Thursday, October 29, 2020

சுக்லாம் பரதரம் ஆச்சா

 

சுக்லாம்  பரதரம் ஆச்சா

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்

சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத்

சர்வ விக்னோப சாந்தயே 

, ''வெள்ளை உள்ளம், யானையின் கருப்பு நிறம், நான்கு கரங்கள், பிரகாசமான முகம், எல்லாரையும் நினைக்கச் செய்யும் உருவம் ஆகியவற்றைக் கொண்ட விநாயகரை நினைத்தால் எல்லா தடைகளு விலகும்

இதற்குமகாப்பெரியவர் இன்னொரு அர்த்தமும்கொடுத்தார்

 சுக்லம்' என்றால் 'வெள்ளை'... அதாவது பால்;

'விஷ்ணும்' என்றால் 'கருப்பு' அது 'டிக்காஷன்';

'சசிவர்ணம்' என்றால் கருப்பும், வெள்ளையும் கலந்தது...

அதாவது காபி. 'சதுர்புஜம்' என்றால் நான்கு கை. அதாவது மாமியோட இரு கைகளால் காபியைக் கொடுக்க, மாமாவின் இரு கைகள் அந்த காபியைப் பெற்றுக் கொள்ளும்.

'த்யாயேத்' என்றால் 'நினைத்தல்'. நினைப்பது. அதாவது இப்படி காபி கொடுப்பதை மனதில் நினைப்பது.

பிரசன்ன வதனம் என்றால் 'மலர்ந்த முகம்' அதாவது காபியை மனதில் நினைத்ததும், மாமாவின் முகம் மலர்ந்து விடும்

. சர்வ விக்னோப சாந்தயே' என்றால் 'எல்லாக் கவலையும் நீங்குதல்'. அதாவது காபி குடித்தால் கவலை நீங்கி மனம் சாந்தமாகி விடும் 

என்று அர்த்தம் என்று விளக்கினாராம்

 

ஓம் கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

விநாயகா் பாதம் பணிவோம்..அவா் நம்மை எல்லா ஆபத்திலிருந்தும் காத்தருள்வார்

மூஷிக வாகன மோதக ஹஸ்த

ச்சாமர கர்ண விளம்பித்த சூத்ர

வாமண ரூப மகேஸ்வரப் புத்திர

விக்ன விநாயக பாத நமஸ்தே!''

பொருள்:

மூஷிகத்தை வாகனாமாக கொண்டவரே, மோதகப் பிரியரே

சாமரத்தை போன்ற பெரிய காதுகளை உடையவரே, இடுப்பில் சங்கிலியை போன்ற ஆபரணங்களை அணிந்தவரே

வாமணனை ஒத்த ரூபம் உடையவரே

விக்னங்களை நீக்கியருள்வாய் என உன் பாதம் பணிகிறேன்!

குறிப்பு:

மூஷிகம் என்றல் மூஞ்சூறு. மோதகம் என்றால் ஒரு வகை இனிப்புப் பண்டம்.. பெரிய காதுகளும், வாமாண ரூபமும் (அதாவது அதிகம் உயரம் இல்லாத ரூபம்)

பொருள்:
மூஷிகத்தை வாகனாமாக கொண்டவரே, மோதகப் பிரியரே
சாமரத்தை போன்ற பெரிய காதுகளை உடையவரே, இடுப்பில் சங்கிலியை போன்ற ஆபரணங்களை அணிந்தவரே
வாமணனை ஒத்த ரூபம் உடையவரே
விக்னங்களை நீக்கியருள்வாய் என உன் பாதம் பணிகிறேன்!

 

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்

வக்ரதுண்ட மஹாகாய

சுர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமேதேவா

பொருள்:

அழகான வலைவுடைய துதிக்கையுடன் மிகப்பெரிய உடலை உடையவரே (விநாயகா)
கோடி சூரியனின் பொலிவை உடையவரே
என்னுடைய அனைத்து செயல்களும் எந்த தடையுமின்றி எப்போதும் சரிவர நடந்திட எமக்கருள்வாய்

அகஜ ஆனன பத்ம ஆர்கம் கஜ ஆனனம் அஹர் நிசம்
அநேக தம் தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே

 

 

அகஜ - அக = மலை; அகஜ = மலைமகள்; பர்வத புத்திரி; பார்வதி.

ஆனன - திருமுகம்

 

பத்ம - தாமரை

 

ஆர்கம் - பகலவன்; சூரியன்

 

அகஜானன பத்மார்கம் - பார்வதியின் திருமுகம் என்னும் தாமரையை மலர்விக்கும் பகலவனைப் போன்றவன் அவள் திருமகன்!

கஜ ஆனனம் = யானைமுகத்தவன்!

அஹர் நிசம் = அஞ்ஞான இருளை நீக்கும் பகலைப் போன்றவன்; அஹ: = பகல்; நிசம் = இரவு!

பக்தானாம் = அடியவர்களுக்கு, அநேக = மிகுதியான; தம் (dham) = வரங்களை; தம் (tham) = அருளுபவன்.

ஏகதந்தம் = ஒற்றைக்கொம்பன்

உபாஸ்மஹே = நான் வணங்குகிறேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 


 

 

 

 

 

 

 

21 comments:

 1. சுக்லாம் எழுதப்பட்டபோது காப்பி இருந்ததா ?

  ReplyDelete
  Replies
  1. கருப்பும் வெள்ளையும் கலந்ததிரவமென்றே அர்த்தம்

   Delete
 2. விநாயகர் சதுர்த்தி முடிந்து பல நாட்களை ஆகிவிட்டனவே. என்றாலும் எங்கேயும் எப்போதும் நினைவில் வருபவர் விநாயகர் தான். 

  இந்த பதிவு பல இடங்களில் இருந்து காபி பேஸ்ட் செய்யப்பட்டதாக தோன்றுகிறது. 

  காப்பி குடிக்கும் விஷயத்தில் கீதா மாமியையும் சாம்பு மாமாவையும் உருவகப் படுத்திக்கொண்டேன். கோபுலு வரைந்த சித்திரம் போல் இருந்தது.

   Jayakumar

  ReplyDelete
  Replies
  1. யூ அர் ரைட் பல இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள்

   Delete
 3. நல்ல விளக்கமாக இருக்கிறதே...!

  ஆனாலும் விநாயகர் தமிழ்நாட்டிற்கு தா'மதமாக வந்தார்...!

  ReplyDelete
  Replies
  1. பெரியவர் சொன்னதாககூறப்படுவதுதானே

   Delete
 4. மகா பெரியவர் நிஜமாக அப்படிச் சொல்லி இருக்கிறாரா?

  ReplyDelete
 5. எந்தக் காரியத்தையும் துவங்குவதற்கு முன்பு விநாயகர் துதி உண்டு.

  பரமாச்சார்யார் இப்படீல்லாம் சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரமோ?

  விநாயகர் வழிபாடு, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இருந்திருக்கவேண்டும். கல்கி எழுதியதுபோல வாதாபி நகரத்திலிருந்து கொண்டுவரப்பட்டு இங்கு வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது என்பதை நம்புவதற்கில்லை

  ReplyDelete
 6. எடை நம்பலாம் எதைநம்பக்கூடாது என்பதெல்லாம் அவரவர் நம்பிக்கை

  ReplyDelete
 7. மகா பெரியவர் கூறியிருப்பதாகச் சொல்லி இருப்பது வெகு சுவாரசியம். அவர் நகைச்சுவையாகச் சொல்லிச் சிரித்ததாக அதாவது நேரடி அனுபவமாக யாரோ ஒருவர் தங்கிலிஷில் எழுதியிருந்ததை ஒரு ஆங்கில வலைத்தளத்தில் வாசித்திருந்த நினைவு வந்தது..ராஜாதாத்தா ப்ளாக் ஸ்பாட். அவர் ஓய்வுபெற்ற விஞ்ஞானி என்பதும் நினைவு ..அதை வைத்து கூகுளில் தேடினேன்..தனது ஆங்கில தளத்தில் கொடுத்திருந்தார் என்று நினைவு. அதை வைத்து எப்படியோ கண்டுபிடித்துவிட்டேன் அந்த லிங்க் இதோ

  https://rajathathablog.blogspot.com/2017/02/shuklambaradaram-humorous-explanation.html

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அட கீதா...   இதை நீங்கள் வாசித்திருப்பது ஆச்சர்யம்.  அதைவிட ஆச்சர்யம் எங்கே வாசித்தோம் என்று நினைவு வைத்திருந்தது....

   Delete
  2. சில பாடல்களுக்குதமிழில் பொருள் எழுத்த நினைத்தை சிக்கியதுதான் பெரியவர் சொன்னதாக வரும் சுகலாம் பரதரம் ஆச்சாகூகிளில் சுக்லாம்பரதரம் என்று தட்டச்ச்க்ஷு செய்தல் இணைப்பு இடைக்கிறது https://www.hindutamil.in/news/spirituals/112176-.html

   Delete
  3. நான் தளம் ஏடும் தேடவில்லை

   Delete
 8. சுக்லாம்பரதரம்” ச்லோகம் எதற்கும் ஆரம்பத்தில் சொல்கிறோமே, அதிலே ஒரு வேடிக்கை! என்ன வென்றால், அதில் பிள்ளையாருடைய பெயர் எதுவுமே வரவில்லை! கணபதி, கணேசர், விநாயகர், விக்நேச்வரர் என்ற மாதரி அவருக்கே ஏற்பட்ட பெயரோ பெற்றோரைவைத்து ஏற்பட்ட சிவாத்மஜன், கௌரீஸுதன் என்ற மாதிரிப் பெயரோ, அவருடைய வாஹனம், ஆயுதம், இஷ்டமான வஸ்து ஆகியவைகளை வைத்து ஏற்பட்ட மூஷிக வாஹனர், பாசஹஸ்தர், மோதக ப்ரியர் முதலான ஏதாவதொரு பெயரோ, அவரது ரூப லஷணங்களைக் குறிக்கிற பெயர்களான கஜமுகர், ஏகதந்தர், லம்போதரர் (தொங்கும் தொந்திக்காரர்) முதலானதுகளில் ஏதாவதொன்றோ, அல்லது அவரது லீலைகளை வைத்து ஏற்பட்ட ஏராளமான பெயர்களில் எது ஒன்றுமோ ‘ சுக்லாம் பரதர’ ச்லோகத்தில் வரவில்லை. சொல்லிப்பாருங்கள்.

  சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் |

  ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்சயே ||

  “சுக்லாம்பரதர”: வெள்ளை வஸ்த்திரம் கட்டிக் கொண்டிருப்பவர். ஸரஸ்வதியும் ஈச்வரனும் கூடத்தான் வெள்ளை கட்டிக்கொள்வார்கள். வித்யாஸமாக மஞ்சள், சிவப்பு கட்டிக்கொள்கிற ஸ்வாமிகளைப் பீதாம்பரதாரி, ரக்தாம்பரதாரி என்றெல்லாம் சொன்னால் அது அவர்களைத்தான் ஸ்பெஷலாகக் குறிக்கிறது என்பதுபோல, ‘சுக்லாம்பரதரர்’ என்பது பிள்ளையாரை மாத்திரம் குறிப்பிட்டுவிடவில்லை.

  அடுத்ததாக, “விஷ்ணு.” இதற்காகத்தான் நான் இந்த ச்லோகத்தைச் சொல்லவந்தேன். மாமா பேரையே மருமகனுக்குச் சொல்லியிருக்கிறது. அத்தனை அந்நியோந்நியம்! ‘விஷ்ணு’ என்றால் எல்லா இடத்திலேயும் பரவியிருப்பவர், ஸர்வ வ்யாபி என்று அர்த்தம். பிள்ளையார் எங்கேயும் இருக்கிறாரென்பதால் ‘விஷ்ணு’ என்று சொல்லியிருந்தாலும்; அந்த வார்த்தையைக் கேட்டவுடனேயே நமக்கு அவருடைய மாமா நினைவுதானே வருகிறது?

  “சசிவர்ண”: நிலா மாதிரி நிறமுடையவர். ஈச்வரனும், ஸரஸ்வதியும்கூடத்தான் அப்படிப் பால்நிலா மாதிரி இருப்பவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு ஆரய்ச்சியே செய்து இருக்கிறீர்கள் படிவுக்கு இம்மாடிரி பின்னூட்டங்கள் செறிவு சேர்க்கும்

   Delete
 9. சதுர்புஜ”: நாலு கை உள்ளவர். அநேகமாக எல்லா ஸ்வாமிக்குமே நாலு கைதானிருக்கிறது. அதனால் இதிலும் இவருக்கென்று ஸ்பெஷலாக அடையாளம் கிடைத்துவிடவில்லை.

  “ப்ரஸந்ந வதந”: நல்ல மலர்ந்த முகமுள்ளவர் பின்னே, எந்த ஸ்வாமியாவது அழுமூஞ்சியாக இருக்குமா என்ன? காளி, வீரபத்ரர், நரஸிம்ஹ மூர்த்தி மாதிரி உக்ரமாக இருக்கப்பட்ட சில ஸ்வாமிகளைத் தவிர மற்ற எல்லா ஸ்வாமியும் பக்தர்களிடம் அநுக்ரஹத்தோடு ஆனந்தம் நிறைந்த முகத்தோடு இருப்பதைதான் இத்தனை ஆயிரம் விக்ரஹங்களிலும் பார்க்கிறோம். அவர்களையெல்லாம்விட இன்னம் ஆனந்தம் சொட்டிக் கொண்டிருக்கும்படியாகப் பரந்த, விசாலமான ஆனைமுகத்தோடு இவர் இருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

  இப்படி சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம்,சதுர்புஜம், ப்ரஸந்ந வதநம் என்று வருகின்ற ஐந்து வார்த்தைகளில் எதுவுமே பிள்ளையாரொருவரை மட்டுந்தான் குறிக்கிறது என்று சொல்வதற்கு இடமில்லாமலிருக்கிறது.

  (இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்ள வேண்டும்)

  அப்புறம், ‘த்யாயேத்’ என்பதற்கு ‘த்யானிக்க வேண்டும்’ என்று அர்த்தம்.

  எதற்காக த்யானிக்க வேண்டும்? “ஸர்வ விக்ந உப சாந்தயே”- எல்லா விக்னங்களும், தடைகளும் இடையூறுகளும் அடங்கி மறைந்து போவதற்காகவே, இங்கே தான், ஒரு நாமாவாகச் சொல்லாவிடிடாலும், பிள்ளையாருக்கென்றே ஏற்பட்ட விசேஷ லக்ஷணம் தெரிகிறது. எடுத்த கார்யம் விக்னமில்லாமல் நடக்க வேண்டுமென்றால் அதற்கென்று பிரார்த்திக்கப்பட்டவேண்டிய ஸ்வாமி பிள்ளையார்தான். அதனால்தான் எந்தக் கார்யத்தையும் ஆரம்பிக்கிறபோதே அவருக்குப் பூஜை பண்ணிவிடுவது; இந்த ஒரு ச்லோகமாவது சொல்லி நெற்றியில் குட்டிக் கொண்டுவிடுவது.

  ச்லோகம் சொல்லிக்கொள்ளக்கூடிய வயஸுக்கு முந்தியே ஒரு சின்னக் குழந்தையிடம்கூட, ‘அப்பா! பிள்ளையாரை நினைச்சுக்கோ! அப்போதான் எந்தக் கஷ்டமும் வராமலிருக்கும்’ என்று சொல்லிக் கொடுத்துவிடுவார்கள். அதனால், ச்லோகம் கற்றுக் கொள்கிற வயஸு வந்தபோது, இப்படி ‘ஸர்வ விக்நோபசாந்தயே’ என்று சொல்லிக் கொடுத்துவிட்டாலே போதும், ‘இடைஞ்சல் வராமலிருப்பதற்காக இந்த ஸ்வாமிக்கு ஸ்தோத்ரம் சொல்லணுமா? அப்படியானல் அவர் பிள்ளையாரகத்தானிருப்பார்’ என்று அந்தக் குழந்தைகூடப் புரிந்துகொண்டுவிடும்.

  ‘விஷ்ணு’ என்றே இந்த ச்லோகத்தில் இருப்பதிலிருந்து பிள்ளையாருடைய உறவு முறைகளில் மாமாவின் அருமை தெரிகிறது.

  அதை வைத்துத்தான், சற்றுமுன் சொன்ன ச்லோகத்தில் “ஸ்ரீ காந்தோ மாதுலோ யஸ்ய”-எவருக்கு மாமா லக்ஷ்மிபதியான மஹாவிஷ்ணுவோ- என்று ஆரம்பிக்கிறது. (மலையாளத்தில் ‘மருமக்கத்தாயம்’ என்று மருமான் வழி, மருமான் வழியாக ஸொத்து போகும் முறை ஞாபகம் வருகிறது.)

  ReplyDelete
  Replies
  1. ஒன்றிலிருந்து ஒன்றாக நினைவுக்கு வருவது பொல் இருக்கிற்து

   Delete


 10. நேற்று ஒரு இடத்தில் இது விஷ்னு ஸ்லோலகம் ஆனால ஏன் விநாயகரரை கும்பிடும் போது சொல்லுகிறார்கள் என்று வாக்குவதம் பண்ணி கொண்டிருந்தார்கள் அப்பொது இது பற்றி நான் தேடி படித்தது என் கண்ணில் பட்டது.. இன்று நீங்களும் அதை பற்றி பதிவு எழுதியதால் நான் ஆதையே கருத்தாக பதிவிட்டு இருக்கிறேன். இது தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி) என்பதில் இருந்து பகிரப்பட்டது

  ReplyDelete
  Replies
  1. அதிச்யமாக பலஎண்ணக் கோவைகள் நன்றி தமிழன் சார்

   Delete
  2. விளக்கங்கள் நன்று.
   அவர்கள் உண்மைகள் விளக்கமும் அறிந்தோம்.

   Delete