Thursday, October 1, 2020

நாடகப் போட்டி முடிவுகள்

 

நாடகம்  கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்  நாடகப் போட்டியில்பங்கு பெற்ற முதல் நாடகப்  பதிவு நாடகத்தின் முந்தைய  பகுதிகள் என் தளத்தில்  ஏற்கனவே  வந்திருக்கிறது இதை எழுதியவர்  திரு ரமணி  

 

 

   காட்சி 20

கதாபாத்திரங்கள் :  அருணா மாணிக்கம்

(
சபாபதி சென்ற அதே வேகத்தில்
அருணாவும் மாணிக்கமும் வாசலுக்கு
ஓடி வருகிறார்கள்
.
மாணிக்கம் சட்டென எதிரே வந்த ஆட்டோவை
நிறுத்தி அருணாவை அதில் ஏறச் சொல்லி...)

மாணிக்கம்: அண்ணி நீங்கள் முதலில்
நேராக போலீஸ் ஸ்டேசன் போய்
போலீஸ்காரர்களை அழைத்துக் கொண்டு
வீட்டிற்கு வந்து விடுங்கள்..நான் நேராக
வீட்டிற்குப் போய் அந்தப் பாவியை
உண்டு இல்லை என்று ஆக்கிவைக்கிறேன்..

அருணா: (இடைமறித்து ) வேண்டாம் வேண்டாம்
நீங்கள் ஸ்டேசன் போய்வாருங்கள் நான்
வீட்டிற்குப் போகிறேன்
என்னால்தான் உங்கள் அண்ணனுக்கு இத்தனைக்
கஷ்டமும்..என் உயிரைக் கொடுத்தாவது
அவரைக் காப்பேன்.இது சத்தியம்...

மாணிக்கம்::அண்ணி நிலைமையைப்
புரிந்து கொள்ளுங்கள்.பணவெறி பிடித்த
மிருகம் எப்போது எப்படி மாறுவான்
எனச்சொல்ல முடியாது..சட்டென அவன்
கோபம் உங்கள் மீது திரும்பினாலும் திரும்பும்
சொல்ல முடியாது
நீங்கள் இருவரும் வாழவேண்டியவர்கள்
என் உயிரைக் கொடுத்தாவது அண்ணனைக் காப்பேன்
என்னை நம்புங்கள். இது உங்கள் மீது
சத்தியம்
(
எனச் சொல்ல்லியபடி வலுக்கட்டாயமாக
அருணாவை ஆட்டோவில் அமரவைத்து
தனக்கு ஒரு ஆட்டோவைப் பிடிக்க மாணிக்கம்
ஓடுகிறான் ).

காட்சி 21
இடம் போலீஸ் ஸ்டேசன்:
கதாப்பாத்திரங்கள்": அருணா..இன்ஸ்பெக்டர்
கான்ஸ்டெபிள்

அருணா: (ஆட்டோவை விட்டு வேகமாக்
ஸ்டேசனுக்குள் ஓடி அங்கிருந்த
கான்ஸ்டெபிளிடம்)

சார் சார் சீக்கிரம் கிளம்புங்கள் சார்
என் கணவரைக் கொல்ல ஒரு படுபாவி
துப்பாக்கியுடன் போயிருக்கிறான் சார்
சீக்கிரம் போனால் காப்பாற்றலாம் சார்..

கான்ஸ்: முதல்ல பதறாமல் உட்காரும்மா
முதலில் நீ யார் உன் கணவர் யார்
ஏன் உன் கணவனை அவன் கொல்லப் போகணும்

அருணா: : (இடைமறித்து )சார் முழு விவரமும்
போகிற போது சொல்கிறேன் சார் முதலில்
கிளம்புங்கள் சார்.....

இன்ஸ் : :(சொல்லிக் கொண்டிருக்கும் போதே
இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைகிறார்)

கான்ஸ்டெபிள் யார் இவர்கள் ஏன் இப்படி
பதறுகிறார்கள்

கான்ஸ்டெபிள்: சார் இவர்கள் கணவனை
யாரோ கொல்லப் போகிறார்களாம்
காப்பாற்ற உடன் கிளம்பச் சொல்கிறார்
அதுதான் விசாரித்துக் கொண்டிருக்கிறேன்

இன்ஸ்: (அருணா பக்கம் திரும்பி)
யாரம்மா நீ.. உன் பெயர் என்ன? அவன்
ஏன் உன் கணவனைக் கொல்லணும்

அருணா:...சார் என் பெயர் அருணா
என் கணவர் பெயர் குமரேசன் எங்களுக்கு
சமீபத்தில்தான் திருமணம் ஆச்சு .

இன்ஸ்:: திருமணம் வீட்டில் ஏற்பாடு செய்ததா
காதல் திருமணமா

அருணா:.நான் விரும்பித் திருமணம் செய்து கொண்டது
சார்.அவர் அப்போது ஜெயிலில் இருந்தார்

இன்ஸ் : ( இடைமறித்து) அந்தப் பெண் நீதானா
செய்யாத குற்றத்திற்கு மரண தண்டனைவரை
போய் வந்தானே அந்தக் குமரேசனா.
கான்ஸ்டெபிள் சட்டெனக் கிளம்பு.செய்யாத
குற்றத்துக்கு மரண தண்டனை வரை கொண்டு
சென்ற நம் பாவத்தைக் கழிக்க ஒரு நல்ல
சந்தர்ப்பத்தை ஆண்டவன் கொடுத்திருக்கான்
குவிக் குவிக்...

(
இன்ஸ்பெக்டர் கான்ஸ்டெபிள் அருணா விரைந்து
ஜீப்பில் ஏற ஜீப் கிளம்புகிறது )

காட்சி 22
குமரேசன் வீடு..
கதாப்பாத்திரங்கள் : இன்ஸ்பெக்டர் கான்ஸ்டெபிள் அருணா

ஜீப் குமரேசன் வீட்டிற்குள் நுழைகிற அதே நொடியில்
சபாபதி பைக்கில் ஜீப்பைக் கடந்து போகிறான்
அவன் வலது கையில் துப்பாக்கி அதைக் கண்ட
அருணா :ஜிப் நிற்கும் முன் ஜீப்பில் இருந்து
குதித்தபடி கத்துகிறாள்

அருணா: சார் சார் அந்தக் கொலைகாரப் பாவி
ஓடுகிறான் சார். பிடியுங்கள் சார் எனக் கத்தியபடி
வீட்டிற்குள் ஓடுகிறாள்

உள்ளே கட்டிலில் குமரேசன் தலை கவிழ்ந்து
கிடக்க அருகே தலையில் கைவைத்தப்படி
மாணிக்கம் தலையைத் தொங்கபோட்டபடி இருப்பதைப்
பார்த்த அருணா ..எனக் கதறியபடி
தரையில் சாய்கிறாள்

 

 

காட்சி 22

இடம்:  மருத்துவமனை
கதாப்பாத்திரங்கள்::அருணா,மாணிக்கம் குமரேசன்

அருணா: (மெல்லக் கண் விழித்தபடி
சுற்றுமுற்றும் பார்த்தபடி)
நான் எங்கிருக்கிறேன்.நான் இன்னும்
சாகவில்லையா ? அவர் சாவுக்கு காரணமான
நான் இன்னும் உயிரோடிருப்பது பாவமில்லையா
ஐயோ..நான் பெரும் பாவியாகிவிட்டேனே

மாணிக்கம்" அண்ணி...யார் சாவுக்கும்
நீங்கள் காரணமில்லை.காரணம் அண்ணன்
சாகவில்லை. இதோ உங்கள் எதிரிலேயே

குமரேசன்: (மெல்ல  அறையில் நுழைந்தபடி)
அருணா நான் சாகவில்லை. உனக்காக
இதோ முழுமையாக உண்மையாக
(
கையை உயர்த்திக் காட்டியபடி
அருணாவின் அருகில் அமர்கிறான்)

அருணா: (குழம்பியபடி)அப்போது நான்
மெத்தையில் சரிந்தபடிப் பார்த்தது
இவர் தலை கவிழ்ந்தபடிக் கிடந்தது எல்லாம்..

மாணிக்கம்: எல்லாம் நடிப்பு அண்ணி
அண்ணா உண்மையில் நீங்கள் அவர்களை
விரும்புகிறீர்களா அல்லது ஏதோ
எதிர்பாராதது நடந்துவிட்டது என்பதற்காக
சகித்துக் கொண்டிருக்கிறீர்களா
என உங்கள் வாக்கின் மூலமே
அறிய விரும்பி அப்படி அவர் செத்துக் கிடப்பது
போலவும் நான் அப்படி கவலையுடன் இருப்பது
போலவும் கிடக்கச் சொன்னார்.

நாங்கள் நீங்கள் சினிமா பாணியில்
நீண்ட வசனம் பேசி உங்கள் மனதில்
உள்ளதைக் கொட்டுவீர்கள் என நினைத்தால்
நீங்கள் சட்டென மயங்கி விழுந்து விட்டீர்கள்
அதன் மூலம் உங்கள் உள்ளார்ந்த அன்பை
மிகத் தெளிவாக எங்களுக்குப் புரியவைத்துவிட்டீர்கள்

அருணா: (வெட்கிக் குனிந்தபடி
இருந்தாலும் உங்கள் இருவருக்கும் இவ்வளவு
குசும்பு இருக்கக் கூடாது அது சரி
அவ்வளவு கோபமாக வந்த அந்தப் பாவி
எப்படி உங்களைச் சுடாது போனான்
திரும்பவும் கோபமாய் துப்பாக்கியுடன் போனான்

குமரேசன்: நான் அவன் சம்பந்தா
சம்பந்தமில்லாமல் கோபப்படுவதும்
நான் எதுவும் சொன்னால் உன்னைக் கொல்லப்
போவதாகப் போவதை வைத்தே நீ எதுவும்
சொன்னால் என்னக் கொல்ல இங்கே வருவான்
என்பதை முடிவு செய்து வைத்திருந்தேன்

ஆம் அவன் நிஜ வில்லன் இல்லை மற்றுமொரு
இரண்டாம் புலிகேசி வில்லன் என அப்போதே
முடிவு செய்து விட்டேன்

எனவே அவன் வந்ததும் எந்தவித எதிர்ப்பும்
தெரிவிக்காது சாகத் தயாராக இருப்பதாகவும்
அதற்குள் ஒரு விஷயத்தை மட்டும் கேட்டுவிட்டு
தாராளமாக சுடவும். அது கூட அவன் சுட வேண்டாம்
சுட்டால் அவன் குற்றவாளி ஆவதோடு\உன்னோடு
வாழ்வதும் முடியாமல் போகும் எனச் சொன்னதும்
புலிகேசி வில்லன் அடங்கிப் போனான்

பின் நான் அவன் மரமண்டைக்குப் புரியும்படியாக
நான் உன்னைத் தேடி வரவும் இல்லை
உன்னைத் திருமணம் செய்ய முயற்சிக்கவும் இல்லை
நான் சாவை எதிர்பார்த்து இப்போது
இருக்கிறார்ப்போலவே ஜெயிலிலும் இருந்தேன்
நீ வந்து தாலி கட்டச் சொன்னதால் எப்படியும்
சாகப் போகிறோம் ஒரு ஜீவனின் ஆசையை
நிறைவேற்றிப் போவோமே என அதற்கு
ஒத்துக் கொண்டேன்.அது ஒன்றுதான் நான்
செய்த தவறு,,

அதற்காக நீ கொடுக்கிற தண்டனையை
நிச்சயம் ஏற்றுக் கொள்கிறேன்.அது கூட
நீ சுட்டால் நீ அருணாவோடு வாழ்வது\இயலாமல்
கெட்டுப் போகும் .துப்பாக்கியைக் கொடு
நான் சுட்டுக் கொல்கிறேன் என்றேன்

துப்பாக்கியைக் கொடுத்தால் அப்படியே
அவன் காலில் சுட்டு மடக்கிவிடலாம்
என நினைத்திருந்தேன்.

அதற்குள் அந்த புலிகேசி அனைத்திற்கும்
நீ தான் காரணமாய் இருந்திருக்கிறாய்
எனச்  சொல்லி உன்னைத்தான் கொல்லவேண்டும்
எனக் கிளம்பிவிட்டான்..

அப்போதுதான் மாணிக்கமும் உள்ளே வந்தான்
வாசலில்  ஜீப் சப்தமும் கேட்டது.
மாணிக்கமும் அண்ணி அண்ணி என்றான்

நீ வருவதைத் தெரிந்து கொண்ட நான்
சட்டென மாணிக்கத்தை தலை கவிழ்ந்து கிடக்கச்
சொல்லிவிட்டு நான் சோபாவில் சுட்டு
விழுந்ததைப் போல கவிழ்ந்து விட்டேன்.
அப்புறம் நடந்ததுதான் உனக்குத் தெரியுமே
இந்த விளக்கம் போதுமா...

அருணா: இருந்தாலும் நீங்கள் இவ்வளவு
ரிஸ்க் எடுத்திருக்கக் கூடாது
உண்மையில் அப்படி அதிர்ந்து விழுந்த நாள்
அப்படியே செத்துப் போயிருந்தால்.....

குமரேசன்: வாய்ப்பே இல்லை..நாம
மனமொப்பி வாழவேண்டும் என்பது
இறைவனின் விருப்பம் அதை யாரும்
தடுத்து விட முடியாது.

இல்லையென்றால் இத்தனை கண்டங்களையும்
கொடுத்த இறைவன் அதிலிருந்து மிக
எளிதான வழியையையும் காட்டி இருப்பானா ?

மாணிக்கம்" ஆம் ஜெயிலில் தாலி கட்டவைத்து
இங்கு ஆஸ்பத்திரியில் மனம் ஒப்பவைத்து....
(
எனச் சொல்ல எல்லோரும் சப்தமாகஸ் சிரிக்க
திரை விழுகிறது )

  

 

)

 

3 comments:

  1. தங்கள் பக்கத்தில் வெளியிட்டுக் கௌரவித்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. ரமணி ஐயாவிற்கு வாழ்த்துகள்...

    GMB ஐயா முடிவைக் கணிக்க முடியுமா...?

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சிறந்த பதிவுகள் கூட வரலாம்..நாளை வரை பொறுத்திருப்போம்..

      Delete