Wednesday, September 19, 2012

வாழ்ந்தே தீருவேன் -(-3 )


                                 வாழ்ந்தே தீருவேன் --( 3 )
                        
                             A PLAY FROM.G.M.BALASUBRAMANIAM  காட்சி5
இடந்- பூங்கா
பாத்திரங்கள்-மாலா, மோஹன், ராஜு.
( திரை உயரும்போது மாலா மோஹனுக்காகக் காத்திருக்கிறாள் )


மாலா:- ( தனக்குத்தானே ) சேச்சே..! மேனேஜர் வேலை வேலை கிடைச்சாலும் கிடைச்சது, இவருக்காக நான் காத்திருப்பதே வேலையாய் விட்டது. வரட்டும் வரட்டும்,வந்ததும் என்னமாச் சண்டை பிடிக்கப் போகிறேன் பார். ( கைக் கடிகாரம் பார்த்து அலுத்துக் கொள்கிறாள்..மோஹன் பின்னால் வந்து விசில் சப்திக்கிறான். அவள் திரும்பிப் பார்க்கிறாள். )

மோஹன்:- ஹாய்... டார்லிங்...!எங்கெங்கோ பார்க்கிறாயே... நாந்தான் உன் பின்னாலேயே இருக்கிறேனே.

மாலா:- போங்க மோஹன். வர வர உங்களுக்கு எம்மேல இருக்கிற இதுவே போயிடுத்து.

மோஹன்:- இதுவேன்னா எது..?

மாலா.:- அதுதான் இது...

மோஹன்:- லவ்வா..?

மாலா:- யார் கண்டா.. அக்கறையும் பிடிப்பும் குறையறதப் பார்த்தா அதுவு குறையுதோ என்னவோ...

மோஹன்:- மாலா எது குறஞ்சாலும் உம்மேல இருக்கிற இது மட்டும் குறையாது.

மாலா:- இதுன்னா எதுவாம்..!

மோஹன்:- அதுதான் இது...

மாலா:- லவ்வா.. ?


மோஹன்:- லவ்வோ, பிடிப்போ, அக்கறையோ எது வேணா நெனச்சுக்கோ, மோஹனுக்கு மாலாவிடம் உள்ள மோஹம் மட்டும் குறையாது. மோஹனின் மோஹத்தைப் பார்க்கணுமா..( அருகில் இழுக்க அவள் நாணி விலகுகிறாள் )

மாலா,:- நீங்க வந்ததும் உங்ககிட்ட சண்டை போடணும்னுதான் நெனச்சிட்டிருந்தேன். நீங்க வந்ததும், உங்களைப் பார்த்ததும், மோஹனின் மோஹத்தைக் கண்டதும்,, என்னையே நான் உங்ககிட்ட இழந்திருக்கிறதத் தான் உணர்ரேன்.

மோஹன்:- மாலா, கனவிலும் நெனவிலும் என் மனசுல ஆதிக்கம் செலுத்தறவ நீ.. நீ எங்கிட்ட உன்னை இழந்திருக்கியா இல்லை நான் என்னை உங்கிட்ட இழந்திருக்கேனா ஒண்ணும் புரியலை.

மாலா: - கனவிலும் என்னை நீங்க பார்க்கறீங்களா...?கனவில் வரும் நான் எப்படி இருக்கேன். .?

மோஹன்:- ஏன்.... இப்படித்தான்...

மாலா:- இப்படித்தான்னா ..எப்படி... சொல்லுங்களேன்.

மோஹன்:-ஆஹா....! உன்னை வர்ணிக்கச் சொல்கிறாயா... நான் உள்ளதை உள்ளபடி சொன்னால் எனக்கு என்ன தருவீர்கள் மிஸ் மாலா.

மாலா:- போங்க மோஹன்... என்றைக்கும் இல்லாமல் மிஸ்ஸும் கிஸ்ஸும் வெச்சுக் கூப்பிடறீங்களே....

மோஹன்: -மிஸ் வெச்சுக் கூப்பிட்டேனே தவிர கிஸ் வெச்சுக் கூப்பிட்டேனா...

மாலா:- போங்க மோஹன். கனவைக் கேட்டா என்னென்னவோ பேசிக் கொண்டு.....

மோஹன்:- சரி மாலா... கனவில வந்த மாலா என்ன தந்தாளோ அதையே நீயும் தர வேணும்.

மாலா:- எது வேண்டுமானாலும் தருவேன் மோஹன். என்னையே உங்களுக்குத் தர நான் சித்த மாயிருக்கிறேன்.

மோஹன்:- டார்லிங்  எனக்குச் சற்று அவகாசம் கொடு. LET ME GET INTO THE MOOD OF MY DREAM AND THE GIRL. …YES..! நிலவைப் பழிக்கும் முகம், அதில் நினைவைப் பதிக்கும் கண்கள், நிலமடந்தை நாணும் எழில், முத்துச்சரம் விரித்த முல்லைச் சிரிப்பு, கமலமலர் செவ்விதழ் விரிப்பு,படர்கொடி வெல்லும் துடியிடை, என் இடர் சேர்க்க இடையிடையாட, மென்னடை நடந்தென் முன் நின்றாள் நிற்கின்றாள் , இன்பக் கனவினை நனவாக்க யெண்ணி- வந்த கற்பனைக் கண்கண்ட கன்னி.
கண்ட கனவு நினைவாக இன்று என் முன் நிற்கும் காரிகையே ..மாலா..உன்னை அழைக்கின்றேன், அன்புக் கயிற்றால் பிணைக்கின்றேன், கண்ணே கட்டும் பிணைப்பும் பிரியாது உறுதி ( கூறிக் கொண்டே  மெய்மறந்து அணைக்க , அணைப்பினில் சில வினாடிகள் கழிய முதலில் தன்னிலை வரப் பெற்ற )

மாலா:- அடடே... நேரம் போனதே தெரியவில்லை. அப்பாவும் அண்ணாவும் காத்திருப்பார்கள். லேட்டானால் அண்ணா கோபிப்பான். நான் வரேன்.... டாட்டா...!
( மோஹனும் மாலாவும் பிரிய , ராஜு மாலாவின் முன் எதிர்படுகிறான்.)

ராஜு :- மாலா  நீ நடந்து கொள்ளும்முறை உனக்கே சரியாகத் தோன்றுகிறதா..? மாறுபட்ட சூழ்நிலையில் ஒரு பெண் சுதந்திரமாக வளர்ந்தாலும் பெண்மையின் வாழ்க்கை ஒழுங்குகளே தனி., வட்டத்தைப் போல் அழகானவை. சதுரமாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது தவறு.

மாலா:- போதும் நிறுத்துங்க அண்ணா... !ஏதோ தகாத காரியத்தை நான் செய்து விட்டதுபோல பிரலாபிக்கிறீங்களே. ஆணும் பெண்ணும் மனம் இணைந்து பழகறதும் சேருவதும் தவறா.?

ராஜு:- அது அப்படிப் பழகும் ஆணையும் பெண்ணையும் பொறுத்தது. அழகு நிறைந்த சந்ததியினரும் வேறுபாடுகளில்லாத சமூக உறவும் வளர்வதற்கு நேர்மையான காதல் திருமணங்கள் பெரிதும் உதவுகின்றன. வாஸ்தவம்தான். ஆனால் கணத்துக்குக் கணம் ஆசைகளும் விருப்பங்களும் மாறுபடும் சபல உணர்வு கொண்ட பெண்ணும், வாழ்வில் மாறிவரும் மதிப்புகளைப் புரிந்துகொள்ளாமல் பணத்தின் அடிப்படையிலும் காழ்ப்பின் அடிப்படையிலும் மாற்றம் காண விரும்பும் ஒரு ஆணும், சேருதல் நன்றா என்றுதான் கேட்கிறேன். சரி சரி பெரிய பிரச்சனைகளை அணுகும் இடமும் சந்தர்ப்பமும் இது அல்ல. வீட்டுக்கு வா போகலாம். பிறகு பேசிக் கொள்ளலாம்...

                                                                    ( திரை )   காட்சி6

இடம்- ரங்கதுரையின் பங்களா.
பாத்திரங்கள்- மாலா, ரங்கதுரை, ராஜு, மோஹன், டாக்டர்.
( திரை உயரும்போதுரங்கதுரை அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருக்கிறார். அவர் கண்களில் கலக்கம். டாக்டரை அழைத்துக் கொண்டு ராஜு வருகிறான்.)

ரங்க :-வாங்க டாக்டர்...!வாங்க...!காலையிலேயிருந்து என் பெண் மாலா ஒரேயடியா வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள். மயக்கமா இருப்பதாகவும் சொல்கிறாள். வந்து பாருங்கள் ப்ளீஸ்  இதோ இந்த அறையில்தான் இருக்கிறாள். ( டாக்டரை அழைத்துக் கொண்டு அறையில் விட்டுவிட்டு வெளியே வருகிறார்.) டாக்டர் எதுவும் பயங்கரமாச் சொல்லாம இருக்க வேண்டும்.ராஜு:- டாக்டர் என்ன சொல்வார்ன்னு என்னால் யூகிக்க முடியுது அப்பா.!அப்படி மட்டும் இருந்துட்டா  ஆஆஆஅ அப்படியே அவ்ளை.... ஹூம்.!

டாக்டர்:- ( உள்ளிருந்து வந்து கொண்டே)கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர் ரங்கதுரை.. சாதாரணமா பெண்களுக்கு வரும் மார்னிங் சிக்னஸ் தான். உங்கள் பெண் தாயாகப்போறா. அவளுக்கு நல்ல ஓய்வும் ஊட்டமுமான உணவும் தேவை.இந்த டானிக்குகளை வாங்கிக் கொடுங்க. நான் வரேன்...

ரங்க:- ( திடுக்கிட்டு திக்பிரமையோடு நிற்கிறார், )டாக்டர்....டாக்டர்.... நீங்க சொல்றது உண்மையா டாக்டர்...?

ராஜு: - டாக்டர் ப்ளீஸ் கீப் திஸ் வெரி கான்ஃபிடென்ஷியல்.(டாக்டர் போகிறார்.)நான் நெனச்சது சரிதான். இதுக்குத்தான் படிச்சுப் படிச்சுச் சொன்னேன். கேட்டீங்களா..? இப்போ அவதிப் படறது யாரு...இந்த மாதிரி ஒரு தங்கச்சி இருந்தா என்ன.... செத்தா என்ன... இப்பவே அவளை ஒரு வழியாத் தீர்த்துடறேன்.  மாலா.... மாலா.... !

ரங்க:- ராஜு...! ஆத்திரத்தில் அறிவிழக்காதே. தவறு நடந்துடுத்து. We must try to do the best out of the worst situation… அவளை கூப்பிடு . நான் விசாரிக்கிறேன்.

ராஜி:- மாலா..... கூப்பிடறது காதிலெ விழலை...? வா... இப்படி.. !

ரங்க:- மாலா.... என்னம்மாஇது.... டாக்டர் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டுப் போறாரே...!உண்மையாம்மா....? எனக்கு எப்படி உங்கிட்டக் கேக்கறதுன்னு விளங்களையேம்மா.. தாயார் இல்லாத குறை தெரியாம இருக்க , உன்னை ஒரு ஆணைப் போல வளர்த்தேனே. என் நம்பிக்கை, மானம் மரியாதை எல்லாம் தவிடு பொடியாகி விட்டதேம்மா...மாலா... இதன் விளைவு உனக்குத் தெரிகிறதாம்மா...?

ராஜு:- அப்பா கேட்டுட்டே இருக்கார், நீ பாட்டுக்கு நீலிக் கண்ணீர் வடிச்சிட்டிருந்தா என்ன அர்த்தம். ...சொல்.. மாலா... சொல்..! உன்னைக் கெடுத்தக் கயவன் யார்..?யார்.. மாலா யார்.. அந்த மோஹன் தானே....!

மாலா.:- அவரைக் கயவர்னு நீங்க சொல்லத் தேவை இல்லை.. அவர் என்னைக் கை விட மாட்டார். எனக்கு நல்லாத் தெரியும்

ராஜு: - கயவனில்லையா... நான் அப்படிச் சொல்லக் கூடாதா ? என்ன தைரியமிருந்தா  தவறு செய்யறதையும் செய்திட்டு எதிர்த்து வேறப் பேசறே.( அவளை அடிக்கக் கையை ஓங்க, அவனைத் தடுத்து )

ரங்க :- ராஜு... இப்பதானே சொன்னேன்.. ஆத்திரப் படாதேன்னு.. மாலா.. ! மோஹனுக்குத் தெரியுமாம்மா, உன்னோட இந்த நிலைமை...?

மாலா.: - தெரியாதுப்பா.. தெரிஞ்சாலும் என்னை ஏத்துக்க அவர் தயங்க மாட்டார் அப்பா. .!

ராஜு.:- ஷட் அப்..! நீ பேசாதே... அப்பா எனக்கு ஒண்ணு தோணுது. அவனுக்கும் இவள் மேல ஒரு கண். இவளை கலியாணம் செய்துக்க விருப்பமான்னு கேட்போம். விஷயத்தை விளக்க வேண்டாம் விஷயம் தெரிஞ்சா ஒரு சமயம் மணக்க ஒத்துக்க மாட்டான். அவனை அவன் வழியிலேயே மடக்கணும். மாலா...! நீயும் அவனிடம் இது பற்றி ஏதும் பேசாதே...!பிறகு பார்த்துக் கொள்ளலாம்...

ரங்க: - அதுதான் சரின்னு எனக்கும் தோணறது. போ ..மாலா.. போ .. ஓய்வெடுத்துக் கொள்..இந்த நிலை உனக்கு வந்திருக்கத் தேவை இல்லை. ஹூம்...! மோஹனும் வர நேரம்தான்.. அவனையும் கேட்போம்.

மோஹன்:- ( வந்துகொண்டே )அதுதான் வந்திட்டேனே .என்ன கேட்கப் போறீங்க...? என்ன பதிலை எதிர் பார்க்கறீங்க....?

ரங்க:- இல்லை மோஹன்.... எங்கள் மாலாவின் திருமண விஷயமாப் பேசிண்டிருந்தோம்.. நான் மாலாவை உங்களுக்குத் திரு மணம் செய்து வைக்கலாம்னு சொன்னேன். அதற்கு ராஜு நீங்க ஒப்புக் கொள்வீங்களோ என்னவோன்னு சொன்னான். நீங்க வர நேரம்தான் உங்களையே கேட்டுடலாம்னேன். மிஸ்டர் மோஹன் எங்கள் மாலாவை திருமணம் செய்துக்க விருப்பமா..?

மோஹன் :- போங்க சார், இதையெல்லாம் எங்கிட்டக் கேட்கணுமா. பெரியவங்க நீங்க பார்த்துச் சொன்னா நான் மறுக்கவாப் போறேன்.

ராஜு :- உங்களுக்கு இந்தத் திருமணத்தில் எந்த ஆட்சேபணையும் இல்லையே.....

மோஹன்.: - கரும்பு தின்னக் கூலியா.... இந்த ராஜுவுக்கு என் மேல் எப்பவும் எதிலும் நம்பிக்கை இல்லை ... மாமா...!

ரங்க :- ஹாங்.......! ராஜு  அப்ப உடனடியாகக் கலியாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்கணும்.. இல்லையா மிஸ்டர்... ஹாங்... மாப்பிள்ளை..!

                                                                                     (திரை).
  


 
   

      

8 comments:

 1. கதையின் நாடக நடை அருமை..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. மிக அருமையான கதை.......பகிர்வுக்கு நன்றி.......

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 3. நல்லா கதை சொல்லறிங்க..மென் மேலும் நிறைய கதை எழுத என் வாழ்த்துக்கள்...

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  ReplyDelete
 4. மாலா மோஹன் திருமணம் நடைபெறுமா?
  வேறு முடிவு வைத்து இருக்கிறீர்களா?
  நாடகத்தை நேரே பார்ப்பது போல் உள்ளது.

  ReplyDelete

 5. @ இராஜராஜேஸ்வரி உற்சாகமூட்டும் கருத்துக்கு நன்றி. இரண்டு முறை மேடையேற்றிய நாடகம் இது.திருச்சி பீ எச் இ எல் கம்யூனிடி ஹாலில் 1973-ம் வருடம் ஃபெப்ருவரி 22-ம் நாள் நாடகப் போட்டிக்காக இயக்கப் பட்டது . எனக்குப் போட்டியில் பரிசு வாங்கித் தந்த நாடகம்.
  @ ஈசி ப்ரியா
  @ தமிழ் காமெடி உலகம்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  @ கோமதி அரசு. ஒன்றரை மணி நேர போட்டி நாடகம் . அதில் எல்லா விஷயங்களையும் காட்ட முடியாது. ஊன்றிப் படித்தீர்கள் என்றால் கடைசியில் மோஹன் ரங்கதுரை உரையாடல் அவர்களது மோஹன் மாலா திருமணம் நடக்கும் என்று சொல்லாமல் சொல்லும். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 6. காதல் வசனங்கள் பிரமாதம். கடைசியில் ஏதாவது திருப்பம் இருக்குமோ என்று எதிர்பார்த்தேன் - சுபமான சுபமும் இனிமையாகவே இருக்கிறது. நாடகத்தில் மேற்கோளாக வரும் உரையாசிரியர், கவிஞர்... டாப்பு.

  ReplyDelete

 7. @ அப்பாதுரை.:உற்சாகமூட்டும் கருத்துக்கு நன்றி,திருப்பங்கள் எதிர்பாரா முடிவுகள் எல்லாம் நிறைந்ததே இந்த நாடகம். என்ன... முழுவதும் படிக்க வேண்டும். அதுவும் சிரமமில்லை. சிறிய நாடகம். ஐந்தே பதிவுகளில். மீண்டும் நன்றி.

  ReplyDelete
 8. நாடகம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். இல்லையா?

  ReplyDelete