வியாழன், 27 மே, 2021

நம்பிக்கை பலவிதம்



 


நிலந்திருத்தி விதைக்கும் விதை ,கிளர்ந்தெழு மரமாகிக்
கனி கொடுக்கும் என்பது நம்பிக்கை.
 
      மெய் சோர்ந்து உழைத்து உறங்கி எழும் புலரியில்

      உயிர்த்து எழுவோம் என்பது நம்பிக்கை.


பயணச் சீட்டெடுத்து பஸ்ஸோ ரயிலோ ஏறிச் சேருமிடம்
சேதமின்றி சேருவோம் என்பது நம்பிக்கை.

        பாலூட்டிச் சீராட்டிப் பெற்றெடுத்த பிள்ளைகள் பிற்காலத்தில்

        நம்மைப் பேணுவர் என்பது நம்பிக்கை.


நோயுற்ற உடல் நலம் பேண நாடும் மருத்துவர்
பிணி தீர்ப்பார் என்பது நம்பிக்கை.

         நல்ல படிப்பும் கடின உழைப்பும் வாழ்க்கையில் வெற்றி

         பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை

.
நாளும் வணங்கும் ஆண்டவன் நம்மை என்றும்
கைவிடமாட்டான் என்பது நம்பிக்கை
.
         வாழ்வின் ஆதாரம் நம்பிக்கை.

         நம்பிக்கைகள் பலவிதம்;இருப்பினும்

நம்பிகை குறித்து எழுதும்போது

தொற்றிலிருந்து  தடுப்பூசி காக்கும் என்பது நம்பிக்கைஎல்லாம் அவன்பார்த்து

கொள்வான் என்று அவன் மீது பாரம் போடுவ்தும்  நம்பிக்க்கையின் பால்ஏதும் செய்யாமல்இருக்கிறோமா

புரியாத புதிர் இந்த நம்பிக்கை    

 

 

 

 

 




       

 

 

          

.
----

செவ்வாய், 25 மே, 2021

ஒரு சிறுகதை மீள் பதிவாக

 

ஒரு சிறு க்தை  மீள்பதிவாக

 
ஒரு சிறு கதை

 

“ஹல்லோ

யாரை யார் கூப்பிடுகிறார்கள் என்று புரியாமல் விழித்தாள் பொன்னம்மாள்.

“ ஹல்லோ, உன்னைத்தான் கூப்பிடுகிறேன் பொன்னம்மா.

 

தன் மகனே தன்னைப் பெயர் சொல்லி ஹல்லோ என்று கூப்பிடுகிறானே. ஒன்றும் விளங்காமல் அவனைப் பார்த்தாள்.

 

“ உன்னால் என் வேலைக்கு உலை. அதை நீதான் சரிசெய்யணும்” கடுப்பாகச் சொன்ன மகன் அங்கிருந்து போய்விட்டான்

பொன்னம்மாளுக்கு அழுகையாய் வந்தது நாலு இடங்களில் வேலை செய்து பிள்ளைகள் இருவரையும் படிக்க வைத்து வயதாகும் காலத்தில் உடம்புக்கு முடியாமல் தான் வேலைக்குப் போகும் இடங்களுக்கு இனி வர முடியாது என்று தன் மூத்தமகன் மூலம் தெரிவித்தாள். இவள் வேலைக்குப் போகும் இடத்தின் சிபாரிசால் இளைய மகனுக்கு வேலை கிடைத்திருந்தது. தான் வேலைக்குப் போக முடியாது என்று தெரிவித்தவுடன் சினமடைந்த சின்ன மகனின் கோபத்தின் வெளிப்பாடே மேலே சொன்ன ‘ஹல்லோவும் தொடர் பேச்சும்

 

பொன்னம்மாள் தான் கடந்து வந்த பாதையை அசை போட்டாள். எல்லோரைப் போலவும் அவளுக்கும் திருமணம் நடந்தபோது கனவுகள் பல இருந்தது இரண்டு ஆண்மக்களைப் பெற்றவள் எதிர்காலம் குறித்துகனவுகள் காணத் தொடங்கியபோது , முறையான விவாக ரத்து இல்லாமலேயே கணவன் இவளைத் துரத்திவிட்டு வேறொரு பெண் பின்னால் போனான் பொன்னம்மாள் படித்தவளல்ல இருந்த சொந்தபந்தங்களும் வசதி படைத்தவர்கள் அல்ல. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மனம் ஒடிந்து போனாள். நல்ல வேளை . உலகில் நல்லவர்கள் சிலரும் இருக்கிறார்கள். இவளுக்கு அடைக்கலம் கொடுத்து தைரியமும் சொல்லி ஆதரவும் கொடுத்தார்கள்..தனி ஒருத்தியாக நாலு இடங்களில் வேலை செய்து குழந்தைகளுக்கும் கூழோ கஞ்சியோ கொடுத்து வளர்த்தாள். அரசு பள்ளியில் சேர்த்து படிக்கவும் வைத்தாள். பிள்ளைகளும் பொறுப்போடு வளர்ந்தார்கள். இரண்டு பிள்ளைகளும் இரு வேறு துருவங்கள். இருந்தாலும் அன்னையை ஆராதிப்பவர்கள்  தந்தையின் பெயர் சொன்னாலேயே  வெறுப்பவர்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து ஏதோ கைவேலையும் கற்றுக் கொண்டார்கள் ஏதாவது சிறு வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முதலில் சிறு மளிகைக் கடை வைத்து நொடித்துப் போனார்கள். கைபேசியின் வேலைப்பாடுகளைக் கற்றுக்கொண்டு ஒரு சிறு கடை வைத்தார்கள். அண்ணனும் தம்பியும் அணுகு முறையில் வேறுபாடு கொண்டவர்கள். அந்தக் கடையும் நஷ்டத்தில் இயங்கி சில ஆயிரம் ரூபாய்களுக்கு வேட்டு வைத்தது பொன்னம்மாள் காலையில் இருந்து இரவு பத்துமணிவரை வெவ்வேறு இடங்களில் பத்துப்பாத்திரம் தேய்த்து, வீடு பெருக்கிக் கூட்டி, துணி துவைத்து  பிள்ளைகள் சிரமம் அனுபவிக்காமல் இருக்க வேலை செய்து ஓடாய்ப் போனாள்.

 

தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று பலரது தயவால் மூத்தவன் வளைகுடாப் பகுதிக்கு பணி செய்யச் சென்றான். இளையவன் பொன்னம்மாள் வேலை செய்யும் ஒருவர் சிபாரிசால் ஒரு இடத்தில் பணிக்கு அமர்ந்தான்.

 

உடம்புக்கு முடியாவிட்டாலும் பொன்னம்மாள் ஐந்தாறு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல வீடுகளுக்கும் நடந்தே போய் வேலை செய்து வருவாள்.வீட்டில் கஞ்சியோ கூழோ குடித்துப் புறப்பட்டால் வேலை செய்யும் வீடுகளில் கொடுப்பதைக் கொண்டு தன் வயிற்றுப்பாட்டை கவனித்துக் கொள்வாள். இப்படியெல்லாம் உழைத்து கிடைத்த சம்பாத்த்யத்தில் அரசு  மானியமாகக் கொடுத்த இடத்தில் ஒரு வீடும் கட்டினாள். மூத்தவனுக்குத் திருமணம் செய்ய ஆசைப் பட்டு அவனை வரவழைத்தாள். வந்தவன் தாய்படும் துயரத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டி அவளை வேலைக்குச் செல்வதைக் குறைத்துக் கொள்ளச் சொன்னான் இவளுக்கோ பயம் வேலை செய்து வரும் வருமானம் நின்றுவிட்டால் , ஒருவேளை பிள்ளைகள் உதாசீனப் படுத்திவிட்டால்....இளையவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தவர்கள்தான் இவளை சக்கையாய்ப் பிழிந்தார்கள் அந்த வீட்டு வேலையை இவளும் விட நிறையவே யோசனை செய்தாள். விடாப்பிடியாக அங்கு இவள் தொடர்ந்து வேலை செய்வதைக் கண்டவர்கள் இவள் அவர்களிடம் பெரிய கடன்பட்டு இருப்பதாகவும் அதனால்தான் வேலையை விட முடிவதில்லை என்றும் சொல்லக் கேட்டவளுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து  தான் யாரிடமும் கடன் பெறவில்லை என்று  நிரூபிக்க வேலையை விட்டாள். அப்போதுதான் கதையின் ஆரம்பத்தில் கூறப்பட்ட மகனின் உரையாடல் நிகழ்ந்தது நல்ல வேளை இளையவன் பயந்த்ததுபோல் அவனது வேலைக்கு பங்கம் வரவில்லை.கிடைப்பதை வைத்து குடும்பம் நடத்துகிறாள். பிள்ளைகளும் தாயை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். இதுவரை சரி. பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்னும் ஆசையுடன் கூடவே அதற்குப் பின் தன் வாழ்க்கை எப்படியாகுமோ என்னும் கவலையும் கூடவே இருக்கிறது. இதுதான் வாழ்க்கையின் நிதரிசன உண்மையா.?

 ( எந்த ஜோடனையும் இல்லாமல் ஒரு சிறுகதை எழுத நினைத்தேன் சிலரது வாழ்வில் காணும் நிகழ்வுகள் கதையாகிவிட்டது.).

 

 


சனி, 22 மே, 2021

நான் வீழ்ந்தேனென்று நினைத்தாயோ

 

 

உனக்கு ஏனோ இந்த அவசரம்

கேட்க ஆளில்லை  என்றால்  எதுவும் எழுதலாமா

அஞ்சலியாம் அஞ்சலி ஓரிரு நாட்கள்

பொறுக்க முடிய வில்லையா மனிதரானால்

இத்தனை சீக்கிரம் அஞ்சலி சொல்வாயா

செடிதானே பூதானேஅத்தனை சீக்கிரம்

விழுமென்று நினைத்தாயோ ஓராண்டுகாலம்

காத்திருந்த நீ  அவசரப்படலாமா

மண்ணின் அடியில் என்ன நிகழ்கிற்தென்று நீ அறிவாயா

நான் வீழவில்லை எழுந்து விட்டேன்  என்ன சற்று தாமதமாயிற்று 

இயற்கையின்நியதி எல்லாம் அறிந்தவனா

பள்ளியில்படித்ததுமறந்து விட்டதா கற்றது கை

மண்ணள்வு நீ அறியாயோ எல்லாம் தெரிந்தவன்போலநினைப்பு 


                                                ஒரு மொட்டு விரிய காத்திருக்கிற்து


                           இன்னொன்று 




    


செவ்வாய், 18 மே, 2021

மலரே மலரேஒரு அஞ்சலி



 

மே மாதம் வந்தால் நான் எதிர் நோக்கும் மலர் ஃபுட்பால் லில்லி எனும் பூ தான்ஆண்டுதோறும் பூத்துமகிழ்விக்கும் மலர் இந்த ஆண்டு தலைகாட்டாததுபூக்களுக்கும்  கோரோனா வந்து மடிந்து விட்டதோஎன்று நினைக்கத் தோன்றுகிறது மாடி வீட்டுநண்பர்  அனுப்பிய காணொளி இணைக்கிறேன் சில மலர்க்ள்  நினைவலைகளஎழுப்புகின்ற்ன   

 தெச்சி மந்தாரம்துளசி பிச்சக மாலைகள் சார்த்தி குருவாயூரப்பா நின்னே கணி காணேண்ம் தெச்சி எனப்படும் பூவை நினைத்தால் மறைந்த  நண்பர் தி தமிழ் இள்ங்கோ நினைவுக்கு  வருகிறார் தெச்சிப்பூவை  இட்லி பூஎன்பார்


ஒரு அஞ்சலி 

மலரே மலரேமௌனமேன்   

தலை வணங்கி வருவோரை  வரவேற்பாய் 

 இக்காலத்தில்

யார்தான்  வருகிறார்கள் வரவேற்க

கந்தசாமி ஐயா தில்லையகத்து கீதா இன்னும்

பலருக்கும் புரியும்  இப்புலம்பல்

ஆண்டு தோறும் மே மாதம் மலரும் உன் பெயர்

தெரியாது தவித்தபொது கீதாமதிவாணன்

தான் உன்  பெயர் ஃபுட்பால் லில்லி என்று கண்டறிந்து சொன்னர்

மலரே மலரே

மௌனமேன் நீதலை வணங்கி வறவேற்கும்அழகை  உன்னை

காட்டி மகிழ்ந்தேன்அந்த மகிழ்ச்சி இனி வருமோ

கோரொனா உன்னையும்  காவு வாங்கி விட்டதோ

மலரே நீஏன்  மௌனமாய்  இருக்கிறாய் புரிகிறது 

இந்த ஆண்டு நீதான் ஜனிக்கவில்லையே எப்படி 

மரணித்து இருக்க முடியும் 




 







  

வெள்ளி, 14 மே, 2021

அடையாளபடுத்தப்படாதசில கடவுளுருவஙகள் என் ஓவியங்களிலிருந்து






















அடையாளங்கள்

ஒவ்வொருவருக்கும்  ஒரு அடையாளம்   உண்டுமனிதருக்கே அடையாளம் இருக்கும்போது  அவன் படைத்தகடவுளருக்கு இல்லாதிருக்குமா

  
ஒருவரை ஒருவர் நினைவில் வைத்துக்கொள்ள உதவுவதே இந்த அடையாளங்கள்தான் எனக்கு அவ்வப்போது ஒரு சந்தேகம் வரும்.பறவைகள் மற்றும் சில விலங்குகள் என் கண்ணுக்கு ஒரே மாதிரி தெரிகிறது. அவை ஒன்றை ஒன்று எவ்வாறு இனங்கண்டுகொள்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் கருப்பினத்தோர் சட்டெனப் பார்த்தால் ஒரே மாதிரி தெரிகிறார்கள். சுருட்டை முடி, கறுப்பு நிறம் பெரிய உதடுகள் இன்னபிற features அவர்களை ஒரே மாதிரி காட்டுகிறதோ என்னவோ.அதேபோல் நம் இந்தியாவிலும் சில பிராந்தியக் காரர்களுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. நடை உடை பாவனைகளை வைத்து அடையாளம் காணலாம்சிலர் ஆங்கிலம் பேசும்போது அவர்களை இன்னார் என்று தெரிந்து கொள்ள்முடியு ம்

இந்த இயற்கை அடையாளங்கள் தவிர தங்களை வித்தியாசமாகக் காட்டி தங்கள் அடையாளத்தை பறை சாற்றுவார்கள். வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா, வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவி ஷங்கர். பாப் பாடகி உஷா உதுப், போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டு. நெற்றியில் விபூதி அல்லது நாமம் உடலெங்கும் சந்தணத் தீட்டுகள் தலையில் வைக்கும் குல்லா, அல்லது தலைக்கட்டு போன்றவை அவர்கள் சார்ந்திருக்கும் மதம் அல்லது ஜாதி அல்லது பிரிவு போன்ற வற்றை அடையாளம் காட்டும்  பிராம்மண குடும்பங்கள் சிலவற்றில் பெரியோரிடம் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளும்போது  ”அபிவாதயே சொல்லி ஆசிவாங்குவார்கள். தான் இன்ன குலத்தில் இன்ன கோத்திரத்தில் இன்ன ரிஷியின் பரம்பரையில் வந்த இன்னாரின் பேரன் , இன்னாரின் புத்திரன் என்று சொல்வதுபோல் அமைந்திருக்கும். ஊரின் பெயர் , தந்தையின் பெயர் போன்றவற்றின் முதல் எழுத்தை இனிஷியலாக வைப்பார்கள். கேரளத்தில் இன்ன வீட்டைச் சார்ந்தவர் என்று அறிமுகப் படுத்துவர்.

 

 

 

 

 

 









 

வியாழன், 13 மே, 2021

ஒரு மீள் பதிவு

/



                                                 

அம்மாவும் குழந்தைகளும்


                                                 அம்மாவும் குழந்தைகளும்
                                                           காணொளிகள்
                                                            ---------------------
 என்ன நண்பர்களே காணொளிகளை ரசித்தீர்களா? நான் எதுவும் கூறப் போவதில்லை.




புதன், 12 மே, 2021

கோவிட்டும் அது சார்ந்த எண்ண்ங்க ளூம்

  

இந்த கோவிட் பற்றி என்னநினைப்பதுஅரசு தடுப்பூசி போட்டுக்கொள்ளசொல்கிறது  ஊசி போட்டுக் கொண்டால்  தொற்று வராது என்னும்  நம்பிக்கைதானேஇன்னும்பலருக்கு கடவுளிடம்  பாரத்தைபோடுவதில்நம்பிக்கை நம்பிக்கையால் பயம் இல்லாமல் இருக்கிறார்களாஅறிந்தவர் அறியாதவர் என்றுபலரும் போய்விட்டார்கள் இற்ப்பு  தடுக்க முடியுமா தவிர்க்க முடியாததற்கு ஏன்  பயம்,.....   பயமெல்லாம்  நம்  கூட இருப்பவர் எப்படி  எதிர் கொள்வார்கள் என்பதுதான் அதுவும்சிச்சைக்காகும்செலவேகண்ணை கட்டுகிறது செலவு எல்லாம் செய்யும்நிலையில்  இருப்பவர்க்கு பரவாயில்லையாய்  இருக்கலாம் வரும்படி இல்லாதவர்  என்ன செய்வது  ஆயிரக் கணக்குக்கும்   லட்சக்கணக்குக்கும் எங்குபோவதுவருவாயே இல்லாத எம்போன்றோர் என்ன செய்வது மடிவதேமேல் எனத் தோன்றுகிறதுசெய்யும் செலவை ஈடு கட்ட முடியுமாநம்மை ஓரளவு பராமரிக்க  நாம் பெற்றதுகளை எதிர்பார்க்கலாம்ஆனால் அதற் காக அதிகம் பாரமேற்றுதல்சரியா எது எப்ப்;டியொ இந்த தொற்றுமனங்ககளில்நிறையவே மாற்றங்களை ஏற்படுத்தி  இருக்கிறது இந்த நம்பிக்கைகளை என்ன் வென்று சொல்ல  இருட்டில் நடப்பவன்;அவன் பயம் போக்க சீழ்க்கை  அடித்து செல்வதுபொல  எல்லா பாரமும் அவ்னுக்கே  என்பதுபோல் நினைக்கும் மக்களை என்னவென்று சொல்ல அவர் களுக்கு  நிச்சயம்  தெரியும் பாரம் சுமப்ப்;வன் அவனல்லநாம்தான்  சுமக்க வேண்டும் எத்தனை  எத்தனை பேர்இப்படி இருக்கிறர்கள்பதிவுக்ளில் தினமும் அவன் மேல் பாரம் பொடுபவர்களை காண்கிறோம் பயமே எல்லாவற்றுக்கும்காரணம்அவர்களுக்கு  தெரியாததாபறவைகள்ட்காரும்போது  மரத்தின் கிளைகளின்பலத்தை விட தம்  சிறகுகளையே  அதிகம் நம்புமாம்

இனி கோவிட்பற்றிய் சில சந்ச்தேகக்கள் ரெம்டெசிவ்ர் ஊசி என்ன  மருந்தா3000  ரூ பாய்க்கு   விற்கிற்தாமேதடுப்பூசி போட்டால்இவர்கள் செய்யும்  தொற்று  வரக்கூடாது அல்லவாநம்பிக்கை இருப்பப்வருக்கு  தொற்று வராதா  நான் மரணிக்க அஞ்சவில்லைநிறைவான வாழ்க்கைவாழ்ந்தாகி  விட்டது என் உயிர்பறவை ஓசைப்படாமல் யாருக்கும் இன்னல் தராமல்என்  உயிர்க்கூட்டை  விட்டு  பிரிய  வெண்டும்








 

புதன், 5 மே, 2021

ஒரு தேர்தல்முடிவுகள்

 

அப்பாடா ஒருதேர்தல் நடந்து முடிந்து விட்டது தேர்தல் முடிவுக்ள் ஒரு விததி\ல் மகிழ்ச்சிதருகிறது தமிழகத்திலெந்தகட்சி வந்ததாலும் ஒரு போல்தான்ஒரே  குட்டையில் ஊறிய மட்டைக்ள்ஒரு மாற்றம்  அவ்வளவுதான் வங்காள தேர்தல்  முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது அரச்யலில் டெர்ன் கோட்டுகள் turn coatsஅடையாளம் கண்டுகொள்ளப்;பட்டனர்200 தொகுதிகளுக்குமேல் என்றனர் தமிழ் நாட்டில். 234 தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் ஆனால் வஙகத்தில்எட்டு  நாட்களாம் தேர்தல் கமிஷன் இவர்கள் கையில் ஆட்டுவித்தபடிக் ஆட குழம்பிய குட்டையில்  மீன்பிடிப்பது போல் அதிருப்தியாளகளை  தங்கள்வசம்  இழுத்து கொண்டனர் இந்த சுவேந்து  அதிகாரியை மம்தாவுடன்  நந்தி கிராமில்    போராடியவர் தக்க்ள்பக்கம் இழுத்துக்கொண்டனவ்ர்  மம்தாதோல்வி அடைந்தார்ஆனால்  திர்னமுல் காங்கிரஸ்வெற்றி  பெற்றது  வங்காளிகள்வென்றனர் சென்ற தேர்தலை விட அதிக இடங்களுடன்   மோதியும்ஷாவும்வங்காளமே கதி என்றிருந்தனர்இவர்கள்  இந்தியாவுக்கே பொது என்பதைமறந்து நாட்டின்முக்கிய பிரச்சனைகள்மறக்கப் பட்டன வங்காள்வெற்றியேகவனத்தில் இருந்தது  வங்காளிகள்இவர்கள் முகத்தில் கரி பூசி விட்டனர்