Friday, April 27, 2018

எண்ணங்கள் கோர்வையாக அல்ல

                   
                             
                                  எண்ணங்கள் கோர்வையாக அல்ல
                                 ------------------------------------------------------
  தொடர்ந்து ஒரே மாதிரி கனவு தினமும் வருமா அம்மாதிரி வரும் கனவை நினைவில் கொண்டு வர முடிவதில்லையே ஏன் ஏதோ ராக்கெட் விடும் கனவு என்பது மட்டும்  நினைவுக்கு வருகிறது  கனவு காணும்போது இது ஏதோ யுரேகா சமாச்சாரம்  இது பற்றிக் குறிப்பிட வேண்டும் என்று  நினைத்ததும்   நினவுக்கு வருகிறது  திரு ஜீவி சார் ஒரு முறை கனவுகள் பற்றி  ஒவ்வொப்ரு பதிவுக்கு முன்னாலும்  எழுதிவந்தார் என்பது நினைவுக்கு வருகிறது  என்ன என்று அறிய அவரது பழைய பதிவுகளைப் பார்க்க வேண்டும். முடியுமா தெரியவில்லை
 சில காலம் முன்  இந்த கங்நம் டான்ஸ் பற்றி ஒரே பேச்சாக இருந்தது அந்த நடனம்பயில காணொளி பாருங்கள்




 குருவாயூர் கோவில் அருகே யானைகள்  வளாகம் இருக்கிறது அங்குசுமார் 40 யானைகளுக்கும் மேல் பராமரிக்கப்படுகிறது யானைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு அலாதி மகிழ்ச்சி  அங்கு சென்றபோது அவற்றை குளிப்பாட்டும் காட்சியை  வீடியோவாக்கி இருந்தேன்  நீங்களும் கண்டு மகிழலாமே




அண்மையில் பெங்களூர்  இஸ்கான்  கோவிலுக்கு சென்றிருந்தோம்   நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணத்துக்கு  ஹால் புக் செய்ய அவர்களுடன்   சென்றிருந்தேன்   அப்போது அங்கே இருக்கும்  கடவுள் பிம்பங்களைப் புகை படமெடுக்க லாமா  என்று கேட்டேன்   அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்  பொது மக்களுக்கு அனுமதி இல்லாதபோது மீடியாக்களுக்கு மட்டும் எப்படிஅனுமதிஎன்று கேட்டேன்   அவர் எதிர்பார்க்கவில்லை  எனக்கு அனுமதிதரும் அதிகாரம் இல்லை என்று ஏதோ கூறி மழுப்பினார்





 ஏப்ரல் 11 ம் தேதி என் மூத்தமக்ன் பிறந்தநாள் வழக்கம்போல் வீட்டில் என்மனைவி ஒரு கேக் செய்தாள் என் பேரனும் கடையில் இருந்து ஒரு கேக் வாங்கி வந்திருந்தான் அதன் விலை மிக அதிகம்  அன்பினால்தான் இரண்டும் வந்தன  அன்புக்கு அத்தனை விலை கொடுக்கமனம்வரவில்லை





ஏழு ஆண்டுகள் பள்ளிஆசிரியையாகப் பணி புரிந்து வந்த என்  இரண்டாம் மருமகளை பாராட்டும்வகையில் ஒரு பரிசுகொடுத்தனர்  மகிழ்ச்சியாயிருந்தது



 என் மகனது நாய்க்குட்டி சில நாட்கள் என்னுடனிருந்தது இப்போது அது வளர்ந்து வேறுயாரிடமோ  அது இருந்தபோதுஎடுத்த காணொளி



என் மகனது நட்சத்திரப் பிறந்த நாள் ஆங்கில வருடப்பிறந்தநாள்  என்று என் மனைவி கொண்டாடுவாள் ஒருவருக்குஎத்தனை பிறந்த நாள் என்று என் மனைவியிடம் கேட்டேன்  அவள் ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறப்பதால் எல்லா நாளும்  பிறந்த நாளே  என்றாள்  இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மகன்  அம்மா அடித்தாளே ஒரு சிக்சர்  என்று கூறினான் ,,,,,,,,! 

28 comments:

  1. பல்சுவைச் செய்திகள். ரசித்தோம் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு ரசனைக்கும் நன்றி சார்

      Delete
  2. ரசித்தேன் ஐயா விடயங்களையும், காணொளிகளையும்.

    ReplyDelete
    Replies
    1. கங்நம் நடனம் கற்க தோன்றவில்லையா வருகைக்கு நன்றி ஜி

      Delete
  3. யானையைக் குளிப்பாட்டும் காட்சி, நாய்க்குட்டி விளையாடும் காட்சி இரண்டுமே ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பதிவர்களில் வயதுகுறைந்தவர் நீங்கள் கங்நம் நடனத்தையும் ரசித்திருக்க வேண்டுமே வருகைக்கு நன்றி சார்

      Delete
  4. வழக்கம்போல நாய்க்குட்டி காணொளி மனம் கவர்ந்தது. அழகு. ஏற்கெனவே ஒருமுறை பார்த்திருக்கிறேனோ என்றும் தோன்றியது. நட்சத்திரமோ, தேதியோ, இந்த மாதம் பிறந்தநாள் கண்ட உங்கள் மகனுக்கு எங்கள் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. என் மனைவி என்னை சிக்சருக்கு அடித்ததாகச் சொன்ன என்மகனி கூற்றுபற்றி என்ன நினைக்கிறீர்கள்

      Delete
  5. Happy Birthday to your son. I have 3 Birthdays! :D one official birthday which was given by my father during my school days. Another original DOB and Star birthday! So I used to celebrate "MUPPERUM VIZHA"! :D

    ReplyDelete
    Replies
    1. என் மகனுக்கு மே மாதம் ஏழாம் தேதி பிறந்த நாள் ஒரு பிறந்த நாளையே கொண்டாடக் கஷ்டம் முப்பெரும் விழாவா

      Delete
  6. பிறந்த நாள் கண்ட மகனுக்கும், பாராட்டு பெற்ற மருமகளுக்கும் வாழ்த்துக்கள்.

    குருவாயூர் சென்ற பொழுது நாங்களும் ஆனகூட்டா சென்றோம். எனக்கென்னவோ அங்கிருக்கும் யானைகள் சற்று சோகமாக இருப்பது போல தோன்றியது.

    நாய் விளையாட்டு ரசிக்கும்படி இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. யானைகள் சோலமாகத்தான் இருக்கும் இத்தனை பெரிய யானையை அடக்கி ஆள்கின்றனரே

      Delete
  7. சுவாரஸ்யமான தொகுப்பு.

    ReplyDelete
  8. அனைத்து செய்திகளும் சுவராஸ்யமாக இருந்தன

    ReplyDelete
    Replies
    1. கங்நம்நடனம் கற்றுக் கொடுப்பதையும் ரசித்திருக்க வேண்டுமே

      Delete
  9. //திரு ஜீவி சார் ஒரு முறை கனவுகள் பற்றி ஒவ்வொப்ரு பதிவுக்கு முன்னாலும் எழுதிவந்தார் என்பது நினைவுக்கு வருகிறது என்ன என்று அறிய அவரது பழைய பதிவுகளைப் பார்க்க வேண்டும். முடியுமா தெரியவில்லை..//

    எனது பதிவுகள் புத்தகமாகும் பொழுது பதிவு தளத்திலிருந்து அதை எடுத்து விடுவேன். அதனால் என் பதிவுகளில் அவை கிடைக்காது.

    நீங்கள் www.pustaka.co.in புத்தக நூலகத்தில் மாத சந்தா கட்டியிருந்தீர்கள் என்றால் வாசிக்கலாம். எனது 'கனவில் நனைந்த நினைவுகள்' நாவல் புத்தகத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த கனவுகள் பற்றிய குறிப்புகள் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் இருக்கும்.

    தங்கள் நினைவுகளுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. பதிவுகளில் கிடைக்காதுஎன்பது வருத்தமே கனவில் நனைந்த நினவுகள் புத்தகம் படிக்கும் போது கனவுகள் நினைவுக்கு வர வேண்டுமே

      Delete
  10. பல்சுவைப்பதிவினை ரசித்தேன். 'தூங்குவதுபோலும் சாக்காடு எழுவதுபோலும் பிறப்பு' என்ற குறள் சொல்வதுபோல், ஒவ்வொரு நாளும் பிறந்த நாளே.

    மீடியாக்கள் படமெடுப்பது வேறு. சாதாரண பொதுஜனங்கள் படமெடுப்பது வேறு என்றே எனக்குத் தோன்றுகிறது. ஒவ்வொருவரையும் கண்காணிக்க இயலாதல்லவா?

    ReplyDelete
  11. /'தூங்குவதுபோலும் சாக்காடு எழுவதுபோலும் பிறப்பு' என்ற குறள் சொல்வதுபோல், ஒவ்வொரு நாளும் பிறந்த நாளே./சிக்சர் அடிக்க பிரயோசனப் படலாம் இருந்தும் பிறந்த நாள் என்றதும் நினைவுக்கு வருவதுஎது மீடியாக்கள் படம் எடுப்பதற்கும்பொது ஜனங்கள்படமெடுப்பதிலும் வேறு பாடு என்பது தொழில் நுட்பத்தில் வேண்டுமானால் இருக்கலாம் ஆலயங்களின் இந்தநிலைப்பாடுபுரியாத ஒன்று கங்நம் நடனம் பலரையும் ஈர்க்கும் என்று நினைத்தேன் தவறோ

    ReplyDelete
  12. ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறப்பதால் எல்லா நாளும் பிறந்த நாளே இது தான் என் வாழ்க்கை தத்துவமும்.

    ReplyDelete
  13. கேள்வி என்று நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுகிறீர்கள் தத்துவப் படியா

    ReplyDelete
  14. உங்கள் மகனுக்கு எங்கள் மன்மார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ஸார்.

    காணொளிகள் யானையைக் குளிப்பாட்டுவதும் நாய்க்குட்டி விளையாட்டும் மிகவும் அழகாக இருந்தன.

    கீதா: நான் அடிக்கடிச் சொல்லுவது ஒவ்வொரு நாளும் நாம் புதிதாய்ப் பிறப்பதால் எல்லா நாளுமே பிறந்தநாள் என்று. அம்மாவுக்கு ஹைஃபைவ்!!! சொல்லிடுங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. சொல்வது வேறு அதன்படி நடப்பது வேறு தினமும் பிறந்த நாளாஐக் கொண்டாடுகிறீர்களா கங்நம்நடனம் பயில முயற்சி செய்ய வில்லையா

      Delete
  15. ரசித்ததோடு ஆபாசமில்லாத இந்த கங்நம் நடனத்தி பள்ளி சிறுவர்களுக்கு காட்டலாமே அவர்களும் விருப்பமிருந்தால் பயிலலாம்

    ReplyDelete
  16. // ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறப்பதால் எல்லா நாளும் பிறந்த நாளே... //

    இது ரொம்பச் சரி! எங்கள் இனிய வாழ்த்து(க்)கள் !

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் புதிதாய் பிறந்ததற்கு வாழ்த்து சொல்வோம்

      Delete