வெள்ளி, 16 அக்டோபர், 2020

மறதி என்பது நோயா

 

மறதி என்பது நோயா

இப்போதெல்லாம் மறதி பற்றிய பல செய்திகள் இடுகைகளில் வருகிறது  மறதி என்பது ஒர் நோயா என்னும் சந்தேகம்  பலருக்குமிருக்கிறது மறதி நோயானால் அதன் பெயரே வேறு  அல்ஜிமர் என்கிறார்கள்நாம்  கவனம் செலுத்தாத  விஷயங்களில் மறதி இருக்கும்

 2013ம் வருடம் நான் எழுதி இருந்தஒருபதிவை மீண்டுமிங்கு தருகிறேன்

   பொழுது விடிகிறது, இன்னொரு
நாளைக் காண உயிர்க்கிறேன்.
இன்று நான்  திட்டமிட்டுச்செய்ய
வேண்டிய பணிகளின் பட்டியல்
என் மனக்கண்முன் விரிகிறது.



என் சிறு தோட்டம் நீரின்றி காய்கிறது
பூவாளியில் நீரை ஏற்றி இரைக்கப்
போகும்போது அழுக்கடைந்த கார் காண
அதை முதலில் கழுவலாம் என்று தோன்ற
அருகில் செல்லும் போது தென் படுகிறது
வீட்டின் முன் மாட்டியிருக்கும் தபால் பெட்டி.
காரைக் கழுவும் முன் தபாலை எடுத்துப்  
ஹாலில் மேசை மேல் கார் சாவியை வைத்து
ஃப்ரிட்ஜிலிருந்து ஃபான்டா பாட்டிலைத் திறந்து
ஒரு வாய் அருந்தி அதை அருகில் வைத்து
கடிதங்களைப் பிரித்துப் பார்க்க அவை
குப்பைத் கூடையில் போக வேண்டியது என்று
அதைப் பார்க்க அதுவும் நிரம்பி இருக்க அதைக்
காலி செய்து குப்பைத் தொட்டியில் போட
வெளியே போக வேண்டும் போகிறபோதே
அருகில் இருக்கும் கியோஸ்கில் மின் கட்டண்ம்
செலுத்தினால் ஒரு வேலை முடியும். அதற்கு முன்
அட்டைப் படத்தில் கவர்ச்சியுடன் சிரிக்கும் அழகியைத்
தாங்கி வந்திருக்கும் வாராந்திரி கண்ணில் பட அதை
எடுத்துப் படிக்கக் கண்ணாடி தேவை அதை வைத்த
இடம் மறந்து தேட மேசை அறையில் கார் சாவி கண்டதும்
காரைக் கழுவ நினைத்ததும் நினைவுக்கு வர
அங்கே போனால் பூவாளி நீரும் குப்பைக் கூடையும்
என் முன்னே இளிக்க ஆயாசத்துடன் ஃபாண்டா பருக்
எண்ணி எடுத்தால் அதுவும் குளிர் விட்டுப் போய் ச்சே!
எந்தவேலையும் திட்டமிட்டபடி நடப்பதில்லையே
என நான் சிந்திக்கும் போது மனசு குரல் கொடுக்கிறது
டேய்.! உனக்கு இருப்பது AAADD யின் அறிகுறிகள்
( AAADD  என்றால் AGE ACTIVATED ATTENTION DEFICIT  DISORDER.)
.      

 

      

18 கருத்துகள்:

  1. ஆம்.  பாதி நேரம் தொடர்ச்சியான வேலைகளில் இப்படித்தான் செய்ய நினைப்பவற்றில் பலவற்றை விட்டு விட்டு அவஸ்தைப் படுகிறோம்.  நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.  படித்த நினைவு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயது ஏறும்போது பல்ருக்கும் நேர்வதுதான் பயம் தேவை இல்லை

      நீக்கு
  2. மறதி பற்றி 2013 ல் எழுதிய பதிவை ஞாபகம் வைத்து மீண்டும் பதிவு செய்து படிக்க செய்த அருமையான பதிவிற்காக் உங்களுக்கு ஒரு பாராட்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைக்க தெரிந்த மனதுக்கு மறக்க தெரியவில்லை நன்றி சார்
      பாரட்டுக்கு

      நீக்கு
  3. மறதி கூட நாம் நிர்ணியப்பது தான்...! விளக்கமாக பிறகு பதிவில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப்பற்றி குறளும் உள்ளதா எழுதும்போது விளங்கினால் சரி

      நீக்கு
  4. 2013இல் எழுதியதைப் பற்றி விவாதிக்கின்றீர்கள் என்னும்போது அதனை மறதி எனக் கொள்ளலாகாது என்பது என் கருத்து ஐயா. மறதி என்பதைவிட நாம் நினைக்கும் காலகட்டத்தில் அது நினைவிற்கு வரவில்லை என்று கொள்ளலாமே?

    பதிலளிநீக்கு
  5. அது மறதி என்று நான்சொல்லவில்லையே நினைவுக்கு வராததை மறதி என்கிறோம் நோய் என்றுபயப்பட தேவை இல்லை

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஜிஎம்பி சார். அற்புதமான பதிவு. அப்படியெ
    வாழ்வில் நடப்பது.
    நான் மிக யோசிப்பது இந்த மறதியைப் பற்றித்தான்.
    கூகிள்
    போய் தேட நினைத்து அங்கு சென்றால் எதைத் தேட வேண்டும் என்பது மறந்துவிடுகிறது.
    இனி இதை நினைத்துப்
    பயப்படப் போவதில்லை.
    மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. iஇங்கு வந்த பின்னூட்டங்கள் சில பதிவில் விவ்ரித்த செயசல்களை கவ்னச் சிதரல் என்று சரியாக் கணித்து இருக்கின்றன

      நீக்கு
  7. இதனை மறதி என்பதா இல்லை கவனச் சிதறல் எனக் கொள்ளலாமா

    பதிலளிநீக்கு
  8. இதனைப்பற்றி விளக்கமாகப் படித்தேன்... மறந்துவிட்டது (ஹாஹா)

    கவனச் சிதறல் என்பதுதான் சரி. நமக்கு முக்கியமானதை நாம் மறப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் மனைவி கூறிய் தென்றால் மற்க்க முடியுமா

      நீக்கு
  9. மறதி
    நாம் முக்கியமாக எண்ணாதது நம் நினைவை விட்டுப் போகிறது

    பதிலளிநீக்கு
  10. மற்திக்கு அதுவும் ஒரு காரண்ம்

    பதிலளிநீக்கு
  11. நினைவு மங்கிப் போவதுதான் மறதி. நம்முடன் நெருங்கிப் பழகியவர்களின் முகம் காலப்போக்கில் மறந்துவிடுவதுண்டு பாரதி பாடினார் ஆசை முகம் மறந்துபோச்சே என்ரு. மறதி தேவைதான் ; இல்லாவிட்டால் மூளைக்கு சுமை . .

    பதிலளிநீக்கு
  12. நாம் முக்கியமென்று நினிக்காதவை மறக்க வாய்ப்புண்டுஆசை முகம் மறக்குமா பாரதி எந்த பொருளில் பாடினாறோ

    பதிலளிநீக்கு