Sunday, September 2, 2012

புரிந்துகொள்ளவும் பொழுதைக் கழிக்கவும்.

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/s480x480/304987_416094945118335_551885761_n.jpg
                                                                                                                               
மேலே காணும் ஆங்கில வார்த்தைகளின் உட்பொருளைக் குறிக்கும் வகையில் அவற்றின் விரிவாக்கம் கிடைத்தது. பகிர்ந்து கொள்கிறேன்.

அடுத்து ஒருசிறுகதை.

ஒருவன் ஒரு பெரிய கடைக்குச் சென்றான். அங்கே பல விதமான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. அதில் ஒரு வெண்கலத்தினால் ஆன ஒரு எலியின் சிலை இவன் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு சீட்டு தொங்கியது. அதில் சிலையின் விலை ரூபாய்100-/ என்றும் அது பற்றிய கதையின் விலை ரூபாய் 200-/ என்றும் எழுதி இருந்தது. நம் ஆள் சிலை போதும் கதை வேண்டாம் என்று கூறி ரூபாய் 100-/ கொடுத்து சிலையைவாங்கிக் கொண்டு  போனார்.

சிறிது நேரத்தில் அவர் எதிர்பாராதவிதமாக, அவரைப் பின் தொடர்ந்து  சில எலிகள் வரத் துவங்கின. அவற்றின் எண்ணிக்கை கூடிக் கொண்டேபோய் ஆயிரங்களைத் தொட்டு அவரை மிகவும் பயமுறுத்தியது. என்னசெய்வதென்று தெரியாமல் நம்மவர் அருகிலிருந்த கடற்கரைக்குச் சென்று அந்த வெண்கலச் சிலையை கடலில் வீசி விட்டார். பின் தொடர்ந்து வந்த எலிகளும்கடலில் குதித்து மூழ்கின.

நிம்மதியடைந்து திரும்பியவர் மறுபடியும் அந்தக் கடைக்குச் சென்றார். கடைக்காரர் அந்த சிலை பற்றியகதைக்காகத்தான் வந்திருக்கிறார் என்று எண்ணி கதைப் புத்தகத்தைப் பாக் செய்யலாமா என்று கேட்டார். அதற்கு நம் நண்பர் “ வேண்டாம். அந்த எலியின் சிலை போல ஒரு அரசியல் வாதியின் சிலை கிடைக்குமா.?” என்று கேட்டார் !.

இந்தப் படம் சும்மா தமாசுக்கு மட்டுமல்ல. சிந்திக்கவும்

16 comments:

  1. க்ளாஸ் கதை பாலு சார்.

    ஆனால் தூக்கிப்போட்ட அரசியல்வாதியின் பின்னால் அத்தனை அரசியல் பெருச்சாளிகளும் கடலில் மட்டும் குதித்துவிடுமானால் அதை விடப் பெரிய ஆனந்தம் வேறென்ன இருக்க முடியும்?

    ReplyDelete
  2. படம் கண்ணுக்குத் தெரியலே சார். கடவுள் மாதிரி மர்மமா இருக்கு.
    எலிக்கதை என்னவா இருக்கும்?

    ReplyDelete
  3. கடலும் கெட்டுப் போகும்...

    ReplyDelete
  4. படம் தெரியவில்லை ஐயா. சிறுகதை அருமை எலிக் கதைதான் என்னவாக இருக்கும்??

    ReplyDelete
  5. அந்த எலியின் சிலை போல ஒரு அரசியல் வாதியின் சிலை கிடைக்குமா.?

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. பினிஷிங் டச் அருமை, சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது!

    ReplyDelete
  7. நல்லா இருக்குங்க கதை.

    ReplyDelete
  8. அவர் இறுதியாகக் கேட்டது அருமை
    கிடைத்திருந்தால் நாட்டில் பாதித் தொல்லை
    இல்லையென்று ஆகி இருக்கும்
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அரசியல் வியாதி பற்றி நல்லாவே சொன்னீங்க ..ரசித்தேன்

    ReplyDelete
  10. படம் தெரிய மாட்டேங்குதே?

    ReplyDelete
  11. அன்பின் ஜிஎம்பி

    அரசியல்வாதிகள் - கடலில் மூழ்கினால் - நாடு முன்னேறும்.

    கதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. நல்ல கனவுதான். ஹிஹிஹிஹி.

    ReplyDelete

  13. @ சுந்தர்ஜி, அப்பாதுரை, திண்டுக்கல் தனபாலன்,கரந்தை ஜெயக் குமார், இராஜராஜேஸ்வரி, வரலாற்றுச் சுவடுகள், டாக்டர் கந்தசாமி, சீனா, கீதா சாம்பசிவம்,காளிதாஸ் , ரமணி
    வருகை தந்து கருத்திட்டோருக்கு நன்றி
    படம் தெரியவில்லை என்று குறை. நிவர்த்தி செய்ய எனக்குத் தெரியவில்லை. முதலில் இருப்பது ஒரு போஸ்டர் போன்றது. பின்னதே புகைப் படம். எதிர்பாராத வகையில் வருகை தந்த திரு சீனாவுக்கும், திருமதி கீதா சாம்பசிவத்துக்கும் என் ஸ்பெஷல் நன்றி.

    ReplyDelete
  14. எலிக‌ள் எல்லாம் ஒரே குண‌ம் கொண்ட‌வை ஆனால் அர‌சிய‌ல்வாதி ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு வ‌கையாய் இருக்கிறார்க‌ளே?

    ReplyDelete
  15. சுவாரசியமான கதைப்பகிர்வுக்கு நன்றி ஐயா. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  16. அருமையான கதை ஆழமான சிந்தனை.

    ReplyDelete