விஜய தசமி சிலநினைவுகள்
இன்று 26-10 20 விஜய தசமி நான் என் பத்து வயதுகளில் பாலக்காட்டில் என் தந்தை வழிபாட்டியுடன் இருந்தபோது கல்பாத்தி விசுவநாதர்
கோவிலில் முதன்முதலாகவிஜயதசமி கொண்டாடுவதைப்பார்த்த நினைவு சுவாமியை அலங்காரம் செய்து ஒரு வாழை ம்ரத்தை
அசுரனாக பாவித்து வெட்டுவதுபோல் காட்டுவார்கள்
ஒரே வெட்டில் வாழை மரம் இரண்டாகும்துஷ்டர்களை இப்படி நிக்ரகம் செய்ய முடிந்தால் என்று
இப்போது நினைக்க வைக்கிறது
திருச்சியில் கொதிமின் கல தொழிற்சாலையில் ஆயுதப் பூஜையின் போது தொழிற் சாலைக்குள் எல்லோருக்கும் அனுமதி உண்டு தங்கள்வேலை
செய்யும் இடத்தையும் தங்க்ள் முக்கியத்துவம் பற்றியும் வேலை செய்பவர் தங்கள் உறவினரிடம் பீலா விடுவதைக்கேட்கும்போது ஜாலியாய் இருக்கும்பூஜை
முடிந்ததும் பிரசாதமாகபொட்டலம் செய்து வைத்திருப்பார்கள்ஒருவர் பல இடங்களுக்கும் போய்
பிரசாதம்கலெக்ட் செய்வார் முக்கியமானவர்களிடம்
நிறைய பொட்டலங்களிருந்தால் அவர் பலசெக்ஷன்களிலும் முக்கியமானவராக கருதிக் கொள்ளலாம்அவற்றை அவர் எக்சிபிட்
செய்யும் விதமே அலாதியாய் இருக்கும் பாய்லர் இன்ஸ்பெக்டர்களுக்கு பிரத்தியேக மரியாதை இருக்கும்என்ன இருந்தாலும் பொதுமக்களுக்குஇம்மாதிரி
தொழிற்சாலையைப் பார்க்க கிடைக்கும் வாய்ப்பே முக்கியமாகும்
எனக்கு ஆயுதபூஜையின் நினைவில் முக்கிமாக வருவது நான் பயிற்சி முடிந்து வந்த முதல் ஆண்டு 1959 பெங்களூர் எச் ஏ எல் எஞ்சின் ஃபாக்டரியில் கொண்டாடியதுதான் அப்போது ஆர்ஃபியஸ்ORPHEUS எஞ்சின் தயார் செய்ய ப்ரிஸ்டல் சிட்லீ BRISTOL SIDDELYகம்பனியுடன்ஒப்பந்தம்
இருந்தது நிறைய ஆங்கிலேயர்கள் இருந்தனர்அவர்கள் எப்போதுமே தங்களை உயர்வாக கருதுவார்கள் அந்தவருடம் ஆயுத பூஜை கொண்டாட
ஒருகமிட்டி அமைத்தனர் அதில் அடியேன்
செக்ரடரி பூஜைக்கு பொருடள்வாங்கும்போது
அதிகஎண்ணிக்கையில் மாலைகள்வாங்கச் சொன்னார்கள்
ஏன் என்று கேட்டபோது வெள்ளைக்கார அடிகாரிகளுக்குபோட என்றனர் நான்கடவுள்படங்களுக்கு
மட்டுமேமாலை என்றேன் ஆசாமிகளுக்கல்ல என்றேன்என்னிடம் என் மேலதிகாரி உத்தரவு போட்டார் நான் மறுதளித்து
பூஜை காரியங்களில் இருந்து விலகினேன் கெட்டபெயர்தான்மிச்சம் அவர்களாகவே அவர்கள் கைக்காசில் மாலைகள்வாங்கி
வெள்ளைக்காரர்களுக்கு போட்டு மகிழ்ந்தனர்
நாம் மனசளவில்
அடிமைகள்தான் என்னும் என்
எண்ணம்வலுக்க அதுவுமொரு காரணமோ
.
உங்கள் விஜயதசமி நினைவுகள் அருமை.
பதிலளிநீக்குஎனக்கும் பொதுப்பணத்தில், அதிகாரிகளுக்கு ஐஸ் வைக்க முயல்வது பிடிக்காது. அப்படி ஐஸ் வைக்கணும்னா சொந்தக் காசில் செய்யவேண்டியதுதானே.
அதையும் பொது காரியங்களில் காட்டக் கூடாது
நீக்குஅடிமைகள் தான்... சமீப காலத்தில் வேறு விதமாக...!
பதிலளிநீக்குஅடிமைகள் அரசியலில் மட்டுமல்ல என்று கூறுகிறீர்கள்
நீக்கு"நெஞ்சுக்கு நீதி" இது போதும் ஐயா.
பதிலளிநீக்குஒ போதும் என்றாசொல்கிறீர்கள்
நீக்குநான் இந்தியாவில் இருந்தவரை சரஸ்வதி பூஜை ஆயுதபூஜைகள் மனதிற்கு சந்தோஷம் தருபவையாக்தான் எனக்கு இருந்தன.நான் வேலை செய்த இடங்களில் பூஜை செய்வதைதவிர மற்ற எல்லாவற்றிலும் என் பங்கு கண்டிப்பாக இருந்தன. பூஜை செய்யாதற்கு காரணம் அதை முறைப்படியாக செய்யாததுதான் மற்றபடி பூஜையில் கலந்து கொள்வேன். உங்களின் இந்த பதிவு என் பழைய நினைவுகளை கிளறிவிட்டன
பதிலளிநீக்குஅவரவர் சொந்தநம்பிக்கை பூஜை செய்வது முறை என்பதெல்லாம் நாமெற்படுத்தியது தானே
நீக்குசுவாரஸ்யமான நினைவுகள்.
பதிலளிநீக்குவருகை பதிவேடு அப்படிகாட்ட வில்லையேட் இருந்தால் இன்னும் பலர் வந்திருப்பார்களொ
பதிலளிநீக்குநினைவுகள் பசுமை ஐயா. மாலைகள் வாங்க மறுத்ததும், வெளியேறியதும் உங்களின் துணிவைக் காட்டியது.
பதிலளிநீக்குகைக்காசில் மாலை வாங்கிப்போட்டவர்கள் கண்டிப்பாக உயர் பதவிக்கோ, பொறுப்புக்கோ சென்றிருப்பர், ஐஸ் வைப்பதின் பலனை அறிந்தவர்கள்.
யார் எப்படி போனால் என்ன நமக்கென்று சிலகொள்கைகள் இருக்கின்றனவே
நீக்குநல்ல நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவௌகைக்கு நன்றி மேம்
நீக்குஎனக்கு தெரிந்தவரை அலுவலக சரஸ்வதி பூஜை என்பது வேலை செய்யும் எல்லோரிடமும் பணம் வசூலித்து செய்யப்படும். ஆகவே இதில் கம்பெனி காசோ அல்லது அரசாங்க காசோ இல்லை. குறிப்பிட்ட வெள்ளைக்காரர்களும் சில சமயம் பூஜையில் கலந்து கொள்ள பணம் தந்திருப்பார்கள். அவர்கள் மாறுபட்ட கலாசாரத்தில் இருந்து வந்தவர்கள் ஆகையால் அவர்களுக்கு ஒரு சிறப்பு அந்தஸ்து கொடுத்து கவுரப்பதில் கெடுதல் இல்லை என்பது எனது கருத்து.
பதிலளிநீக்குநீங்கள் வெளிநாட்டில் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டீர்கள் ஆனால் அங்கு உங்களுக்கு அவர்களுடைய முறையில் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கும்.
ஒரு மதசடங்கான சரஸ்வதி பூஜை பல மதத்தவர் வேலை செய்யும் அலுவலகத்தில் கொண்டாடக் கூடாது என்று எங்களது மேல் அதிகாரியின் கருத்துப்படி எங்களது செச்ஷன் மாத்திரம் சரஸ்வதி பூஜை/ஆயுத பூஜை வைக்காமல் இருந்தோம். அவர் மாற்றல் ஆனவுடன் தான் பூஜை வைக்கும் முறை தொடங்கியது.
ஆக எல்லா நிகழ்வுகளிலும் சந்தர்ப்பத்திலும் சட்டத்திற்கு மாறுபடாத வகையில் மேல் அதிகாரிகள் சொல் கேட்பது நன்று.
பிஎசீஎல்லில் அப்படித்தான் ஆனால் அந்தகால எச் ஏஎல்லில் கம்பனியே பூஜைக்கு பணம் போடுவார்கள்சரஸ்வதி பூஜையை ஒரு மதசடங்காக நினைக்கவில்லை நமது பணிக்கு செய்யும் நன்றிக் கடன் என்றே தெரிகிறது
பதிலளிநீக்குசென்னையில் பல கம்பெனிகளில் ஆயுத பூஜைக்கு தொழிலாளர்களுக்கு எவர்சில்வர் குடம், ட்ரம் போன்ற பெரிய பாத்திரங்கள், பொரி கடலை, இனிப்பு என்றெல்லாம் தருவார்கள். ஐ.டி. கம்பெனிகளில் ஆயுத பூஜை நடப்பதாக தெரியவில்லை.
பதிலளிநீக்குஎனக்குத் தெரியாதது
நீக்குமேலதிகாரி உத்தரவை எதிர்ப்பதற்கு நெஞ்சுரம் வேண்டும் .
பதிலளிநீக்குநெஞ்சுரம் எல்லாம் இல்லை அப்போது பயமறியா இளங்கன்று
பதிலளிநீக்குவிஜயதசமி நினைவுகள் எனது சிறுவயது காலத்தையும் நினைவில் கொண்டு வந்தது. உங்கள் கொள்கையும் சரியானதே.
பதிலளிநீக்குநன்றீ
நீக்கு