Wednesday, January 30, 2019

வாழ்வின் புதிர்கள்


      
வாழ்வில் புரிந்து கொள்ள வினோதங்கள்

 நாற்பது வயதில் அதிகம்கற்றவனும்   கற்காதவனும் ஒன்றுதான் (அதிகம் கற்காதவன்கற்றவனை விட அதிகம்சம்பாதிக்கலாம் )

ஐம்பது வயதில் அழகுக்கு அர்த்தமே இல்லை  என்னதான்  அழகாய் இருந்தாலும் சுருக்கங்களையும் கரும்புள்ளிகளையும் தவிர்க்க இயலாது

 அறுபது வயதில் உயர் பதவி தாழ்ந்தபதவி எல்லாமொன்றுதான்  ஓய்வு பெற்ற அதிகாரியை  பியூனும் கண்டுக்க மாட்டான்

 எழுபது வயதில்  பெரிய வீடு சின்ன வீடு எதுவும்  அதிகம் வித்தியாசமில்லை  மூட்டுகள் முடங்கி நகர்வதே பிரம்மப்பயத்தமாய் இருக்கும் போது சாய்வதற்கு கிடைக்கும் இடமேபோது மானதாக இருக்கும்

எண்பதில் பணம் இருப்பதும்  இல்லாதிருப்பதும் ஒன்றுதான்  பணமிருந்து செலவு செய்ய விரும்பினாலும் எப்படிஎன்பதே  கேள்விக் குறியாகும்

 தொண்ணுறில் உறங்கி இருப்பதும்விழித்திருப்பதும் ஒன்றுதான் விழித்திருக்கும்போது என்ன செய்வது என்று தெரியாது

 ஆகவே நட்புகளே  டேக் இட் ஈசி
 காலஒட்டத்தில் எல்லோரும் ஒன்றுதான்  டென்ஷனை மறந்து வாழ்க்கையை அனுபவியுங்கள் 

 இதெல்லாம் நான் சொன்னதல்ல அமெரிக்காவில் உளவியல் சங்கஅசோசியேட்  உறுப்பினர்  பி லக்ஷ்மண் சொன்னது

   

                                  

25 comments:

  1. எல்லாமே நன்றாய் இருக்கிறது. வாழ்வியல் உண்மைகள்!

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்க உளவியல் நிபுணர் சொல்லியவை ஆயிற்றே

      Delete
  2. அனுபவமொழிகள் பலருக்கும் பயனாகும்.

    ReplyDelete
  3. பெரிய வீடு, சின்ன வீடு.. இதில் உள்குத்து எதுமில்லையே!

    ReplyDelete
    Replies
    1. எழுபது வயதில் உள்குத்து இருக்க வாய்ப்பில்லை

      Delete
  4. நீங்கள் சொன்னவை என்றுதான் நினைத்தேன். எடுத்தாண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முற்றத்து முல்லைக்கு மணமில்லை என்பது தெரிந்தவன் நான்

      Delete
  5. எல்லாமே சூப்பர். உண்மைதானே!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மிகச் சிறிய பின்னூட்டம் ஆச்சரியம்

      Delete
  6. உண்மைதான். நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மேடம்

      Delete
  7. அனைத்து தத்துவங்களும் வாழ்க்கைக்கு தேவையானவையே. என்னதான் இந்த உண்மைகள் ஒருவனுக்கு அவசியமாக இருந்தால்கூட இதை மனதார ஒப்புக்கொண்டு நிம்மதியாக இருப்பவர்கள் மிகக் குறைவே.

    ReplyDelete
    Replies
    1. அனுபவங்கள் பேசுகின்றன நன்றி சார்

      Delete
  8. Replies
    1. பாராட்டுக்கு நன்றி சார்

      Delete
  9. Replies
    1. கூடியவரை உண்மைகளையே பகிர நினைக்கிறேன்

      Delete
  10. அனைத்தும் சிறப்பு. வாழ்வியல் தத்துவங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete
  11. இந்த வாட்சப் செய்தியை சில வாரங்களுக்கு முன்பு படித்தேன்.

    உண்மையாக இருந்தாலும், ஆசை மனிதனை அலைக்கழிக்காமல் இருக்குமா?

    படித்துறையில் காலாட்டிக்கொண்டு இருந்தவனைப் பார்த்து, உழைத்தால் முன்னேறலாம் என்று சொன்னவனிடம், முன்னேறினால்...... என்று பல கேள்வி பதிலுக்கு அப்புறம், "நல்லா நிம்மதியா காலாட்டிக்கிட்டே ரெஸ்ட் எடுக்கலாம்' என்று சொன்னவனிடம், 'அதைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன்' என்று சொல்வதுபோல் இருக்கு.

    எப்படியும் எடுத்துக்கிட்டுப் போகப்போறதில்லை என்பதற்காக பணத்தின்மீது ஆசை இல்லாமல் இருக்காங்களா?

    ReplyDelete
  12. பணத்தின் மீது ஆசை இல்லாதிருக்கவா கூறப்[பட்டது இருக்கும் நிலை தெரிந்துகொள்ளவே பகிர்ந்திருக்கிறேன்

    ReplyDelete
  13. நிதர்சனம். சிறப்பு!

    ReplyDelete