முருகா ....நீ அப்பாவியா.?
--------------------------------
ஈசானம்,
தத்புருஷம், வாமனம்,
அகோரம்,
சத்யோஜாதம், அதோமுகம்-எனும்
ஈசனின்
ஆறுமுக நுதல் கண்களீன்
தீப்பொறிகளாய்
வெளியான ஆறுமுகனே
எனை
ஆளும் ஐயனே, உனைக் குறித்து
எனக்கொரு
ஐயம் எழுகிறது.
அஞ்சு
முகம் தோறும், ஆறுமுகம் காட்டி,
அஞ்சாதே
என வேலுடன் அபயமளிப்பவனே,
கனி
கொணர்ந்த நாரதன் ஈசனே ஞாலம் என ஓத
விரும்ப
,அது உணர்ந்த ஆனைமுகன், அம்மை
அப்பனை
வலம் வந்து கனி கொண்டான்.
நீயோ
மயிலேறி பூவுலகை வலம் வந்து ,
கனிகிட்டாக்
கோபத்தில் மலையேறி நின்றனை.
பரமனுக்கே
ப்ரணவப் பொருளுரைத்திய
தகப்பன்சாமி
நீயென்ன அப்பாவியா.?
ஈசன்
சக்தியல்லால் வேறெதாலும் அழிக்கமுடியாத
சூரன்,
ஆணவம் மிகக் கொண்டு இந்திராதி தேவர்களுடன்
ஈரேழு
உலகையும் கட்டுக்குள் வைக்க, அவனை அடக்கி
தேவர்கள்
விடுதலை பெற அத்தனின் சக்திகள் அத்தனையும்
பெற்று
, அருள் அன்னையின் சக்தி வேலையும் பெற்று,
போரில்
அண்டமும் ஆகாசமாய் ஆர்பரித்து மரமாய் நின்ற
சூரனைசக்திவேலால்
இரு பிள வாக்கினை.. அழித்தவனை
சேவலாய்
மயிலாய் ஆட்கொண்ட நீயென்ன அப்பாவியா.?
மாயை
உபதேசம் கொண்டு ஈசனிடம் வரம் பெற்ற சூரனை
ஆட்கொண்ட
சரவணா, பரிசிலாக இந்திரன் தன் மகள்
கரம்
பிடித்துக் கொடுக்க, அதனை மனமுவந்து ஏற்ற நீ அப்பாவியா
இல்லை
சரவணப் பொய்கையில் உன் கரம் பிடிக்கத் தவம்
செய்த
அவள்தான் இவள் என்றுணர்ந்து மணந்த மணவாளா,
ஏதுமறியாப்
அப்பாவியாக இருக்கும் என் நாவில் வந்தமர்ந்து
ஆட்டுவிக்கும்
நீ நிச்சயமாக அப்பாவி அல்ல.
முருகனைப் பற்றிய என் முந்தைய பதிவுகள்.
1.) முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும். http://gmbat1649.blogspot.in/2011/03/blog-post_14.html
2 .) எனக்கென்ன செய்தாய் நீ http://gmbat1649.blogspot.in/2012/02/blog-post_03.html.
முருகனைப் பற்றிய என் முந்தைய பதிவுகள்.
1.) முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும். http://gmbat1649.blogspot.in/2011/03/blog-post_14.html
2 .) எனக்கென்ன செய்தாய் நீ http://gmbat1649.blogspot.in/2012/02/blog-post_03.html.
அஞ்சு முகம் தோறும், ஆறுமுகம் காட்டி,
பதிலளிநீக்குஅஞ்சாதே என வேலுடன் அபயமளிப்பவனே,
நிச்சயமாக அப்பாவி அல்ல.
அப்பாவி நாம் தாம்...
பதிலளிநீக்குபடித்தேன்.
பதிலளிநீக்குTo ask Him thus , may I know the pretext? I mean who called Him 'appaavi'?:))
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குயாரும் அவனை அப்பாவி என்று கூறவில்லை. அவன் கதைகளைப் படிக்கும்போது என்னுள் எழுந்த சில உரிமை கொண்ட கேள்விகளே. அவனை எனக்குப் பிடிக்கும் என்று எழுதியது போல்தான் இதுவும். VSK அவர்கள் புரிந்து கொண்டிருப்பார் என நம்புகிறேன்.
வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி.
பாலகன் முருகனை உரிமையோடு
பதிலளிநீக்குஅவன் புகழ் பாடியது மனம் கவர்ந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சிவசக்தி ஐக்கியமே ஸ்கந்தன் தானே. அவன் தானே சச்சிதானந்த சொரூபம். அருமையான பகிர்வு. தாமதமாய் வர நேர்ந்தமைக்கு மன்னிக்க வேண்டும். முருகன் குறித்த உங்கள் மற்றப் பதிவுகளையும் படித்துவிட்டுச் சொல்கிறேன். நன்றி அழைப்புக்கு.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
பதிலளிநீக்குரத்தினச் சுருக்கம்.
தங்கள் கை வண்ணத்தில் மலர்ந்த கந்த புராணம்.
இப்படி எல்லாம் சிந்திப்பதற்கு ஒரு தனித்துவம் வேண்டும்.
இனிய பதிவினைக் கண்டு மகிழ்ச்சி..
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
கந்தபுராணத்தின் ரத்தினச் சுருக்கம் என்று கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா. வந்து கருத்திட்டதற்கு நன்றிஐயா.
பதிலளிநீக்குநீ அப்பாவி அல்ல புதுமையானதொரு வார்த்தை தொகுப்பு இறைவனுக்கு.
உங்களுக்கே உரிய பாணியில் கேட்கிறீர்கள் முருகனை. அசத்தலாகவே இருந்தது. மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஅன்பு பாசத்தை எத்தனை வகையாகக் காட்டலாம் இல்லையா ஐயா! அன்பாகவும், கண்டிப்பாகவும், கோபித்தும் நன்றி ஐயா !
பதிலளிநீக்கு@ இனியா
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம்