வியாழன், 6 செப்டம்பர், 2012

இது எப்படி இருக்கு.?


                                              இது எப்படி இருக்கு. ?
                                              ---------------------------


இரண்டு நண்பர்கள்.ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டவர்கள். எல்லா காரியங்களும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஏற்கனவே விதியால் தீர்மானிக்கப் பட்டு எல்லாம் அதன்படிதான் நடக்கிறது என்று நம்புபவன் ஒருவன். இல்லை விதி என்று ஏதும் கிடையாது. நம்மால் முடியாத பல செயல்களுக்கு விதியைக் குறை கூறி தப்பித்துக் கொள்ளும் மனோபாவமே விதியைத் துணைக்கழைக்கும், விதிமேல் பழி போடும் என்று நம்புபவன் ஒருவன்.

இருவரும் சாலை வழியே நடந்து சென்று கொண்டிருக்கும் போது,அவர்கள் கண் முன்னே ஒரு விபத்து நிகழ்கிறது. மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவன் சாலையை கடக்க முயன்று கொண்டிருந்த ஒருவர் மேல் இடித்து விடுகிறான். அடிபட்டவர் கீழே விழுந்து ரத்தக் காயங்களுடன் மயக்கமாகி விழுகிறார். சாலையில் சென்று கொண்டிருந்த பலரும் கூட்டம் கூடி வேடிக்கை பார்க்கத் துவங்குகிறார்கள். நம் இரு நண்பர்களில் எல்லாம் விதிப்படி நடக்கும் என்பவனும் வேடிக்கை பார்க்கத் துவங்குகிறான். ஆனால் மற்றவன் பதறிப் போய் அடிபட்டு விழுந்து கிடப்பவனுக்கு முதல் உதவி செய்து, ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் அவனை ஏற்றிக் கொண்டு போய் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறான். அடிபட்டு விழுந்தவன் பாக்கெட்டில் இருந்து கிடைத்த விலாசத்திலிருந்து அவனது உறவினர்களுக்கு செய்தி அனுப்பி அவர்கள் வரும் வரைக் காத்திருந்து அவனது உதவி மேலும் தேவைப் பட்டால் கூப்பிடும் படியும் கூறிவிட்டு விடை பெறுகிறான்

எல்லாம் முடிந்து வெளியே வந்ததும் அவனது நண்பனை மிகவும் கடிந்து கொண்டான். சரியான நேரத்தில் என் உதவி கிடைத்ததால் விபத்துக்குள்ளானவன் பிழைத்துக் கொண்டான். கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் நீ நடந்து கொண்டது சரியில்லை.

“ உன்னால் பிழைத்துக் கொண்டான் என்று எண்ணுகிறாயா.?

“ நிச்சயமாக. என்னால் என்று சொல்வதை விட சமயத்தில் கிடைத்த உதவியால் என்று கூறலாம்.

எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்கும். அவனுக்கு விபத்து நேரவேண்டும் என்பது விதி. எல்லோரும் வேடிக்கை பார்க்கும்போது நீ அவனுக்கு உதவி செய்யவேண்டும் என்பதும் விதி. அதைவிட்டு விட்டு உன்னால் தான் அவன் பிழைத்துக் கொண்டான் என்று உன்னை எண்ண வைப்பதும் விதி “

இது எப்படி இருக்கு.?உங்கள் கருத்து என்ன.?
-----------------------------------------

அடுத்து ஒரு “ A “ ஜோக்
-----------------------.

வசதி உள்ள அமெரிக்கன் ஒருவன் வார இறுதி நாட்களை அருகில் இருக்கும் தீவுக்குச் சென்று GOLF விளையாடி பொழுதை கழிப்பான். ஒரு நாள் அவனுடன் விளையாட அங்கிருந்த பூர்வ குடியினரில் சிலரை அழைத்திருந்தான். GOLF விளையாட்டில் மைதானத்தில் இருக்கும் குழிக்குள் பந்து விழும்படி அடிக்க வேண்டும். ஒரு முறை இவன் அடித்த பந்து ஒரு குழிக்குள் விழ இவனுடன் ஆடிய சிலர் “ போரே...போரே “ என்று கத்தினார்கள். இவன் அதை சட்டை செய்யாமல் தொடர்ந்து ஆடினான்.

ஆட்டம் முடிந்த அன்று மாலை அவன் அறையில்  மது, உணவு அருந்தி , ஒரு பூர்வ குடி மாதுடன் பொழுதை கழித்தான் அவனும் அவளும் இன்பமாக இருக்கும்போது அவள் திடீர் என்று “ போரே போரே : என்று கூவினாள். மதுவின் மயக்கத்தில் இருந்த அவன் சற்றே தலை தூக்கி பிறகு உறங்கிப் போனான்.

மறு நாள் GOLF  ஆட்டம் ஆடும்போது அவனுக்கு மைதானத்தில் சிலர் போரே போரே என்று கத்தியதும் இரவு அவனது அறையில் அந்த பூர்வ குடிப் பெண் போரே போரே என்று கத்தியதும் நினைவுக்கு வந்தது. அருகில் இருந்த நண்பர்களிடம்  “ போரே போரே என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டான்.அதற்கு அவர்கள் பூர்வ குடி மொழியில் “ போரே “ என்றால் தவறான குழி “ என்று அர்த்தம் என்றனர்.!.

இது எப்படி இருக்கு. ?
----------------- 

   அறிந்தவை தெரிந்தவை சில பல.

1.)      ஆங்கில மொழியில் ‘ I AM’ எனும் வாக்கியம்தான் மிகச் சிறிய முழுமையான வாக்கியம்..
2.)      THE QUICK BROWN FOX JUMPS OVER THE LAZY DOG” எனும் இந்த வாக்கியத்தில் ஆங்கிலத்தில் உள்ள எல்லா எழுத்துக்களும் இடம் பெற்றிருக்கிறது.
3.)      LETHOLOGICA “ எனும் வார்த்தை தெரிந்த வார்த்தை நினைவுக்கு வராமல் இருக்கும் நிலையைக் குறிக்கும்.
4.)      “ TYPEWRITER “ எனும் வார்த்தைதான் தட்டச்சில் ஒரெ வரிசையில் இருக்கும் எழுத்துக்களிலிருந்து உருவாக்க முடிந்த நீள வார்த்தை.
5.)      விலங்குகளில் குதிக்க முடியத ஒரே விலங்கு யானை.
6.) முதலையால் அதன் நாக்கை நீட்ட முடியாது. .அதன் உணவை சுவைத்து சாப்பிடமுடியாது (CHEW)
7.)      மனித உறுப்புகளில் எண்ணைப் பசை ஒட்டாத உறுப்பு நாக்கு.
8.)      பட்டாம்பூச்சிகள் கால்களினால் சுவைக்கின்றனவாம்
9.)      கண்களை மூடிக்கொண்டு தும்ம முடியாது.
10)      உடலில் அதிக பலமுள்ள தசை நாக்கு என்கிறார்கள்
-----------------------------------------------------
   













16 கருத்துகள்:

  1. 1) அறிவுள்ள முட்டாள்... !

    2) போரே போரே

    3) (அறிந்தவை தெரிந்தவை) பயன் தரும் தகவல்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஐயாவும் பல்சுவையாய் இடுகை எழுதியிருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. (எனக்கு அந்த 'A' ஜோக் மிகவும் பிடித்திருந்தது ஐயா..ஹிஹி!)

    பதிலளிநீக்கு
  3. இது நல்லாவே இருக்கு ஐயா.

    (நான் அந்த ஜோக்கைப் படிக்கவே இல்லைங்க)

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே சுவாரசியமா இருக்கு. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. மூன்றும் நன்றாக இருக்கிறது.அய்யா!
    ஆசிரியர் தின சிறப்புகவிதை என் தளத்தில் நேரம் கிடைத்தால் வருகை தரவும். மகிழ்ச்சிய்டைவேன்.
    YOUR BLOG'S NAME
    ஞாபகம் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  6. எழுபத்திரண்டில் ஏ யா ?

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  7. போரடிக்காத போரே.

    சுவையான தகவல்கள்.
    நன்றி GMB சார்

    பதிலளிநீக்கு

  8. I UNDERSTAND THAT PEOPLE PREFER ONLY LIGHT READINGS. பதிவினைப் படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி. @ சூரி சிவா, 72-அல்ல. இப்போது 74. ஏன் ‘ ஏ ‘ ஜோக் கூடாதா. அனுபவங்கள் பகிரப் படுகின்றன. அவ்வளவே.

    பதிலளிநீக்கு
  9. அறிந்தவை தெரிந்ததை
    மிக மிக அருமை
    அனைத்தும் அறியாததாகவே இருந்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு