( பல நாட்களுக்கு முன் நான் போட்ட நாடகங்கள் என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அவற்றில் ஒன்றை பதிவாக இ ட்டால் ர்ன்ன என்று தோன்றிய்து. உடனே செயல் படுத்துகிறேன். ”உன் தொடர் நாவலுக்கு கிடைத்த வரவேற்பு தெரிந்தும் இதைப் பதிவிட உனக்கு அசாத்திய துணிச்சல்தான்.” யாரோ முணுமுணுப்பது கேட்கிறது நான் போட்ட நாடகங்கள் பதிவுச் சுட்டி இதோ. http://gmbat1649.blogspot.in/2011/06/blog-post_09.html ) .
வாழ்ந்தே தீருவேன்.
------------------
( A
PLAY BY G.M.BALASUBRAMANIAM )
காட்சி – 1
இடம்- ரங்கதுரையின் பங்களா.
பாத்திரங்கள்- ரங்கதுரை, ராஜு, மாலா.
ராஜு,
...ராஜு... ..!
ராஜு:_
( உள்ளிருந்து குரல் கொடுக்கிறான்.)இதோ வந்திட்டேம்ப்பா. !
ராஜு:-
( வந்துகொண்டே )கூபுட்டீங்களாப்பா. ..
ரங்க:-
ஆமா ராஜு. ...உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னுதான் கூப்பிட்டேன். எனக்கும்
வயசாயிடுத்து. இந்தக் கம்பனி பொறுப்பை உங்கிட்ட ஒப்படச்சிட்டு, மாலாவுக்கும் ஒரு
கலியாணத்தைப் பண்ணி வச்சா நான் நிம்மதியா இருக்கலாம் பாரு.!
ராஜு:-
இப்பமட்டும் நீங்க நிம்மதியா இல்லையா
அப்பா. ?
ரங்க
:- அதுக்கில்லை ராஜு... காலா காலத்துல செய்ய வேண்டிய காரியங்களை செய்யறது என் கடமை
இல்லையா .?
மாலா:_
( வந்து கொண்டே ) அதையேதான் நானும் சொல்றேன்.மணி ஒன்பதடிச்சாச்சு. . காலா காலத்துல
செய்ய வேண்டிய காரியங்களில் சாப்பிடறது ஒண்ணு. அந்தக் கடமையெ மறக்கலாமா. ....!
ரங்க:-
இதோ வந்துட்டேம்மா.
ராஜு:-
அப்பா... JUST A MINUTE. Modern Engineering Works ல ஒரு டெண்டர் கால் ஃபார் பண்ணி யிருக்காங்க. நான்
கொடுக்கிற கொட்டேஷன்ஸ் எல்லாம் நீங்க ஒரு
க்ளான்ஸ் பார்த்து அப்ரூவ் பண்ணினா அவங்களுக்கு
சீக்கிரமே அனுப்பிடலாம்.
ரங்க:-
LOOK ராஜு! Hereafterwards you are the boss. இந்த மாதிரி
விஷயங்களிலெல்லாம் நீயே முடிவெடுக்கணும். நான் ஒதுங்கிக்கிறேன்.
ரங்க:-
என்னம்மா... நீ பாட்டுக்கு ஏதோ
முணுமுணூக்கிற
மாலா:-
இல்லையேப்பா... வந்து.....நான் ஒண்ணு கேப்பேன்.. கோவிச்சுக்காம ‘ உம்’ நு சொல்றீங்களா.
ரங்க:-
என்னம்மா பீடிகை எல்லாம் பலமாயிருக்கு. என்ன...ம்... சொல்லும்மா...
மாலா:-
அப்பா... எங்க காலேஜ் ஆண்டு விழால ஒரு நாடகம் நடத்தப் போறாங்க. என்னை ஹீரோயினா
நடிக்கக் கூப்பிடறாங்கப்பா... நான் சேரலாமாப்பா..!
ரங்க:-
இதுக்கெல்லாம் எங்கிட்டப் பெர்மிஷன் கேக்கணுமாம்மா. உனக்கு சேரணும்னு இருந்தா
‘ஜாம். ஜாம்’ நு சேர்ந்துக்கோ.
மாலா:-அப்பான்னா
அப்பாதான். தாங்யூ டாடி. ( உள்ளே
ஓடுகிறாள் ).
ராஜு:-
அப்பா.! இப்படி செல்லம் கொடுத்துத்தான் மாலா கெட்டுக் குட்டிச் சுவராகறா.
ரங்க:
-அவ நாடகத்துல நடிக்கிறது தப்புனு சொல்றயா ராஜு. ..
ராஜு:-
நிச்சயமா... சந்தேகமில்லாம தப்புத்தான். நாடகம்னா ஆண் பெண் எல்லாம் சேர்ந்து
நடிப்பாங்க.. இவ ஹீரோயின்னா ஹீரோ யாரோ...?
ரங்க:-
ஆணும் பெண்ணும் சரி சமம்னு நினக்கிற இந்தக் காலத்து ஆள் நீயா இதெல்லாம் தப்புன்னு
நினைக்கிறெ.
ராஜு:-
ஆணும் பெண்ணும் சமம்னு நினைக்கிறவந்தாம்பா நான். இருந்தாலும் பருவ காலத்து விகற்ப
உணச்சி இல்லாம பழகற ஒரு சமுதாயமா நாம இன்னும் மாறலையே அடுத்த பெண்ணை தாயாகவோ
சகோதரியாகவோ பாவிக்கும் பக்குவம் இன்னும் இந்த சமுதாயத்தில் மலரலையே. என்ன
இருந்தாலும் இங்க ஒரு பெண் சாதாரண வாழ்க்கையை சாதாரண முறையில் சாதாரணமாக வாழாதவரை,
இந்த சாமானுய சமுதாயம் அவளை ஒரு சாதாரணப் பெண்ணாக ஏற்றுக் கொள்வதில்லையே.
ரங்க:-
அடுத்தவர்கள் எப்படி யிருந்தால் நமக்கென்ன ராஜு.! மேலும் சமுதாயங்கறது நம்மைப்
போல் நாலு பேர் சேர்ந்து உருவாக்கறதுதானே. நாம் மாற ஆரம்பிச்சா இந்த சமுதாயம் தானா
மாறுது.
மாலா:-
( உள்ளிருந்து ) சாப்பாடு ஆறி அவலாகிறது. உங்க டிஸ்கஷன்களையெல்லாம்
சாப்பாட்டுக்குப் பிறகு வெச்சுக்கலாமே.
ரங்க:-
இதோ வந்திட்டேம்மா. !
(திரை )
காட்சி- 2
------
இடம்:- பூங்கா.
--------------
பாத்திரங்கள்- மாலா, மோஹன்.
( திரை உயரும்போது, மோஹன் மாலாவுக்காகக் காத்திருக்கிறான். .மாலா
வந்ததும் ,சற்று விறைப்பாக , கோபித்த பாவனையில் நிற்கிறான்.)
மாலா:-
( நாடக பாணியில் ) அன்பர் சற்றே கோபமாக இருக்கிறார்போலும். எங்கே, அங்கே சென்று
கோபத்தின் காரணத்தை அறிந்து வருவோம். அன்பே....ஆ ஆ ஆ ...கொழுந்துவிட்டு எரியும்
கோபத்தின் காரணம் ....?அருகேயே செல்ல முடியவில்லையே.......!
மோஹன்:-
கோபமல்ல பெண்ணே... விரகதாபம்.
மாலா:-
ரொம்ப ஆபத்தாச்சே அது.
மோஹன்:-
அதன் காரணகர்த்தாவே நீதானெ. அது சரி. ! இன்னிக்கு நீ ரொம்ப லேட். இனிமே இப்படி
லேட்டானா உன்னைத் தேடி நான் உங்க வீட்டுக்கே வந்திடுவேன்.
மாலா:
- ஐயையோ ... அப்படி எதுவும் செய்யாதீங்க. தகுந்த சமயத்தில ,தக்க தருணத்தில நானே
உங்கள என் அப்பாகிட்ட அறிமுகப் படுத்தறேன்.
மோஹன்.:-
ஏன் மாலா... எனக்கு இப்ப உங்க அப்பாவைப் பார்த்து பெண் கேட்கத் தகுதி
இல்லைங்கிறதால தானே நீயும் என்னை அறிமுகப் படுத்தத் தயங்கறே.எனக்கு ஒரு வேலை
இல்லை, நானே எனக்கு ஒரு பாரமா இருக்கும்போது, காதல் ஒரு கேடா... கல்யாணம் ஒரு
தேவையா....?
மாலா:-
என்ன மோஹன் என்னென்னவோ பேசறீங்க. ..
மோஹன்:-
மாலா ... நன் ஒரு நல்ல பொசிஷனுக்கு வரத்தான் போறேன். நீயும் பார்க்கத்தான் போறே.
என்னைப் பார்த்தா ..ஏன்.. உன் அப்பாவுக்கே எனக்கு ஒரு நல்ல வேலை கொடுக்கணும்னு
தோணுமே...!
மாலா:-
ஆ ஹா..
! எனக்கு எப்படி அந்த யோசனையே தோணாமப் போச்சு. . மோஹன் நீங்க இப்பச்
சொன்னீங்களே அதே மாதிரி எங்கப்பா கம்பனியிலேயே ஒரு நல்ல வேலை வாங்கித்தர நானாச்சு.
நான் சொல்ல வேண்டியதுதான். ..உடனே எங்கப்பா என் ஆசையை நிறை வேற்றுவார்.
மோஹன்:-
உண்மையாகவா மாலா... ஆனால் அதுல ஒரு பிரச்சனை இருக்கு. நான் தன்மானமுள்ளவன். எந்த
வேலையும் என் தகுதிக்காக கொடுப்பதாகவே இருக்க வேண்டும். உனக்காகவோ இல்லை வேறு
யாருக்காகவோ வேலை கிடைப்பதானால் வேண்டாம். அதையும் உங்கப்பாகிட்ட முதலிலேயே
சொல்லிடு.
மாலா:-
அந்தப் பிரச்சனையை எங்கிட்ட விட்டுடுங்க. ஆமாம் மோஹன். உங்களுக்கு என் மேல்
அன்பிருக்கு அல்லவா..?
மோஹன்:-
என்ன கேள்வி இது. இதை சொல்லித்தான் தெரிஞ்சுக்கணுமா ...
மாலா:-
சில விஷயங்கள சொல்லாமலேயே புரிஞ்சுக்க முடிஞ்சாலும் , சொல்லிக் கேட்பதிலும் ஒரு
தனி இன்பம் இருக்கு தெரியுமா...?
மோஹன்:-
அப்படியா... அது என்ன இன்பம்...
மாலா:-
அதுதான் சொல்ல முடியாதது. உணர்ந்து கொள்ள மட்டும்தான் முடியும்.
மோஹன்:
- என்ன மாலா புதிர் போடறே. அந்த உணர்ச்சி எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியக்
கூடாதா?
மாலா:-
ஏன் தெரியக் கூடாது..? இப்பச் சொல்லுங்க..
மோஹன்:-
என்னன்னு. ..
மாலா:-
என் மேல அன்பு இருக்கான்னு...
மோஹன்:-
அதுதான் சொன்னேனே.... இருக்குன்னு.
மாலா:-
அப்படியில்லீங்க.. இப்படி... போங்க மோஹன் எனக்கு வெக்கமா இருக்கு...
மோஹன்:-
மலா...! நான் உன்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறேன் தெரியுமா....எந்தன் உயிருக்குயிர்
..நீ நாடும் அன்பு நான்... என் கண்ணின் மணி நீ ..உந்தன் கருத்தின் ஒளி நான்... நற்பண்ணின்
சுவை நீ .. உன் பாவின் நயம் நான்... என் எண்ணின் பொருள் நீ உன் எண்ணம் சொல்லாதது ஏன்.... மாலா..!
மாலா:-
அடேயப்பா.... காதற்கவிதையே பாடிடுவீங்க போலிருக்கே.
மோஹன்:-
காதலில் கட்டுண்டிருக்கும்போது, சாதாரணமானவனும் கவிதை மட்டுமா பாடுவான் விண்ணையுஞ் சாடுவான்... பண்ணையும் பாடுவான்.
ஆரம்பிக்கட்டுமா.
மாலா:-
விண்ணைச் சாடவா.... பண்ணைப் பாடவா...
மோஹன்:-
பாடத்தான்...
மாலா:-
ஐயையோ இப்ப வேண்டாம். எனக்குப் பயம்மா இருக்கு. இன்னொரு நாள் பாடுவீங்களாம் நானும்
பொறுமையாக் காதைப் பொத்திட்டுக் கேட்பேனாம்....
மோஹன்:-
காதைப் பொத்திட்டுக் கேட்பியா... YOU SILLY
GIRL..!
மாலா:-
DON’T FORGET.நாளைக்கு சாயங்காலம் உங்களை என்
தந்தையிடம் அறிமுகப் படுத்துவென். அதற்கு முன்னே வழக்கம்போல் இங்கே சந்திப்போம். TA..TA…!
( திரை ):
( தொடரும்.)
( தொடரும்.)
,
...
,
பகிர்வுக்கு நன்றி ஐயா... தொடர்கிறேன்...
பதிலளிநீக்குபகல் இரவாகிறது. இரவு பகலாகிறது. காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. நேற்று இன்றாவதில்லை, இன்று நாளையாவதில்லை. மாறுபட்டுவரும் வாழ்க்கை நியதிகள் காலத்துடன் போட்டியிடுகின்றனவா.?
பதிலளிநீக்குநல்ல நாடகம் !!!
ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் தந்தை மகனுக்கிடையிலான உரையாடல்களில் பணிபற்றிய பேச்சே பிரதானமாக இருப்பது யதார்த்தம். காதல் வசனங்களில் இளமைத் துள்ளல். காதல் நாடகம் கல்லூரி நாடகமா? வாழ்க்கை நாடகத்துக்கான ஒத்திகையா? சுவாரசியமாய்த் தொடர்வதற்குப் பாராட்டுகள். அடுத்து வரும் பதிகளுக்காகக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஒரு பெண் சாதாரண வாழ்க்கையை சாதாரண முறையில் சாதாரணமாக வாழாதவரை, இந்த சாமானுய சமுதாயம் அவளை ஒரு சாதாரணப் பெண்ணாக ஏற்றுக் கொள்வதில்லையே.///
பதிலளிநீக்குஅசாதாரணமான வரிகள்.
வெகு இயல்பாய் போகிறது நாடகம் , நாடகத்தனம் இல்லாமல் .
நல்ல பயனுள்ள தகவல்
பதிலளிநீக்குநன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வாழ்ந்தே தீருவேன்... நம்பிக்கை வரிகள்.... முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் என்று சொல்லும் தன்னம்பிக்கை வரிகள்.... ரொம்ப நாட்கள் கழித்து நாடகம் பார்க்கும் அருமையான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது உங்க இந்த பகிர்வினால் சார்....ஆமாம் அசாத்திய துணிச்சல் இருப்போர் மட்டுமே சாதிக்க முடிந்த வரிகள்....ரசித்தேன் சார்....
பதிலளிநீக்குரங்கதுரையின் டைரி எழுதும் பழக்கம்.... மிக நல்ல பழக்கம்... அந்த காலத்து பழக்கம்.... இப்பெல்லாம் மொபைல், இண்டர்நெட், சாட் என்று வந்தபின் டைரி எழுதும் பழக்கம் இருக்கிறதா என்ன என்று தெரியவில்லை. நாம் எழுதியவைகளை சில வருடங்களுக்கு பின் எடுத்து படித்து ரசிக்கலாம்..
மாறுபட்டு வரும் காலநியதிகள் காலத்துடன் போட்டி போடுகிறதா??? நச் கேள்வி சார்.... மாற்றங்களுடன்...... காலம் நகர்ந்துக்கொண்டே இருக்கிறது.. நேற்று இன்றாவதில்லை, இன்று நாளையாவதில்லை.. அம்மா அடிக்கடி சொல்லும் டைம் இஸ் கோல்ட் நினைவுக்கு வருகிறது தங்களின் இந்த வரி படிக்கும்போது....
சக்சஸ்ஃபுல்லாக 25 வருடங்கள் முடித்த ரங்கதுரைக்கு அன்பு வாழ்த்துகள்....எல்லா பெற்றோருக்கும் இருக்கும் அதே எதார்த்த பொறுப்பும் கவலையும் ரங்கதுரைக்கு இருக்கிறது... மாலதி திருமணம் ராஜூவின் கம்பனி பொறுப்பு....
இந்த காலத்திலும் பிள்ளைகள் அப்பாவின் கூப்பிட்ட ஒரு குரலுக்கு வந்து நிற்பது ஆச்சர்யம் தான்.. பெற்றோரின் வளர்ப்பு பிள்ளைகளின் பழக்க வழக்கத்தில் தெரியுமாம்..
தங்களின் எழுத்துகளில் இருந்தே ரங்கதுரை தம்பதியர் பிள்ளைகளை நல்லமுறையில் வளர்த்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது....
அப்பா மணி ஆகிவிட்டது சாப்பிட வாங்க என்று அழைக்கும் பிள்ளை... அப்பா நீங்க வந்து ஒரு முறை கொட்டேஷன்ஸ் பார்த்துவிட்டால் நல்லது...
ஆஹா இந்த காலத்தில் தான் இருக்கிறேனா கிள்ளிப்பார்த்துக்கொள்கிறேன்.. அருமையான ஜெனரேஷன்... தாய் தந்தையரை மதிக்கும் குழந்தைகள்.....
நாடகத்தில் பங்கேற்கிறேன் என்று மாலதி சொன்னதற்கு ராஜூ தவறு என்று சொல்ல சில காரணங்களை அடுக்கினாலும் ரங்கதுரை அதை மிக அருமையாக திருத்துவது போற்றுதற்குரியது...
ஆமாம் சமுதாயம் என்பது என்ன? நாம் தான் சமுதாயம்.. சமுதாயம் தான் நாம்... எந்த ஒரு நல்லதும் நம்மில் இருந்து ஆரம்பமாகட்டும் என்ற கருத்தை அறிவுறுத்தும் மிக அருமையான பகிர்வு....
மாலதி மோஹன் இருவரின் நேசம் திருமணத்தில் முடிய மோஹனுக்கு வேலை கிடைக்க, அதுவும் மோஹன் விருப்பப்படி தன்மானத்துடன் தன் தகுதியை பார்த்து வேலை கொடுக்கவேண்டும் என்று நினைக்கும் நல்ல குடிமகன்.....
கதை படிக்கும்போது கதை படிப்பது போன்று தோன்றாமல் நேரில் நாடகம் பார்ப்பது போல் மிக அருமையான சீராக கதை வடிவமைத்து பகிர்ந்தது மிக மிக அருமை சார்....
அன்பு நன்றிகள்... தொடருங்கள்......
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்,
@ இராஜராஜேஸ்வரி,
@ கீதமஞ்சரி,
@ சிவகுமாரன்,
@ EASY ஜோசஃப்
@ மஞ்சுபாஷிணி.
சுமார் ஒன்றரை மணி நேர முழு நீள
இருமுறை மேடை ஏற்றிய நாடகத்தை வலைப் பூவில் பதிவாக இடும் போது கிடைக்கப் போகும் ஆதரவு குறித்து மனம் சஞ்சலப் படுவது உண்மை. இது எழுதப் பட்ட காலம் அறுபதுகளின் முதலில். இது குறித்து ‘ நான் போட்ட நாடகங்கள் ‘ என்ற பதிவில் எழுதி இருக்கிறேன். நாடகம் எழுதி இயக்கி நடிப்பது ஒரு தனி அனுபவம். சில கருத்துரைகள் வாசிப்பவர் கதைப் போக்கை அவரவர் போக்கில் நினைப்பதுதான்.ஒவ்வொரு முறையும் இரண்டு காட்சிகள் பதிவிடுவது என முடிவு.
மஞ்சுபாஷிணி என் வலைக்கு வருவது இதுதான் முதல் தடவையா. ?கவனித்துப் படித்து உங்கள் கருத்துக்களை விரிவாகவே பதிக்கிறீர்கள். தொடர்ந்து வருகை தந்தால்தான் நாடகம் முழுவதும் ரசிக்கவோ, விமரிசிக்கவோ முடியும் நன்றியுடன். ஜிஎம்பி.
நாடகம் சிறப்பாகத் தொடர்கிறது
பதிலளிநீக்குநாங்களும் தொடர்ந்து வருகிறோம்
பதிலளிநீக்குரமணி சாரின் உற்சாகமூட்டும் கருத்துக்கு நன்றி.
வாழ்ந்தே தீருவேன் நாடகத்தின் தலைப்பே மிக நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅப்பா மகன் உரையாடல், மாலா, மோஹன் காதல் உரையாடல் எல்லாம் யாதார்த்தாமாய் உள்ளது.
நாடகம் நன்றாக இருக்கிறது.