Thursday, January 13, 2022

எங்கே தவறு

                 எங்கே  தவறு.....?

                                             -----------------
                                         ( ஒரு சிறு கதை )

தப தப “ என்று கதவு தட்டப் பட்டது.
“ இதோ வருகிறேன். அதற்குள் இப்படியா கதவைத் தட்டுவது” என்று கூறிக் கொண்டே வந்த ஜயந்தி சற்றும் எதிர்பார்க்காத முறையில் , கதவை திறந்ததும் தள்ளப் பட்டாள் அவளுக்கு பரிச்சயமே இல்லாத மூன்று நான்கு பேர் அவளைக் கீழே தள்ளி மிதித்து , அவள் தலை முடியைக் கொத்தாகப் பிடித்து மாறி மாறி அறைந்தார்கள். அவளுடைய பதின்ம வயதுப் பெண்: ஐயோ, ஐயோ அம்மாவை அடிக்கிறார்களே என்று சத்தம் போட ஆரம்பித்தாள்.. ‘ உடனே இந்த ஊரைவிட்டு ஓடிடு. இன்னும் இங்கேயே இருக்கலாம்னு நெனச்சா, உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஜாக்கிரதை” வந்தவர்கள் அவர்களுக்கு கொடுக்கப் பட்ட பணி முடித்துக் கிளம்பினார்கள்.

ஜயந்திக்கு முதலில் ஒன்றுமே விளங்க வில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் விளங்க ஆரம்பித்ததும் நிலைமை கட்டுக்கு அடங்காமல் போவது புரிந்தது. கையில் ஒரு பையில் அத்தியாவசியமான சில துணி மணிகளை எடுத்துக் கொண்டு மகளையும் அழைத்துக் கொண்டு அவள் குடியிருந்த மாடி வீட்டிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளி யேறினாள்.

அன்றிரவு சுமார் பதினோரு மணி அளவில் ஜயந்தி குடியிருந்த வீட்டின் காம்பௌண்ட் கேட்டைத் தாண்டி வந்த சிலர் கீழ்வீட்டின் கதவைத் தட்டினார்கள்.” அந்தத் தேவடியாள் ஜயந்தி எங்கே.? ஒளித்து வைத்திருக்கிறீர்களா.?”  வீட்டின் சொந்தக்காரருக்கு ஒன்றும் விளங்க வில்லை. “ ஜயந்தி மாடியில் குடியிருக்கிறாள். அங்கு போய் பாருங்கள். இந்த அகால நேரத்தில் தொந்தரவு செய்தால் பொலீசுக்கு போன் பண்ணுவோம்.” என்று சத்தம் போட்டார். “ தாராளமாகப் போன் செய்யுங்கள். இந்த வீட்டில் விபச்சாரம் நடக்கிறது என்று நாங்களும் புகார் கொடுப்போம்” என்று அவர்களும் பதிலுக்கு மிரட்டினார்கள். ஜயந்தி அங்கில்லை என்று உறுதி செய்து கொண்ட பின்னர் அந்த ரௌடிக் கும்பல் வெளியேறியது.

அவர்கள் சென்ற பிறகு மாடிக்குச் சென்று பார்த்தபோது கதவு பூட்டப் பட்டிருந்தது தெரிந்தது. இந்த நேரத்தில் யாரிடமும் சொல்லாமல் எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவளை கை பேசியில் தொடர்பு கொள்ள முயன்றனர். சுவிட்ச் ஆஃப் செய்துள்ளதாகத் தகவல் கிடைத்தது.

வீட்டைவிட்டு வெளியே வந்த ஜயந்தி முதலில் அவள் கணவனுக்கு( ? ) ஃபோன் செய்தாள். “ இந்த இடமும் அவர்களுக்குத் தெரிந்து விட்டது. இனி அங்கு இருப்பது முடியாத காரியம். என்ன செய்யச் சொல்கிறீர்கள்” என்று கேட்டாள்.


“ நீ நேராக மைசூருக்குப் போ. நானும் அங்கு வந்து சேருகிறேன்/ பிறகு உசிதம் போல் செய்யலாம் “ என்று பதிலளித்தான்.
இப்படி எவ்வளவு நாட்கள் ஓடி ஓடி ஒளிந்து வாழமுடியும் . இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவள் நினைவுகள் இதற்கான காரணங்களை மேய ஆரம்பித்தது
ஜயந்தி அழகானவள்தான். எல்லோரையும் போல் வாழ்க்கைக் கனவுகள் அவளுக்கும் நிறையவே இருந்தது. டிகிரி படிப்பு முடித்ததும் திருமணப் பேச்சும் எழுந்தது. ஜயந்திக்கு பட்டம் பெற்றதால் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் ஆசை ஏதுமிருக்க வில்லை. ஆகவே திருமண பேச்சு எழுந்ததும் அவள் மறுப்பு ஏதும் சொல்லாமல் கல்யாணம் செய்ய இசைந்தாள். இவர்கள் சுமாரான வசதி படைத்த குடும்பம் ஒரு அண்ணன் . பார்த்துப் பார்த்துதான் திருமணம் செய்தார்கள். ஜயந்திக்கு அவளது திருமண நாளின் முதல் இரவை மறக்கவே முடியாது.
மணமக்கள் இருவரும் ஏகப் பட்ட எதிர்பார்ப்புகளுடன் முதல் இரவை எதிர் நோக்கி இருந்தனர். ஆரம்ப சம்பாஷணைகளுக்குப் பிறகு விளக்கு அணைக்கப் பட்டது. மணமகன் முதலிரவின் போது இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டவன் போல் மெதுவாக அவளை அணைத்தான். இவளும் இணைந்து கொடுக்க மெல்ல மெல்ல உதடோடு உதடிணைய கைகளும் மேலெல்லாம் படர தாம்பத்தியத்தின் முதல் படியில் இறங்கினான். ஓரிரு நிமிடங்களில் அவனுடைய இச்சை தணிக்கப் பட்டதும் சோர்வுடன் சரிந்தான். அதுவரை அவனுடைய இச்சைக்கு தன்னை உட்படுத்திக் கொண்ட ஜயந்தி மெதுவாக உடல் கிளர்ச்சியால் ஆட்படுத்தப் பட்டு அவனை இறுக்கிக் கட்டி அணைத்தாள். இதனை சற்றும் எதிர்பாராத அவள் கணவன் முதலில் கொஞ்சம் பயந்தான். சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்ட அவன் மீண்டும் கலவியில் மூழ்கி அயர்ந்தான். ஜயந்தி அப்போதுதான் மெதுவாக இச்சையின் உச்சத்துக்குச் சென்று கொண்டிருந்தாள். அவள் கலவியின் இன்பத்தை அடையும் முன்பாக அவள் கணவன்  துவண்டு விட்டான். அவனால் முடியவில்லை ஜயந்திக்கு அவன் மேல் கோபம் எழுந்தது. இப்படியாக முதல் இரவு இருவருக்கும் வித்தியாசமான அனுபவங்களைக் கொடுத்தது. அதன் பின் வந்த நாட்களிலும் இதே அனுபவம் தொடர இருவரும் இரவு நேரத்தை வெறுக்க ஆரம்பித்தனர்.இளமைப் பருவத்தின் உடல் இச்சைகளைப் பூர்த்தி செய்ய முடியாத கணவனின் கையாலாகாத்தை வெறுத்து இவளும் , இவள் இச்சையைப் பூர்த்திசெய்ய ஒரு ” பொலி எருது” தான் வரவேண்டும் என்று அவனும் நினைக்கத் தொடங்கினர்.
எது எப்படி இருந்தாலும் ஜயந்தி முழுகாமல் இருந்து ஒரு பெண் மகவை ஈன்றாள். சிறிது காலத்துக்காவது நிம்மதியாக இருக்கலாம் என்று அவள் கணவன் நினைத்துக் கொண்டான். தாம்பத்திய வாழ்வில் எவ்வளவு நாட்கள் இப்படியே தாக்கு பிடிக்க முடியும்.? சண்டையும் பூசலுமாக நாட்கள் ஓடின. ஒரு நாள் இவளையும் குழந்தையையும் விட்டு விட்டு அவன் ஓடியே போய் விட்டான். ஜயந்திக்கு காரணம் தெரிந்திருந்தாலும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் செய்வதறியாது நடமாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு இட மாற்றம் தேவை என்று நினைத்து அவளை அவளது அண்ணன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இடமாற்றம் கொஞ்சம் தெளிவு கொடுத்தாலும் ஜயந்தியின் இளமையின் இச்சைகள் பூர்த்தி செய்யப் படாமலேயே இருந்தது. துணைக்கு ஏங்க ஆரம்பித்தது மனசு. காலையில் எழுவது பள்ளிக்குப் போகத்துவங்கிய பெண்ணின் தேவைகளைக் கவனிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது என்று ஒரே சீரில் வாழ்க்கை நடந்தாலும் மனதின் வெறுமை அவளை ஆக்கிரமிக்கத் துவங்கியது. மெள்ள மெள்ள தன் அண்ணனுக்கும் அவன் குடும்பத்துக்கும் தான் பாரமாய் இருப்பதாய் எண்ணத் துவங்கினாள்
ஜயந்தியின் அண்ணனுக்கு நிறைய நண்பர்கள். அவனது வீட்டுக்கு வந்து போகும் பலரையும் ஜயந்தி கவனித்து வந்தாள். அவர்களில் சிவகுமார் இவளைக் கவர்ந்தான். நிதானமாக அவனைப் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டாள் . சிபகுமாரனுக்கு ஏறத்தாழ இவள் வயதிருக்கும். பெரிய பணக்காரன். மணமானவன், மனசுக்குப் பிடித்தவனாய் இருந்தான். சிவகுமாரனுக்குக் குழந்தை பாக்கியம் இருக்கவில்லை. அவன் மனைவி வீட்டில் அது ஒரு பெரிய குறையாகத் தெரிந்தது. வசதி இருந்தும் குழந்தை பெறும் அருகதை இல்லாதவன் என்பதால் உதாசீனப்படுத்தப் பட்டான். சிவகுமாரன் வீட்டில் குழந்தை இல்லாக் குறைக்கு அவன் மனைவியே காரணம் என்று எண்ணினர். அவனுக்கு மறுமணம் செய்யவும் தயாராயிருந்தனர். குழந்தை இல்லை என்னும் ஒரே காரணத்துக்காக விவாக ரத்து கிடைக்குமா.?மேலும் சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டவன் அதன் பலன்களை இழக்க விரும்பவில்லை. ஜயந்தியைக் கண்டவன் அவளது மையலில் மயங்கினான். ஜயந்தியின் அண்ணனுக்கு இது பிடிக்கவில்லை. ஜயந்தியை மணமுடித்து தனியாகக் குடித்தனம் வைக்கச் சொன்னான். சிவகுமாரனின் தாய்க்கு இதில் உடன்பாடே. சிவகுமாரன் சட்டப்படி ஜயந்தியை மணக்க முடியாவிட்டாலும் கோவிலில் ஆண்டவன் சந்நதியில் ஜயந்தியின் க்ழுத்தில் தாலி கட்டி அங்கே அருகிலேயே வீடு பார்த்துக் குடித்தனம் வைத்தான்.
அதில்தான் வினையே ஆரம்பித்தது. சிவகுமாரனின் மனைவியின் சகோதரர்கள் அடியாட்களுடன் வந்து ஜயந்தியை சிவகுமாரன் இல்லாத நேரத்தில் வந்து மிரட்டியும் அச்சுறுத்தியும் வரத் துவங்கினர். அடிக்கடி ஜாகை மாற்றி பயத்தில் ஜடந்தியும் அவள் மகளும் வசித்தனர். சிவகுமாரனைத் தொடர்ந்து வந்து அவர்கள் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து கலாட்டா செய்ததால், சிவகுமாரன் அவனது காரை எங்காவது தூரத்தில் நிறுத்தி நடந்து வரத்தொடங்கினான்.  ஜயந்தி தனக்காக வாடகைக்கு வீடு தேடினால் அவளை விசாரித்து கணவனோடு வரும்படி வீட்டு உடமையாளர்கள் கேட்டனர். கணவருக்கு அடிக்கடி பயணம் செய்யும் பணி என்று பொய் பேசிப் பார்த்தும் வீடு வாடகைக்கு கிடைக்காததால் சிவகுமாரனுடன் வந்து வாடகைக்கு வீடு பிடிக்கலானாள். இப்படி ஓடி ஒளிந்து வாழ்கையில் சிவகுமாரன் மனைவி கர்ப்பம் தரித்து ஒரு ஆண்மகவை ஈன்றாள். ஜயந்தியின் பாடு திண்டாட்டமாகிவிட்டது. சிவகுமாரனின் உறவினர்கள் வன்முறையில் இறங்க நடந்ததுதான் அவள் கடைசியாக வீட்டை விட்டு வெளியேறியது.
ஜயந்தியை மைசூருக்குப் போகச் சொன்ன சிவகுமாரன் அங்கு சென்று அவளுடன் காரில் அவளது சொந்த ஊருக்கு கூட்டிச் சென்று அவளை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்து அவளை கைவிட மாட்டேன் என்று உறுதி அளித்து வந்து விட்டான்.
ஜயந்தியின் கதை கேட்கும்போது எங்கோ  ஏதோ தவறு என்பது புரிகிறது.  எங்கே என்று தெரிகிறதா.?.   
(  விமரிசனம்  வரவேற்கப்படுகிறது ) 

13 comments:

  1. உன்னைத் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை என்று பாடத் தோன்றுகிறது. தவறு? எங்கே தவறு? ஜெயந்தியின் நடத்தையைச் சொல்கிறீர்களா? அல்லது லாஜிக் மீறல் இருக்கிறதா? மைசூரில் எது அவர்கள் அப்பா அம்மா என்றா?

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கதை, தன் குழந்தைகள் இரண்டையும் கொன்று (இந்த லட்சணத்துல காதல் கணவன்), பிரியாணிக்கடைக்காரனை நம்பி ஓடப்பார்த்து, கொலைப்பழிக்கு ஆளான பிறகு சிறையில் வாடும் பெண்ணின் நினைவுதான் வந்தது

      Delete
    2. ஸ்ரீநடஹ்தை ஏன்று ஏதுமில்லை மைசூரில்பெறொர் இருப்பதாக சொல்லி இருக்கிறதாவாழ்க்கைக்கு லாஜிக் ஏதுல்லை சராச்சரி பெண்தானே ஜயந்தி

      Delete
    3. நெல்லை உலகில் ப்ல இட்ங்களில் பலசம்பவங்கள்

      Delete
  2. இந்தக் கதை முன்னரே வாசித்த நினைவு இருக்கிறது சார்.

    ஜயந்தியின் கணவன் இதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கலாம். அதற்கான விழிப்புணர்வு இல்லையோ? அது முதல் தவறு. அவன் விட்டுச் சென்றது...ஜயந்தி ஏற்கனவே மணமானவனை சட்ட ரீதியாக இல்லாமல் மணம் புரிந்தது தவறு. சிவகுமாரனின் தாய் செய்தது ஒரு பெண்ணுக்கே பெண் எதிரி என்பது போல் உடந்தையாய் இருந்தது...அவன் மனைவிக்கும் மருத்துவ உதவி பெற்றிருக்கலாம் ஆனால் அது இல்லாமல் யோசிக்காமல் சிக்கல்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள்....அதனால்தான் பிரச்சனை.

    ஆனால் இப்படி நடப்பதுண்டுதான்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதென்ன வாசித்த நினைவு சம்பவங்கள்கதை யை நகர்த்துகின் றன

      Delete
    2. //FRIDAY, NOVEMBER 9, 2012
      எங்கே தவறு...?

      எங்கே தவறு.....?
      -----------------
      ( ஒரு சிறு கதை )//

      நான் வாசித்த நினைவு என்று சொன்னது உங்கள் வலையிலேயே நீங்கள் எழுதி வந்ததைத்தான்...

      கீதா

      Delete
  3. ஜயந்தியின் பெற்றோர் எப்படி சிவகுமாரனை ஏற்றுக் கொண்டனர்?!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் ஏற்றுகொள்ள வேண்டுமா

      Delete
  4. //ஜயந்தியின் கதை கேட்கும்போது எங்கோ ஏதோ தவறு என்பது புரிகிறது. எங்கே என்று தெரிகிறதா.?. // - எல்லா இடங்களிலும் தவறுதான். ஜெயந்தி அல்லது அவள் கணவன்... இதுதான் விதி என்று வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கவேண்டும். அவன் போனபின் இவளாவது யாரையாவது மணந்திருக்கவேண்டும். கதையில் எல்லாருடைய செயலுமே தவறாகத்தான் தெரிகிறது. பொதுப்புத்தி ஜெயந்தியின் மீதுதான் குறை காணும்.

    ReplyDelete
  5. அவர்கள் வாழ்க்கையை வாழமுயன்ற்னர்

    ReplyDelete
  6. யதார்த்தநிலை இப்படித்தான் இருக்கும்..பணக்காரனாக சிவக்குமாரின் குடும்பம் இல்லையெனில் சகஜமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும்..

    ReplyDelete
  7. வித்தியாசமானசிந்தனை

    ReplyDelete