Friday, October 9, 2020

மலையக் கெல்லி ---------

 மலையை கெல்லி---------

அண்மையில் நடந்தது  முடிய வில்லை இன்னும் சுமார் ஒரு வாரம் முன்பு ஹாலில்  அம்ர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தோம் ஏதோ அருகில் ஓடியது போல ஒரு உணர்வு  மனைவியும்  ஒரு மூஞ்சூறு [பொல் தெரிந்தது என்றாள் அது எங்கே வரப்போகிறது இருந்தாலும் வீட்டுக்குள் ஒரு எலியை வைத்துக் கொண்டு நிம்மதியாய் எங்கே இருக்கமுடியும் அது கிச்சனுக்குள் போயிற்று என்றாள் மனைவி  கிச்சனுக்குள் இருந்தால் அதை அப்புறப்படுத்துவது எளிது என்றேன்எளிதாக சொல்லி விட்டேன் வேலை அவளுக்கல்லவா என்னால் தான் எளிதில் நடக்கவொ  ஓடவோ முடியாதே ஓரளவுக்கு  தேடிப்பார்த்து ஓய்ந்து விட்டாள் சக தர்மிணி காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்   அடுக்களை கதவை நன்கு மூடிவிட்டோம் பிறகு உற்ங்கப் போனோம்  உறக்கம்  எங்கே வருகிறது கனவிலும்   நிம்மதி இல்லை

மூஞ்சூறு  பெரிதாகி  பெருச்சாளியானது இன்னும்சற்று நேரத்தில் இன்னு ம்பெரிதாயிற்று சம்பந்தாசம்பந்தம்  இல்லாமல்  மீன் அவதார  மீன் போல  பெரிதாகிபெரிதாகி  பயமூறுத்திய்து முன்பு போல் ஆனால் ஒரு வழி செய்திருப்பேன் ஹூம் (_இதுபெரு மூச்சு) ஒரு வழியாய் விடிந்த்து அடுக்களையில்  இருந்தஎல்லா சாமன்களையும்   அப்புறப்படுத்தி  தேடினாள் என்மனைவியும்  வேலைக்காரியும்   என்னபலன் ?  அடுக்களை க்ளீன்  ஆயிற்று  எலியின் சுவடே இல்லை சரி நமக்கு டிமிக்கி கொடுத்து  தப்பி இருக்கும்  என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டொம் அன்று மாலை டி வி பார்த்துக் கொண்டிருந்தபோது  எலியார் எங்களை குசலம்  விசாரிக்க வருவது போல்  டிவியின் அருகே இருந்த ஒரு மண்பாத்திரத்தில் இருந்து வெளியே வந்தது  என்மனைவியை  விளித்துக் காட்டினேன் கையிலா பிடிக்க முடியும்  ஒரு தென்னந்துடைப்பமெடுத்து  எலியை அடிக்க தயாராக மெல்ல வந்தாள்மனைவி  எலியைப்பார்த்து விட்டாள்அடிக்க வேண்டியதே  பாக்கி மெல்லமெல்ல சப்த மில்லாமல் அருகே சென்று ஓங்கி  அடித்தாள் எங்கே எலி மேல் பட்டு விடுமோ  என்றபயமே அதிக்மாய்      தெரிந்தது அதற்குள் எலி ஓடிப்போய்  அருகே இருந்த  தையல் மெஷினுக்குள் ஒளிந்தது  அதனுள்தான்   இருக்கவேண்டும் எம்பதில் மனைவிக்கு சந்தேகமே இல்லை  மெசினை  ஒரு சாக்குப் பையால்  இறுக்கி மூடி மறுநாள் வேலைக்காரிக்கு  காத்திருந்தோம் காலையில்;அவள் வந்ததும்   செய்தியை சொல்லி  மெஷினை வெளியில் கொண்டுபோய் சாக்குப்பையை பிரித்தால் எலியார் உள்ளே இருந்தார் இவர்கள் சுதாரிக்கு முன்   எங்கோ ஓடிப்போய்விட்டார் அப்பாடா  தொல்லை விட்டது  என்று  மன்ம் சமாதானமாகியது ஆனால் தொல்லை விட வில்லை  மறுநாள்  அடுக்களையில்  எலியார் வந்திருக்கிறார்  அதை லாவகமாக ஒரு அட்டைபெட்டிக்குள்  அடைத்து  தப்பவிட்டாள்  மனைவிஒரு உயிரை கொல்ல ம்னம் வரவில்லை எனக்கு தெரியாத சமாச்சாரம் எலி உயரத்திலும்   பயணிக்கிறது   மின்னல் வேகம் உயிர் அல்லவா  பரணுக்கும்  தாவுகிறது சரி வந்த இரண்டு எலிகளும் போயாச் நிம்மதிதான் என்றால்  அதுதானில்லை   இன்ருகாலைஎலி வந்தட சுவடு தெரிகிறது  ஆனால்  கண்ணில் ப்ட வில்லை 





இன்று எலி அட்டை வாங்கி அதில் மாட்டுகிறதா பார்க்க வேண்டும்   

24 comments:

  1. ஹாஹா.... எலி வந்தால் பிடிப்பது மிகவும் கடினம். அது வீட்டின் அமைதியால் குடும்பம் நடத்த ஆரம்பித்திருக்க வேண்டும். அடுத்து எலிக் குட்டிகளைத் தேடணும்

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் வில்லி வாக்கத்தில் திருமணமாபுதிதில் குடி இருந்தொம் சின்ன வீடு ஒரு முறை இரவு உண்ணும்பொது வந்த சுண்டெலியை மாட்ச் பெட்டியை எறிந்துகொன்றிருக்கிறேனாக்கும்

      Delete
  2. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பிரத்யேக எலி புராணம் இருக்கும். படிக்க சுவாரஸ்யம், அனுபவிக்க அவஸ்தை!

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவரும் தங்கள்அனுபவத்தை அசை போட வைக்கும் பதிவு

      Delete
  3. எனக்கும் எலிகளை கொல்வது பாவமாகத்தான் இருக்கும்.

    என்ன செய்வது ?
    அவர்களும் வாழப்பிறந்தவர்களே....

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் இருப்பிடத்தில் இருந்தால் யாருக்கும் தொல்லை இல்லை

      Delete
  4. அவற்றை விரட்டுவது சற்று சிரமம்தான் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. இல்லை என்று நினைக்கும்போது தலை காட்டும்

      Delete
  5. If Jerry came in, Tom will also follow. Expect arrival of Tom cat.

    ReplyDelete
    Replies
    1. முன்பு பூனைக்குட்டியி ந் வரவு பற்றியும் எழுதி இருக்கிறேன்

      Delete
  6. ஒருமுறை எலிக்குட்டிகளைப் பிடித்து படம் எடுத்து ஏஞ்சலிடம் கண்டனம் வாங்கி கொண்டேன்.  எங்கள் வீட்டிலும் எலிப்புராணம் இருக்கிறது.  கதையாகவும் போட்டிருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. எலி ட்ராப்பில் சிக்கினால் படமெடுக்கலாம் என்றுநினைத்திருக்கிறேன்

      Delete
  7. எலியின் புராணம் அருமை..
    நயம்படச் சொல்வது தங்களுக்கே உரித்தானது...

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தை பாராட்டும் முதல் நபர் நீங்களோ

      Delete
  8. எலிப்புராணம் நானும் ஏழெட்டு வருஷங்கள் முன்னால் எழுதி இருக்கேன். பெருச்சாளியுடனும் குடித்தனம் பண்ணி இருக்கோம். சின்னச் சுண்டெலிகள் அங்குமிங்குமாய் விளையாடும். எங்க குழந்தைகளுக்கெல்லாம் பொம்மைகளே தேவை இல்லை. கண் முன்னே இவற்றைப் பார்த்தாலே போதும்! :))))) எலி, பாம்பு, மூஞ்சுறு (ஒரு முறை கடித்துவிட்டது), பூனை, நாய் என ஒரு சின்ன மிருகக் காட்சி சாலையே எங்க வீட்டில் ஒரு காலத்தில் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. இதை இதைத்தான் எதிர்பார்தேன்வருகைக்கு நன்றி மேம்

      Delete
  9. எலி வருவது கூடப் பிரச்சனையில்லை எங்களைப் போல மரம் சூழ்ந்த இடங்களில் அதைப்பிடிக்க பாம்பாரே உள்ளே வந்துவிடுவார்..

    ReplyDelete
  10. என் வீடும் பசுமை சூழ்ந்திருக்கும் பாம்பு வரவில்லை

    ReplyDelete
  11. எங்கள் வீட்டிலும் எலி இருக்கிறது
    விரட்டத்தான் முடியவில்லை

    ReplyDelete
    Replies
    1. தொந்தரவு தருவதில்லையா

      Delete
  12. பைப் வழியாக மாடிக்கும் வருகிறது...!

    ReplyDelete
  13. எலிகளுக்கு வழியும் தெரிகிறது விரட்ட்டவும்முடிவதில்லை

    ReplyDelete
  14. பழங் கால வீடுகளில் மரப் பரண் இருந்தது .எலிகள் வாடகை தராமல் அதில் குடியிருக்கும் . சில இரவுகளில் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டு ஓடி விளையாடும்போது சகிக்கமுடியாத சத்தம்.தூக்கம் கெடும் . ஒன்றும் செய்ய இயலாத கையறுநிலையில் தவிக்கவேண்டும் .உங்கள் தலைப்பு கல்லி என்று இருக்கவேண்டும் . கல்லுதல் என்றால் தோண்டுதல் .

    ReplyDelete
  15. திருத்தியதற்கு நன்றிசார் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது

    ReplyDelete