செவ்வாய், 13 அக்டோபர், 2020

என்னதான்நடக்கும் நடக்கட்டுமே

 

 

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

    அங்கிங்கெனாதபடி    எங்கும்    அவலங்கள்         
ஆனால்   நமக்கோ   அவை -- வெறும்    நிகழ்வுகள்   செய்திகள் 
      
அண்டை  வீட்டுக்காரன்   மண்டையைப   போட்டால்
நமக்கென்ன  பாதிப்பு   ?
      
ஊரில்   உலகில்   ஆயிரம்   சாவுகள்
வெள்ளத்தால்   மழையால்    மண்சரிவால்
       
பூகம்பத்தால்  சுனாமியால்   கொடிய   கொரோனாவால் நோய்களால்
ஒரே  நொடியில்  கோடீஸ்வரன்  ஒட்டாண்டியாகிறான்
        
மாடு   மனை   வாசல்   எல்லாம் துறக்கிறான்
எண்ணவே   இயலாத   அவலங்கள்
       
அரை   நொடியில்   மண்ணில்   நிகழ்வது  நிஜம் .
எங்கோ  குண்டு   வெடிக்கிறது
       
மரண ஓலங்களும்   வலியின்  வேதனைகளும்
நமக்கென்ன   தெரியும்  ? அவை வெறும் செய்திகள்தானே .
       
நாக்கறுந்த   பெண்ணும்      மொய்க்கும்   குழந்தைகளும்
பத்திரிகையில்   செய்திகள்  தொலைக்காட்சிப்  படங்கள்
        
என்ன செய்வது   , எல்லாம்  தலை  எழுத்து
நாம்  என்ன செய்ய ,--ஐயோபாவம்    என்று
       "
ஊச்கொட்டுவோம் .
இழப்பு   நமக்கு   நேர்ந்தால்  தெரியும்
       
வலியும் வேதனையும்

அண்மையில் தெரிந்தது வலியும் வெதனையும்

அண்ணன் தம்பிகள் எண்மர் நாங்கள்

 மனம்  மரத்துவிட்டது நோயும் சாவும் 

ஊச் கொட்ட வைப்பதற்கு பதில்

 ம்னதிலேறி சம்மண மிட்டு விட்டது

 ஊர் கூடிக்கதறி  ஒப்பாரி ஓலமிடவில்லை

  சாவுக்கு போகவும்முடியவில்லை ஒரு ஆறுதல்

 இறந்தவர் யாருமிளவயதல்ல

ஆனைமுகன் அண்ணன் துணை கொண்டு,
              
காதல் குறமகள் வள்ளியின் கரம் பிடிக்க,
              
நீ நடத்திய நாடகங்கள் எனக்குப் பிடிக்கும்.
              
தம்பியின் துணை நாடி கைத்தலம் பற்றிய
              
எனக்கு காதலும் பிடிக்கும்

என்றொரு முறை  எழுதி இருந்தேன் 

என் காதலுக்கு  துணைபோன என்தம்பியும் 

மாண்டு விட்டான் கொரோனா பாதிப்பால்

அந்தச்செய்தியின்தீவிரம்   அடங்கு முன்

 இன்னொன்று  எனக்கு அடுத்தவனும்

 போய் விட்டான் போனால் என்ன எல்லோரும்

போகத்தானே வேண்டும் என்றோ ஒருநாள்

போனவர் இருவரும்  அறுபதைத் தாண்டியவரும் 

இன்னொருவர்  எண்பதில்நுழைந்தவர் 

என்னிலும் இளையவர்கள் நான்வேண்டுவது எல்லாம்

 
        
வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
        
விட்டாய்,வென்றுவிட்டாய்வாழ்க்கை நிறைவேயன்றோ
        
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.

          
என்னுயிர்ப் பறவையே,
          
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
          
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
          
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
          
அழகாக வெளியேறிவிடுயாரும் அறியாமல்.
          

22 கருத்துகள்:

  1. ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள் கூடியவரை பாதுகாப்பாக இருக்கவும். அதிகம் வெளியே வராமல் இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைத்தான் பதிவில் எழுதி இருக்கிறேன்வெறுமெ ஊச் கொட்டத்தான் முடியும் அவரவர்க்கு நேர்ந்தால் வலி இன்னு சில நாள் இருக்கும்என்னதான் பாதுகாப்பாயிருண்டாலும் வருவது வந்தே தீருன் அதுவே படிவின் தடலைப்புநான் நினைட்டாலு வெளியே வர முடியாடு நானிப்போது இருப்பது ஹோம் குவாரண்டைன்

      நீக்கு
  2. எனது அனுதாபங்கள் ஐயா.
    எங்கும் இந்நிலைதான் தொடர்கிறது...

    இறையே துணை மக்களை காக்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறையே கொரோனவாக உருக்கொண்டதோ என்றும் கற்பனை செய்திருக்கிறேன்

      நீக்கு
  3. மழைக்காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
  4. மிக வருத்தமான செய்தி. ஆழ்ந்த அனுதாபங்கள். மனதைத் தளர விடவேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறந்தவர் ஒருநாள் மாண்டே ஆக வேண்டும் மனம்மரத்துவிட்டது இம்மாதிரி செய்திகள் மிகவும் சாதாரணமாகி விட்டது

      நீக்கு
  5. துக்கம் தரும் நிகழ்வுகள். திடுக்கிடல்கள். ஆழ்ந்த அனுதாபங்கள்.

    எதுவும் இல்லை நம் கையில். எப்போதும் இருந்ததுமில்லை. தத்துவார்த்த சிந்தனைகளினூடே.. பதிவின் உங்கள் கடைசி பாரா.. அவசியமில்லை. ஏனெனில், அவகாசமிருக்கிறது இன்னும்!

    பதிலளிநீக்கு
  6. ஆழ்ந்த அனுதாபங்கள். எது எப்ப நடக்குமோ அது அப்பப்ப தானாகவே நடந்துவிடும் வலி நமக்கு ஏற்படும்வரை அது சாதரணம்தான்.. நான் எதற்கும் ரெடியாகத்தான் இருக்கிறேன் என் வாசல் கதவை இந்த வருடம் எமன் மூன்று முறை தட்டினாலும் ஏதோ ஒன்று அவனிடம் இருந்து என்னைக் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் வந்த வேலைகளும் நம் கடமைகளும் செய்துமுடித்திருந்தால் போவதில் தயக்கம் கூடாது

      நீக்கு
  7. ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா. அனைத்தையும் எதிர்கொண்டாக வேண்டிய சூழலில் உள்ளோம்.
    என் நெஞ்சுக்கூட்டை விட்டு ழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல் என்ற அடிகள் பட்டினத்தாரை நினைவுபடுத்தின ஐயா.

    பதிலளிநீக்கு
  8. இன்பம் துன்பம் கலந்த வாழ்க்கை. என் உறவினர் ஒருவர் நீண்ட காலப் போராட்டத்துக்குப் பின்பு சாத்தூரில் காலமான செய்தி சற்றுமுன்பு கிடைத்தது . இறுதியாய்ப் பார்க்கப் போக இயலாதே!
    உங்கள் இளவல்கள் மறைந்தமைக்கு என் ஆழ்ந்த அனுதாபம் .

    பதிலளிநீக்கு
  9. என்பதிவில் நான் எழுதி இருப்பதை மீண்டும் சொல்லவில்லை

    பதிலளிநீக்கு
  10. வாழ்க்கையில் நம்முடன் வந்தவருக்கு இறுதி மரியாதை செலுத்த காலம் அனுமதிக்காதபோது அதன் வருத்தம் இன்னுமே அதிகரிக்கும். எல்லாம் கடந்து போய்விடும். எது நடந்தாலும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காதபடி நடக்கணும். நம் கையில் என்ன இருக்கிறது, கற்பனைச் சிறகுகளை விரிப்பதைத் தவிர?

    பதிலளிநீக்கு
  11. என் கற்பனை சிறகுகளும் விரிகின்றன ஆனால் என்ன சற்றே அன்க ந்வென்ஷனலாய்

    பதிலளிநீக்கு