Tuesday, December 22, 2020

பிறந்த நாளூம் கொண்டாட்டங்களும்



பிறந்த நாள்

 

நம்மில்  எல்லோருக்கும் பிறந்த நாள் என்றஒன்று உண்டுஅந்நாளை கொண்டாடுவதும்உண்டுகொண்டாட்டங்கள் பலவிதம்   கோவிலுக்குப்பொவதும் பெற்றோரை  வணங்குவதும் உண்டு இப்போதெல்லாம்கலாச்சாரமாற்றங்களால் கேக் வெட்டிக் கொண்டாடுவது முக்கியமாக இருக்கிறது

என்வீட்டில் குடி வந்தவர்களின்  இரண்டாம் மகனது பிறந்தநாள்  இம்மாதம் 20ம் தேதி வந்தது நண்பர் குழு அதிகமாய் இருந்ததால்  கேக் வெட்டுவதை வீட்டின்  போர்டிகோ வில் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டார்கள்  நாங்களும் சரி என்றோம் இதை  எழுதுவதன் நோக்கமே வந்திருந்த நண்பர்கள்  ஆளாளுக்கு ஒரு கேக கொண்டு  வந்தார்கள் ஏதோ ஒரு கேக் வெட்டி  அதை பிறந்த நாள்   மகனின் முகமெல்லாம் பூசி அல்லோலகல்லோல படுத்தினார்கள் இதைஎல்லாம்   பார்த்தபோது எனக்கு எப்போதொ நான்  எழுதிய பதிவு ஒன்று நினைவுக்கு வந்தது  அதை மீள் பதிவாக்குகிறேன்



     பிறந்த நாள் கொண்டாடும் பிள்ளைகளுக்கு, 
     புத்தாடை உடுத்தலாம், 
     பள்ளிக்கு சீருடை வேண்டாம், 
     இனிப்போடு பள்ளி சென்றால் ,
     ஆயா முதல் அனைவரும் செல்லம் கொஞ்சுவர்
     மாலையில் கேக் வெட்டலாம் ,பரிசுப் பொருட்கள் ,
     குவியலாம், ஆட்டமும், பாட்டமும், கொண்டாட்டமும், , 
     கனவுகள் ,கற்பனைகள், எதிர்பார்ப்புகள். 

            பிள்ளையின் பிறந்த நாள் கொண்டாடும் 
            பெற்றோருக்குப் பலப்பல கவலைகள், 
            திட்டங்கள் செயல்கள், அதுவும் அடுக்குமாடி 
            குடியிருப்பானால் கேட்கவே வேண்டாம். 

    எண்ணிக் கணக்கிட வேண்டும், 
    எத்தனை பேர் அழைப்பதென்று, 
    பிள்ளையின் நண்பர்களுடன் 
    குடியிருப்பில் வசிக்கும் சிறுவர் சிறுமிகள், 
   கூடவே துணைக்கு வரும் பெற்றோர்கள், 
    புத்தாடை துவக்கம் ,இனிப்புப் பண்டங்கள், 
    காரவகைகள், கூடவே குடிக்க ஜூஸ் , 
    வைத்துக் கொடுக்க காகித தட்டுகளுடன் ,
    கப்புகளும், கைத் துடைக்க  டிஷுஸ் என்று 
   பார்த்துப் பார்த்து திட்டமிட வேண்டும். 
   அழகான வண்ணப் படங்களுடன் பெயரும் 
   எழுதிய பெரிய கேக் மிக மிக அவசியம்.
   பரிசுகள் பலப்பல தருவோருக்கு 
    மீள்பரிசுகளும்  மிகவும் முக்கியம். 
    பரிசு கொடுக்கும் சிறுவர்கள் 
    மீள்பரிசு  எதிர் பார்ப்பர்
    அவர்களை  ஏமாற்றக்கூடாது. 

            கண்மலர்ந்தெழும்  பிள்ளையை 
            கட்டியணைத்து முத்தமிட்டேழுப்பி ,
            வாழ்த்துக்கூறி, பள்ளிக்கு  இனிப்புடன் 
            வழியனுப்பி மாலைநேர  விழாவுக்கு 
            வெகுவாகக் காத்திருப்பர் பெற்றோர். 

    மாலை நேரத்தில் சந்தியா காலத்தில் 
    வண்ணக் காகித தோரணங்கள் பலூன்கள் 
    அலங்கரிக்க அழகாக நடு மேடையில் 
    அன்று வெட்டப்பட இருக்கும் புத்தம் புது கேக். 

              ஒருவர் இருவராய் அனைவரும் வர, 
              கொண்டாட்டம் ஆரம்பம், குழந்தைகள் உற்சாகம்.
              கொண்டு வந்த பரிசுகளைக் கொடுத்து விட்டு, 
              அனைவரும் கூடியதும் வத்திச்சுடர் ஏற்றப்பட 
              ஊதி அணைக்கத்தயாராய்ப்  பிள்ளையும் , 
              பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆங்கிலத்தில் 
              கோரசுடன் முழங்க, கேக் வெட்டி, வாயில் ஊட்டி, 
              வந்தவர் அனைவரும் விருந்துண்டு வாழ்த்த, 
              பின் மீள்பரிசும்  கொடுக்கப்படும். 

     ஆரவாரமாய் ஆரம்பமான விழா, அடங்கியபின் 
     பார்த்தால் பெற்றோர் பையில் பெரிய ஓட்டைதான்  மிச்சம். 

             என்னென்னவோ எண்ணங்கள் தோன்றுகிறது எனக்கு. 
             பிறந்த நாள் விழா பண்போடு கொண்டாடக் கூடாதா...
             அயலவன் கொண்டு வந்த கலாச்சாரம் 
             ஆழமாய்க் காலூன்றி வேரூன்றி விட்டது.
             பிறந்தநாள் விழாவில் ஒளிரும் தீபச்சுடர், 
             அணைக்கப்பட வேண்டுமா.?
             அச்சானியமாகத்  தோன்ற வில்லையா..?
             சூழ்நிலைக் கைதிகளாக நாமிருக்க 
             இப்படித்தான் கொண்டாட வேண்டுமென்றால், 
             தீபச்சுடரை அணைக்காமல்  ஒளியேற்றிக் 
             கொண்டாடலாமே...!

     பிறந்த நாட்கள் நல்ல நெறி 
     கற்பிக்கும் நாட்களாகக் கூடாதா.?
     பிறந்தநாள் விடியலில் பெற்றோரை வணங்கவும், 
      ,
     உள்ளதை இல்லாதாருடன் பகிர்ந்து 
     மகிழும் நாளாகப்  பழக்கப் படுத்தி, 
     பிள்ளைகளைப் பாங்காக வளர்க்கலாமே...
    வளர்ந்தபின்  உதவும் எண்ணம் 
    விதையாகிப்   பின் விருட்சமாகாதா.?
==================================




    

 

9 comments:

  1. பிறந்தநாள் பற்றிய கவிதை நன்றாய் இருக்கிறது.  முன்னர் நாம் கொண்டாடிய விதங்களிலிருந்து விலகி வந்து விட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தான் கொண்டாட வேண்டுமென்றால்,
      தீபச்சுடரை அணைக்காமல் ஒளியேற்றிக்
      கொண்டாடலாமே...!என்கிறேன்

      Delete
  2. கவிதை சூப்பர் சார்.

    கேக் வெட்டலாம். அதை முகத்தில் பூசுவது எல்லாம்...என்ன சொல்ல் இப்போது கொண்டட்டம் மாறிவிட்டது..

    கீதா

    ReplyDelete
  3. கேக் வெட்டும்போதுதீபச்சுடரை அணைக்காமல் ஒளியேற்றிக்
    கொண்டாடலாமே...

    ReplyDelete
  4. கேக் நல்லா சாப்டாங்களா? அதைப் பார்ப்போம்

    ReplyDelete