புதன், 30 ஜனவரி, 2019

வாழ்வின் புதிர்கள்


      
வாழ்வில் புரிந்து கொள்ள வினோதங்கள்

 நாற்பது வயதில் அதிகம்கற்றவனும்   கற்காதவனும் ஒன்றுதான் (அதிகம் கற்காதவன்கற்றவனை விட அதிகம்சம்பாதிக்கலாம் )

ஐம்பது வயதில் அழகுக்கு அர்த்தமே இல்லை  என்னதான்  அழகாய் இருந்தாலும் சுருக்கங்களையும் கரும்புள்ளிகளையும் தவிர்க்க இயலாது

 அறுபது வயதில் உயர் பதவி தாழ்ந்தபதவி எல்லாமொன்றுதான்  ஓய்வு பெற்ற அதிகாரியை  பியூனும் கண்டுக்க மாட்டான்

 எழுபது வயதில்  பெரிய வீடு சின்ன வீடு எதுவும்  அதிகம் வித்தியாசமில்லை  மூட்டுகள் முடங்கி நகர்வதே பிரம்மப்பயத்தமாய் இருக்கும் போது சாய்வதற்கு கிடைக்கும் இடமேபோது மானதாக இருக்கும்

எண்பதில் பணம் இருப்பதும்  இல்லாதிருப்பதும் ஒன்றுதான்  பணமிருந்து செலவு செய்ய விரும்பினாலும் எப்படிஎன்பதே  கேள்விக் குறியாகும்

 தொண்ணுறில் உறங்கி இருப்பதும்விழித்திருப்பதும் ஒன்றுதான் விழித்திருக்கும்போது என்ன செய்வது என்று தெரியாது

 ஆகவே நட்புகளே  டேக் இட் ஈசி
 காலஒட்டத்தில் எல்லோரும் ஒன்றுதான்  டென்ஷனை மறந்து வாழ்க்கையை அனுபவியுங்கள் 

 இதெல்லாம் நான் சொன்னதல்ல அமெரிக்காவில் உளவியல் சங்கஅசோசியேட்  உறுப்பினர்  பி லக்ஷ்மண் சொன்னது

   

                                  

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

மீண்டும் நினைவுகளில்



                                மீண்டும்  நினைவுகளில்
                                ---------------------------------------
 புகைப்படங்களூடே நினைவுகளில் மூழ்கி இருந்தசமயம்  நாங்கள் கோவை அருகே black thunder  க்கு  விஜயம் செய்ததையும் பதிவிட வேண்டும் எதையும் செய்யலாம் என்னும்  மனோதைரியம் இருந்த காலம் இல்லையென்றால்  அந்த நீர்ச் சறுக்கல் செய்திருப்பேனா படம் சரியாக இல்லைபாய் மாதிரி ஒன்றில் சறுக்கி வந்து கீழே  நீரில் விழவேண்டும்    
மிதவையில்  நான் 
நீரில் மிதவைகளில் 
black thunder 
 இன்னும் ஒரு நிகழ்வு நினைத்தால் சிரிப்பு வரும் என் மச்ச்னன் மனைவி அங்கு நிரில் மிதந்து இருந்ததில் கை விரல் சற்றே  பருத்து விட்டது  அதனால் கையில் ருந்த மோதிரம் கழட்ட முடியாமல் ஒரு ஆசாரியிடம்செல்ல  வேண்டி இருந்தது  என் மச்சினி மிதவையில் அமர்ந்து நீரில் விளையாடிக் கொண்டிருந்தவள் அதிலிருந்து வெளியே வர இயலாமல் மாட்டிக் கொண்டதும்  அதிலிருந்து வெளியே வர அவஸ்தைப்பட்டதும்  கிடைக்க முடியாத அனுபவங்கள் படங்கள் சொல்லட்டுமே மீதி 
நீரில் சறுக்கல்


ப்ளாக் தண்டரில் விளையாட்டு







     
   

                            

வெள்ளி, 25 ஜனவரி, 2019

வாழ்வில் சந்தோஷம்



                                     வாழ்வில் சந்தோஷம்
                                      ---------------------------------


உன் சம்பளம் எவ்வளவு  நீ சந்தோஷமாக  இருக்கிறாயா
பெண்ணின் வயதையும்  ஆணின் சம்பளத்தையும் கேட்கக் கூடாது என்பார்கள் இருந்தாலும் சொல்கிறேன்   இதனால் யாராவது பயன் பெறலாமே

என் வயது 45  என்சம்பளம் ரு 14  லட்சம் ஆண்டுக்கு பிடித்தம்போக எனக்கு ரு 95 ஆயிரம் மாதம் கிடைக்கும் சென்னையில் வசிக்கிறேன்   சந்தோஷமாகவே இருக்கிறேன்  நான்  60   70 லட்சம் கொடுத்து வீடு வாங்கவில்லை மாதம்  35 ஆயிரம் ரூபாய் இ எம் ஐ  கட்டும்  அவசியமெனக்கில்லை அதனால் ஏற்படும் மன உளைச்சலும் டென்ஷனும் எனக்கில்லை மாதம்  பத்தாயிரம் ரூபாய் வாடகையில் 60  70 லட்ச பெறுமான  வீடு அலுவலகத்துக்கு அருகேயே வீடு போக்குவரத்துக்கு ஆகும் செலவு அதில் வரும்  டென்ஷன் முதுகு வலி  எனக்கு கிடையாது அலுவலகம் மாறினால் அருகேயே வீடு பார்ப்பேன்  சொந்த வீட்டில் இருந்து  அலுவலகத்துக்கு  வரும் என்சிலநண்பர்கள்  படும்பாடு பார்த்திருக்கிறேன்  சென்னை போக்கு வரத்திலும்  உஷ்ணத்திலும் தினம்40 கிலோ மீட்டர்  பயணம்  செய்து அலுக்கும்  அவர்களைப் பார்க்கும் போதுபாவமாய் இருக்கும் உடல் சோர்வினால்  அவர்களால் முழுதிறமையையும்  காட்ட முடிவதில்லை  அவர்களுக்கும் பெயர்கேடு அலுவலகமும் நட்டப்படுகிறது  குடும்பமும்  அவர்களின்   அருகாமை இல்லாமல்  கஷ்டப்படுகிறது
 மாதம்  20 ஆயிரம் ரூபாய்  ம்யூச்சுவல் ஃபண்டில் போடுகிறேன்  அதில்கிடைக்கும் வருமானம் சொந்த வீட்டில் கிடைக்கும் வருமானம்விட அதிகம்
 ரூபாய் 25 ஆயிரம் வீட்டுச்செலவுக்கு பெட்ரோல் இ பி காய்கறி   பால்  வீட்டு வேலைக்காரி இத்தியாதி செலவுகளுக்கு ஆகலாம்  மனைவியின் தங்க சிட்டுக்கு ரூபாய் ஆறாயிரம்   மனைவியை சந்தோஷமாய் வைத்திருக்க  வேண்டுமே கிராமத்தில் தனியே இருக்கும் பாட்டிக்கு ரூபாய் இரண்டாயிரம்  குழந்தைகளின் பள்ளி செலவுக்கு ரூபாய் மூன்றாயிரம்
வெளியில் போகவர  சாப்பிட என்று மாதம்  14ஆயிரம் மீதி இருக்கும்  15 ஆயிரம் அவசர தேவைகளுக்கு
எனக்கு க்ரெடிட் கார்ட் கிடையாதுநான் இ எம் ஐயில் பொருட்கள் வாங்குவதில்லை அதுஒரு ட்ராப் (trap) எனக்கு மாதக் கடைசி ப்ராப்ளம்   கிடையாது
என்னிடமொரு  125 சிசி பைக் ஐந்து ஆண்டு கால பழசு  இருக்கிறது இரண்டு லட்ச ரூபாய்  மதிப்புள்ள  ராயல் என் ஃபீல்ட் காண்டினெண்டல்  பைக் மீது ஆசைதான்  ஆனால் அதற்கு  ஆகும்செலவுகள்  அதிகம் என்பதால் வாங்கவில்லை 1000 சிசி ஹாட்ச் பாக்  கார் ஒன்று இருக்கிறது அது நம்சாலைகளுக்கும் என் தேவைக்கும் போதும்
 ரெஸ்டாரெண்ட் களில் செலவு செய்வதை விட மனம்மகிழும் சுற்றுப்பயணம்  மேற்கொள்வொம்  கையில் உணவு எடுத்துக் கொள்வோம்
எளிமையான என் வாழ்க்கை என்னைவிட சம்பாதிக்கும்  பலரைவிடஎன்னை சந்தோஷமாக  வைத்திருக்கிறது
 இதையெல்லாம் என் தந்தையிடம் கற்றேன் அவருக்கு கடன்கிடையாது சொந்த வீடும் ஆரோக்கியமான உடலும் இருக்கிறது 70 வயதாகிறது  பீபி  சுகர் முதுகு வலி ஏதும் கிடையாது  காலையில் ஐந்து மணிக்கு  எழுந்திருப்பார்  சுமார் மூன்று கிலோ மீட்டர்தூரம் நடப்பார் யோகா போன்ற உடற்பயிற்சிகள் செய்வார்  எங்கு போகவும் பஸ்ஸிலேயே செல்வார் அல்லது நடை     வீட்டில் சில்லறை வேலைகளை  அவரே செய்வார் அம்மாவுடன் ஆதரவாகவும அன்பாகவும்பொழுதைக்  கழிப்பார் உறவுகளின்  விசேஷங்களுக்குச் செல்வார் எங்களைக் காண சென்னைக்கு அடிக்கடி வருவார்  என் தந்தையின் நண்பர்களும்  அவர்களது பிள்ளைகளும்  வெளி  டுகளில்  நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்
 என் மாமா ஒருவர் பெரிய பணக்காரர்  வாய்க்கு ருசியாகசாப்பிட முடியாது நிறைய உடல் உபாதைகள்  என் தாய்க்கு நாங்கள் அயல் நாடுக்ளுக்குச்சென்றுசம்பாதிக்க வில்லையே என்னும் குறைபாடுஇருக்கலாம்  ஆனால் இங்கு கிடைக்கும்நிம்மதி பிள்ளைகள அயல்   நாடுகளுக்குப்போனால்  கிடைக்காது என்றும் தெரியும் என் அப்பா   அடிக்கடி சொல்வார் சிம்பிள் லிவிங் ஹை திங்கிங் தான்முக்கியம் 
 என் தந்தையே மிகப் பெரிய பணக்காரர் நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்பதை அவரிடம்தான் கற்றேன் அவரே என்  இன்ஸ்பிரேஷன் என்றுநான் அவரிடம் இதுவரை சொல்ல வில்லை சொல்லித்தெரிய வேண்டியதா அது  
இப்போது உங்கள் முதல் கேள்விக்கு வருகிறேன்  நான்  மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்
🌸🌸🌸🌸  *    
    நல்வாழ்த்துகள்
(படித்ததில் இருந்து அடாப்ட் செய்தது )





 
                             -----------------------------------------

செவ்வாய், 22 ஜனவரி, 2019

காலச் சக்கரத்தில் பயணம்


                           காலச் சக்கரத்தில்பயணம்  புகைப்பட உதவியுடன்
                         ----------------------------------------------------------------------------------
முனைவர் ஜம்புலிங்கம்  அவர்கள் மைசூர் பிருந்தாவன்  கார்டன் பயணம்  பற்றி எழுதி இருந்தார் எனக்கும்  பிருந்தாவன்  கார்டெனுக்கு போய் வந்த நினைவுகள் எழுந்தது ஆனல் வெறுமே  நினைவுகளை வைத்து மட்டும் எழுதினால் சுவைப்பதில்லை  நினைவுகளுக்கு துணை நின்ற புகைப்படங்களைத் தேடி எடுத்தேன்   என்னவெல்லாம் நினைவுகள்
என் மனைவியின்   சித்தி பையன் ஒரு கார் அரேஞ்சு  செய்திருந்தான் அவன் இருக்குமிடம் எங்கள் வீட்டிலிருந்துசுமார் 25 கி மீ தூரம் மைசூருக்குப் போகவர சுமார் முன்னூறு கிமீ  எங்களை பிக் அப் செய்து ட்ராப் செய்துஅவன்  வீட்டுக்குச் செல்ல வேண்டும்  அதனால் தூரம்  சுமார் 50 கிமீ அதிகம்  அந்த காரில் வைப்பர் வேலை செய்ய வில்லை போகும்போது மழை இருந்தது ட்ரைவர் தன் கைகளால் கார் கண்ணாடியை  துடைத்து விட்டுக் கொண்ருந்தார்  அது ஒரு புது எக்ஸ்பீரியன்ஸ்  மைசூர் சாமுண்டி கோவில் மைசூர் ஜூ கார்டென்ஸ் எல்லாம்பார்க்க ப்ளான்   முதலில் பொகும்வழியில் ஸ்ரீ ரங்கப் பட்டணமும் சென்றோம்  என்  பேரக் குழந்தைகளுக்கு  ஜூ காண்பதில் ஆர்வம்  ஸ்ரீ ரங்கப்படணத்தில் என்  மருமக்ள்கள் குதிரை ஏறி சவாரி செய்தனர் அதிலிருந்து அவர்களை ஜான்சிகி ராணி என்று கூப்பிடத்துவங்கினேன்  ஜூவில் சிங்கம் ஒன்று என் பேத்தி அருகே சென்றபோது கர்ஜித்ததுஅருகில் இருந்தபேத்தி மீது அதன் எச்சில் தெறித்தது சிங்கம் என்மேல் துப்பி விட்டது என்று அழுதாள் (அப்போது அவளுக்கு சுமார் இரண்டு வயது )


ஆஃப்ரிக்க யானையை அங்குதான் பார்த்தேன் சாமுண்டி கோவிலுக்குச் சென்றோம்  வரும்வழியில் ஒரு பெரிய காளைச் சிலையைப் ( நந்தி என்று சொல்ல வேண்டுமோ?) பார்த்தோம் பிருந்தாவன சோலையில் அப்போதெல்லாம்மின் விளக்கில் நடமிடும்நீர்  பிரசித்தம்  ஆனால் அதன்நேரங்கள் பற்றி தெரிந்துகொள்ள வில்லை  கார்டனுக்குள் சென்றவுடன்  மீன்  வறுவலின் வாசனையில் மனம்பறிகொடுத்தவர்கள் அங்கே நேரம் அதிகம் எடுத்துக் கொண்டார்கள் அதன் பின் உள்ளே நுழைந்தால் மின் ஊற்றுகள்  நிறுத்தப்பட்டு விட்டன  எங்களுக்கு ஏமாற்றமே
ஜன்சி ராணி சின்னவள் 

ஜான்சி ராணி  பெரியவ;ள்

கர்ஜித்த சிங்க ம்

ஆஃப்ரிக்க யானை 

மைசூர் சமுண்டி  மலையில் இருந்துஇறங்கும் வழியில் நந்தி 

பேரனும்  பேத்தியும்  


ஸ்ரீரங்கப்பட்டணமா  சாமுண்டி கோவிலா 







   

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

விடுப்பு


                                          விடுப்பு
                                          ------------

சென்னை க்கு வருகிறோம்   சில நாட்கள் என் மகனுடன் இருப்போம்  எனக்கு வலை உலக நண்பர்களை  சந்திப்பதில் எப்போதும் ஆர்வம் இருப்பது பலரும்  அறிந்த விஷயம்  இம்முறையும் பல நண்பர்களைசந்திக்க விருப்பம்  சந்திப்பில் விருப்பம் உள்ளவர்கள் திரு ஜீவி  அல்லது ஸ்ரீராமைத்  தொடர்பு கொள்ளலாம்  மற்ற விஷயங்கள் சந்திப்பின் போது

திரு ஜீவி 16ம் தேதி சந்திக்கலாமா என்றார் ஆனல் அது  தோது படாதுபோல் இருக்கிறதுஎன் மகனின்று மாலை  13ம் தேதி  வருகிறான் பொங்கலுக்கு அவன் மகனுடன் என்பேரனுடன்  இருப்பான் எல்லாமே ஒரு ஃப்லூயிட் நிலையில் இருக்கிறது நாங்களே சென்னக்கு 16ம் தேதிதான் வருவோம் போல் இருக்கிறது நான் அவன்சைச் சார்ந்தேஇருப்பதால் எதையும்  நிச்சயமாக சொல்ல முடியவில்லை நாங்கள் சென்னை வந்ததும் திரு ஜீவியை தொடர்பு கொள்வோம் அதன்பின்  தான் எதையும்  கூற முடியும் என்று தோன்று கிறது     எப்போதும் போல் நான் அவசரப்பட்டு விட்டேன் என்றேதொன்றுகிறது



புதன், 9 ஜனவரி, 2019

GM vs GM


                                         GM vs GM
                                        ----------------

என்ன எழுதுவது என்று மனதை குடைந்து கொண்டிருந்தபோது ஒரு ட்ரெண்டி  தலைப்பில் எழுதினால் என்ன என்று தோன்றியது  ட்ரெண்டி சப்ஜெக்ட் என்றால்  இப்போது கிரிக்கட் தான்
என் கிரிக்கட் அனுபவங்களைப் பகிரலாமென்று தோன்றியதுவழக்கம் போல் நினைவுகள் துணை போயின  
அன்று ஒரு அனொஃபிஷியல்  நோட்டிஸ் வந்தது  ஒரு கிரிக்கட் மாட்ச் ஆடலாமென்றும் ஆடத்தெரிந்தவர்கள் கிளப் நிர்வாகியிடம் பெயர் கொடுக்கலாமென்றும்  எழுதி இருந்தது  நான் ஏன் பெயர் கொடுக்கக் கூடாது என்று தோன்றியது பெங்களூரில் இருந்தபோது கிரிக்கட் கிளப் பில் உறுப்பினராயிருந்து வாரம்தோறும்   ஞாயிற்றுக்கிழமைகளில் அநேகமாக எல்லா கிரௌண்டுகளிலும் ஆடியதும் நினைவுக்கு வந்தது எங்கள் டீமில் ஆடிய ஒருவர் பிற்காலத்தில் கர்நாடக மந்திரியாக இருந்தாரென்பதும் நினைவுக்கு வந்தது அதுவா இப்போது முக்கியம் நான் ஆடலாமா வேண்டாமா  என்பதே கேள்வி
ஏறத்தாழ ஆறாயிரம் தொழிலாளிகளில்  நோட்டிஸ்  அதிகாரிகளைக் குறி வைத்திருந்தது  ஒரு டீமுக்கு  அன்றைய ஜெனரல் மானேஜர் காப்டனாக இருப்பார் என்று தெரிந்தது பெரிய கம்பனியின்  நிர்வாகி  ஒரு டீமுக்குக் காப்டன்  அவர் தனது டீம் மெம்பர்களைத் தேர்ந்தெடுத்து விட்டிருந்தார்  இன்னொரு டீமில்யார் யார் ஆடப்போகிறார்கள் என்பதே கேள்விக்குறியாகி இருந்தது ஆட விருப்பம் தெரிவித்தவர்கள் தங்களுடைய அனுபவப் பிரலாபங்களைத் தெரிவிக்க வேண்டப்பட்டு இருந்தனர் நான் என்பிரலாபங்களில் பெங்களூரில் விளையாடி இருந்தது குறித்து நிறையவே எழுதி இருந்தேன்  ஒரு லெக் ஸ்பின்  போலர் என்றும்  சிறந்தஃபீல்டரென்றும் எழுதி இருந்தேன் என்பெயரில் இனிஷியலும்  ஜீ எம்   என்று இருந்ததால் எதிர் டீமுக்கு என்னைக் காப்டன் ஆக்கினார்கள்  என் டீமில் ஆடியவர்கள் ஒரு சந்தேகம் கிளப்பினார்கள் நாம்திறமையாக விளையாடினால் ஒரு வேளை ஜெனரல் மானேஜரின்  டீம்  தோல்வி யடைந்தால் அதனால் ஏதாவது விளைவுகள்  ஏற்படுமோ என்று பயந்தனர்  எதிர் டீமின்  தலைவன் என்னும் முறையில் அவர்களை தைரியப்படுத்துவது  என் வேலையாயிற்று ஆட்ட மைதானம் வேறு தொழிற்கூடம் வேறு என்று எடுத்துரைத்தேன்  உனக்கென்ன நீ ஒரு டெம்பொரரி காப்டன்தானே என்று கூறி என்னை வெறுப்பேற்றினார்கள்
  ஆட்ட மைதானம்  எல்லோருக்கும் பொதுவானது அங்கு நன்கு திறமையை காட்ட வேண்டுவதெ ஒவ்வொருவரின்கடமை என்றேன்
டீம் என்பதை நான்  நம் தின வாழ்வின்  செய்கைகளுக்கு  ஒப்பிட்டுக் காட்டினேன் டீமில் ஏற்றதாழ்வுகள் பார்க்கக் கூடாது என்று எடுத்துக் கூறினேன் ஆடுகளத்தை  வாழ்வியலுக்கு ஒப்பிட்டு கூறினேன்   வாழ்வில் வெற்றி தோல்வி சகஜம்தான் வெற்றி தோல்வி முக்கியமல்ல  வெற்றியடையநம் முயற்சிகளே முக்கியம் 
 ஆட்டம் ஆட டாஸ் போட்டார்கள்  அதில் தோல்வியே வந்தது எங்கள் டீம்  முதலில் ஃபீல்டிங் என்றாயிற்று  சுற்றி நின்று  ஆடும் தீட்டம் விவரித்தபோது முதலில் பாட் செய்பவர்கள் நம்மை  முதலில் துவம்சம்செய்யப்போகிறார்கள்  என்னும்குரல் முதலில் ஒலித்தது கிரிக்கட் விளையாடியவருள் காட்ச் கோட்டை விட்டவர்கள் யார் என்று கேட்டேன் யரும் காட்ச் கோட்ட விட்டிருக்கவில்லை என்ற  பதில் வந்தது கிரிக்கட்விளையாடி இருந்தால் ஒரு முறையாவது காட்ச் பிடிக்க முடியாமல் இருந்திருக்கும் என்னும் அடிப்படை உண்மையைச்சொல்லாமலிருந்தேன்  அவர்களுக்கு ஆடத்தெரியாது என்று சொல்லி பயமுறுத்த விரும்பவில்லை
முதலில் பாட் செய்ய வந்த பொது மேலாளர் குழுவில் அவ்ரே வந்தார்  எங்கள்டீமுக்கு அதுவே கிலி கொடுத்தது முதல் பந்தை வீசியவுடன் அவர் எதிர் கொண்டதைப் பார்த்தபோது  அவரும் ஆடி நாட்களாகி விட்டது தெரிந்தது நம்மைப் போல்தன் என்னும் எண்ணம் உதித்தது எல்லோருக்கும் ஆடி நாட்களாகி விட்டதுஅவர்கள் ஓடுவதிலேயெ தெரிந்ததுநான் என்னை கல்லியில் ஃபீல்ட் செய்ய நிறுத்திக் கொண்டேன்
ஆட்டம்பார்க்க  பலரும் குழுமி இருந்தனர் போடப்பட பந்துகள் விக்கெட்டுக்கு எதிரில் வந்தால்தானே அவர்களாலும் அடிக்க முடியும்  எப்படியோ பந்துகள் போடப்பட்டு அடிக்கப்பட்டு ரன்கள் எடுக்கப்பட்டன       

 ஒரு சமயம் ஒரு பாட்ஸ்மன் அடித்த பந்து என்னை நோக்கி வந்தது அடிபடாமல் காக்க கையால் முகத்தை  மறைத்துக் கொண்டேன்   என்ன ஆச்சரியம்  கையில்விழுந்த பந்தை என்னை அற்யாமல்  பிடித்துக் கொண்டேன் பாட்ஸ்மன் அவுட்  உற்சாகம்பீரிட்டது
ஆட்டத்தை  எழுத்தில் வர்ணித்தால் சுவை குறையு,ம் எங்கள்டீம்  வீரர்களுக்கு எப்படியாவது ஆட்டம் முடிந்தால் போதுமென்று இருந்தது திறமையை வெளிப்படுத்த முடியாமல் பயம் இருந்தது பொது மேலாளர் குழு வெற்றி பெற்றது அவரை எல்லோரும் வாழ்த்தினர்
 இதன்நடுவில் மாட்சை ஒலிபரப்பினார்கள்  ஒலி பரப்பும்திறமையாளர்களுக்கு தெரியும்  பொது மேலாளரைப் புகழ்ந்து தள்ள கிடைத்த வாய்ப்பு அது நன்றாகவே செய்தார்கள்  முடிவில் ஒன்று மட்டும் தெரிந்தது  பொறுப்பில் இருப்பவர்க்கு எதிராக செயல்பட அது ஆட்டமாக இருந்தாலும் சரிபலரும் தயங்குகின்றனர்  G M    GM தான் உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா (எழுதியது எல்லாம்   கறனையே ) 


cricket game 
     





 
                             -----------------------------------------


திங்கள், 7 ஜனவரி, 2019

ட்ரையல்


 ட்ரையல்

 என்ன எழுதித்தான் புரிய வேண்டுமா  ஒரு மாற்றத்துக்கு மிகக் குறைந்த  எழுத்துகளுடன் ஒரு சோதனைப்பதிவு


கீழ் காணும் இந்தக் காணொளிகளில் இருப்பவன் என் இரண்டாம்பேரன் எங்கே என்பது வாசகர்களின்  யூகத்துக்கு 







மச்சினியின் பேத்தி 



நானும் மச்சினியும் 
மச்சினியின் பேத்தி இங்கிலாந்து வாசி  ஒரு நாள் எங்களுடனிருந்தாள்
காலை நடைதான்  ஒரு உடற்பயிற்சியாய்  இருக்கிறது இப்போதெல்லாம் மொபிலிடி மிகவும்  குறைந்து விட்டது  முடிவதில்லை அவ்வப்போது எனது செய்யாதகுற்றத்துக்கு தண்டனையா என்னும் பதிவு நினைவுக்கு வரும் காலை நடைபயிலும்பார்க்கில் சிவன்

சிவன்





வெள்ளி, 4 ஜனவரி, 2019

ஒரு ஆதங்கப்பதிவு ஆங்கிலத்தில்




                           ஒரு ஆதங்கப் பதிவு ஆங்கிலத்தில்
                        ----------------------------------------------------------
என் ஆதங்கங்களை நிறையவே பகிர்ந்திருக்கிறேன்  ஒரு மாற்றத்துக்கு அவையே ஆங்கிலத்தில்   எதிர்பாராததை வழக்கம்போல் செய்கிறேன் அரைத்தமாவுதான் 


For long .the existence of disparities in our society, must be plaguing in the minds of well meaning people. The awareness that it is there is seen in the measures adopted from time to time. But the measures adopted do not go into the root cause for these disparities. 

People are born same ,but the only point is that they are born into different families with different  back grounds.People of same age, same language, same ethnicity, are not getting the same opportunities, to swim against the current. 

Some measures adopted to bridge the gap were seen in reservation schemes for the born backward classes. The idea is to give opportunity to the have nots to catch up with the luckier groups.But this has only kindled the anger of one group and over a period, creation of another sect. 

What had been thought of as division of labour in days of yore, had only helped to perpetuate the denial of same opportunities. Education and knowledge had been denied to the majority under the garb of religion and sastras. However much we deny that, the truth remains the same. The thoughts of Periyars, and  Ambedkars  must have evolved from the tyranny of the upper castes. 

Education is a great leveler, But in education also, disparities exist and what with people wherewithals are  able to afford quality education and the majority still not able to cope up.The recent RTE is one measure to allow the have-nots to get quality education. But the measure only scrapes the tips. The government gives a lot of freebies and subsidies. And these things only help perpetuate the situation. 

There should be no difference in imparting education. But as long as education is deemed as business, this can not be avoided. The simple solution is , the government should take over education, and ensure and impart FREE and SAME education to all people which will inculcate a feeling of equality and oneness, in the young minds. Depending on their capabilities they can grow with same opportunities. Over a period we can hope for a society without disparities. 
                                                     ---------------------------------------------------------------------.      




...


செவ்வாய், 1 ஜனவரி, 2019

புத்தாண்டே வாவா


                                          புத்தாண்டே  வாவா
                                          -------------------------------

  அப்பாடா ஒரு வழியாய் 2018 முடிந்து விட்டது  ஒரு புத்தாண்டு மலர்கிறது என்னைப் பொறுத்தவரை புத்தாண்டு பிறக்கும் போது  ஒரு ஸ்டாக் டேகிங்  செய்வது வழக்கம் 
இந்த முறை நினைக்கும் பொது  எல்லா ஆண்டும்போல இதுவும் இருக்கும்  என்று நினைக்க முடியவில்லை
என்னவெல்லாமோ சிந்தனைகள்  எழுகிறது  எல்லாவற்றையும் எழுத்தில் வடிக்க முடியவில்லை ஒவ்வொரு நாளும் விழித்து எழும்போது இன்றும் ஒரு நாள்  ஆயுள் நீட்டிக்கப்பட்டதுபோல் தான் உணர்கிறேன் 

நண்பர் ஸ்ரீராம் ஒரு முறை  எழுதி இருந்தார்  கடந்த ஆண்டின் நிகழ்வுகளைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லதுதான். சந்தோஷ நினைவுகளை நினைவில் நிறுத்தி, அல்லவைகளை அகற்றி நேற்று என்பது உடைந்த பானை, நாளை என்பது மதில் மேல் பூனை, இன்று என்பதே கையில் உள்ள வீணை என்று இன்றைய தினத்தில் வாழ்பவன் நான்!
கேட்க படிக்க நன்றாக  இருக்கிறது சாத்தியமா என்பதே கேள்விக்குறி நடந்தவைகளை மறந்து இன்றைய சிந்தனையில் மட்டுமிருப்பது  முடியாது என்றே தோன்றுகிறது அதுவும் என் போன்றோருக்கு நேற்றைய நிகழ்வுகள் நன்றுபோல் தோன்றும்   நாளை என்பது ஒரு வித அச்சத்தை தருவதாகும்  அச்சம் என்றால் பலரும் நினைப்பது போன்ற அச்சமல்ல  எனக்கு வாழ்வில் செய்து முடிக்க வேண்டிய கடமைகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன  இனி நான் இருந்தாலும் இல்லாது போனாலும் ஒன்றுதான்
 ஒரு முறை என் வீட்டில் பூத்த பூ பற்றி எழுதி இருந்தேன்
 சுவரேறிப் படர்ந்து பூத்துக் குலுங்கின
வெள்ளை ரோஜாவும் மல்லியும் முல்லையும்
பல்வேறு நிறங்களில் கண் சிமிட்டும்
செம்பருத்தி;காணக் கண் கோடி வேண்டும்.

ஆண்டுகள் பலவாகிப் போக மராமத்து
வேலைக்காக செடிகளையும் கொடிகளையும்
அகற்றச் சொன்னார் மேஸ்திரி.

மீண்டும் நடும் செடிகளும் புதுப் பொலிவுடன்
பூக்கத்தானே போகிறது எனும் நம்பிக்கையில்
பழைய செடிகள் வெட்டிக் களையப் பட்டன

யார் கண் பட்டதோ, ஆண்டிரண்டாகியும் செடியும்
கொடியும் வளர்ந்தும் பூ மட்டும் பூக்கவில்லை.
பூச்செடிகளிலும் மலடு என்றுண்டோ.?

தளராது நீர் ஊற்றி,நாளும் காத்திருந்து காத்திருந்து
ரோஜாச் செடியொன்றில் செந்நிறத்தில் மொட்டவிழ்ந்து
பூ ஒன்று பூக்கக் கண்டதும் ஆஹா..கொள்ளை அழகு.
ஜென்ம சாபல்யம் அடைந்திருக்கும் பூச்செடியும்.
 பொதுவாக இது ஒரு மகிழ்வான நிகழ்வு என்றே  நினைத்தேன்
 ஆனால் அதற்கு ஒரு பின்னூட்டம் இப்படி இருந்தது!

பூத்தால் எனக்கென்ன
பூக்காவிட்டால்தான் என்ன
மனிடர் நினைப்பை எல்லாம்
 என்மேல் ஏற்றி சொல்லல் எதில் சேர்த்தி
பூக்காமல் இருந்தாலே நிம்மதி
 கொய்ய வருபவனைப் பார்த்து
 குலை நடுங்காமலாவது  இருக்கலாம்
 என் எழுத்துகளை என் எண்ணங்களுக்கு ஒரு வடிகால் என்று நினைப்பவன் நான் 
எழுதுவதில் ஒரு உண்மைத்தனமிருக்க வேண்டுமென்று நினைப்பவன்  நான்  அதனாலேயே என்சிறு கதைகள் பலவும்  எல்லோராலும்  ரசிக்கப்படுவதில்லை அதுகுறித்து நான் கவலைப்பட்டதுமில்லை  என் எழுத்துகளுக்கு சாயம் எறியப்பட்டதுண்டு  கவனிக்கவும்  சாயம்பூசப்பட்டது என்று சொல்லவில்லை  சில நேரங்களில் சாயமெறியப்படும்போது மனம் வருந்தியதூண்டு நான் எழுதுகிறேன்  எழுதுவேன்  நிச்சயமவை என் எண்ணங்களின் வெளிப்பாடுதான் அவற்றில் நான் சமரசம் செய்து கொள்வது இல்லை பலரும்  நோ என்று நினைத்து ஆம் என்று சொன்னதுமுண்டு   இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் தரக் கட்டுப்பாட்டு துறையில் இருந்ததால்  என்னால் அப்படி இருக்க முடியவில்லை போலும்  என் எழுத்துகள் என்கருத்துகள் அவற்றைப் பொது வெளியில் வைக்கிறேன்  உடன்படாதார் பலரும் இருக்கலாம்   ஆனால் எனக்கென்னவோ நிச்சயம்படித்தவர்கள் நெஞ்சில் ஒரு சலனமிருக்கும்   அதையே  அவர்கள் இன்னும்சற்று  கூர்ந்து கவனித்தால் என் தரப்பு நியாயம் தெரிய வரலாம்
ஒரு பதிவர் குறிப்பிட்டிருந்தார்  பின்னூட்டம்மூலம் அவர்களை வெளிப்படுத்திக் கொள்வார் என்று நினைப்பதுதவறு என்று  அதுவும்சரிதான் என்றே எண்ணுகிறேன்   பொழுது போக எழுதுபவர்கள்பலரும் இருக்கலாம்ஒருவர் அவர் கருத்துகளுக்கு நம்மை திருப்பி விடப்பார்ப்பார்  தவறில்லை  ஆனால் அதை அவராகஎழுதிக்காட்டலாமே   ஒவ்வொரு வருக்கும் ஓரோர் பாணி
நகைச்சுவை என்பது ஒரு வரம் ஆனால் எல்லா வற்றையும் நகைச் சுவையாக்குதல் சரி அல்ல என்றே நினைக்கிறென்  
என் குறைகளும் நானறிவேன்அதையே ஒரு பதிவுமாக்கி இருக்கிறேன்
 
ஆண்டொன்று கூட அகவை ஒன்று கூடுகிறது.
அதோடு சில வேண்டாத குணங்களும் கூடுகிறது..
, நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்கவும்
 எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்தவும்  விரும்பும்

என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இடவும்தான்

நான் என்னிடம் விரும்புவது.

மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடை.

எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு.

வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொடு.

நான் படும் வேதனைகளை, வலிகளை
அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
திறந்தால் அதனை அக்கணமே மூடிவிடு.

அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே
 நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வை.


நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.

இவ்வையகம் விட்டு நான் அகலும்போது என்னை நாலுபேர் நல்ல விதமாக எண்ணவேண்டாமா 

பலரும் பாரதியைப் பற்றி எழுதும்போது இக்கவிதையை  மேற்கோள் காட்டுகிறர்கள் ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை 
                        
தேடிச்சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடி கிழப்பருவமெய்தி - கொடும்
கூற்றுக் கிரையென பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
பாரதியே வேடிக்கை மனிதன் போல் வீழ்ந்தவன்  தானே  அப்படியெல்லாம் இல்லாதவன்  என்று குறிப்பிடலாம்   பாரடியைதுணைக்கழைப்பவர்  அவன்போல் இருக்க நினைக்கிறார்களா பலரும்  சின்னஞ்சிறு  கதை பேசி மனம்வடித்துன்பம்  மிக உழன்று  பிறர் வாடப் பல கதைகள் பேசித்தானே கழிக்கிறார்கள் ப்லரும் நரை கூடிக் கிழப்பருவம்  எய்துவதில்லை எல்லோரும்  கூற்றுக்கு இரையாகிறார்கள்தான் பாரதியை மேற்கோள் காடி என்னதான்  சொல்ல வருகிறார்கள்  புரியவில்லை  நானும் ஒரு முறை குப்புற் வீழ்ந்து எழுந்தபின் வீழ்வேனென்று  
நினைத்தாயோ என்று எழுதி இருந்தேன் 
பின்னர் தோன்றியது  இப்படியுமெழுதி சமாளித்தேன்

 நரை
கூடிக் கிழப் பருவமெய்தி வேடிக்கை மனிதர் போல் வீழ்வே
னென்றுநினைத் தாயோஎ ன்று கேள்வி கேட்பது அபத்தம் போல் தோன்றுகிறது.

நம்மால் வீழாமல் இருக்க முடியுமா.?அவனே வீழ்ந்தவன் தானே.
 காலனை காலால் என்றும் எப்போதும் உதைக்க முடியுமா? (இப்
போது நான் உதைத்து விட்டாலும் )தவிர்க்கப்பட முடியாதது
தானே மரணம்.?அனுபவிக்கப்பட வேண்டியதுதானே என்று
கூறும்போது  அனுபவம் பகிர்ந்து கொள்ள்க் கூடியதா?வீழ்ந்தவன்
நான எழாமல் போயிருந்தால் நான் பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்க முடியுமா 
எதற்கு இந்த சிந்தனைகள் அதுவும்  புத்தாண்டு துவக்கத்தில்  பகிரப்பட வேண்டுமென்று தோன்றியது எழுதிவிட்டேன்  
எல்லோருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்