Sunday, October 11, 2020

ஆற்று குளியல்

 

ஆற்றுக் குளியல்

 எங்கள் கிராமம் அழகானது  கிராமம் என்றால் என்னவோ நினைக்க வேண்டாம்  ஒரு தெருவே கிராமம் என்று சொல்லப்பட்டது  நான்சிறுவயதில் என் அப்பாவின்  தாயாருடன்  சுமார் ஓராண்டுகாலம்   தங்கி இருக்கிறேன்திருமணம் ஆனபோது என் மனைவியையும்  எங்கள் கிராமம் காண கூட்டிச்சென்றேன்   அப்போது என்பாட்டி இல்லை காலமாகி விட்டார் பூர்வீக வீடும்   விற்கப்பட்டிருந்தது இருந்தால் என்ன்  என் சிற்றன்னையின்   உறவில் ஒருவர் இருந்தார்  எங்கள்கிராமத்தில் இருந்து சற்று தூரத்தில்இருந்தது அவ்ர்கள் வீடு வீட்டில் அவர் தனியே வீட்டின்  ஒரு பாகம் வாடகைக்கு விடப்பட்டிருந்தது அருகே  ஒரு பெயர் பெற்ற பைத்தியக்கார (பைதியங்களுக்கு மருத்துவம்பார்ப்பவர்)) டாக்டர் இருந்தார்  அவரிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சிலர் தங்க அவர் வாடகைக்கு விட்டிருந்தார் முதலில் அங்கு தங்க எங்களுக்கு பயம் இருந்தது  என்மாமியாரும்  கூடவே இருந்ததில் பயம் குறைந்து இருந்தது ஒரு விஷயம்சொல்லித் தெளிவிக்க என்ன்வெல்லாம்  சொல்ல வேண்டி உள்ளது என்மனைவி மாமியாருடன்  அங்குபோய்ச் சேர்ந்தோம் சும்மாச் சொல்லக் கூடாது வீட்டின் அருகே ஒரு ஆறு பாரத்ப்புழை என்பார;கள்  அந்த ஆற்றின் குறுக்கேதான் மலம்புழா அணை கட்டினார்கள் மாசுபடாத ஆற்று வெள்ளம் சலசல்வென ஓடிக்கொண்டிருக்கும் மழை அதிக்மானால் ஆற்றில் வெள்ளம் வரும் தினமும்  ஆற்றில் குளிப்பதே சுகம்   நீர் அதிகம் இல்லை என்றால்  ஆற்று மணலை சற்று அப்புறப்படுத்தி அதாவ்து  பள்ளம் செய்து அங்கே குளிக்கலாம் என் மனைவிக்கு இதெல்லாம்புதிது  அவள் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவள் எல்லாமே அவளுக்கு புதிது அவளுக்கு  திறந்த வெளிக் குளியலை நினைத்.தும் பார்க்கமுடியவில்லைஆற்றின்  நடுவே ஆங்காங்கு  பாறைக;ள்இருக்கும் கவனமாக  நடக்க  வேண்டும்

இந்தப்பதிவே ஒரு நாள் அவளை குளிக்ககூட்டிச்சென்ற  அனுபவத்தை பகிரத்தான்  கூடவே மாமியார் இருந்தது ஒரு பெரிய உதவிதான்ஆற்றில்  நடப்பதேஅவளுக்கு புதியதாய்   இருந்தது அவளது இரு பக்கத்திலும் நானும் மாமியாரும் அவளைத்தாங்கிபிடித்துக்கொண்டு சென்றோம்பயத்தில் அவள் திமிரியதை கண்டபலரும் அவளும் மருத்துவ சிகிச்சைக்கு வந்தவள் என்றே  எண்ணினர் பரிதாபப்பட்டனர்  ஒரு வழியாக  குளித்தோம் அந்த  அனுபவம் மறக்க முடியாதது                   

 

 

 

 

24 comments:

  1. சுவாரஸ்யமான நினைவலைகள்.

    ReplyDelete
    Replies
    1. என்மனைவியிடம் நினைவு படுத்தினால் அவள் ரசிப்பதில்லை

      Delete
  2. ஹாஹாஹா! சிரிப்பு வந்தது. ஆனாலும் இனிமையான அனுபவங்கள்! நான் காவிரியில் அதிகம் குளித்ததில்லை. ஆனால் கங்கை, யமுனை, மானசரோவர், புஷ்கர் ஏரி போன்ற இடங்களில் குளித்திருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் உள்ளூர் ந்திகளில், தாமிரவருணி, ஸ்வர்ணாவதி ஏன் வைகையிலும் (பரமக்குடி) குளித்திருக்கிறேன். ஹா ஹா ஹா

      Delete
    2. நான் சிறுவயதில் இதே ஆற்றில் குளித்திருக்கிறேன் ஆற்றில் நீர் மிகவும் அளவோடுதான் ஓடும்சாலக்குடி வழச்சாலில்லும் குளித்திருக்கிறேட்ன்

      Delete
    3. கங்கை யமுனை போன்ற ஆறுகளிலும்குளிட்திருக்கிறேட்ன் குளங்களில் குளிக்கப்பிடிக்காது

      Delete
  3. குளியலறையிலேயே குளித்துப் பழகிய எனக்குக் கல்யாணம் ஆகி வந்ததும் புக்ககத்தில் கிணற்றடியில் இரண்டாம் கட்டுத் தாழ்வாரத்தில் வீட்டுப் பெண்கள் எல்லோரும் இருக்கையில் குளிப்பதே பெரிய விஷயமாய் இருக்கும். எல்லோரையும் அப்புறம் போகச் சொல்லிட்டுக் குளிப்பேன். ஏகப்பட்ட எதிர்ப்புக்குரல்கள் வரும்! :)))))) குளிச்சாப்போலவே இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. என்மனைவிக்கு அதே பிரச்சனைதான் அவர் குளிக்கும் போது கம்ப்லீட் ப்ரைவசி வேண்டும்

      Delete
  4. மறக்க முடியாத அனுபவத்தை ரசித்தேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. இத்தனை வயதில் எத்தனைஎத்தனை அனுபவங்கள் அசைபோட நன்று

      Delete
  5. பாரதப்புழா மற்றும் கேரள ந்திகில் பல இடங்களில் (செங்கணூர், திருவித்துவக்கோடு, திருநாவாய்) குளித்திருக்கிறேன். காணாக்குறைக்கு வர்க்கலா கடலிலும் ஸ்நானம் செய்திருக்கிறேன்.

    உங்கள் அனுபவம் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. ராமேஸ்வரம் கடலில், சேதுவில் பலமுறை குளித்திருக்கேன். ஆனால் அதைக் கணக்கில் எடுத்துக்கலை! :)))))

      Delete
    2. நாங்களும்தான் இது ஒரு முதல் அனுபவம்

      Delete
  6. மீள்வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  7. மறக்க இயலா நினைவலைகள்தான்

    ReplyDelete
    Replies
    1. எங்கள் ஊருக்கு முதலில் மனைவியுடன் ஆற்றில்குளிக்க சென்ற அனுபவம்

      Delete
  8. // அங்கு தங்க எங்களுக்கு பயம் இருந்தது  என்மாமியாரும்  கூடவே இருந்ததில் பயம் குறைந்து இருந்தது//

    யாமிருக்க பயமேன் (சுப்பிரமணியம்)  மாமியிருக்க பயமேன் என்று சரணடைந்தது? 

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. மனம் பிசகியவர்கள் வீட்டில் வாடகைக்குஇருந்ததால் சற்றே கிலேசம்

      Delete
  9. முடிவில் சிரிக்க வைத்து விட்டீர்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. இப்போது நினைக்கும்போதுசிரிப்பு வருகிறது

      Delete
  10. இனிய மலரும் நினைவுகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகை மகிழ்ச்சி கூட்டுகிறது

      Delete