா நெனச்சீங்க

 

கனக ---இவ யார்ரா இவ …..கழுத கூட ரூபாய் நோட்டை காயிதம்னு தின்னாது எடுத்து  மடில வெச்சுக்கும் (ரேடியோ இன்னும் பலமாக பணமெ உன்னால் என்ன குணமே என்றுபாட )அடச்சே பாட்டைப்பாரு பாட்டை  பாட்டப்பாட அtதுக்கொரு  ரேட்டைகரெக்டா வாங்கிடுவான் பாட்ற பாட்டு மட்டும்பணமே உன்னால் என்னகுணமே ஹும் வேஷக்கார உலகம்

வேதா ---கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை சங்கீதத்த ரசிக்க தெரியலன்னு  சொல்லிட்டு போங்களேன்

 

 கனக ----எனக்கா தெரியாதுருபாயோட ரூபாய் மோதறப்போ ஹா…. இதை விட என்ன சங்கீதம் வேற என்ன இருக்கு சங்கீத ஸ்வரமேழும்இந்த  ஸ்வரம்பேசலேன்னா சைலெண்ட் ஆம்மா..............ஆதார சுருதியாச்சே இது வேதம் நெசமா சொல்றேன் அந்தக்காலத்தில ஒன்ன தொட்டுப் பார்த்தப்போ கூட இந்த நைஸ் இருந்ததில்ல

 

வேதா ----போதும்போங்க

 

கனக----ஆஹா ஆஹா நீ இப்படிநாணிக் கோணி நிக்கறது நம்ம சாந்தி முஹூர்த்தத்தில் நீ முகம்செவக்க நின்னியே அதை ஞாபகப் படுத்துது

 

 வேதம் ----ஐய போதும்போங்க

 

கனக ---வேதம் வேதம் (கிழட்டுதாபத்தில் நெருங்க (ரேடியோ ) மன்மத லீலையை வென்றார் உண்டோ ) அடச்சீ மூடுடா ரேடியொவை . ரேடியோ நிற்கிறது 

 சபாபதி----(வந்து கொண்டே)இந்த வீட்ல மகனாப் பொறந்ததவிட ஒரு கூத்தாடிக்கு பிள்ளையாய் பிறந்திருக்கலாம் நல்ல அப்பா  ஒரு பாட்டு பிடிக்காது  கூத்து பிடிக்காது உங்களுக்கு  என்னதான்   பிடிக்கும்

 

வேதா---ஏன் அவருக்கு பைத்தியம் பிடிக்குமே

 

கனக---- இனிமேதானா பிடிக்கணும்  செத்துப்போன ஆடியபாதம்அருணாவுக்கு உயில் எழுதி என்னையும்நவகோடியையும் டிரஸ்டியா வெச்சானோ  அன்னக்கே பிடிச்சாச்சு பைத்தியம்

 

வேதம்---- ஏன் உங்களையும்  நவகோடியையும் டிரஸ்டியா வெச்சாரு

 

 சபாபதி ---- ஹூம்  கிழவனுக்கு உலகம் தெரியும் நவகோடி இல்லேன்னா அருணாவுக்கு உயில் மட்டும்தான் மிஞ்சும்  உயில்ல உள்ளதெல்லாம்உன் ஒடம்புலநகையாய் கொஞ்சும்

கனக ---- ஏன் இப்பமட்டும் என்ன கெட்டுது  எப்படியும் அவளை கட்டிக்கிற்வனுக்குத்தான்  சொத்துஉயில்ல எழுதி இருக்கு   நீமட்டும் மனசு வெச்சு  அருணாவ  உன்ன கட்டிக்க சம்மதிக்க வெச்சீன்னா

 

சபாபதி—நானென்னப்பா செய்யறது அருணாவுக்கு  ஆம்பிளைன்னாலே  எட்டிக்காய் கசப்பு அந்தக் காலத்துல அல்லின்னா இந்தக் காலத்துல அருணா

 

வேதா—அந்த ட அல்லி கதைமட்டும் என்னாச்சு தம்பி அல்லி பெத்த புள்ளைக்கு பேர் புலந்திரனாம்

 

கனக --- இந்த அல்லி அருணா ஒருபுள்ளையைப்பெற நம்மபையன் ஒரு அர்ச்சுனனா இல்லையே

 

சபா ---- எப்படி அப்பா இருக்க முடியும்  அர்ச்சுனன் ஆணழகன் நானு --- கண்ணில்லாதபெண்ணு கூட என்னை அழக்ன்னு  ஒத்துக்க மாட்டாளே  அர்ச்சுனன் பெரிய வீரன்  எனக்கு  உயிருன்னா  வெல்லம் அருணாசொத்து கெடைக்கட்டும்கெடைக்காமபோகட்டும் உங்களுக்குப் பிற்கு உங்க சொத்து எனக்கு கிடைக்கணும்னா நான் உசிரோட இருந்தாகணும்

 

கனக---அது என்நல்லகாலம் என் உசிரை வாங்கினதுக்கு அப்புறம் தானே முடியு ம்னு சொல்லாமவுட்டியே ஊம்   அங்க நவகோடிஎன்னடான்னா  மொத்து மொத்துனு  மொத்தறான் அவன்பொண்டாட்டிய அருணாவைக்கட்டிக்க ஒரு ஆம்பிளையை பெறாம ஒருபொண்ண பெத்ததுக்கு பகவான் புண்ணியத்துல ஒரு பிள்ளைய பெத்து ருந்துமஅதன் லட்சணத்தபாரு

 

வேதா--- உங்க ரெண்டு பேருக்குள்ளும் ஒண்ணும் அட்ஜஸ்ட் பண்ண முடியாதா

 

கனக --- அட்ஜஸ்ட்பண்ணலாம்  அட்ஜஸ்ட்எங்களுக்குள்ள  பாகத்தகராரூ ஒரு ஒப்பந்ததுக்கு  வர முடியலே

 

சபா --- எங்கிட்ட ஒரு ஒப்பந்தத்துக்கு  வாங்க நானெப்படியாவது  அருணாவ கட்டிக்கிறேனா இல்லையா பாருக்க

 

கனக --- பணத்தைத்தவிர எது  வேணுனா  கேளு

 

சபா---- அதத்தவிர உங்க க்ட்டவேற என்னை இருக்கு பண்ம்தர மனசில்லேன்னா  சாவியத்தாங்க

 

கனக--- ஐயையோ வேண்டாண்டா பணமே தரேன்

 

சபா--- அதுதானே  பார்த்தேன் ஆவியை விட்டாலும்  சாவியை விடமாட்டாறே அப்பா தாங்யூ டாடி மம்மி அரூணா உங்க மருமகள்னே  வெச்சுக்கோங்க (போகிறான் )

 

கனக---- வேதம் .. அந்தப்பொண்ணு இந்தவீட்டு மருமகள் ஆகத்தான் போகுது  நீ பாட்டுக்கு எங்க்சம்மாவுக்கு மருமகளா இருந்ததெ நெனச்சுட்டு அந்தப்பொண்ணுக்கு மாமியார் ஆக இருந்திடப்போற

வேதம் ==== ஊங்க்கும்(போகிறாள் )

 

காட்சி –2

 

இடம் ---அருணா மாளிகை

இருப்போர்—அருணா தாத்தாசபாபதி  கனக சபை நவ கோடி

தாத்தா தாத்தா இங்கே வாங்க இதைக்கொஞ்சம்  கேளுங்க

”தலைவி அவர்களே ----தோழியர்களே

 

தாத்தா---இது என்ன நாடகம் அருணா ?

 

அருணா --- நாடகமில்லை  பேசாமகேளுங்களேன் தலைவி அவர்களே தோழியர்களே கல் என்றாலும் கணவன் புல் என்றாலும் புருஷன் என்று பழமொழி இருக்கும்போது மண் என்றாலும் மனைவி புழுதி என்றாலும் பெண்டாட்டி என்று பழமொழி இருக்கிறதா  மண்ணைவிட கேவலமாகபெண்களை  மதிக்கும் ஆண்களை நாம் பகிஷ்காரம் செய்ய வேண்டும்மாங்கல்யமே பெண் அடிமையின் சின்னம்நாயைக்கட்ட  சங்கிலி  கிளியை அடைக்ககூண்டு பெண்களை அடிமை  செய்ய  மாங்கல்யம்  கல்யாணம்  என்ன நீதி இது பெண்களாகிய நாம்கல்யாணம் வேண்டாதார் சங்கம் அமைத்து உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துய்  ஆண்வர்க்கத்தை  எதிர்த்து போராட வேண்டும்கலயாணம் செய்து கொள்ள வில்லைஎன்று சபதம் செய்ய வேண்டும் இதற்கு முன்னோடியாகநான் திருமணம்செய்து கொள்ளப்போவதில்லை  என்று உங்களிடையே ஆணையிட்டுக் கூறுகிறேன் (தாத்தாவிடம்)என்ன தாத்தா எப்படி பேச்சு  இன்னிக்கி சங்கத்திலே ஒரே ஆரவாரம்தான் என்னைத்தொடர்ந்து எல்லாப்பெண்களும் இதே மாதிரி சபத்ம்செஞ்சிருக்காங்க எங்க சங்கத்தை பலப்படுத்த வீடு வீடாப்போய் நன்கொடை வசூல் செய்யப்போறோம்

 தாத்தா === நீ என்னவேணும்னாலும் சொல்லு அருணா ஆனா ஒன்னு மயில் கழுத்தை விட அழகான கழுத்து ஒருபெண்ணுக்கு இருந்தாலும் அதிலமஞ்சக் கயிறும் மாங்கல்யமும் இருந்தாத்தான்மா மகிமை

 

 அருணா---போ  தாத்தா ---நீ ஒரு கர்நாடகம்

 

தாத்தா--- இருகட்டும் அருணா  இதுக்குப்போய் நீ வீடு வீடா கையேந்தவேண்டாம் உனக்கும் வயசு பதினெட்டாச்சு உங்கப்பா சொத்தெல்லாம்  உனக்குவரப்போகுது

 

அருணா --- ஆமா எனக்கு வயசு பதினெட்டாச்சு  நான்மேஜராயிட்டேன் ட்ரஸ்டிகளை கூப்பிட்டுசொத்தெல்லாம் வாங்கிக்கணும்

 

தாத்தா--- கூட நீ காலா காலத்துல ஒரு கல்யாணம் செய்துகுடியும் குடித்தனமுமா  ஊர் மெச்ச வாழணும் இதுதாம்மா என் ஆசை

(கனகசபை சபாபதி வருகின்ற்னர்)

 

கனக –உங்க ஆசைகட்டாயம் நிறைவேறும்  நானு அதுவிஷயமாத்தானே வந்தேன் (நவகோடி வருகை)

 

நவகோடி – எந்த விஷயமானாலும் நானுமிருந்தாத்தானே பூர்த்தி அடையும் 

கனக---- (சபாப்தியிடம் )பார்த்தியா  மனுஷனுக்கு மூக்குலவேர்க்குது  மோப்பம் பிடிச்சு வந்துட்டான்

 

 அருணா—நீங்கஎதுக்கு  வந்தாலும்  சரி நானே உங்களைப்பார்க்கணும்னு இருந்தேன்  வந்துட்டீங்க. உயிலப் பற்றி எல்லா சமாச்சாரமும் எனக்கு தெரிஞ்ச்சுக்கணும்

சபா---உயில் ……உங்கப்பா சாகும்போது எழுதினது அது கைக்கு வரதுக்கு முன்னாடி  எங்கப்பா பாரதம் படிப்பார் நவகோடிபகவத்கீதா படிப்பாரு  உயில் கைக்கு  வந்தபிற்பாடு இரண்டுபேரும் உயில் பாராயணம்பண்றாங்க

 

நவகோடி ---இல்லன்னா இவ்வள்வு நாள்சீறும் சிறப்புமா நிர்வகிக்க முடியுமா

 

கனக—முடியாதுபோகட்டுமந்தபொறுப்பு  கஷ்டமெல்லாமுனக்கு மெதுவா டெரியட்டுமே

 

அருணா – எனக்கு வயசு பதினெட்டு முடிஞ்சு ஒரு வாரம் ஆச்சு மாமாஉங்களத்தான்மாமா

 

கனக--- ஆங் என்னையா மாமான்னும்கூப்பிட்டேஏய் சபாபதி அருணா என்னை மாமான்னு  கூப்பிடுதடா

 

சபா ---- கவனிச்சேன்

 

நவ --- வயசிலபெர்யவங்கள் மாமன்னு கூப்பிடறது சகஜந்தானே

 

 கனக – அப்படீன்னாஉன்னை ஏன்யா கூப்பிடல

 

 நவ --- உங்கவீட்டு மருமகள அ வரப்போறோமென்னு உஅ மாமான்னு கூப்பிடுது 

 

சபா --- அ மைதி அமைதி  பிள்ளையும் பெண்ணும் நாங்கைருக்கும்போதுஎங்கள் கல்யாணத்ட்க்ஹைப்பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள் என்ன அருணா எபடிப்போட்டேன் பாரு ஒருபோடு

 

 அருணா --- கல்யாஅம்கல்யாணம்கல்யாணம்  சேச்சே ஒரு பொண்ணாலகல்யாணம் செய்யாம வாழமுடியாதா ஆண்களோடசரி நிகர் சமானமாக வாழ முடியதா என் சொத்டை எனக்கே நிர்வகிக்க முடியாதா நல்லது கெட்டது எல்லாம் எனக்கும் தெரியும்

 

நவ --- அருணா நீச்சல் தெரிஞ்சவங்களையேகூட வெள்ளம் அடிச்சூட்டுப்போயிடும்உதாரணமா என்னையே டௌன்  பண்ணி கட் பண்ணப்பாக்குறாங்க

 

அருணா ----என்சொத்டை மட்டும் யாருமடிச்சூடுப் போக முடியாதுன்னு நான்சொல்றேன்

 

சபா----- –உனக்குகல்யாணம்செய்துவெக்கிற கடமை அவருதுன்னு அப்பாநெனைக்கிறார்

 

கனக --- சொத்தை  மாப்பிளைட்டதான் ஒப்படைக்கணூம்னு நான்நெனக்கிறேன்

 

அருணா – கல்யாணமே செய்துக்க போறதில்லன்னு சபதம் செஞ்சிருக்கேன்னு நான்சொல்றேன்


 நவ--- அப்போ நாங்க நெனச்சாலும்  உன் சொத்த உங்கிட்ட ஒப்படைக்க முடியாது

 

அருணா---- என்

 

சபா---  உனக்கு கல்யாணத்துக்கப்புற்ம்தான் சொத்துன்னு உங்கப்பா உயில்லஎழுதி இருக்காரு ---- சொல்லுங்கப்பா …… உங்கப்பா என்ன சாமான்யமா திரிகாலமுண்ர்ந்த  ஞானி தலையில மட்டுல்ல உடம்பெல்லாம் மூளை இல்லன்னா இப்படி ஒரு உயில் எழுத முடியுமா

 

அருணா--- அப்பா……

 

நவ--- இருந்தாலும் என்னம்மா ஒரு நல்ல பையனாப் பார்த்து  கல்யாணம்பண்ணிக்க எல்லாரையும் நல்லவங்கன்னு நெனச்சு ஏமாறதே(போகிறார் )

 

கனக---நாங்களும்வரோம் அருணா  யோசிக்காதே எல்லாம் நல்லதுக்குத்தான்(கனகசபை சபாபதி போகிறார்கள்)

 அருணா  ---தாத்தா …. அப்பா என்னை ஏமாத்திட்டார்தாத்தா  எனக்காக இவ்வளவு சொத்தை சேர்த்தும்அதை எங்கிட்டஎப்படிஒப்படைக்கணும்னு  அப்பாவுக்கு தெரியாமபோச்சே தாத்தா ( அழுகிறாள் ) அப்பாநீங்க உங்க மகளூக்கு மன்னிக்க முடியாததுரோகம்  செய்துட்டீங்க  என் எதிர்லமட்டும்  நீங்க இருந்தீங்கன்னா

 

தாத்தா--- என்ன அருணா இது உங்கப்பா மேலயே வஞ்சம் தீர்க்கற்மாதிரி  பேசலாமா

 

அருணா—அப்பா என் லட்சியதையே  நொறுக்கிட்டாரே இந்த சொத்துக்காக என்விருப்பத்துக்கு  மாறாஒருத்தனுக்கு  அடிமையா  இருக்கணுமா

 

தாத்தா--- ஒருத்தனுக்கு வாழ்க்கைப்பட்டாஅடிமை வாழ்வுனு ஏம்மா தப்பா எண்ற

 

2அருணா ---- தாத்தாஉங்களுக்குத் தெரியாது வெளியே அடிபட்டு மிதிபட்டு வாழும் கோழைகள்பெண்டாட்டியை அடிச்சு உதசிப்பதை நான் பார்த்திருக்கேன்மாப்பிள்ளைன்னா  ஒரு சிறு துரும்பையும்கிள்ளிப்ப்;போட்டாஅது குட துள்ளிக் குடிக்கும்னு சும்மாவா  சொல்றாங்க

 

தத்தா---உன் இஷ்டம அருணாசின்ன வயசிலேயே உன் குடும்பத்துலஒட்டிக்கிட்டைந்தகிழவனுக்கு  உன்னை விட்டா வேற கதியில்லநீ எங்கிருந்தாலும்   சொத்து இருந்தாலும்  இல்லாவிட்டாலுமிந்தவேலைக்கார கிழவனை மட்டும் விட்டுடாதேம்மா

 

அருணா – இல்லை தாத்தா இல்லை தனியா விட்டுட மாட்டேன்  இந்த ஆஸ்தியைக்கொண்ஊ ஏஆலவோ நல்லகாரியங்கள்செய்யலாம் இல்லேன்னா இந்த சொத்தை பங்காளிக்கழுகுகள்கொத்திண்டுபோயிடும்

 

தாத்தா- அப்படீன்னா நீ யாருக்காவது வாழ்க்கைப்பட்டுதானாகணும்மா

 

அருணா –வேற வழியே இல்லயா தாத்தா

 

தாத்தா --- எனக்கு ஒண்ணும் புரியலியே

அருணா ---ஹூம் (போகிறாள்) தாத்தாவும் உள்ளே போகிறார்

                                    திரை
 காட்சி 3

இடம் –சாலை

பாத்திரங்கள்--- மாணிக்கம்  சந்துரு அருணா

குமரேசனை தூக்கிலிடஇன்னும்  ஏழே தினங்கள் இருப்பதாக மாணிககமும்  சந்துருவும்  பாடிக்கொண்டே பிரசுரம்  விற்கிறார்கள் அவ்வழியே வரும் அருணா

 

அவ்வழியே வரும் அருணா ஏதோ யோசித்தபடியே  அங்கு நிற்கிறாள்

 

 

காட்சி 4

 

இடம் ---ஜெயில்

பாத்திரங்கள்-அருணா  குமரேசன்  கான்ஸ்டபிள் 420 ரெஜிஸ்த்ரார்  சந்துரு

(திரை உயரும்போது கான்ஸ்டபிள்  குமரேசனுக்கும் 420க்கும் உணவு தட்டை வைக்கிறான் )

 

குமரேசன்  ---எனக்கு எதுவும்வேண்டாம்.

 

போலிஸ் சே அப்படிச்சொல்லக் கூடாது

 

குமரேச  வேண்டாம்னா விட மாட்டிங்களா

 

போலிஸ் –வேண்டாம்னாவிடக் கூடாது உங்கள சாப்பிட வைபபது  எங்க டூட்டி   

 

420 – போனாப்போவுது சாப்பிடு தம்பி

 

குமரேசன்  ---எனக்கு வேண்டாம்  சாகும்வறை எனக்கு சாப்பாடு வேண்டாம்

 

420 – சாகிற வரை    உண்ணா விர்தமா வேண்டாம் தம்பி இவங்க தற்கொலை முயற்சின்னுகேஸ் புக் பண்ணி  ஜெயில்ல தள்ளிடுவாங்க

 

குமரேசன்  --நா ஏற்கனவே ஜெயில்லதானே ஐயா  இருக்கேன்

 

20 --  தம்பி நானிங்கவந்து ரொம்ப நாளானதால இது ஜெயிலுங்கற்தே   மறந்து ப்போச்சு சரி சரி சாப்பிடு

 

குமரேசன் --- எனக்கு வேண்டாம் ஐயா

 

420--- உனக்கு என்னதான்  வேணும் உன் ஆசைதான் என்ன

 

 குமரேசன்  --- சாகறதுக்கு முன்னாலஎந்தம்பி சந்துருவை ஒரு முறை பார்க்கணும் 

 

420----ப்பூ நான் ஏற்பாடு பண்ரேன்

 

குமரேசன்  என்வாழ்க்கையில முதல் தடவையா பிறர் கிட்ட நான்  எதிர் பார்க்கிற  உதவி இதுதான் 

 

420--   நான் செய்யற முதல் உதவியும் இதுதான்  தம்பி உங்கிட்டஎனக்கு ஒரு தனி பிரியம் வட்டிக்கடை சுப்பையாவை நானே கொலை செய்யணுன்னு இருந்தேன்   அத நீ செஞ்சு முடிச்செ பாரு அதனால

 

 குமரேசன் --- ஐயா அந்தக் கொலையை நான்செய்யலே  ஐயா

 

420---நமக்குள்ள என்ன தம்பி  சும்மா சொல்லு எங்கிட்டயே மறச்சா  நான்  நம்புவேனா

 

குமரேசன்  --நம்ப வேண்டாம்  யாரும் நம்பவேண்டாம்  உலகமெல்லாம்  ஒருத்தனை உத்தமன்னு சொல்லும்போது  அவன்மனசாட்சி அவனை குற்றவாளின்னுகுத்திக்காட்டற  வேதனயை விட உலகமெ கொலைகாரன்னு திட்டற ஒருத்தனை  அவன்  மனசாட்சி மட்டும் உத்தமன்னு வாழ்த்தறதுல  இருக்கிற் ஆறுதல் பெரிசு ஐயா

 போலீஸ்—உன்னைத்தேடி ஒரு பொண்ணு வந்திருக்கப்பா

 

குமரேன்--- என்னைத்தேடியா   வரட்டும் வரட்டும் ( அருணா வருகை ) யார் நீங்க்  என் தம்பி சந்துரு ஏதாவது  சொல்லி அனுப்பினானா

 

அருணா----சந்துருவுக்கு நீங்க எதாவது சேதி சொல்லணும்னா  நான் போய்ச் சொல்றேன்   ஆமா சந்துரு யாரு

 

கும --- இன்னும் ஒரு வாரத்துல என்னைப் பறி கொடுத்து தவிக்கப்போற என் தம்பி என் கவலை எல்லாம் அவனைப்பற்றித்தான் 

 

அருணா---அவனைப்பார்த்துக்க  அண்ணி இல்லே

 

கும---என்கழுத்த முடிச்சு இறுக்கறப்போ தன்கழுத்து  முடிச்ச இழக்கிற துர் பாக்கியம் எந்த பெண்ணுக்கும்  இல்லை  நான்கலியாணம்  ஆகாதவன் எல்லாம் விசாரிக்கிறயே  நீ யாரு

 

அருணா ---நானும் இன்னும்  கல்யாணம் ஆகாதவ  பேர் அருணா 

 

420---அடிச்சக்கைன்னானாம் காலேஜு  பீச்சு சினிமா இங்கெல்லாம்தான்  நடக்கும்னு கேள்வி பட்டிருக்கேன்  இப்பஜெயிலுக்குள்ளூம் வந்துடுத்தா தம்பி காதல் ரொம்ப அபிவிருத்தி அடைஞ்சிருக்கு

 

அருணா  ----ஐயா அவரை நான்  காதலிக்க வரலை  கல்யாணம்செய்துக்க வந்தேன்

 

கும----- (வியப்புடன் )ஆங்  ( 420 சிலயாகிறான்)

 

அருணா ----ஏன் ஆச்சரியப்படறீங்க் உங்களுக்கு  ஆட்சேபணை இல்லேன்னா இப்பவே திருமணத்தை  நடத்திடலாம்  ரெஜிஸ்துராரையும்  கூட்டி வந்திருக்கேன்

 

கும –உன்க்கும் எனக்குமா  நான் இன்னும் ஒரு வாரத்துல தூக்குல   தொங்கப்போற்ச் .சிரஞ்சீவி குமரேசனுக்கும் சௌ அருணாவுக்கும்  கல்யாணமா ஐயா ஜெயில்ல டெலிபோ ன் இருக்குமில்ல  போன் செய்து பைத்திய்க்கார  அசுபத்திரியிலிருந்து ஏதாவது  பொண்ணு  தப்பிச்சு ஓடிப்போச்சான்னு கேக்கச் சொல்லுங்க

 

அருணா—போதும்   நீங்க  நெனக்கிற  மாதிரி நான் ஒண்ணும் பைத்திய்மில்ல

 

கும----- இல்ல குறும் புக்காரியா இருக்கலாம் தூக்கு  தண்டனைக்   காத்திருக்கிற் ஒருத்தனைப் பார்த்து எள்ளி நையாண்டி செய்யும்     ஈவிரக்கமில்லாதவளா இருக் கலாம் இந்த கேசை என் மேல ஜோடிச்சவங்க  உன்னை அனுப்பினார்களா உன் நாடகமென்கிட்ட பலிக்காதுன்னு  சொல்லு போ

 

அருணா—இது  நடிப்பும் இல்ல நாடகமும் இல்ல என்ன யாரும் அனுப்பவுமில்ல  இது  என் சொந்த லட்சியம்

 

கும----- யமன் கிட்டெருந்து புருஷன் உயிரை மீட்டாள்  சாவித்திரி என்று கதை படிச்சிருக்கேன் உன் புருஷன் உயிரை மீட்கணும்னு  உள்ள ஆசையில சாகப் போற என்னைக் க்ல்யாணம் செய்துக்க நெனக்கறியா அருணா சட்டம் என்னை கொல்லப்போவுதுஎன்னைக்கல்யாணம் செய்துகிட்டு உன்னை நீயே சாகடிச்சுக்கப் பார்க்கறே

 

அருணா --- இல்லை இந்தக் கல்யாணத்தின் மூல்ம்தான் நான்வாழப்போறேன்எனக்கு வாழ்வு தரப்போகும் கல்யாணத்துக்கு நீங்க சம்மதிச்சாஎன் கஜானாவை வேணுமாலும்   திறந்து விட்டுடுவேன் 

 

கும--- கல்யாணத்துக்கு விலையா  உங்க வர்க்கப் பெண்களுக்கு இப்படி ஏதாவது பைத்தியம் இருக்குமா

 

அருணா----பிறர் வாழவே வாழ்ந்ததாக் பெருமை பேசிட்டு ஒருபெண்ணுக்கு  வாழ்வளிக்க மறுக்கிற உங்களுக்குத்தான் பைத்திய்ம் கொஞ்ச நேரம்முன்னாடிஎந்ததம்பியை  நெனச்சு அழுதீங்களோ  அந்த தம்பி வாழ்நாள் பூராவும் கண் கலங்காமல்  வாழ முடியும்  சந்துருவின் எதிர் காலத்துக்கு எது கேட்டாலு நன் தரேன்ன்னு சொல்லும்போது அந்தப்பணமே வேண்டாம்னு சொல்லும்   உங்களுக்குத்தான்   பைத்தியம்

 

கும ---- போகட்டும் இந்த கல்யாண பேரத்தில எனக்கு என்ன கிடைக்கும்

 

அருணா ---- கேளுங்க

 

கும ---ஆயிரம் ரூபாய் தருவியா

 

அருணா ---இவ்வளவுதானே இன்னும் 5 நிமிஷத்திலரெஜிஸ்திரார் கூடவருவேன்  உடனே கல்யாணம்   மறந்துடாதீங்க (போகிறாள்)

 

420 --- இன்னும் கொஞ்சமதிகமா  கேட்டிருக்கலாம்  தம்பி

 

கும--- நானொண்ணும்  பணக்காரனில்லையே  பேராசைப்பட  (சிறிது நேரம்மௌனம் )

 

420 --- என்ன தம்பி யோசனைபலமாஇருக்கு

 

 கும --- இல்ல ஐயா இப்ப வந்த இந்த   அருணாவை நெனச்சிட்டு இருந்தேன் இவ கொடுக்கப்போற ஆயிர ரூபாயை எங்கள் சங்கத்துக்கே கொடுத்துடலாம்னு இருக்கேன்(அருணா ரெஜிஸ்திரார்   வருகின்றனர்

 

420--- அடடே   நீ நெசமாவே  வந்துட்டியா நான்  வெளயாட்டுன்னு இல்ல நெனச்சேன்

 

ரெஜிஸ்----- யார் மாப்பிள்ளை  இவரா

 

420--- உன்னைவிட வயசான எனக்கா கல்யாணம்  நானில்லை ரெஜிஸ்தார்

இந்த தம்பிதான் மாப்பிள்ளை  (ரெஜிஸ்டிரார்  ஆளுக்கொரு மாலையை தருகிறார்) உனக்கு இந்தபெண்ணை கல்யாணம் செய்துக்கசம்மதமா

 

கும---- சம்மதம்

 

ரெஜிஸ்டிரார்-----இதிலே கையெழுத்து போடு குமரெசனைக் கல்யாணம்  செய்துக்க உனக்கு சம்மதமா

 

அருணா---     ஆம் சம்மதம்

ரெஜிஸ்திரார் ---இதுல கையெழுத்து போடுங்க ம்ம்ம் மாலையை மாத்திக்குங்க  இதோ உங்க கல்யாண செர்டிஃபிகேட் Wish you a long and happy married  life (போகிறார் )

 

420--- இந்தாம்மா அருணா  இந்த கிழவன்கிட்ட ஆசிர்வாதம்வாங்கிட்டுப் போம்மா மஞ்சளூம் பூவுமா எந்நாளும்   சுமங்கலியா இருக்கணும் நீ (அருணா திரும்பிப்பாராமல் போகிறாள்)

 

கும ----செய்யறது செய்யறே பலிக்கிற ஆசிர்வாதம் செய்யக்கூடாதா தாத்தா

 

420 --- யார் கண்டது இவ கழுத்துல  நீ போடற முடிச்சு பலமான முடிச்சா இருந்தா தூக்கு என்ன செய்ய முடியும் அவ பெரிய பணக்காரிபோலலைஇருக்கு தம்பி பணம்  பத்தும் செய்யும் தெரியுமா

 

கும ----இப்படி தூக்குல தொங்கப்போறவனை  கல்யாணம் செய்துக்கவும்  வைக்கும்

 

420—தூக்கில போறவனைக்  காப்பாத்தினாலும் காப்பாத்தும்

 

கும --- அவ தலை எழுத்தையே மாத்தப்போற இந்த கையெழுத்தை அவள் போட்டிருக்கவே வேண்டாம்தாத்தா  இதுவரை எந்தம்பிக்கு மட்டும்கவலைப் பட்டேன் இப்போ இந்த பெண்ணுக்கும்  சேர்த்துஇல்ல  கவலைபடவேண்டி இருக்கு

 

420----- நீ என்ன கவலைபடற் அந்த பெண்ணு இல்ல  உனக்காக கவலைப்பட்டு உன் விடுதலைக்காக  பாடு  பட்டுகிட்டு இருக்கும்

 

 கும ---எனக்கொண்ணும்புரியல தாத்தா கல்யாணம் ஆனப்புறம் ஒரு நிமிஷங் கூடபுரு ஷனோட வாழமுடியாத இந்த கல்யாணத்த  அவ ஏன்  செய்துக்கிட்டா ஹூம் பத்திரத்துல கையெழுத்து போட்டுட்டு திரும்பிக்கூட பார்க்காதாவளைப் பற்றி நான் ஏன் கவலைப்படணும் ( சந்துரு வருகிறான்  )

 

சந்துரு -----அண்ணா

 

கும ---சாகிறத்துக்கு முன்னாடி உன்னைப் பார்க்கப் போறேனா  ந்னு தவிச்சேன்   நல்ல வேளை நீ வந்துட்டே

 

420 ---தம்பி உன்ன உங்க அண்ணி இங்க அனுப்பினாங்களா

 

சந்--- அண்ணியா    அண்ணா தாத்தா என்ன சொல்றாரு

 

420 ---- உங்க அண்ணனுக்கு  கொஞ்ச நேரம் முன்னாடிதான் கல்யாண மாச்சு உங்க விட்டுல உங்க அண்ணி ஒருசமயம்  காத்திட்டு இருக்கும்

 

சந் --- உனக்கு கல்யாணம் ஆனதைக்கூடபார்க்க எனக்கு அதிர்ஷ்டமில்லாம போச்சே அண்ணா      அண்ணீ ------

 

கும---- ச்சே நானே இந்தக்கல்யாணத்த ஒருகெட்டசொப்பனமா மறந்துட்டபின் அண்ணியாவ்து மண்ணாங்கட்டியாவது சந்துரு உங்க அண்ணிய உனக்கு யாருன்னு கூட தெரிய வேண்டாம் 

 

போலீ ---- நேரமாச்சு தம்பி

 

சந்துரு---- அண்ணா   அண்ணா அப்பா அம்மா இல்லாததையே  தெரியாமவளர்தின நீ இல்லாம நான் எப்படி அண்ணா வா(ழப்போறேன்  போலீஸ் அழைத்துச் செல்கிறது )

 

கும --- இயற்கைக்கு விரோதமாஇறந்தவங்களோட ஆவி அவங்களுக்கு பிரியமானவங்க  பின்னாடி சுத்திகிட்டிருக்கும்சந்துரு நானும் ஆவியா மாறி உன்பின்னாலயே வருவேன் உனக்கு ஒருஆபத்தும்வராம காப்பாத்துவேன்(தன்முகத்தைப் பொத்திக்கொண்டு கேவி அழுகிறான்  )

 

420 ----அந்த சின்னப்பையனுக்கு  தைரியம் சொல்லாம நிநீ இப்படி அழலாமா  அழாதே வா தம்பி

 

காட்சி   5

 

இடம்    ரோடு

பாத்திரங்கள  கனக சபை நவகோடிசபாபதி நிருபர்

 

(கனகசபை சபாபதி வர  எதிரே நவகோடி வேகமாகப் போகிறார்)

 

கனக--- டேய் சபாபதி இப்ப போனது நவகோடிதானே

 

சபா---- இன்னும்   அரை ஃபர்லாங்  போனப்புறம் கேளுங்கஎதிர்ல வரும்போது  பார்த்தா எலியும் பூனையும்பொல இருக்கறது எனக்கென்னன்னு  இருந்திட்டேன் கூப்பிடவா (கைதட்டி ) இந்தாங்க  மிஸ்டர்

 

கனக—என்னங்க  நவகோடிபர்த்தும்பர்க்காம போறீங்க

 

நவ --- எங்கேயோ யோசனை

 

கனக --- ரொம்ப பலமோ

 

நவ ----பின்னென்ன  கனக சபை  கேட்டிங்களா  அநியாயத்தை

 

கனக--- என்ன விஷயம்  பதறாம சொல்லும்

 

நவ-----நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்துட்டேன்  கேக்கிற  வழியக் காணோம்  நான் எவ்வள்வு பாடுபட்டுச் சேர்த்தது

 

கனக ---- என்ன நவகோடி  விஷயத்தசொல்லாம

 

நவ ---என் பெண் நவ நீதம் கல்யாணம்செய்துகுவேங்குது

 

சபா---- ப்பூ  இவ்வளவுதானா ( சிரிக்கிறான் )

 

கனக ----பொண்ணாப்பொறந்தா கல்யாணம்  செய்துக்கறது தானே லட்சணம் 

நவ – என்னய்யா  விஷ்யம் தெரியாம பேசறியே நவநீதம் தவிரஎனக்குவெற  வாரிசே கிடையாது இதைக்கட்டி கொடுட்திட்டா  என்சொத்தெல்லாம் மாப்பிள்ளைக்கு இல்லபோய்ச்சேறும் 

 

சபா---- அப்பா எனக்கு ஒரு ப்ரில்லியண்ட்  ஐடியா அப்படி செஞ்சா என்ன ?

கன்க—எப்படி

சபா—நானே நவநீதத்தைக் கட்டிக்கிட்டா  அவங்கசொத்து நம்ம சொத்து  எல்லாம்  ஒண்ணுக்குள்ள  ஒண்ணா இல்ல  இருக்கும் 

 

நவ --- நல்ல யோசனைதான்  அப்ப அருணாவோட சொத்து

 

சபா--- அதுவும் நமக்குத்தான்  நானே அருணாவையும் கல்யாணம்  செய்த்துக்க்றேன்

 

கன---டேய் சபாபதி  சொத்துக்காகஎவ்வள்வு கல்யாணம் செய்துக்குவே சட்டத்துல  பைகாமி நாட் பெர்மிட்டெட்

 

சபா—அப்பா உங்களுக்கு உலகம் தெரியலே  புருஷன்னா  தெய்வமாச்சே  பாரதபெண்ணுக்கு எந்தபொண்ணுப்பா  புருஷன்மேலகேஸ்போட்டு ஜெயிலுக்கு அனுப்புவா என்ன மிஸ்டர் நவகோடி நான் சொல்றது சரிதானே

 

கனக--- டேய் டேய் டேய்   என்னடாஇது மிஸ்டர் நவகோடி சிவ கோடின்னுட்டு  ஹாங் மாமான்னு கூப்பிடு

 

சபா---- போங்கப்பா எனக்கு வெக்கமாயிருக்கு

 

நவ--- அதனாலென்ன  பரவாயில்ல பரவாயில்ல

 

சபா---அப்போ எனக்கு ரெண்டு கல்யாணம்ன்னு  தீர்மான மாயிடுச்சு  அப்பா மேரேஜுக்கு முன்னாடி இந்த ரோடில பாதியை அடமானத்துலேந்து  மீட்கணும்

 

கனக--- என்ன சொல்றே நீ

 

சபா----இல்லப்பாஎனக்கு அந்தக் கடையில  கொஞ்சம்கணக்கு பற்று  வரவு கடன்கொஞ்சம்  ஜாஸ்தி ஆனபோது  இந்த ரோடில பாதியை அடமானம் வெச்சேன்  அந்தப்பாதி ரோடை நான்  யூஸ் பண்றதில்லைஇப்ப அந்தக்கடனைத்             தீர்க்கணும் நவநீதம் மூலமா  நவகோடி மாமா கிட்டருந்து கொஞ்சம்  --------

நவ----அதுதான் நம்ம நவநீததுக்கிட்ட நடக்காது அது உன்னைக்கொண்டு போய் ஜவுளிக்கடையில அடமானம்வெச்சிட்டு  கடையை வீட்டுக்கு கொண்டுவந்திடுவா என்னகனக சபை ?------

 

கனக சபை----என்னடா  சம்பந்தி விஷயம்தெரியாதவரா  ருக்காரு  சொல்லுடா அவருகிட்ட  சம்பந்தம்பண்றவங்க ஒருத்தருக்கொருத்தர்  நேருக்கு நேரா பேசிக்கற  வழக்கம் இல்லைன்னு சொல்லுடா அவர்கிட்ட

 

சபா—அட் …..மாப்பிள்ளைக்கு  தரகு வேலையா

 

நவ---ஆமா மாப்பிள்ள  அத நான்மறந்துட்டேன் நவநீதத்துக்கும்  உனக்கும்  நடக்கப்போற் கல்யாணச் செலவு எல்லாம் உங்களோடதுன்னு உங்கப்பா கிட்ட சொல்லு மாப்பிள்ள

 

சபா--- அப்பா நவநீதத்துக்கும் உங்களுக்கும்   நடக்கப்போற கல்யாண செலவு உங்களோடதுதான்  ஹாங்  இல்லைல்ல நவநீதத்துக்கும்  எனக்கும்  நடக்கப் போற கல்யாணாச்செலவு உங்களுடையது

 

கனக------என்னது

 

சபா-----அவர் சொன்னாருப்பா

 

கனக ---ஊம்  மாப்பிள்ள அழப்புக்கு  வாடகை கார் கூடாது புதுசா கார் வாங்கணும்செலவு பெண்வீட்டாருதுன்னு உங்க மானர் கிட்ட சொல்லு மகனே

 

சபா---- போங்கப்பா மாமனார் கிட்ட பேசறதுக்கு   மாப்பிள்ளைக்கு வெக்கமாயிருக்காதா

 

நவ –கல்யாண  செலவை வேணா  நான் ஏத்துக்கறேன் கார் வாங்கற செலவு  மாப்பிள்ளை வீட்டாரது  ஆம்மாம்

 

கனக --- அதுதான் நடக்காது

 

நவ –நடக்காதா

கனக—நடக்குமா

 

சபா--- கல்யாணத்துக்கு  ஒரு ஐட்டம் சம்பந்தி சண்டை  ஆரம்பமாயிடுத்து ஆமா சண்டை வந்துட்டாமட்டும் சம்பந்திகள்நேருக்கு நேர் பேசிக்குவாங்க போலிருக்கு

 

நவ ---நடக்குமா நடக்காதான்னு நான்பாத்துடறேன்  நீவா மாப்பிள்ள்

 

கனக----போயிடுவாயடா  நீ (என்று சபாபதியைஆளுக்கொரு பக்கம் இழுக்கினறனர் )

 

சபா--- கை கை  அப்பா கை மாமா கை (அப்போது அங்கு ஓடிவரும்)

 நிருபர்---  என்ன ய்யா இது நடு ரோட்டில யுத்தம்  நீங்க யாரு உங்க பேரு

 

நவ--- ஐயா   ஐநா சபை பார்வையாளரா

 

நிருபர் ---சேச்சே  நிமிஷக் கொலை நிருபர் நான் எங்கெங்கே வாலிபர்கள் பருவப்பெண்களை  கும்கும்னு குத்தறங்களோ எங்கெங்கே  கொலைகார மாப்பிள்ளைகள் மாமனார்களை  சடக் சடக்குன்னு  குத்துறாங்களோ அங்கெல்லா நான்காட்சி அளிப்பேன் பெர்மனெண்ட்  அட்ரெஸ்  கேர் ஆஃப் கோர்ட் ம்ம்ம் இந்த நடு ரோட் யுத்தத்துக்கான காரணங்களை  சொல்றீங்களா

 

சபா—எழுதிக்கோங்க்ச சார் மகனுக்கும்  மகளுக்கும் ஆகப்போற கல்யாணத்தை பற்றிசம்பந்திகள்நடுத் தெருவில் சண்டை தாலிகட்டப் போகும் மாப்பிள்ளையின்  கைகளை ஆளுக்கொண்றாக பிய்த்தெடுத்த கோரம்  அந்தோ பரிதாபம் 

 

கனக---ஆமாண்டா மெனக்கெட்டு எல்லாத்தையும் புட்டு புட்டுசொல்லு  சம்பந்திகள் இன்னக்கி அடிச்சுகுவாங்க் நாளக்கே ஒன்னா சேர்ந்துகுவாங்க என்ன நவகோடி

 

நவ –நாளைக்கென்ன இன்னக்கே சேர்ந்துகுவோம்வாங்க்

 

சபா - உங்க்ளுக்கு என்  அனுதாபம்சார் இன்னும் எப்பவாவதுசண்டை வந்தா  சொலி அனுப்பறேன்   வரேன் சார் வணக்கம் போடக்கூட கையை தூக்க் முடியலையே  (           (மூவரும் போகிறர்கள்)

 

காட்சி  6

ஈ9

இடம்  அருணா மாளிகை

 பாத்திரங்கள் ------அருணா  தாத்தா

( திரை உயரும்போது  நிலை கொள்ளாமல் தவிக்கிறாள் அருணா காலண்டரில் தேதி பார்ப்படும்  குழம்புவதுமாக இருக்கிறாள் மணி இரவு 11-55 தாத்தா அங்கு வர )

 

அருணா--- யார் நீ  ஏனிங்கே வந்தே

 

 தாத்தா----அருணா

 

அருணா --- தாததா  என்னை மன்னிச்சுடு தாத்தா யாரோன்னு நெனச்சு பயந்திட்டேன்

 

தாத்தா  ----உன் உடம்பு நெருப்பாகொதிக்குதே காப்பி எடுத்திட்டு வரேன் குடிச்சா தெம்பாஇருக்கும்

 

அருணா -----தாத்தா அதைவிட விஷத்தைக் குடிச்சா நல்லா இருக்கும்

 

தாத்தா ---அப்படி என்னம்மா  கஷ்டம்வந்துட்டுது  இப்போமனசுல இருக்கிற்றத வாய் விட்டுச் சொன்னா மனசு கொஞ்சம் ஆறும்மா  சொ;ல்லு அருணா

 

அருணா---கொஞ்சங்கூட நிம்மதியா  இருக்க விட மாட்டீங்களா தாத்தாநன்வெளியே போறேன்

 

தாத்தா----இல்லே அருணா நானே போறேன் இன்னக்கி தேதி  இருபத்தொன்பதுஆச்சு காலண்டர்ல தேதி கூடகிழிக்காம் அப்படி என்னம்மா கவலை (தேதியை கிழிக்க முயல)

அருணா ----ஐயையோ தாத்தா  அதைக் கிழிக்காதிங்க  வேணும்னுதான்  கிழிக்காம விட்டிருக்கேன்

 

 தாத்தா --- ஏம்மா

 

அருணா--- ஐயொ தாத்தா  படாத பாடுபட்டு எதை மறக்க  முடியாம தவுஇக்கிறேனோ  அதையே மறுபடியும்  மறுபடியும்  ஞாபகப் படுத்தறீங்ககேள்வி மேல் கேள்வி கேக்கறீங்க  இந்த வீட்டுல உங்க கிட்ட மட்டும்தான் நான் கோபப்படாம இருக்கேன்  என்னை தனியா இருக்க விடுங்க

 

தாத்தா---ம்ம்ம்ம் என்ன மாயமோ   (போகிறார்)

 

அருணா--- இந்த முப்பதாம் தேதி வராமைருக்கக் கூடாதா

 

குமரே குரல் ---வாவென்றால்  வரவு போ என்றால்  போகவு  காலமென்ன உங்கள் வேலையாளா  யாருக்காகவும் காத்திராமல் காலம் போய்க்கொண்டுதான்  இருக்கும் 

 

தாத்தாகுரல் –மயில் கழுத்தைவிட அழகாக இருந்தாலும் அதில் மஞ்சக் கயிறும் மாங்கல்யமும் இருந்தாத்தானம்மா ஒரு பெண்ணுக்கு பெருமை  மகிமை

 

அருணா---தாத்தா

 

கும குரல் ---காகிதக்கதை அல்ல வாழ்க்கை அருணா தவறி எழுதியதை அழிக்கவும்  திருத்தவும்    உன்னை பழி வாங்கப் புறப்பட்டு விட்டது இனி நீ தப்ப முடியாது  அருணா

 

அருணா --- ஆவேசத்தில்  என்ன செய்கிறொமென்படே தெரியாம எடேதோ செய்து விட்டேனே அம்மா

 

குமகுரல் –உற்றார் உறவினர் புடை சூழ  நடக்க வேண்டிய உன் திருமணம் யாருக்கும் தெரியாம சிறையிலா நட்க்க வேண்டும்  நீ கொடுத்த கூலிக்காக  ஒருவன் கட்டிய தாலியை பொழுது விடிந்தால் நீ இழக்கப்போகிறாய்  அருணா

 

அருணா –பொழுது விடியாமலே இருக்கக்கூடாதா

 

கும க்ரல் --- நாளை பொழுது விடியக்கூடாது  என்று  சபிக்கப்போகிறாயா  அருணா

 

நாளை உலச்கத்துக்கு  விடிகிறபோதுநீ அழுது வடியப்போகிறாய்

 

அருணா --- இல்லை இல்லை  கூடாது நிங்கள் சாகக் கூடாது ஏதாவடு அற்புதம்நிகழ்ந்து  நீங்கள் பிழைத் விடக் கூடாதா

 

கும குரல் ---நிரபராதி என்னை தூக்கிலிடும்போது  சத்தியம் வந்து எனை காப்பாற்றி விடப்போகிறதா பைத்தியக்காரி சட்டமென்னைக் கொல்லப் போகிறது நீயாகவே உன்னை சாகடித்துக் கொள்ள்ப்போகிறாய் அடோ மணி பன்னிரண்டுஉனக்குள்ள  மாங்கல்ய பாக்கியம்  இன்னும் ஆறே ஆறு மணிநேரம்  அருணா நாளை முதல் நீ விதவை  நீயாகவே உனக்களித்துக் கொண்ட கல்யாணப்பரிசுஉத்திரவாதமான விதவை கோலம் பொழுது விடியப்போகிறது விடிந்து கொண்டே இருக்கிறதுஅருணா நீ விதவை  நீவிதவை

 

அருணா--- போதும்போதும் நெஞ்சைப்பிளந்து  நெருப்ப்சைக்கொட்டாதே  போ போ

 

தாத்தா –ஓடி வந்து என்ன அருணா  என்னாஆச்சு

 

அருணா ---ஒண்ணுமில்ல தாத்தா ஒண்ணுகில்ல ஏதோ கெட்ட கனவு

 

காட்சி  ----7


இடம் ---ரோடு
பாத்திரங்கள் ===ரத்தினம் பக்கிரி 

 (திரை உயரும்போது பீடி  நெருப்புப்பொறியின்வெள்ச்சம் யரோ ஒருவ பதுங்கி வருவதை அறிவிக்கிற்து இதேரீதியில் எதிர் திசையில் ஒரு உருவம் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு  பதறி )

 

ரத்னம்---  யார்றாவன்

 

பகிகிரி ---ரத்தினமா  நல்ல வேளை

 

ரத்னம்---பக்கிரியா நானும்தான் பதறிப்போனேன்

 

பக்கிரி ----சே  இந்த டிருட்டுத்தொழிலும் ஒரு பொழப்பாண்ணே எந்நேரமும் மூட்டைப்பூச்சி போலீஸ்காரனுக்கு பயந்து பயந்து சே நம்ம தலையில சாமி இப்படி எழுதி இருக்கக்கூடாது

 

ரதனம்---- அவரென்ன செய்வாரண்ணே  பாவம் பணக்காரனுக்கு பதுக்க பகலையும் அதை அமுக்க நமக்கு இருட்டையும்படச்சிருக்காரே  அதச்சொல்லு

 

பக்கிரி –ஆனா நமக்கெதிரா விளக்கையும்  வீட்டையும்  பூட்டையும் போதாக்குறைக்கு இந்த பொலீசையும் படைச்சானே இந்த பாழாப்போன ம்னுசன்  அவனையும்  சேர்த்தில்ல படச்சிருக்காரு கடவுள்  அத்தச்சொல்லு

 

ரத்னம்----எனக்கென்னவோ இந்தபொழப்பே சலிச்சுப்போச்சு

 

பக்கிரி ---எனக்குந்தான் எங்கேன்னா  ஒரு பம்பர் கொள்ளை  அடிச்சுட்டு  அப்புறம் நாலு பேரப்பொல பெரிய மனுஷனா தைரியமா வாழணும் (அவன்ப் முகத்தில் டார்ச் ஒளி )யார்ரா அது

 

ரத்னம்___ அண்ணே போலீஸ்  (இருவருமோட தொடர்ந்து  துப்பாக்கி சுட்ட சத்தமும் கேட்கிறது)

 

காட்சி ===8

 

இடம் ----சந்துரு வீடு

பாத்த்ரங்கள் ---சந்துரு பக்கிரி

சந்துரு---கடவுளே  உன்னை எப்படித்தான்கும்பிடுவது என்று  எனக்குத் தெரியாதுநீ நெனச்சா எதுவும் செய்யச் முடியுமாமேஎங்கண்ணனை காப்பத்த மட்டும் உன்னால் முடியாதா (ரத்த்சக் காயங்களுடன்பக்கிரி தடால் என்று வந்து விழுகிறான்)சத்தம் கேட்டு )யாரது

 

பக்கிரி ----ஷ்ஷ்  சத்தம்போடாதே கதவைச் சட்து முதல்லபோலீஸ் என்னை துரத்திட்டு வருது

 

சந்துரு---போலீசா ஐயையோ (கதவைச் சாத்துகிறான்புடிச்சுக்கிட்டு போனாஉன்னையும்தூக்கில பொட்டுடுவாங்களே ஐயையோ எவ்வளவு ரத்தம்(விளக்கிலிருந்து எண்ணைய்எடுத்து காயங்களுக்கு தடவுகிறான்)

 

பக்கிரி----ஆங்  உள்ளே தோட்டா பாய்ன்சிருக்கு தம்பீப்ப இங்க வந்து ஒளிஞ்சுககாம இருந்தா அவங்ககிட்ட  ஆப்பிட்டுட்டு இருப்பேன்

 

 சந்துரு --- எங்கண்ணனுக்கு  இப்படி ஓடி  ஒளிய தெரியாமபோச்சே

 

பக்கிரி –உங்க அண்ணனைக்கூடபோலீஸ் புடிச்சுட்டு போயிட்டாங்களா தம்பீ

 

 சந்துரு --- ஆமா விடிஞ்சா தூக்கில போடுவாங்க

 

பக்கிரி --- யாரையாவது கொலை செஞ்சிட்டாரா உங்கண்ணன்

 

சந்துரு --- சேச்சே எறும்பைக்கூட  கொல்லது எங்கண்ணன் வட்டிக்கடை  சுப்பையாவை கொன்னூட்டாருன்னு எங்கண்ணன் மேலெ வீண்பழியை சுமத்தி

……

பக்கிரி ---- வட்டிக்கடி சுப்பையாவையா  ஐயையோ பொயும்போய் நான் இங்கேயா  ஒளிஞ்சிக்க வரணம் (எழுந்து செல்ல முயன்று  முடியாமல் விழுந்து விடுகிறான் )

 

சந்துரு இருந்தா என்ன நான்ஒண்ணுமுக்களை பிடுச்சு கொடுக்க மாட்டேன்  நீ பொனா உன்  தம்பி என்னைப்போல  கஷ்டப் படும்தானே

 

பக்கிரி ---எனக்குத் தம்பியுமில்ல அண்ணனுமில்ல தங்கச்சியுமில்ல  அக்காவுமில்ல  இருந்திருந்தாஉங்கண்ணனைபோல  நல்லவனா இருந்திருப்பேனோ என்னஓ உள்ளே பாய்ந்சிருகிற டோட்டஎன்னை விடாடு போலிருக்கே  தம்பிஇனிமே நான் பொழைக்கிறது கஷ்டம்     ஐய்யோ

 

சந்துரு ----இரு இரு அப்படி எல்லாம்சொல்லாதே அண்ணே கடவுளெ உனக்கு நான்  ரொம்ப வேலைகொடுக்கிறேன்னு கோவிச்சுக்காதே எங்கணணனோட  சேர்த்து இந்த அண்ணனையும்காப்பாத்து கடவுளே

 

பக்கிரி –( வறட்டு சிரிப்புடன்) யாரையுமே நான்காப்பாத்த  நெனச்சதில்லை தம்பி கொலைசெய்ய நெனச்சிருக்கேன் என்னைக்காப்பாத்தகடவுள்நெனைக்க  மாட்டார்தம்பி  ஆனா நானிப்ப நென்ச்சா உங்கண்ணைனை காப்பாத்த முடியும் கொஞ்சம்தெர்ருவில போய் போலீசை கூப்பிடு  தம்பி 

 

சந்துரு ---இப்பத்தானே அவங்க கிட்டருந்துடப்பிச்சு வந்திருக்கே அடுக்குள்ளச் அவங்களையே கூப்பிட சொல்றயே  உனக்கென்ன புட்ட்க்ஹி கெட்டு போச்சா

 

பக்கிரி-----இல்ல தம்பி இப்பஹ்தான் எனக்கு நல்ல புத்ஹி வந்த்ருக்கு எத்தனையோ கொலைகளை  கூசமல் செய்த எனக்கு ஒஉத்தனைக் காப்பாத்தணும்கிறா ஆசை இப்பத்தான் வந்திருக்கு போ ஓடு தம்பி  நான் சாவறதுக்கு  முந்தி போலீசை கூப்பிட்டு வா தம்பி

 

சந்துரு—மாட்டேன் உன்னையும் புடிச்சி தூக்கிலபோட்டுடுவாங்க

 

பக்கிரி ---போடட்டும் உங்கண்ணனாவது தப்பட்டும் நான் செத்துப்போனா  அதுக்காக துக்கப்பட யாருமில்லைஉங்கண்ணனுக்கு  நீ இருக்கே  தம்பி நீஇருக்கேஅதுக்ககவாவதுஅவ்ரூசிரோட இருக்கணம் ஓடு தம்பி ஓடு (தளர்ந்து  விழுகிறான்  )

                 

சந்துரு –ஐயயோ அண்ணே அண்ணே (அவனை உலுக்கிப்பார்த்துவிட்டு வெளியே ஓடுகிறான் )

 

 

காட்சி ---9

 

 இடம்—அருணா மாளிகை

பாத்திரக்கள்--- அருணா நவகோடி  கனக சபை  சபாபதி குமரேசன்

(ட்ரஸ்டிகளின்   வருகைக்காக காத்திருக்கும்  அருணா டம்பப் பையிலிருந்து  ஒரு கண்ணாடியை எடுத்து முகம் பார்க்கையில்   அங்கு  வரும்

 

சபாபதி--- ஆஹா அருணா நீ இன்னிக்கி  எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா அப்பா பின்னாடி வந்துட்டிருக்காரு  அதுக்குள்ளே  உன் அழகை ஒரு அத்தியாயம் வர்ணிச்சுடறேன்  கேளு

 

அருணா--- என் அழகை நான்   தெரிஞ்சுகறதுக்கு என்வீட்டில் எத்தனைகண்ணாடிகள் இருக்கு தெரியுமா இருக்கிற அழகை இருக்கிறபடி காட்டும் கூட்டியோ குறைத்தோ காட்டாது

 

சபாக்கு தெரியுமா ஆனல் எங்க வீட்டுல ஒரு கண்ணாழ்டி  இருக்கு அதில என்ன குறையோ தெரியலை ரசம்பூசினவன் கைராசி  அப்படி நாம என்ன செய்ய முடியும் அருணா

 

Aஅருணா---சேச்சே உன்முகராசி அப்படி _( அப்போது ஜி அங்கு வரும்)

 

கனகசபை----அவங்கம்மா கூட அப்படிட்தான் சொல்லும் சபாபதி முகராசிக்கு அருணா என்ன யார் வேணுமின்னாலும் எங்க வீட்டுக்கு மருமகளா வந்திடும்னு

 

நவகோடி—ஆமாம் ஆமாம் 

 

அருணா--- அப்போ சரிதான்  உனக்குகல்யாணம் ஆனாத்தான் சொத்துன்னு நீங்க ஏன்  சொன்னிங்க்ன்னு  இப்பத்தான்   தெரியுது சபாபதிக் என்னை கல்யாண்ம்  செய்துகொடுத்தா  சொத்து  முழுதும்   உங்களுக்குத்தானே 

 

சபா----எப்படி ஐடியா

 

அருணா ---இது மட்டும் என்க்குமுன்னாடியே தெரிஞ்சிருந்தா

சபா—கல்யாணமெ செய்துக்கறதில்லைன்னு  சபதம் எடுத்திருக்க மாட்டேஇல்லே அதனால என்ன  மனுஷன்   சொன்னா சொன்னபடி நடக்க இது என்ன பாண்டு பத்திரமா பிராமிசரிநோட்டா

 

அருணா --- அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லவெறும்  மேரேஜ்  சர்டிஃபிகேட் தான்  எனக்கு ஏற்கனவே கல்யாண்ம் ஆயிடுத்து இதோ சர்டிஃபிகேட்

 

சபா--- ஆஹா  காத்திருந்தவன்  கண்மணி  காதலியை நேத்து வந்து கயாணம்செய்த்துகிட்ட  வில்லன் யார் சொல்லு அருணா

 

அருணா --- சொன்னா அவரை என்ன செய்வியாம் 

 

சபா—என்ன செய்வேனா  என்ன செய்யணும்   நான் ஒரு சீர்திருத்த வாதி முதல்ல உன்னை விதவை ஆக்கிட்டு  விதவா விவாஹம்  செய்துப்பேன்

 

கனக--- உன்பிடிவாதத்தை  மாத்தின அந்த சாமர்த்தியசாலி யாரும்மா

 

அருணா—ஏன் மாப்பிள்ளையை உங்களுக்கு  அறிமுகம் செய்து வெக்கணும்னு உயில்ல எழுதி இருக்கா என்ன  உயில்ல இப்படி எழுதி இருக்கு அப்படி எழுதி இருக்குன்னு நீங்க வெளை யாடினதுபோதும் எனக்கு கல்யாணம் ஆயிடுத்து அதற்கு  அத்தாட்சி இதோ

 

சபா----பேர்ல கூட  பெர்சனாலிடி இல்லையே

 

கனக ----- யார் இந்தக் குமரேசன் 

 

சபா--- நாங்க பார்க்ககூடாதா

 

அருணா--- பார்க்கக் கூடாதாவது  பார்க்கமுடியாது

 

கனக---- அவ்வ;ளவு  பெரிய இடத்துப் பிள்ளையா அவரு  (_சொல்லி உதட்டைப் பிதுக்குகிறார்)

 

குமரேசன் -----அருணா  அருணா(என்று அங்கு ஓடிவர அவனைக் கண்டு  அதிர்ச்சியடைகிறாள் அருணா )

அருணா----தாத்தா (என்று வீரிட்டு அலற அவளைப்பிடித்துக்கொண்டு )

 

கும---- உன்னைப்பார்த்து பேச ஓடிவந்தேனா இடம்தெரியாம ரொம்பத்திண்டாடிட்டேன் ஏன்  அருணா அப்படிப்பார்க்கிற நான் ஆவியல்ல அருணா  குமரேசன்  சதையும்  ரத்தமும்  உயிரும்   உள்ள உடம்போடு தான்  வந்திருக்கேன் அருணா பாரு

 

கனக—இது யார் அருணா

 

அருணா ---ஹங்  யாரோ( தாத்தா) (உள்ளே போகிறாள்)

 

குமரே---(பிரமித்தபடி)யாரோ    யாரோ

 

சபா--- யாரையா நீ  பைத்தியம்

 

கனக--- ஏய் யார் நீ

 

கும---என்னைதெரியாதவள்போல அருணா  சொன்னாளே  அந்த யாரோ  தெரிந்தடமாதிரி  இவன் சொன்னானே அந்த பைத்தியம் 

 

சபா---- வக்கணையாப்பேசாதே  உன்  பேர் என்ன

 

கும--- அதட்டிப்பேசாதே என் பேரு குமரேசன்

 

மூவரும் ---  குமரேசனா  இருக்க முடியாது அப்பா போயும்போயும் இந்த ஆளையா  அருணா கல்யாண்ம் செய்துக்கும்

 

கும ___-என்ன செய்யறது அது அப்படி நேர்ந்துவிட்டபிறகு நீங்க நம்பத்தான் வேண்டும் சட்டப்படி அருணாவுக்கு  நான் கணவன்

 

சபா--     டேய்

 

கும—ஊம் மரியாதையா பேசுடா

சபா--- அப்பா பொறுஙக் அவனை மன்னிச்சிடுவோம்  ஏன்னா பயலுக்கு உடம்பு கொஞ்சம்  கரணை  கட்டி போயிருக்கு அருணா புருஷன்னு சொல்லிக்கிறதுக்கு  உனக்கு என்ன யோக்கியதை இருக்கு

 

குமரே--- சொல்லிக்க மட்டுமல்ல ஒரு புருஷனுக்கு புருஷனாயிருக்க என்னஎன்ன யோகியதை வேணுமோ எல்லாம்   எனக்கிருக்கு  ஆனா  அருணாவுக்கு  என்னை மதிக்கத்தெரியலை  யாரோவாம் 

 

நவ----உன்னை எப்படி மதிப்பாள்  அருணா உனக்கு  சொத்து இருக்கா

 

கும---காலணாகூட கடனில்லை அதை விட பெரியசொத்து என்ன இருக்க  முடியும்

 

கனக---உனக்கு என்ன வேலை

 

கும--- உங்களைப்போல பெரிய மனுஷங்க நடத்தும் தொழிற்சாலையில் பாடுபட்டு ஒண்ண்  ஆயிரம்மடங்கு பெருக்குவது

 

சபா---- அதுக்கு உனக்கு என்ன கிடைக்கும் 

 

கும---மத்தவன் கையை எதிர்பார்க்கத்தேவை  இல்லாத அளவுக்கு ஏதோகிடைக்கும் ஆடம்பரச் செலவு இல்லை எனக்கு  அதுவே பெரிய வருமானம்தானே 

 

கனக ---இப்படி எல்லாம்நினைக்கிற நீயா  சொத்துக்காக அருணவைக் கட்டிக்கிட்டே  

   

கும----சீச்சீ  சொத்துக்கு மதிப்பு கொடுத்து அவளை நான் மணக்கலை அதற்கு ஆசைப்பட்டு என்மதிப்பையும் நானிழக்கத் தயாரில்லைஅருணவைப்பார்த்து நன்றிசொல்லிட்டு போலாம்னுதான் வந்தேன் ஆனா பெரிyய இடத்து மனுஷங்க கிட்ட பண்புகள் இல்லைன்னு தெரிஞ்சு கிட்டேன்

 

கனக---- நில்  அவ்வளவு சுலபமா  நீ இங்கிருந்து  வெளியே போக முடியாது அன்னக்காவடி நீ  அருணாவுக்கு  புருஷன்னு சொல்லிக்கிட்டதே பெரிய அவமானம் 

குஅ--- எனக்குத்தானே

 

நவ--- எங்களுக்கு

 

சபா—அந்தமான நஷ்டத்துக்கு  ஐயாயிரம்ரூபாய் ஈடு கொடுக்கணும் 

 

கும--- மானம்கூட உங்களுக்கு வருமானத்துக்கு ஒருசாதனமா இருந்தாலும்  உங்க மானம் இவ்வளவு  மலிவா இருக்கக்கூடாது  அருணாவுக்கு நான்  தான்  புருஷன்  ஜம்பமில்லை  இதோ ஆதாரம்(சர்டிஃபிகேட்டை  காட்ட )

 

கனக--- யார்ரா  அங்க இவனை கழுத்தப்பிடிச்சு  வெளியே தள்ளுஆதாரமாம் ஆதாரம் ----சபா----அதுக்கு ஒரு ஆள்வேணுமா   (

(குமரேசனை நெருங்க)

 

கும --- ஜாக்கிரதை  கிட்ட வந்தே  உன் சுகாதாரம் கெட்டுவிடும் (மிரட்டி போகிறான்)                                                                                                                                       

நவ ---பேராசை பெரு நஷ்டம்னு சும்மாவா சொன்னாங்க(அருணா  அங்கு சோர்வுடன்வர)

 

கனக--- இதெல்லாம் என்னம்மா

 

அருணா --- இன்னுமா புரியலே எனக்கு கல்யாணம் ஆயிடுத்து என்சொத்தை ஒழுங்கா என்னிடம் ஒப்பச்டைங்க  இதுவரை உயிலக்கூட காட்டாம

 

கனக ---காட்டாம  பூட்டியா வெக்கப் போறோம் இதோ படிக்கிறேன்   கேளு “பதினெட்டு வயதானபின் அருணா கல்யாணம் செய்து கொண்டு    முப்பது நாளாவதுபுருஷனுடன்  குடித்தனம்நடத்திய பின் சொத்தை சுயாதீனம் ச்ய்துகொள்ள  வேண்டியது

 

அருணா---- என்னது  முப்பது நாள் குடித்தனம் வேற செய்யணும்னா சொல்றீங்க

 

நவ---நாங்களா  சொல்றோம்   உங்கப்பா எழுதிவெச்ச  உயில்பேசுதம்மா உயில்பேசுது

கனக---எங்களுக்கு ஏன்  வீண்பொல்லாப்பு  அவர் உசிரை விடும்போ எழுதின உயில் எங்க உயிரை இல்லவாங்குது  முப்பது நாள்குடித்தனம் செய்துட்டு வந்து கேளூ உடனே சொத்தை  ஒப்படைக்கிறோம் வாய்யா போலாம் 

 

காட்சி---10

 

இடம் –குமரேசன்  வீடு

பாதிரங்கள் ----குமரேசன்  மாணிக்கம்  சந்துரு

 

மாணிக்கம்---- அண்ண்னுக்கு  நான்மாலைபோடறேன் அண்ணிக்கு நீபோடு என்ன் வந்ததும்முதல்லே வலது காலை எடுத்து வசற்படியில் வைத்து நடந்து வரச் சொல்லணும் அண்ணிகிட்டெ   என்ன சந்துரு ஞாபகம் இருக்கா ( குமரெசன்வர அவனுக்கு மாணிக்கம்  மாலை போட )

 

சந்துரு---அண்ணா

 

குமரேசன் -----சந்துரு

 

சந்துரு ---இரு  அண்ணா அண்ணிக்கு இந்த மாலையைப்போட்டுகூட்டிவரேன்

கும---சந்துரு  அண்ணியைப்பத்தி ஒண்ணும்பெசக்கூடாது ந்னு ஜெயில்லயே உங்கிட்ட  சொன்னேனா இல்லையா

 

சந்துரு –ஜெயில்ல சொன்னா --- இப்பத்தான் நீ வீட்டுக்கு வந்துட்டியே ஹுக்கும் அண்ணி வரல்லயா அண்ணா

 

கும--- அவள்  வரக்கூடாது வர மாட்டாள்

 

மாணிக்கம் ---- என்னண்ணே குமரேசண்ணே நானும் மரகதமும் கூடத்தான் அடிக்கடி சண்டை போட்டுக்கறோம்  புருஷன்  பொஞ்சாதி  சண்டைபொழுது விடிஞ்சா  போச்சுண்ணே கோபததை விட்டுட்டு  அண்ணியக் கூட்டிட்டு  வா அண்ணே

 

குமரே--- மாணிக்கம்   அவளைக் கூட்டுட்டு வரது இருக்கட்டும்  மொதல்ல  நான் போய் எனக்கு மறுபடியும்   வேலை கெடக்கிமான்னு பார்த்திட்டு வஏன்  (போகிறான் சந்துரு ---- அண்ணனுக்கு அண்ணி மேல என்ன கோபமோ

மாணி----ஒரு வேளை அண்ணிக்கு  அண்ணன்  மேல கோபமோ

 

காட்சி ----11

 

இடம்----அருணா வீடு

பாத்திரங்கள் ----அருணா  தாத்தா

(அருணா கட்டிலில் படுத்தபடி  விசித்து விசித்து அழுகிறாள் தாத்தா வருகிறார் )

 

அருணா ---நான் ரொம்ப பெரிய தப்பை சர்வ  சாதாரணமாச்செய்துட்டேனே தாத்தா

 

தாத்தா----ஒரு பெண் கல்யாணம்  செய்டுகிட்டது தப்புன்னு ஒரு முட்டாள் கூட சொல்லமாட்டான்மா

 

அருணா---- என்வாழ்க்கையை நானே கெடுத்துகிட்டேன் சொத்துக்காக கல்யாணம் செய்துக்க நெனச்சேன்  என்லட்சியத்துக்காக புருஷன்கூட வாழக்கூடாதுன்னுநெனச்சேன்   அதுக்காக மரண தண்டனைக்கு காத்திருந்தவனை மணந்தேன் 

 

தாத்தா----செய்துகிட்டா என்னம்மா அதான் தப்பிப்பிழைத்து  வந்துட்டாரே

 

அருணா --- அவர் தப்பி வந்தது ஒரு வகையில் நல்லதா இருந்தாலும்  இன்னொரு வகையில தீமையாய் இருக்கே தாத்தா  அவரோட முப்பது நாள் குடித்தனம் நடத்தினாத்தான் சொத்து கிடைக்குமாம்  அதுக்காக  அவருக்கு அடிமையாய் இருக்கணுமா ஏன் தாத்தா

 

தாத்தா--- கொண்டவன் செய்யறது  அதிகாரமா  அதுதான் ஒரு பெண்ணுக்கு மரியாதை சன்மானம்  பாராட்டு எல்லாம் அருணா  கல்யாணத்துக்கு பின்   புருஷனுக்கு பொஞ்சாதி  செய்யறச் கடமையை செய்துதாம்மா  ஆகணும்

 

அருணா----- மனசு ஒப்புக்கொள்ளாதபோது அந்த புருஷனோட  எப்படி தாத்தா மனமொப்பி வாழ முடியும்  எனக்கு வாய்ச்ச புருஷன் ஏழை கூலி  வேலை செய்யு முரடன்

 

தாத்தா--- உன்னைக்கல்யாணம்  செய்தபின்னால அவர் எப்படிம்மா  ஏழையாய் இருக்க முடியும் ஆண்களில் நல்லவர்களும்  உண்டு கெட்டவர்களும்  உண்டு நீ விணா தப்பபிபிராயம் எடுத்துக்கிட்டு உன் வாழ்க்கையை கெடுத்த்துக்காதே போம்மா புருஷனை அழைச்சிக்கிட்டு வா நீங்க ரெண்டு பேரும்  சந்தோஷமா வாழறதப் பாத்து  நான்  நிம்மதியா சாகறேம்மா போ முகத்தைக்கழுவி  கார் எடுத்துக்கிட்டு போ

 

அருணா --- போகறேன்  தாத்தா  போகறேன்

 

தாத்தா --- அதுதான் நல்ல பொண்ணுக்கு அடையாளம்  (போகிறார் )

 

அருணா ----ஐயோபாவம்  தாத்தாவுக்குதான்   நான்புருஷனோட  வாழறதப் பார்க்க எவ்வளவு  ஆசை என் ஆசையெல்லாம்  அவரோட முப்பதுநாள் எண்ணி முப்பது நாள் அதுவும் கண்ணியமா வாழ்ந்திடணம்னுதான்னு தாத்தாவுக்கு  தெரிஞ்சா  ஹூஉம் 

 

காட்சி 12

 

இடம்---குமரேசன் வீடு

இருப்போர் ----  குமரேசன் சந்துரு மாணிக்கம்   அருணா

 

குமரேசன் ----மாணிக்கம் மாணிக்கம் எனக்கு வேலை கெடச்சுடுத்து இன்னையிலிருந்து வேலைக்கு வரச்சொல்லிட்டாங்க

 

மாணிக்கம் ---எல்லாம் அந்த புண்ணியவதி வந்தநேரம் அண்ணே சூட்டோடு சூடா  அண்ணியையும் இட்டாந்துடுங்க

 

குமரெசன்--- என்னை என்னன்னு நெனச்சீங்க  அவ பெரிய இடத்துப்பெண் என்பதால அவள் செய்யுஅவமானங்களை எல்லாம் நான் சகிச்சுக்கிடணுமா  சந்துரு குளிக்க  தண்ணீர் எடுத்துவை குளிச்சுட்டு காலங்கார்த்தாலே வேலைக்கு போகணும்

 

சந்துரு----எல்லம் ரெடியா வெச்சிருக்கேன் அண்ணா( அருணா வருவதைக் கவனிக்காமல் ) அண்ணா நானென் அண்ணியை  பார்க்க்கவே முடியாதா (குமரேசன் உள்ளே போகிறான்) 

 

அருணா-----ஏங்க  மிஸ்டர்குமரேசன் வீடு இதுதானே

 

சந்துரு --- ஆமா எங்க அண்ணன்  குமரேசன் தான் அது  நான் அவர் தம்பி சந்துரு  நீங்க….?

 

அருணா  ---நாந்தான்  உன் அண்ணி அருணா (சந்த்ரு உள்ளே போய் குமரேசனை அழைக்கிறான்  )

 

குமரேசன் __அண்ணியா  எங்கே எங்கே சந்துரு அண்ணி

 

சந்துரு ---அப்போ இது அண்ணியில்லையா  அண்ணா  அப்போ இது யார்

 

குமரேசன் ---யாரோ

 

மாணிக்கம்  --வீடேறி வந்து  உன் பொஞ்சாதின்னு சொல்லுது

 

குமரேசன்  -- ஒரு வேளை பைத்தியமயிருக்கலாம்

 

அருணா  ---இல்லை என்பைத்தியம்  தெளிஞ்சுடுத்து என்னை மன்னிச்சிடுங்க

 

கும---- உன்னையா

 

அருணா ---மன்னிக்கவும்  தண்டிக்கவும் உங்களுக்கு  உரிமை உண்டு அதை சகிக்க வேண்டியது  என்கடமை  நான் உங்க மனைவி

 

குமரேசன் ---சட்டப்படி  நீயும் நானும்கணவன் மனைவி ஆனா அப்படி

 நம்மனசு சொல்ல வேண்டாமா

 

அருணா---நடந்ததை எல்லாம்   மறந்திடுங்க என்னை மன்னிச்சுடுங்கோ  எனக்கு நீங்கதான் தெய்வம்

 

குமரேசன் —என்னை தெய்வம்னு நெனச்சு  பக்தி செலுத்தணுன்னு அன்னக்கி உங்க வீடு தேடிவரல ஒரு சாதாரண மனுஷனா மதிச்சு நாலு வார்த்தைபேசுவேன்னு நெனச்சுதான்வந்தேன்  நீ இப்போ சொல்ற இந்த   தெய்வ விக்கிரகத்தை எல்லாருமா தூக்கி எறிஞ்சு பேசி அவமதிச்சப்போ  எங்கே போயிருந்தது அருணா இந்த ஞானம் நானொரு மனுஷன்கிறதால  உங்கிட்ட இவ்வளவு தூரம்பேசறேன் நீ பெசறதையும்   அனுமதிக்கிறேன் வந்தெ பார்த்தே என் எண்ணத்தையும் புரிஞ்சுகிட்டே வந்த வழியே திரும்பிப் போகிறதுதான் மரியாதை

 

அருணா—இல்லை நான்போகமாட்டென் நீங்க என் கூட வராமல் நான் மட்டும் திரும்பி போக மாட்டேன்

 

கும----ஏன் உங்க வீட்டுல  வேலைக்கு ஆள் பஞ்சமா

 

அருணா ---- இந்த வீட்டுல ஒரு அடிமையாய் இருக்கவாவது அனுமதி கொடுங்கள் ராமனிருக்குமிடம்தானே  சீதைக்கு அயோத்தி

 

குமரேசன் ---- சீதைக்கு ராமனிருக்குமிடம் சொர்க்கமாக கூட இருக்கலாம்  ஆனால்  எனக்கு நீ இருக்குமிடம் நரகம் அருணா பத்தினிகள் கதையைச் சொல்லி  கண்ணிர் சிந்தி என்னிடம் நீ இரக்கத்தை எதிர்பார்க்காதே

 

மாணிக்கம் ---அப்படிசொல்லாதே அண்ணே பெண்ணூனா பேயும் இரங்கும்

 

குமரேசன் –ஆனா இந்தப்பெண்மட்டும்  யாருக்கும் இரக்கம் காட்டற்தில்லை மாணிக்கம்

 

மாணிக்கம் ----இந்தப் பெண் வாழாவெட்டியா இருந்தா யாருக்கு அந்த அவமானம் பெண்டாட்டிய  கப்பாத்த  துப்பில்லாத குமரேசன்ன்னு  ஊர்ல உன்னை ஏசுவாங்க

 

குமரேசன்—அதுக்காக இந்த பெண்ணை  இங்க இருக்க விட்டா பொண்டாட்டி சொத்தில சோறு திங்கறான்  குமரேசன்னு அப்பவும் ஊர்ல என்னைத்தான் ஏசுவாங்க

 

 சந்துரு ---அண்ணி வீட்டுக் காசே இல்லாம நாம வாழ முடியதா அண்ணா

 

குமரெசன்----பார்  அருணா உன்னைச் சுற்றி இருந்த  பெ ரிய மனிசர்கள்  என்னை விரட்டினத்சையும் என்னைச் சுற் றி இருக்கும் சின்னமனிதர்கள் உனக்காக வாதாடறதையும்  பரர் உலக ங்கறது உங்களை மாதிரி பங்களா வாசிகளால ஆனதல்ல

 

அருணா ---என்வாழ்வுங்கற உங்க நிழல்லதான்னுதானே வந்திருக்கேன் எனக்கு உங்க வீட்டுல இடம் கொடுத்துதான் ஆகணும்

 

குமரேசன் ---உனக்கு இந்த வீட்டுல உரிமை உண்டு ஆனா உன் சொத்தில எனக்கு உரிமை வேண்டாம் இந்த வீட்டுக்காக ஒரு நயாபைசா கூட நீ  செலவழிக்கக்கூடாது சந்துருவுக்கு  அண்ணியாக  இந்த வீட்டு எஜமானியாகவேலையெல்லாம்  நீதான் செய்யணும் ஆடம்பர வாழ்க்கையை அடியோடு மறந்திடணும் ஒரு நாள் கூட உன் காரில் நீ காரிலே  சவாரி செய்யக் கூடாது

 

 அருணா – உங்களுக்காக  உயிரையும் தியாகம் செய்ய தயாரா இருக்கும் நான்  எல்லா நிபந்தனைகளுக்கும்  கட்டுப்பட தயங்க மாட்டேன்

 

குமரேசன்  ---இதில நீ எப்போது தவறினாலும்  சரி அந்த நிமிஷமே நீ வந்த வழியே திரும்பிடணும் அப்புறம்  இந்த உலகமே உனக்காக பரிந்து பேசினாலும் இந்த முடிவு மாறாது அருணா  போ வீட்டு வேலைகளை  கவனி

 

சந்துரு –முதல்ல  வலது காலை எடுத்துவெச்சு  வா அண்ணி

 

மாணிக்கம்--- ஆஆ அப்பாடா  நான்வரேன்  அண்ணே

 

அருணா ---நீங்க போட்ட எல்லா  நிபந்தனைகளுக்கும்  நான் கட்டுப்பட்டேன்

 

குமரேசன் —அதுமாதிரி நீயும்  ஏதாவது நிபந்த்னைபோடப் போறியா

 

அருணா --- நிபந்தனை இல்லை வேண்டுகோள்  சந்துரு அண்ணனுக்கு கொஞ்சம்தண்ணி  கொண்டுவா

சந்துரு ஓஓஒ  ( ஓடுகிறான்)

 

அருணா --- என் சம்மதமில்லாமல்  நீங்கள் என்னை

 

குமரேசன்  ---- உன்னை------?

 

அருணா ---  தொடக்கூடாது

 

குமரேசன்  -- சாகப்போற  என்னை கல்யாணம் செய்துக்கிட்டே உனக்கு என்மேல் எவ்வளவு அன்பு இருக்கும்னு எனக்கு தெரியாதாஅருணா.. அதனால உன்னைத்தொடணும்னு என் ஆவி துடிக்கவுமில்லை ஆசை அடிச்சுக்கவுமிலை  போ----(போகிறான்)

 

அருணா --- இப்படியும்  ஆண்ளில் ஒருவரா  என்ன அதிசயம் – ஹூம்   முப்பது நாள்  எப்படியாவது பல்லைக்கடிச்சிட்டு கழிச்சிடணும்

 

காட்சி 13

 

இடம்---கனக சபை வீடு

பாத்திரங்கள் ----கனகசபை வேதவதி சபாபதி நிருபர்

 

க்னக--- வேதா வேதம்  வேதவதி எங்கெ போய்  தொலஞ்சா இவ

 

வேதம்  --- நான் எப்போ போய் தொலைவேனோன்னு காத்து கிட்டிருக்கீங்க அந்தபாழாப்போன  யமனுக்கு என்னைப்பார்க்க மட்டும் கண்ணுதெரியலே

 

கனக—அது எப்படீம்மா தெரியும் ஊரிலெ  ஒவ்வொருத்தி தன் புருஷனை யமன் கிட்ட இருந்துமீட்டுட்டு  வர்ர காலத்திலெ நீ கூப்பிட்ட  குரலுக்கு ஏன்னு கேட்காம  புரட்சி  செய்யறியே

 

 வேதா--- இந்தாங்க  என்னை ஒன்னும்   அவ்வளவு மட்டமா நினைச்சிடாதீங்க  ஊரில எவளோ செய்த மாதிரி நானும்  உங்களை யமன் கிட்ட இருந்து  மீட்டிட்டு வரணும் அவ்வளவுதானே கொஞ்சம் இருங்க வரேன்(போகிறாள் )

 

கனக ----இவ்வளோ காலத்துக்கு அப்[புறமாவது இவளுக்கு நல்ல புத்தியை கொடுத்தியே கடவுளே உனக்கு நன்றி நீ வாழணும்

 

வேதா-----(கையில் உலக்கையுடன்  வந்து)  இப்ப நீங்க கொஞ்சம்  சாகணும்

 

கனக --- எதுக்கு

 

 வேதா --- சாகலேன்னா எப்படி  நான்  யமன் கிட்ட இருந்துமீட்டுட்டு வரதாம்  கொஞ்சம் தலையைக்காட்டுங்க உங்களை க்ளோஸ்  செய்திட்டு அப்புறமா யமன் கிட்டே இருந்து மீட்டூட்டு வரேன் (என்று உலக்கையை ஓங்க )

 

கனக -----ஐயோ வேதம்  வேதம் (என்று சுற்றி சுற்றி வர அவளும் விடாமல் துரத்துகிறாள்  அப்போது அங்கே நிருபர் வந்துஇருவருக்கும் நடுவில் நின்று )

 

நிருபர் --- உங்கள்சண்டைக்கான காரணத்தை முதல்ல சொல்லுங்கசார்  இன்னிக்கு காலையில் இருந்து ஒரு  நியூஸ்கூட கிடைக்கல  திடீர்னு உலகம் யோக்கியமா  மாறிடிச்சோன்னு சந்தேகப்பட்டேன் சொல்லுங்க சார் (என்று பேப்பர் பென் எடுக்க )

 

கனக --- உன்னை யார்யா  இங்கே கூப்பீட்டது

 

நிருபர் ---கணவனை மனைவியின்  உலக்கை தாக்குதலில்  இருந்து காப்பாற்றிய  நிருபருக்கு ஏச்சு ஆங் என்ன கேட்டீங்க என்னை யாரும் கூப்பிட வேணாம்சார் எங்கெங்கெ அதர்மம் தர்மத்தைஅழிக்க நினைக்குதோ அங்கங்கே  நான் காட்சி அளிப்பேன்

 

சபாபதி ----(அங்கு வந்து )சார் நீங்களா வாங்கஎங்க நியூசைப் பேப்பர்ல  போட்டதுக்கு தாங்க்ஸ்  அப்பா இவ்வளவு பெரிய மனுஷனாய் இருந்து உங்கபேர் பேப்பர்ல வரலன்னு கவலைப்பட்டீங்களே  இப்ப பாருங்க வந்துடுச்சு இதோ பாருங்க

(பேப்பரை நீட்டுகிறான்)

 

கனக --- நடுத்தெருவில்சம்பந்தி சண்டை மேலத்தெரு கனகசபைக்கும் நவகோடி எனும் அவர் சம்பந்திக்கும்----

 

வேதா---- இதைப்போட்டிங்களே  தூக்கில போறவனைக்கட்டிக்கிட்ட வள் கதையைப்போட்டீங்களா

 

 நிருபர் ---அதுதானே முதல் பக்கத்து முக்கிய செய்தி

 

சபாபதி—அன்னிக்கு அந்த குமரேசனை விட்டு விரட்டுனு  வெட்டினோமே

 

 கனக --- வெரட்டினா என்னடா இப்ப அவ்னைக் கூட்டிட்டு வாழப் போறாளாமே அருணா

 

சபாபதி  ---  what---

 

நிருபர்----- GRAND news  அதைப்போய் முதல்லகுறிப்பெடுக்கணும் வரென் பிரதர்(ஓடுகிறான்)

 

கனக—இதைக்கேட்டதும்  நானும் உன்னை மாதிரிதான்யா  சிலையா நின்னேன்  என் இதயமே நின்னு போச்சோன்னு சந்தேகப்பட்டேன்

 

சபா ----அதெப்படி நிக்கும் உங்களுக்குதான் இதயமே கிடையாதே

 

கனக – கேட்டயாடி நம் புத்திர பாக்கியம் பேசறதை

 

வேதா----அவனுக்கு  மூளை ஜாஸ்தின்னு  சும்மாவா சொன்னாங்க  எங்கண்ணு (சபாபதியை  திருஷ்டி கழிக்கிறாள்)

 

கனக ---வேற வெனையே வேண்டாம்   இப்படி ஒரு சம்சாரமும் மகனும் இருந்தா  மனுஷன் தூக்குதான் போட்டுக்கணும்

 

சபா--- அப்பா சாகறதுதான்  சாகறீங்க  அருணாவோட  அப்பா மாதிரி வில்லங்கம்  செய்து வைக்காம ஒழுங்கா என் பேருக்கு உயில எழுதி வையுங்க  நீங்க பாட்டுக்கு சபாபதி கல்யாணம் செய்துகிட்டாதான்  சொத்துனு எழுதி  தொலச்சிடாதீங்க ஒரு பெண்ணாவது என்னை க் கல்யாணம் செய்துக்குவான்ற நம்பிக்கையே இல்லாம போச்சு

 

கனக---நம்பிக்கையை கைவிடாதேடா

 

வேதா ---அருணாவோட  சொத்தும்  வரும்னு தான் நாமும்நம்பினோம்

 

கனக –இப்பமட்டும்  என்ன கெட்டுப்போச்சு  அவ புருஷனோட முப்பது நாளாவது  வாழணும்னு  நிபந்தனை இருக்குதுன்னேன்

 

 வேதா—அதான் வாழப்போறாளே  பின்ன என்ன

 

கனக—அங்கதானிருக்கு பாயிண்ட் சபாபதி எப்படியாவது அவளை வாழ முடியாத   தடுக்கணும்

 

சபா---ஐடியா   சகுனியும்சாணக்கியனும் கெட்டாங்க  பொன்னடை போர்த்தி  பாராட்ட  வேண்டிய மேதை அப்பா நீங்க

 

வேதா ---பாராட்டு  இருக்கட்டும்டா கண்ணு  மொதல்ல அப்பா சொல்றதக் கேளூ

 

சபா--- அப்பா இனிமேல் ஒண்ணும் சொல்லவேண்டாம்   எப்போ அடி எடுத்துக் கொடுத்திட்டீங்களோ  அதுக்கப்புறம்  சூழ்ச்சி படலத்த முடிச்சு வெக்க வேண்டியது என் பொறுப்பு

 

காட்சி14

 

இடம்குமரேசன்  வீடு

 

பாத்திரங்கள்  குமரேசன்   அருணா நிருபர் சந்துரு

 

(திரை உயரும்போது  அருணா விடு கூட்டிக்கொண்டு இருக்கிறாள் நிrருபர் வருகிறார்)

 

நிருபர் ---மிஸ்  அருணா நீங்கதானே

 

அருணா ---இப்ப மிசஸ் குமரேசன்  ஆமா நீங்கயாரு

 

நிருபர்  --நிமிஷக் கொலை பத்திரிக்கை நிருபர் நான்  உங்க வாழ்க்கையைக்கூட தொடர்ந்து  பத்திரிக்கையில் எழுதிட்டு வரேன்

 

அருணா--- ஒரு பெண்ணோட சொந்த வாழ்க்கைய நீங்க பத்திரிக்கையில் எழுதலாமா

 

நிருபர் --- உங்களைப்போலஒரு சீமாட்டி தூக்குக்குபோற ஒரு அன்னக்காவடியை மணந்ததும் அதுக்கப்புறம்  அவனை மீட்டதும்எல்லாத்துக்கும் மேலாக ஏழையொடு ஏழையா இந்த நரகத்திலே வாழறதும் உலகத்துல ஒருபுதுமை இல்லையா உங்களுக்கு  ஆட்சேபணை இருந்ததுன்னா சொல்லுங்க  எழுதறதை நிறுத்திடறேன்

 

அருணா ----இல்லை இல்லை  எழுதுங்கள் அதுலயும்  எனக்கு ஒரு நன்மை  இருக்கு எந்த நல்ல காரியத்தையும் நிரூபிக்க இந்த  உலகத்தில் நாலு சாட்சி   அத்தாட்சி  ல்லாம் தேவையாத்தானே  இருக்கு

 

நிருபர் –நீங்க இப்படி வாழ்க்கை நடத்த  ஏதோ உள் நோக்கம் இருக்கணுமே (குமரெசன்வர  அருணா  உள்ளே  போகிறாள்

 

குமரேசன் --- ஆதிகாலத்துலே இருந்து இந்தக்காலம் வரை  ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பம் நடத்த ஒரே ஒரு நோக்கம்தானே  எல்லோருக்கு தெ

 

நிருபர் --- கல்யாணம் ஆகலையாவது நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள் எனக்கு

(அப்போது அங்கு வரும் அ ருணா)

 

அருணா--- முதல்ல  சாப்பாட்ட முடிச்சிடுங்க  அப்புற்ம்பேசலாம்  சார் நீங்களும்   எங்க  வீட்டிலேயே சாப்பிடுங்க

 

நிருபர் –மன்னிக்கணும்  வீட்டிலே என்சம்சாரம் காத்து கிட்டிருக்கும் நான்  சாப்பிட்டபின்   சாப்பிடறதுல  அவளுக்கு  ஒரு திருப்தி தன்  கையால சோறு போடறதுல அவளுக்கு ஆனந்தம்   எனக்கும் தான்  நான் வரேன்(போகிறான்

சந்துரு--- (வந்துகொண்டே )அண்ணி  உங்க ரெண்டு பேருக்கும் நான் சாப்பாடு போடறேன்

 

அருணா--- ஊஹூம்  உங்கண்ணாவுக்கும்  உனக்கும் என் கையால நான் சாப்பாடுபோட்டாத்தான் எனக்கு  திருப்தி

 

கும----பெத்தவ போடணும் இல்லாட்டி பெண்டாட்டி  போடணும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க சந்துரு

 

சந்துரு ---- அது மட்டுமா சொல்லி இருக்காங்க  தனக்குனு  ஒருத்தி வந்தாஅண்ணன் தம்பியை மறந்திடுவான்னும் சொல்லி இருக்கணுமே

 

அருணா--- ஏதேது  ரொம்ப சாமர்த்தியமா  பேசறியே  அண்ணனுக்கேத்த தம்பிதான்

 

சந்துரு --- அண்ணனுக்கேத்த தம்பி நான்    அண்ணனுக்கேத்த நீங்க யாரு உங்களுக்கேத்த இவ யாரு

 

அருணா— ரொம்பக்குறும்புதான்

 

குமரேசன்------அடபோக்கிரி (அவனைப் பிடிக்க முயல அவன்  அருணாவிடம் ஓட அவ்ள்கையை நீட்ட குமரேசன் அருணா கைகளைப் பிடிக்கிறான்சிறிது நேரத்தில் கைகளை விட்டு ) நான் வேணும்னு உங்களைத்தொடலைஅருணா

 

அருணா –தொட்டால்தான் என்ன பொண்டாட்டி கையை புருஷன்  தொட உரிமை இல்லையா என்ன

 

குமரே---  ம்ம்ம் நீ போட்ட நிபந்தனையை  மறந்திட்டியா  அருணா

 

அருணா--- நான்  மறந்தால் என்ன நீங்கள் மறக்காமல் இருக்கீங்களே  அது போதாதா(என்று சமாளிக்கிறாள் )

 

 

 

 

காட்சி 15

 

பாத்திரங்கள்—அருணா குமரேசன் சபாபதி மாணிக்கம்

(அடுப்புப் புகையில் கண்களைக் க்சக்கிக் கொண்டு இருக்கிறாள் அருணா  அங்கு வரும் சபாபதி)

 

 சபா---- என்ன புகை என்ன புகை -----

 

அருணா (திடுக்கிட்டு ) நீயா --- ஊரிலே தாத்தாசௌக்கியமா

 

சபா—ஊரில எல்லொரும் சௌக்கியம்தான் ஆனா இங்க உன்னை சௌக்கியம் இலாம பர்க்க என்னால முடியலை சந்தணமும் சாம்பிராணியும்  புகையறதைத் தவிர வேற ஏதாவது புகையை உன் வீட்டில் நி பார்த்ததுண்டா

 

அருணா – ஏன் என்னைச்சுற்றியிருந்த உங்க மனசு எல்லாம் புகையறதை நான் பார்த்திருக்கேனே இப்போ புகையில்லாம நீ   தூபம் போடறதையும் பார்த்திட்டுதானே இருக்கேன்

 

சபா--- அருணா நானிங்க எதுக்காகவும் தூபம் போட வரலை  நீ படாத படுபடறேன்னு கேள்விப்பட்டு ஆறுதலா  நாலு வார்த்தை பேசிட்டுப்போகலாமேன்னுதான் வந்தேன்  நி நல்லப டியா வாழணம்னு நெனக்கிற ஒரே நண்ப நாண்டான்  அருணா

 

அருணா—அது நிஜமாயொருந்தா முதல்ல நீ வெளியே போயிடு

 

சபா--- உன் வீட்டுக்கு நான்வந்தது  தப்பா அருணா

 

அருணா – அவர் இல்லாத நேரத்தில நீ வந்ததுதான் தப்பு  இன்னும்கொஞ்ச நேரத்தில அவர் வந்திடுவார் ……அப்புறம் நீயும்  தாராளமா வரலாம்

 

சபா--- காவல்காரன் இருக்கறப்போ  முட்டாள்கூட  திருட வரமட்டான் அருணா

 

சபா ----எவன் கிட்டயோ எதுக்காகவோ நீசெய்துகிட்டஒப்பந்தத்துக்காகநமக்கிருக்கிற ஒப்பந்தம்  அறுந்து போகணுமா  அருணா காலக் கொடுமையாலோ  சந்தர்ப்ப சூழ் நிலையாலோ நீ வேறொருத்தனுக்கு வாழ்க்கை பட்டதால நம்ம காதலை நாம்மறந்துடத்தான்  வேணுமாஅருணா

 

அருணா---- காதலா உனக்கும் எனக்குமா   அடப்பாவி  உன் நல்லகாலம்  அவர் வீட்டிலே இல்லை

 

சபா---இருந்திருந்தால்----

 

அருணா --- முன்னே செய்யாதகுற்றத்துக்காகதூக்குக்கு போகதயாரா இருந்தவர் இப்ப உன்னைக் கொலை செய்துட்டு தூக்குக்கு போக தயாராய் இருப்பார்

 

சபா---போனால்தான் என்ன சாவித்திரியல்லவா நீ மீட்டுட்டு  வந்துடமாட்டியா  அருணா  நீ இனிமேமீள முடியாது  நீ நென்சக்கிறதுபோல உன்னையும் என்னையும்  இந்தநிலையில்பார்த்தா என்ன நடக்கு ம்தெரியுமா உனக்கு  விபச்சாரி பட்டம் கட்டி உன்னை உன்  வீட்டுக்கு  அனுப்பி விடுவான்  அப்புறம் நீயே  கதின்னுஎன் கால்ல நீ வந்து விழணும் எனக்கு வேண்டியதும்  அதுதானே அருணா மன் இருக்க வேண்டியது  காட்டில மீ  இருக்க வேண்டியது குளத்தில  நீ இருக்கவேண்டியதுஎன் வீட்டிலே (அவள் கையைப்பற்றி  இழுக்கிறான்)

 

அருணா –பாவி விடுடா கையை(என்று கத்தும்போது மாணிக்கத்துடன்குமரேசன்  )

 

சபா--- விடு கையை இது நியாயமில்லை  நீ இன்னொருத்தன்  மனைவி

 

கும--- ( ஆத்திரத்துடன்)துரோகி ( அருணா திகைக்கிறாள்)

 

சபா--- நீங்க  வந்தீங்க நல்லதாயிற்று  இல்லையென்றால் நடக்க்க் கூடாதது  நடந்திருக்கும்

 

உம--- நய வஞ்சகம்

 

அருணா—ஆங்---

சபா—நான்  அப்போதே சொன்னேன்   கேட்கலை

 

கும--- முட்டாள்

 

சபா --- நநான் கொஞ்சம்  யோக்கியனா இருண்டடால் உங்க மானம்   தப்பிச்சுது

 

குமரே----பாவம் 

 

சபா ---பெண்களை நம்பாதேன்னு  சும்மாவா சொன்னாங்க

 

கும---நம்பிக்கை துரோகி

 

அருணா ----நான்சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க

 

சபா –நியாயத்தை அவர் கேட்டபிறகு  யார் சொல்றதை கேட்கணும்  மன்னிப்புக்கு வழியப் பாரு

 

கும --- மன்னிப்பா ஒருத்தனுக்கு  மனைவி என்பதை  மறந்த பின்

 

சபா--- மானமுள்ள  எந்த ஆண்தான் இதைமன்னிப்பான்  வீட்டை விட்டு  துறத்தவா  இந்த உலகத்திலேயே  இருக்கக்கூடாது

 

அருணா – ஐயையொ நான்  நிரபராதி

 

சபா --- அப்போ நானா குற்ற வாளி

 

கும--- அது எனக்கு தெரியாதா கண்ணாலே பர்ட்தஹுக்குபின்  சாட்சியா வேணும் மிஸ்டர் சபாபதி  உங்களுக்கு கடைசியா ஏதாவதுசொல்லணம்னு இருந்தழ் சொல்லிடுங்க

 

சபா--- இதுக்கு மேலே என்னசார் சொல்றது எல்லாத்தையும்நீங்கதான் பார்த்திட்டு வந்தீங்களே

 

கும --- ஆனால் நீ மட்டும்பார்க்ககூடததை பார்க்க  வந்தியாடா முட்டாள்

சபா --- என்ன என்னயா முட்டாள்னு----

 

கும—பின்னே வேறொருத்தன்பெண்டாட்டி மேல ஆசை வைக்கிறவனுக்கு என்ன பேர் துரோகி ஏழைகளோடவாழ்க்கையில்  விளையாடினதுபோதாம மானத்தோடும்விளையாட  வந்திருக்கே ( என்று சொல்லி அறைகிறான் )

 

சபா—ஐயையோ  நான் நிரபராதி(என்று சொல்லிஒடப்பார்க்கிறான் மணிக்க அவன்சைப் பிடித்து  குமரேசனிடமே தள்ளுகிறான் ) என்னை  ஆளுக்கொரு பக்கமா உருட்டறீண்ங்களே  நான் என்ன பந்தா

 

மாணி--- –இல்லை இந்தௌலகத்திலே நடமாடக்கூடாத விஷ ஜந்து

 

கும--- பம்பையும் தேளையும்   கண்ட இடத்ட்க்ஹிலேகொல்லணும்  மாணிக்கம் (சபாபதி தப்பி ஓடி விடுகிறான் ) அவன் நல்ல காலம் தப்பித்துவிட்டான்

 

அருணா—அதி என் நல்லகாலம் அவ்ன் மட்டும் தப்பித்து ஓடி இருக்காவிட்டால் என்ன செதிருப்பிர்களோ நானல்லவா உங்களை  இழக்கவேண்டி இருக்கும் 

 

மாணி--- நல்ல  ஆளுண்ணே முத்ல்ல நிங்கபேசினதப் பார்த்தப்போ அண்ணி மேலயே சந்தேக்ப்பட றீங்களோன்னு பயந்திட்டேன்

 

அருணா – வேற யாராவது  வந்திருந்தா  என் கதி என்ன வாகி இருக்கும்

 

கும --- யரும்  ஊரிலே உள்ள ஆண்கள்  யோக்கியமானவர்கள்ன்னு நெனச்சு கூம்பம் நடத்தறதில்லை அருணா இந்தச் விஷயத்திலே மனுஷனுக்கு மனைவி மேல நம்பிக்கை  வேணும்

 

 அருணா—நீங்க மனிடரில் தெய்வம்

 

கும – இதுக்கு போய் மனுஷன்  தெய்வமாக வேண்டாம் மனுஷனா இருந்தாப்போதும்

 

காட்சி 16

இடம்—கனக்சபை வீடு

பாத்திரங்கள்—கனக சபை வேதவதி சபாபதி

 

வேதா ---- (சபாபதிக்கு ஒத்தடம் கொடுத்டபடி ) பாவி எப்படி போட்டு அடிச்சிருக்கான்  பெத்த வயிறு பத் தி எரியுதே  

                  

சபா – நான் அட்பட்டது உன்பெத்த வயிறு பத்தி எரியுது  எனக்கானால் அண்டபெண்ணின் முன்னால் அடிபட்டது அவமானமா இருக்கு (கனகசபை வர )

 

வேத--- என்ன அனியாயம் பார்தீங்களா

 

கனக--- நானும் அதைத்தான் யோசிச்சுகிட்டு வந்தேன்   இத்தனை நாள் ஆண்டு அனுபவிச்ச சொத்தை இன்னும் நலஞ்சு நாள்ல  அருணாகிட்ட ஒப்படைக்கணு0

 

வேதா –போதும் உங்க சொத்தாசையினால் என் மகன் உடம்பு புண்ணானதைச்சொன்னால்

 

கனக – என்னடா போனவன் திரும்பி வந்துட்டே  போனகரியத்ட்சை கவனிச்சயாடா

 

சபா---மொத்ச்ல்ல்ச என் ஒ டம்ப ஒருடாக்டர் கவனிச்சாகணும்

 

கனக –---அதுக்கு  வேற தண்டச் செலவா

 

சபா--- இன்னும் இருக்கப்பா என்னை அடிச்ச அந்தபயலுக்கு தகுந்தமரியாதை செய்ய வேண்டும் அதற்கு குரைந்தது ஒருஅயிரம் ரூபயாவது செலவாகும்

 

கனக –ஏதுடா இதுபையன் அவ சொத்டை நமக்கு வர வழிபணுவான்னுபார்த்தால்  இருக்கிற சொத்தையே கரைச்சிடுவான் போலிருக்கே டேய் தம்பி  இனிமேல நீ பேசாமல் சும்மா இருந்தாப்போதும்

 

சபா --- இந்த அவமானத்தை சகிச்சுகிட்டு எப்படி அப்பா சும்மா இருக க முடியும் அவனைப் பழிக்கு பழி வாங்கிட்டு வரேனா இல்லையான்னு பாருங்க

 

கனக – எதை வேணா வாங்கிட்டு வா ஆட்சேபணை இல்லை இங்கிருந்து எதையும்கொண்டு போகாமல் இருந்தால் சரி

 

                             திரை  

காட்சி 17

 

 இடம் குமரேசன்வீடு

பாத்திரங்கள்குமரேசன் அருணா மாணிக்கம்

(திரை உயரும் போது அருணா காலண்டரைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்தனக்குத்தானே)

 

அருணா----0 இன்னும் ஒரு வாரகாலம்தான் இருக்கிறது முப்பது நாள்முடிய போகும்போது இவருக்கு ஏதாவதுகொடுத்து விட்டுபோக வேண்டும் சந்துருவின்படிப்புக்கும் ஏதாவது செய்ய வேண்டும்

 

மாணிக்கம்—(ஓடிவந்து) அண்ணீங்க வாஙகளேன் நம்ம சந்துருமேல யாரொ ஒருத்தன்காரால மோதிட்டு போயிட்டான்

 

அருணா –என்னது காரா  பையன் எங்கே

 

 மாணிக்கம் --- கேட்டாண் ட கிடத்தி இருக்கேன்

 

அருணா  ---ஆசுபத்திர்க்கு போகாம கேட் அருகே கிடத்தினால் என்னபலன்

 

மாணிக்கம் ---ஆசுபத்திரி இங்கே இருந்துபத்துமைல் தள்ளி இல்ல  போகணும்

 

அருணா – எத்தனை மைல் ஆகைருந்தா என்ன--பையனெக்கெ காட்டு நான் ஆசுபத்தி ரிக்கு கூட்டிப்போறேன்நீயும் கூட வா

 

கட்சி 18

 

இடம் குமரேசன் வீடு

பாத்திரங்கள்  அருணா  குமரேசன் மாணிக்கம்  சந்துரு

 

கும---- சந்துரு அருணா  அருணா (பதில் ஏது மில்லாத போது அங்கு வரும் அருணாவைப்பார்த்து)வாம்மா வா பணக்கார வீட்டுப்பெண் என்பதை காட்டிவிட்டாயே என்பேச்சுக்கு  அவ்வளவு  மதிப்பு  உனக்கு இங்கே இடம் கிடையாது

 

அருணா --- முதல்ல என்ன என்று சொல்லுங்கள்

 

கும--- போதுமம்மா போதும் செய்த தப்புக்கு சமாதானமும்  சப்பைக்கட்டும் தேவை இல்லை  நீ இந்த வீட்டில் இருக்க இடம்கேட்டப்போ உன் காரை எடுக்க்க் கூடாதுஎன்று நான் சோன்னேனா இல்லையா

 

அருணா--- சொன்னீங்க  நான்சொல்றதையும்கேளுங்க

 

கும--- இந்த நிபந்தனையை நீ எப்போ மீற்னாலும் இந்த விட்டை விட்டு போக வேண்டும் என்று சொன்னேனா இல்லையா

 

அருணா---அதெல்லாம் இல்லை என்று நான் சொல்லலீங்க  வந்து---

 

குமரேசன்  --உங்கிட்ட பேசிட்டிருகக எனக்குஇஷ்டமிலைநேரமுமில்லைபோ அருணா போ உனக்கு இங்குஇனி இடமில்லை

 

அருணா—உயிருக்கு ஆபத்து என்றபோதுவண்டி எடுத்தா தப்பு இல்லேன்னு நான் நெனச்சேன்

 

கும—ஹாஹாஹா  சாதாரண ஜலதோஷ்ம்வந்தாலே  உங்களூக்கு உயிருக்கு ஆபத்துபேசாமப் போயிடு  என்னை மிருகமாக்காதே எப்போ என்  நிபந்தனையைஈ மீறினாயோ  அப்போதே உனக்கு இங்கு இடமில்லை

 

அருணா –நான் நாதியத்துபோய் இங்கு வரலை  தீர விசாரிக்காமல் வீட்டைவிட்டெ துறத்துர உங்களை நம்பி என் ஆயுசு பூரா வாழ்க்கை நடத்தணும்னு நெனைக்கவுமில்லை நான் வரேன் எப்பவாவது இதுக்காக நீங்கள்வருத்தப்படுவீங்க நான் வரேன் (போகிறாள்)

குமரேசன்===அருணா அருணா விளையாட்டா மெரட்டினா அதுவே வெனையாகுதே ம்ம்ம்

 

(அங்கு மாலையுடன் வரும்மாணிக்கம்  )

 

மாணிக்கம் –அண்ணே  அண்ணே  எங்கேண்ணே அண்ணி  அவங்க இந்த பேட்டைக்கே வந்தஒரு தெய்வப்பிறவி யண்ணே

 

கும---புருஷன்  வார்த்தையைமீறி நடக்கிற பெண்ணை தெயப்பிறவின்னு இனிமேதான் சொல்லணும் கேள் மாணிக்கம்  கார் எடுக்கக் கூடாதுன்ற என் நிப்ந்தனையை மீறி கார்  எடுத்திருக்கிறாள் வீட்டைவிட்டு வெரட்டிட்டேன்

 

ஒரு உயிரைக்காப்பாத்தறது குத்தம்னு இனிதான்சொல்லணும் சொல்லணும்வீதியிலே விளையாடிட்டு இருந்த பிள்ளைமீது கார் ஏத்திட்டான்னு நான் சொல்லி வாய் மூடும்முன்   காரில் ஏத்தி  ஆசுபத்திரிக்கு கொண்டுபோய் உயிர் பிச்சை கொடுத்த உத்தமி அண்ணே அவஙக மாலைபோட்டு மரியாதை செய்யவேண்டியபெண்ணை துரத்திட்டியே அண்ணே  உன்புத்தி ஏனண்ணே இப்படிப்போச்சு  போ அண்ணே கையைக்காலைப்பிடிச்சுஅவங்களை சமாதானப் படுத்தி கூட்டிவாண்ணே

 

கும---மாணிக்கம் நீ இவ்வளவு தூரம் சொல்றதுனால போனவவ திரும்பி வந்தா தடுக்கமாட்டேன்  அதுக்காகநான் போய் அவளைக்கூப்பிட மாட்டேன்

 

மாணி--- கூட்டிட்டு வந்தாமட்டும்போதாதுஅண்ணே கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாலும் போதாது

 

கும--- மாணிக்கம் இது எங்கசொந்தவிஷயம்

 

மாணிக்கம் ---அதுக்காக அந்தபுண்ணியவதியை  வீட்டை விட்டு வெராட்டறதா

 

கும – நீ இவ்வளவு தூரம்சொல்றதால  அந்தபுண்யவதி படமெங்காவது இருந்தா மாலை போட்டு கும்பிடு  நான் வரேன்  

காய்சி 19

அருணா வீடு

பாத்திரங்கள்  அருணா தாத்தா சபாபதி மாணிக்கம்

அருணா ---தாத்தா தாத்தா==

 தாத்தா ---- வாம்மா அருணா  இந்த தாத்தாவை மறந்துட்டியோன்னு  நெனச்சேன். நீ இல்லாம எனக்கு ஒண்ணும்முடியலைம்மா

 அருணா ---இனிமே அந்தக்கவலை வேண்டாம்தாத்தா

தாத்தா –என்னையும்  உன் கூடவேஉன் புருஷன் வீட்டுக்கு கூட்டிட்டு போகப் போ றியா  அருணா

அருணா – புருஷன் வீடு   அந்தவீட்டுவாசல நான்மிதிக்கலாமா  யாருக்காவது ஆபத்து என்றால் உதவுவதுதானே முறை அதற்கு அவர் வெளியே  போகச் சொல்லிட்டார் அந்த வீடு எனக்கு நரகம் புகுந்த வீடு ஊஊம்

தாத்தா—என்னதான் நடந்தது அருணா

அருணா –இதை அவரிடமல்லவா கேட்க வேண்டும் எதுவும்நடக்காமலேயே  என்னைவீட்டை விட்டு போ என்று சொல்லிவிட்டார் தாத்தா

தாத்தா – சொல்லிட்டா  நீ உடனெ வந்திடறதா … உனக்கு எதிலும அவசர புத்தி.நீதன் கொஞ்சம்நிதானமாயிருந்திருக்கணும் அடிக்கிற கை தான் அணைக்கும்கொபமுள்ள இடத்தில்தான்  குணமும் இருக்கும் (சபாபதி வருவதைக் கவனிக்காமல்)

அருணா---குணத்தைபற்றி சொல்லப் போனால் அவர்பத்தரைமாற்றுத் தங்கம் உழைத்து பிழைக்கணும்   என்பதுதான் அவர் ஆசை என்னைக்கல்யாணம் செய்துக்க ஆசை உள்ளவர்களுக்கு என் சொத்துமேலதான் ஆசைஆனால் இவர் என்  சொத்தில் ஒரு நயாபைசா கூடவேண்டாம் என்று கண்டிப்பாக உத்தரவுபோட்டவர் தாத்தா

சபா --- பிழைக்கத்தெரியாதபைத்தியக்காரன்

 அருணா --- நீயா  அவரைப் பைத்தியக்காரன்என்று சொல்ல உனக்கு என்ன யோக்கியதை இருக்கு பிறன் மனைவி என்று கூடப்பார்க்காமல் என்னை கெடுக்கத்  துணிஞ்ச உன்னை கண்ணால் கண்டதை  அப்படியே நம்பக்கூடாதுஎன்ற  அவரா பைத்தியம்

சபா -----நீ செய்த சாகசத்துல உன்னை நம்பிட்டான்  பெண்கள் சாகசம்[பற்றி எங்கே படிச்சிருக்கப்போறான்

அருணா—அவர் படிக்காட்டி என்ன படிச்ச உன்னை விட அவர் கிட்டநல்ல  குணம் இருக்கு அவர்கிட்ட  என் எதிர்ல என்புருஷனைப்பத்தி அவதூறா பேசறதை  என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது  மரியாதையா வெளியே போயிடு

சபா—ஹஹஹஹா கல்யாணமென்றலேயே குமட்டிக்கிட்டு இருந்த உனக்கா இத்தனை பதிபக்தி ஆண் என்றால் ரெண்டு கண்களையும்காதுகளையும்  பொத்திக்கொள்ளும்   உனக்கா  புருஷன் மேல இவ்வளவு அபிமானம்  அருணா  அந்த  ஆள்  உன்னை நல்லா ஏமாத்தி இருக்கான்

 அருணா--- ஏமாத்தறது உங்க பரம்பரை சொத்து சுற்றிலும்  உங்களைப்போல   ஆண்களையே  பார்த்து வந்த எனக்கு ஆண்கள் மேல் வெறுப்பு வந்ததில் ஆச்சரியமில்லை ஆண்களிலே நல்லவர்களும்  உண்டு என்று  அவரைப்பார்த்து புரிஞ்சு கிட்ட நான் இனி உன்  வார்த்தைகளை  நம்புவேன்னு  நெனக்கிறயா

சபா---என்னை நம்பறயோ இல்லையோ  சும்மா இருந்த என்னை ஏமாத்தி உன்னை அடைஞ்ச அவன்  என் பரம விரோதி  உன்கண்முன்னாலே என்னை அவமானப் படுத்தினதை பார்த்தியே நீ இப்ப உன் கண்ணெதிரே துடி துடித்து சாகப்போறதையும் பார்க்கப் போறே நீ

அருணா--- பேச்சுலே எப்பவும் வீரத்துக்கு உனக்கு பஞ்சமிருந்ததில்லை

சபா—செயலிலும் இருக்கறதப்பார்க்கப்போறெ  நீ ஒரு பெண் எதிரே  அவமானப்பட்டா கோழை கூட வீரனாவான்   பழிக்குப்பழி வாங்கற வெறியனாவான்  என்பதை நீ புரிஞ்சுக்கோ தூக்கு மேடையிலேருந்து தப்பிச்ச அவன் என் துப்பாக்கியிலிருந்து தப்ப முடியாது ( என்று தன் கைத்துப்பாக்கியை காட்டி  ஓடுகிறான் )

அருணா --- ஆஅ ஆ (மாணிக்கம் வருகிறான்)

மாணிக்கம்  --அண்ணி  அண்ணன்  ஏதோ கோவத்துல அப்படி சொன்னார்  உங்களுக்கு மாலை போட்டுவரவேற்க காத்திட்டு இருக்கார் 

அருணா – இந்த சபாபதி பாவி துப்பாக்கியை எடுத்திட்டு அவரை சுடஓடிட்டு இருக்கான்

மாணிக்கம் – கவலைப்படாதீங்க அண்ணி  அவனை தடுத்திடலாம் வாங்க போலாம்

அருணா தன் காரில் மாணிக்கத்தையும் ஏற்றிக் கொண்டு விரைந்து போகிறாள்.

குமரேசனின் வீடு…

சந்துருவின் காயங்கள் பெரிதாக இல்லாததால் கண் விழித்த சந்துரு, மெதுவாக எழுந்து உட்காரப் பார்த்தான். குமரேசன் அவனை எழாதே என்று கடிந்து கொண்டான்.

“அண்ணா, அண்ணி பாவம்.  என்னைக் காப்பாத்ததானே அதுவும் பக்கத்துல ஆஸ்பத்திரி இல்லாததாலதானே அவங்க கார் எடுத்துட்டு என்னைக் கூட்டிட்டுப்போனது. ஏன் அண்ணே கோபித்துக் கொள்கிறாய். போய் கூட்டிட்டு வாண்ணே

“ஓ இப்ப அவ உனக்கு உசத்தியாகிவிட்டாளா? எனக்கு என் கொள்கை முக்கியம்”

“ஏன் அண்ணே அப்படிச் சொல்லுற? ஒரு வேளை எனக்கு உடனடியா டாக்டர் கவனிப்பு கிடைக்காம போயிருந்தா இப்ப உங்கிட்ட இப்படி பேச முடிஞ்சுருக்குமா? நீ எவ்வளவு வேதனைப்பட்டிருப்ப கொஞ்சம் நினைச்சுப் பாருண்ணே. நீதான் எனக்கு அம்மாவும் அப்பாவும். இப்ப எனக்கு அம்மா ரூபத்துல அண்ணியும் கிடைச்சிருக்காங்க. நம்மள நல்லா  கவனிச்சுக்குவாங்க. நீ அண்ணிய அப்படி மரியாதை குறைவா சொல்லிருக்கக் கூடாதுண்ணே. ப்ளீஸ் போய் கூட்டிட்டு வாண்ணே.”

அவர்கள் பேச்க் கொண்டிருந்த போது சபா துப்பாக்கியுடன் நுழைகிறான். துப்பாக்கியை குமரேசனை நோக்கி நீட்டிக் கொண்டே “ஹா ஹா ஹா என்னது உங்க அண்ணி உங்கள நல்லா கவனிச்சுக்குவாளா? நல்ல கனவு காண்கிறாய். அவ நல்லா நாடகமாடி உங்களை ஏமத்திட்டுப் போக வந்திருக்கா. ஏய் குமரேசா சும்மா கிடந்த பாம்பை சீண்டிப் பார்த்துட்ட. என் வாழ்க்கைல நுழைஞ்ச உன்னை சும்மா விட மாட்டேண்டா”

திடீரென்று சபாவின் குரல் கேட்டு அவன் துப்பாக்கியுடன் நிற்பதைக் கண்ட சந்துருவும், குமரேசனும் சற்று திகைத்துவிட்டாலும், குமரேசன் சுதாரித்து,

“உன் பேராசைல அருணாவைப் பற்றி இல்லாததைச் சொல்லி எங்களைக் கலைக்க பார்க்கறியா? என்னடா சொன்ன?” என்று சொல்லிக் கொண்டே சபாவைத் தாக்க முயலும் போது

“அருணா உன்னை எதுக்குக் கல்யாணம் செஞ்சுருக்கான்னு நினைக்கிற? இப்ப இங்க உங்கூட எதுக்கு இருக்கான்னு நினைக்கிற? அவ சொத்து அவ கைக்கு வரணும்னா அவ கல்யாணம் செய்து கொண்டு ஒரு மாசம் அவ கணவனோடு இருக்கணும்னு உயில்ல கண்டிஷன் போட்டிருந்ததால. எல்லாம் இன்னும் ஒரு வாரம் தான். அவ சொத்து அவ கைக்கு வந்ததும் உங்க ரெண்டு பேரையும் கழட்டி விட்டுட்டுப் போயிடுவா…ஆனா நீ உயிரோடு இக்கக் கூடாது”

“கண்டிப்பா அப்படி இருக்காது. அருணாவை விரும்பறேன்னு சொல்லிட்டுத் திரியற நீ என் மனைவியான அருணாவைப் பத்தி இப்படிப் பேசுவதிலேயே உன்னைப் பத்தி புரிஞ்சுக்க முடியாதா! நீ அவ சொத்தைத்தானே காதலிக்கிறாய். அவளுக்கு நல்லா தெரியும் நான் அவ சொத்தை விரும்பலைன்னு. அருணா எங்களை விட்டுப் போக மாட்டா. அவ நல்ல மனசும் எனக்குத் தெரியும்… நீ சொத்துக்குப் பேராசைப் பட்டுக் கெட்டது செய்ய நினைக்கும் நீதான் கஷ்டப்படப் போகிறாய் பாரு”

குமரேசன் அவன் கையிலிருந்த துப்பாக்கியைப் பிடுங்க முயற்சி செய்கிறான்.

குமரேசனின் பேச்சைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்து சேரும் அருணாவும் மாணிக்கமும் சபா அங்கு வந்து இருவரும் போராடுவதைப் பார்த்துத் திகைத்தனர்.

“வா அருணா வா. எங்கே நீ வராமல் போய்விட்டால் உன் கண் முன்னே அவனைக் கொல்ல முடியாதே என்று நினைத்தேன். நல்ல தருணத்தில் வந்திருக்கிறாய். இதோ உன் கண் முன்னாலேயே அவனைச் சுட்டுக் கொல்கிறேன் பார். கடைசியாக ஒரு முறை நன்றாகப் பார்த்துக் கொள் உன் தற்காலிகக் கணவனை. சுட்டுவிட்டு உன் கையில் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு நான் தப்பித்துவிடுவேன்.”

“டேய் துரோகி நல்ல மனசுடைய அவரை ஒண்ணும் செஞ்சுடாதே என்னை வேணும்னாலும் சுட்டுக் கொள்” என்று சொல்லிக் கொண்டே அருணா அவர்களுக்கிடையில் பாய துப்பாக்கிக் கொண்டு அவள் மீது பாய்ந்துவிட அருணா மயங்கி விழ…

குமரேசன் அருணா என்று கத்திக் கொண்டே அவளைத் தன் கையில் தாங்கிக் கொள்கிறான். சபாபதியும் திகைத்து நிற்கிறான். அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி மாணிக்கம் சபாபதியின் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி வீசி விட்டு அவனைப் பிடித்துக் கொள்கிறான்.

அருணாவின் தோள்பட்டையிலிருந்து ரத்தம் வழிகிறது.

“அண்ணே அண்ணிய தூக்கிட்டு உடனே ஆஸ்பத்திரிக்குப் போண்ணே. நான் இவனை கவனிச்சுக்கிறேன்.”

குமரேசன் அருணாவைத் தூக்கிக் கொண்டு ஒரு டாக்சி பிடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைகிறான்.

சபாபதி அவன் பிடியிலிருந்து தப்ப முயற்சிக்கும் போது மாணிக்கம் சபாபதியைக் குத்தி உதைக்கிறான். சந்துரு தன் கையில் அகப்பட்டக் கயிற்றை மாணிக்கத்திடம் வீச, சபாவைக் கட்டிப் போட்டுவிட்டு சந்துருவையும் கூட்டிக் கொண்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு, போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்கிறான்.

ஆஸ்பத்திரி…

அருணாவின் தோள்பட்டையில் பாய்ந்திருந்த குண்டை நீக்கிவிட்டாலும் அருணா இன்னும் மயக்கம் தெளிவடையாமலேயே இருக்கிறாள். மருத்துவர் அவள் அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்கிறார். குமரேசன் அவள் அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறான்.

அவன் அருணாவைத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டாலும் மனதில் சபாபதி அருணாவைப் பற்றிச் சொல்லியவை ஓடிக் கொண்டிருந்தது. 

மாணிக்கம் போலீஸ் ஸ்டேஷனில் விவரம் சொல்லி போலீஸை அழைத்துக் கொண்டு வந்து சபாபதியை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அருணாவின் தாத்தாவை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் செல்கிறான்.

தாத்தா அருணாவின் நிலையைக் கண்டு வருந்தி கவலை கொள்கிறார். அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர் சொல்லி வெறும் அதிர்ச்சிதான் ஓரிரு நாளில் சரியாகிவிடுவாள் என்று சொல்கிறார்.

குமரேசன் தாத்தாவிடம், “எனக்கு அருணாவின் சொத்தின் மேல் எந்த விருப்பமும் இல்லை தாத்தா. சொத்து அவ கைக்கு வரணும்னா அவ கல்யாணம் செய்து கொண்டால்தான் சொத்து வரும்னு அதுக்காகத்தான் என்னைக் கல்யாணம் செய்து கொண்டாள்னு சபாபதி சொன்னது உண்மை என்றால் அருணாவுக்கு உடல் நிலை சரியானதும் அவளை நீங்க கூட்டிக் கொண்டு போய்விடலாம். அவ சரியாகர வரைக்கும் நான் இங்க இருந்து பார்த்துக்கறேன் உங்களுக்கு உதவியா.”

“குமரேசன், உன்னை மாதிரி நல்ல மனசுள்ள ஒரு கணவன் கிடைக்க அவ கொடுத்து வைத்திருக்கணும். கல்யாணம் சொத்து விஷயம் எல்லாம் உண்மையா இருந்தாலும் இப்ப அவ கண்டிப்பா அப்படி நினைக்கலைப்பா. சபாபதி உன்னைச் சுட வரும் முன் எங்கள் வீட்டிற்குத்தான் வந்திருந்தான். அப்ப கூட அவனிடம் உன்னை உயர்வாகப் பேசித்தான் சண்டை போட்டாள். உன் குணத்தை அவ புரிந்து கொண்டுவிட்டாள்”

“ஒரு வேளை நீங்க சொல்றபடி அவ என்னோடு வாழ விருப்பப்பட்டா கண்டிப்பா அவ சொத்தை நான் தொட மாட்டேன். அது நல்ல காரியங்களுக்குப் பயன்படட்டும்.”

“என்ன ஒரு பொருத்தம்! அவளும் இதையேதான் சொன்னாள் உன்னை கல்யாணம் செய்யறதுக்கு முன்ன. அவ கல்யாணத்துல விருப்பம் இல்லாமதான் இருந்தா.”

“அருணா எந்த எண்ணத்துல என்னை திடீர்னு கல்யாணம் செஞ்சிருந்தாலும் எனக்கு அவ மனைவின்ற எண்ணம் இருந்தாலும் அவளுக்கு உண்மையான விருப்பம் இல்லாம இருந்தால் அது..” என்று குமரேசன் இழுத்திட..

குமரேசனும் அருணாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் மாணிக்கமும், சந்துருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

இவர்களின் பேச்சுக் குரல் காதில் விழ அருணா மெதுவாக விழிக்கிறாள்.

அவள் கண்களில் அவளை அறியாமல் கண்ணீர் வழிகிறது. குமரேசனைப் பார்த்துக் கை கூப்ப முனைகிறாள் ஆனால் அவளாள் அவளது இடது கையை உயர்த்த முடியவில்லை. வலது கையால் அவன் கையைப் பிடித்துக்கொள்கிறாள். அவள் முகத்தில் புன்னகை அரும்புகிறது. அக்கையை தன் உதட்டருகே கொண்டு சென்று முத்தமிட விழைகிறாள். குமரேசன் ஆதுரத்துடன் அவள் தலையைத் தடவிக் கொடுக்கிறான்

.தாத்தா சந்துருமாணிக்கம்   மூவரும் மகிழ்கிறார்கள்

4 comments:

 1. அருமை...கீதா ரங்கனுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. சகோதரிக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. அருமை. இரண்டு அல்லது மூன்று பாகங்களாக வெளியிட்டிருக்கலாமோ...   

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் முழுதும் படிக்காதவர்கள் தொடர்ச்சியாகப் படிக்கட்டும் என நினைத்துப் பதிவிட்டிருக்கலாமோ...நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல மொத்தமாய்ப் பார்க்க மலைப்புத் தட்டுவது போலத்தான் உள்ளது...

   Delete