வெள்ளி, 30 அக்டோபர், 2020

பொள்ள வடை

 

பொள்ளவடை

 

நான் I eat to live not live to eat உணவில் அக்கறை குறைவு இப்படிப்பட்டவன்   மனைவியிடம் பொள்ள வடை திங்க ஆசை என்று கேட்ட போது அவள் திகைத்தாள் எனக்கு என்னவோ என்பெரிய அண்ணி செய்து தந்த பொல்ல வடைநினைவுக்கு வந்தது திங்க கிழமை ரெசிப்பிகளில் வெகு சாதாரணமான  ரெசிப்பிகளே பகிரப்படுகிற்து  என் மனைவி உத்தேசமாக  செய்தாள் நன்றாகவே இருந்தது செய் முறை அரிசிமாவு  6 கப் என்றால்கடலை பருப்பும் துவரம்பருப்பு ஒரு கப் என்னும் விகிதம்   பருப்பை ஊற  வைத்து அரைத்துக்கொள்ள  வேண்டும் கூடவே தேங்காய்த்துருவல் மிளகாய்ப்பொடி பெருங்காயப்பொடி மிள்காய் வற்றல் சேர்த்து அரைக்கவேண்டும் அரைத்ததை அரிசி மாவில் சேர்த்து  பிசைய வேண்டும்உப்பு தேவைக்கேற்பபோடவும் கிடைத்த மாவை சிறிய தாகவடை போல் தட்டிக்கொள்ளவும்   காய்ந்த எண்ணையில்  பொரித்தெடுக்கவும்பொள்ளைவடை ரெடி

 வடை சற்றே உப்பி உள்ளே காலியாகபொங்கி இருக்கும் இது என் பெரிய அண்ணி செய்து தந்ததால் அவர் நினைவாக  செய்து சாப்பிட்டோ ம் ஒரு வித்தியாசமான ரெசிப்பி பாலக்காட்டுப்பக்கம்  ஸ்பெஷல்                

22 கருத்துகள்:

  1. நாங்கள் குனுக்கு என்று செய்வதில் அரிசியையும் ஊறவைத்து அரைப்போம். இதில் அரிசி மாவு சேர்த்திருக்கிறீர்கள். வேற வித்தியாசம் தெரியலை.

    வடைபோல தட்டி பொரித்தெடுத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    வெகு நாட்களுக்குப்பின் உணவுப் பதிவு. படமும் சேர்த்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. இப்போதுதான் இந்த வடையைப் பற்றி கேள்விப்படுகிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.  நெல்லை சொல்வதுபோல படம் சேர்த்திருக்கலாம்.   வித்தியாசமான பெயர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு திங்ஃகசெய்தது பதிவு எழுதும் எண்ணம் இருக்கவில்லைசெய்முரை சரியில்லை என்றால் படம் எடுப்பதும்வேஸ்டாகும்

      நீக்கு
  4. பொள்ளவடை - பெயர் புதிது...

    இது போல் செய்வதுண்டு... ஆனால் பொள்ளவடை என்றவுடன், "செய்ததின் பெயர் என்ன ?" என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொங்கிவரும் வடை என்று அர்த்தம் இது கேரளத்து ஸ்பெஷல் எங்கள் அ ண்ணிசெய்து சாப்பிட்டது

      நீக்கு
  5. ஆஹா சார் பொள்ள வடை!! கேரளத்து வடை. செம டேஸ்ட்டியா இருக்கும். நன்றாக உப்பி. நான் சில நாட்கள் முன் செய்தேன் சார். ஃபோட்டோ கொஞ்சம் எடுத்து வைத்தேன். எபிக்கு திங்க பதிவுக்கு அனுப்ப. எங்கள் பிறந்த வீட்டில் இது அடிக்கடி செய்வதுண்டு.

    நீங்கள் ஃபோட்டோ கொடுத்திருக்கலாமே சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என்ன திங்கக்கிழமை பதிவுக்கா எழுதினேன்

      நீக்கு
  6. நம் வீட்டில் அரிசி மாவிற்குப் பதிலாக அரிசியை ஊற வைத்துச் செய்வாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கிய அரிசி மாவு என்று சொல்ல விட்டுப் போய்விட்டது. ஊற வைத்த அரிசி பொடித்து சலித்து அந்த அரிசி மாவைச் சேர்த்துச் செய்வாங்க. எங்க வீட்டில். கரெக்ட்டாகத் தட்டினால் மட்டுமே பொள்ளும்...அதாவது உப்பி வரும். பப்படம் போல.

      கீதா

      நீக்கு
    2. எப்படி செய்தால் என்ன வடை உப்பி வந்தால் சரி

      நீக்கு
  7. திங்க கிழமை ரெசிப்பிகளில் வெகு சாதாரணமான ரெசிப்பிகளே பகிரப்படுகிற்து//

    சார் என்ன சார் இப்படிச் சொல்லிட்டீங்க!!!!!!! எபி யில் நிறைய யாரும் அவ்வளவாகச் செய்யாத ரெசிப்பிக்கள் வருகின்றனவே சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பொள்ள வடை
    பெயரே புதிதாக இருக்கிறது ஐயா

    பதிலளிநீக்கு
  9. மலையாளத்தில் பொள்ள என்றால் empty என்று பொருள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு பொள்ள் என்றால் பொங்கும் என்று பொருள்

      நீக்கு
  10. பெயரும் புதிது வடையும் புதிது..

    உளுத்தம் பருப்பு தட்டைவடை தான் நம்ம ஊரு ஸ்பெசல் . அது நல்ல மொறு மொறுப்பாக வரும்.

    பதிலளிநீக்கு