சனி, 29 செப்டம்பர், 2012

சிந்தனைத் துளிகள்.


                                               சிந்தனைத் துளிகள்
                                               ---------------------------


அண்மையில் ஒரு பத்திரிக்கை  செய்தியில் பிரபல எழுத்தாளர் R.K. நாராயணனின் , அவரது மைசூர் இல்லம் அவரது நினைவாலயமாக மாற்றப் படுகிறது என்று படித்தேன்., கூடவே. ஆர்.கே.நாராயணன் ஆங்கிலத்தில் எழுதியவர். சென்னைக்கு குடிபோனவர். பிரபல கன்னட எழுத்தாளரும் நாடகாசிரியருமான T.P.கைலாசத்துக்கு உரிய மரியாதை தரப் படவில்லை,என்பது போன்ற சர்ச்சைகளும். .தியாகராஜ பரமசிவம் கைலாசம் என்னும் திரு. T.P. கைலாசம் ஒரு பிரபல கன்னட எழுத்தாளர். பூர்வீகத்தில் தமிழர். கன்னட நாடக உலகில் பெயர் பெற்றவர். ஆங்கிலத்திலும் எழுதி இருக்கிறார். அவரது சமகால நண்பரான திரு. பாலசுந்தரம் ஐயருடனான ஒரு நகைச்சுவை மோதல் ( WITTY  REPARTEE ) நினைவுக்கு வந்தது. ஒரு முறை திரு. பாலசுந்தரம் ஐயர் கைலாசத்தைக் காண வந்தபோது “ HOW  ARE YOU , TYPICAL  ASS.?” (டி.பி. கைலாஷ் என்பதைச் சுருக்கி ) என்று விசாரித்தாராம். மறுவினாடியே இவரும் சளைக்காமல் “ I AM GOOD BALLS  UNDER MAIR “ என்றாராம். . கீழே திரு .கைலாசம் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கவிதை.
DRONA

THY flaunted virgin phalanx cleft a two

By but a stripling, thine own pupil's son
Whose bow abash'd his sire's preceptor! You,
In pain of tortur'd vanity, let run
Thine ire to blind thee to the blackest deed
Besmirch'd the scroll of Aryan Chivalry!
The while thy master's ghoulish hate did feed
And fatten on thy victor's butchery,

Thy father's heart had it bore some pity
For Partha in his dire calamity,
Dread Nemesis had spar'd thine aged brain
The searing, killing agony accrued
Of death of thine own son. Thou didst but drain
The bitter gall thy vanity had brewed!













.



  திரு. T.P, கைலாசம். 
திரு. கைலாசம் அவர்களின் மேற்கண்ட ஆங்கிலக் கவிதையை என்னால் இயன்ற அளவு தமிழாக்கம் ( மொழிபெயர்ப்பு அல்ல.) செய்திருக்கிறென்.


பிளக்க முடியாது எனக் கருதி
அமைத்த வியூகம்,, நீயே வியக்கும் வண்ணம்,
உன் மாணாக்கன் மகனாம் ஒரு இளங்கன்றால்
உடைக்கப் பட்டதும்,, போர் முறை மீறி,
அவனை வீழ்த்த வேறொரு வியூகம் அமைத்தனை நீ.
அறிந்திலை அப்போது , அதே யுத்த தர்மம் மீறலால்,
பார்த்தனின் புத்திர சோகம் உனக்கும் புரியும் எனவே.


யாராவது எப்பொழுதாவது ‘சும்மா; இருக்கிறார்களா.? சும்மா இருப்பது என்பதே இல்லை. ஏதும் செய்யாதபோதும் சிந்தனைகளின் ஓட்டம் இருந்து கொண்டுதானிருக்கிறது. SCOUTS  பயிற்சியின் போது ஒரு விளையாட்டு
( அது விளையாட்டா. ?) நடக்கும். சுமார் இருபது முப்பது பேர் வரிசையாகவோ  வட்டமாகவோ , ஒருவர் பேசுவது மற்றவர் கேட்காத தூரத்தில் அமர்த்தப் படுவார்கள். முதலில் இருப்பவரிடம் ஒரு செய்தி சொல்லப் படும். அதை அவர் அடுத்தவருக்குச் சொல்ல வேண்டும். இப்படி சொல்லப் பட்ட செய்தி கடைசியாக கேட்பவரிடமிருந்து முதலில் ஆரம்பித்தவருக்கு வரும்போது செய்தி மாறி இருக்கும். செவி மூலம் பரவும் செய்திகளுக்குக் காதும் கண்ணும் சேர்க்கப் பட்டிருக்கும். இதை யோசிக்கும்போது, எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. முன் காலத்தில் எழுதும் முறையும் அதைப் பாதுகாக்கும் முறையும் இல்லாதிருந்த காலத்தில் செவி வழியாகவே செய்திகள் சொல்லப் பட்டிருக்க வேண்டும். ஏன், நம்முடைய வேதங்களும் இம்முறையில்தான் தலைமுறை தலைமுறையாக சொல்லப் பட்டு வந்திருக்க வேண்டும். அவை ஆதியில் சொல்லியபடியே நமக்குக் கிடைத்திருக்கிறதா.. அவற்றின் நம்பகத் தன்மை எவ்வளவு. இதனால் தானோ என்னவோ வடக்கில் கார்த்திகேயன் எனப் படும் முருகன், பிரம்மசாரி.... விநாயகருக்கு இரண்டு மனைவிகள். . தெற்கே நேர் எதிரான கதை. ..! சந்தேகங்கள் என்னும் என் முந்தைய பதிவொன்றில், சாஸ்திரம் என்கிறார்களே , அது குறித்த புத்தகங்கள் ஏதாவது உண்டா, என்று கேட்டிருந்தேன்.மனு சாஸ்திரமும் அர்த்த சாஸ்திரமும் கேள்விப்பட்டது. படித்ததில்லை. அவையும் செவி வழிச் செய்திகள்தானா. ? இன்று நிலவும் பேதங்களுக்கு அந்த மனுநீதிதான் முக்கிய காரணமோ என்று தோன்றுகிறது.  

ஆனால் இப்போதெல்லாம் எந்த செய்தியானாலும் உம்.. என்பதற்குள் சொல்லியபடியே எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் போய்ச் சேரும். தவறான செய்திகள் போய்ச் சேருவதால் மக்கள் பயந்து கூட்டங் கூட்டமாக அடித்துப் பிடித்து வெளியேறுகிறார்கள்.

 வலையில் எழுதுவது பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. எழுதுபவனின் எண்ணங்களைக் கடத்த எழுதும்போது, எண்ணங்கள் கடத்தப் படுகிறதோ இல்லையோ, எழுதுவது சரியென்று எண்ணாதவர் யாருமில்லை. மாற்றுக் கருத்துக்களை சொல்பவர் , முதலில் ஏதோ தவறு செய்வதுபோல்  எண்ண வேண்டுமா. “ நீங்கள் அப்படி நினைத்தால் நான் இப்படி நினைக்கிறேன் என்று சொல்வதில் என்ன தயக்கம். இருந்தால்தானே எந்தவிதமான எண்ணங்கள் நிலவுகின்றன என்பது தெரியும். புகழாரம் இல்லாவிட்டால் இகழாமல் கருத்து சொல்லப் பட வேண்டும் என்பது என் எண்ணம். நூறு பேர் படித்தால் மூன்றோ நான்கோபேர் கருத்திடுகிறார்கள். புகழ்ந்துதான் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களே அதிகம். செய்தியில் உடன்பாடு இல்லை என்றால் ஏதும் கூறாமல் இருப்பது உத்தமம் என்று நினைக்கிறார்கள் போலும். அப்படிப் பார்க்கும்போது எழுதுவதில் உடன்பாடு அடுத்தவருக்கு இல்லை என்றே கொள்ள வேண்டுமா. ?

சில விஷயங்கள் விவாதிக்கப் படும்போது கருத்துக்கள் வெளிப்பட்டால்தான் விவாதம் முற்றுப் பெறும். அதாவது எழுதுவது முகம்நோக்காத க்ரூப் ஸ்டடி. !பங்கேற்றல் அவசியம். 

                      சரணாகதி- ஒரு கதை.
                      -----------------------                        
உங்களுக்கு பூனைக்குட்டி, குரங்குக்குட்டி கதை தெரியுமா. ? பூனைக்குட்டி எல்லாப் பொறுப்பும் தன் தாய்ப் பூனையிடம் விட்டு விடும். குட்டி வளர்ந்து பெரிதாகும்வரை பூனை தன் குட்டியை வாயினால் கவ்விக்கொண்டு பாதுகாக்கும். ஆனால் குரங்குக் குட்டி தன் தாயை அழுத்திப் பிடித்துக் கொண்டு அதன் அரவணைப்பிலேயே வளரும் பூனைக் குட்டியைப் போல் மனிதனும் தன்னை ஆண்டவனிடத்தில் அர்ப்பணித்து விட வேண்டும் என்பார்கள். ஆனால் மனிதனுக்கு கண்காண முடியாத தெய்வத்திடம் தன்னை அர்ப்பணிப்பதில் அநேக சங்கடங்கள் உண்டு, அவன் தன்னை  தன் தாய் காப்பாற்றும் என்று நம்பி இறுகிப் பற்றிக் கொள்ளும் குரங்குக் குட்டி போல் ஆண்டவன் நம்பிக்கையைப் பற்றிக் கொள்கிறான். , இதையே சற்று வேறு விதமாகக் கூறினால். ---தந்தையின் கையைப் பற்றிக் கொண்டு போகும் சிறுவன் கீழே விழக் கூடும். ஆனால் தந்தையே அவன் கையை பற்றிக்கொண்டு போனால் அவன் விழமாட்டான். தன்னம்பிக்கைக்கும் ஆண்டவனைச் சார்ந்திருப்பதற்கும்  உள்ள வித்தியாசம் இதுதான். 

              பாட்டியும் முட்டைத் தலையும்
              ------------------------------- 


..பாட்டி இவ்வளவு அருகில் பேப்பரை வைத்துக் கொண்டு படித்தால் கண்ணுக்குக் கேடுஎன்று கூறி பாட்டியின் கையிலிருந்த “ ப்ரஜாவாணி “ பேப்பரை சற்றே இழுத்தேன்.. பேப்பரை தரையில் வீசி எறிந்தாள் பாட்டி என்ன பாட்டி, படித்தது பிடிக்கலையா, இழுத்தது பிடிக்களையா “ என்று கேட்டேன்.

படித்ததுதான் “ என்ற பாட்டி, “ பாலா....!, குழந்தைகள் முட்டை சாப்பிடுவது அவர்கள் ஆரோக்கியத்துக்கும் , உடல் வலுவுக்கும் நல்லதுதானே

நடத்திய ஆராய்ச்சிகள் அப்படித்தான் சொல்கிறது.. பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் எல்லா தரப்புக் குழந்தைகளுக்கும் சமமான உணவு, என்பதும் நல்லதுதானே.என்றேன்.

சீருடையில் மாத்திரம் சமமென்பதைவிட, உணவிலும் சமம் என்றால் மாணவர்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்லவா. ஏழைக் குழந்தைகளுக்கு வீட்டில் முட்டை சாப்பிடுவது முடியாத காரியமாகும். “

“ பாட்டி, பள்ளியில் முட்டை போடாததன் காரணம் மத சம்பந்தப் பட்டது ஆனதால்தான் இருக்கும்..அதுதான் பள்ளிகளில் முட்டை கொடுக்காததன் காரணம் என்கிறார்கள். “


“ மதமாவது கிதமாவது.....! அதெல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும். நாளொரு முட்டை உடலுக்கு நல்லது என்று இந்த முட்டைத் தலையர்களுக்குத் தெரியாதா. மக்களுக்கு நல்லது செய்வதில் இந்த மாதிரி எண்ணங்கள் கூடாது. இதே ரீதியில் போனால் வெள்ளிக்கிழமைகளில் காலை 11- மணிக்கு புறப்படும் ரயில்களை “ராகு காலம் “ என்று சொல்லி தாமதப் படுத்துவார்கள் என்று போட்டாளே பாட்டி..இதையெல்லாம் தடுக்கும் ஜனங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் புஷ்டியான முந்திரி, பாதாம் , பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களை கோயில்களில் பிரசாதமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் குறைந்தா போவார்கள்.பாட்டி சரியான ஃபார்மில் இருந்தாள்.

பாட்டி உங்கள் சளி எப்படியிருக்கிறது..? இப்போது தேவலாமா.?


“ சளி பிடித்ததோ, சனி பிடித்ததோ என்று இரண்டு மூன்று வாரங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டேன். என்னவெல்லாமோ கஷாயங்கள் மருந்துகள்னு போதும் போதும் என்றாகி விட்டது. நீ கொடுத்த மருந்து சாப்பிட்டவுடன் அநேகமாக சரியாகி விட்டது.

 “எனக்கும் முதலில் கொஞ்சம் பயமாக இருந்தது பாட்டி. இருந்தாலும் பார்க்கலாம் என்றுதான் அந்த வெளி நாட்டுக் கஷாயம் கொடுத்தேன். “

“ இரண்டே நாளில் பலன் தந்தது உன் கஷாயம். சரி ....அது என்ன மருந்தப்பா...

“ வெளிநாட்டுக் கஷாயம் பாட்டி. இரண்டு ஸ்பூன் ப்ராண்டி....

அடப் பாவி மனுஷா.... ! எனக்கு ப்ராண்டியா கொடுத்தே. ?

“ பாட்டி என்னென்னவோ மருந்தெல்லாம் சாப்பிட்டும் குணமாகாத உன் சளியும் இருமலும் இரண்டு ஸ்பூன் ப்ராண்டியில் குணமாயிற்று. .சின்னச் சின்ன விஷயங்களில் பிரச்சனை பண்ணக்கூடாது பாட்டி. குழந்தைகளுக்கு நாளொரு முட்டை தராதவர்கள் முட்டைத் தலையர்கள் என்றாயே. நல்லது என்று தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத முட்டைத் தலை இல்லையே உனக்கு...!


(  “நான் பால் குடிப்பதில்லை. அது நீர் மாமிசம். நான் ஒரு வெஜிடேரியன். ஆகவே ஒரு பெக் மது அருந்துவேன் “ என்று கன்னட எழுத்தாளர் டி.பி. கைலாசம் அவர்கள் கூறுவாராம். . அதை ஒட்டி எழுந்த கதை நீங்கள் மேலே படித்தது.) .
     
          
  






13 கருத்துகள்:

  1. கலவையான சுவையான தகவல் பகிர்வுக்கு நன்றி. டி.பி.கைலாஷ் அவர்களின் ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம் அருமை. எளிதாய்ப் புரிந்துகொள்ள இயன்றது. (ஆங்கிலக் கவிதையினை நேரடியாய்ப் புரிந்துகொள்ளும் அளவு ஆங்கிலப்புலமை எனக்கு இல்லை.)
    வெஜிடேரியன் காரணமாய் பால் தவிர்த்து மது அருந்துவதாக சொன்ன அன்னாரது நகைச்சுவை உணர்வும் ரசிக்கவைத்தது. சற்றும் சளைக்காத நகையுணர்வு வரவழைத்தது தங்கள் பாட்டியும் முட்டைத்தலையும் கதை. பாராட்டுகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  2. சிந்தனை துளிகள் எல்லாம் சிந்தனை செய்ய வைத்தன.

    எல்லாமே நன்றாக இருக்கிறது.
    சரணகதி, பாட்டியும் முட்டைத்தலையும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமான சிந்தனைத் துளிகள்
    முட்டை பிராந்தி விஷயம் மனம் கவர்ந்தது
    தமிழ் மொழியாக்கம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அருமை தான். ஒரு மாற்று பதிவாக உணர்ந்தேன். நகைசுவையும் ஊடாடியது பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  5. ரசித்தேன். இரண்டு பதிவாகப் போட்டிருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. கவிதையும் பாட்டிக் கதையும் கொஞ்சம் ஹெமிங்க்வே நினைவில். கைலாசம் படைப்புகளைத் தேடிப் படிக்கத் தோன்றுகிறது. இவரைப் பற்றி எதுவுமே தெரியாதிருந்தேன். அறிமுகத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  8. @ ரஜனி பிரதாப் சிங்,
    @ கீதமஞ்சரி,
    @ கோமதி அரசு,
    @ முனைவர் குணசீலன்,
    @ ரமணி,
    @ பட்டுராஜ்,
    @ டாக்டர் கந்தசாமி.
    @ கரந்தை ஜெயக் குமார்,
    @ அப்பாதுரை.
    வருகைதந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. பிற மொழி இலக்கியங்களை படிக்க முடியவில்லை. மொழி தெரியாததே காரணம். ஆங்கில எழுத்துக்கள் படித்ததுண்டு. அவை பெரும்பாலும் மக்களின், நாட்டின் சரித்திர நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவே, ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யுமளவுக்கு ஆங்கில அறிவு போதாது. இருந்தாலும் பயந்து கொண்டே கைலாசத்தின் துரோணரை தமிழில் எழுதினேன். குறைகள் இருந்தால் சுட்டிக் காண்பிக்க எந்த தயக்கமும் வேண்டாம்.
    முத்ன்முதலில் ( ? ) என் வலைக்கு வருகை தரும் பட்டுராஜுக்கு என் விசேஷ நன்றி.

    பதிலளிநீக்கு

  9. @ அப்பாதுரை, பாட்டி கதை திரு. கைலாசம் எழுதியது அல்ல.

    பதிலளிநீக்கு
  10. பகிர்வுகள் அருமை .. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு