Saturday, September 21, 2019

தரம் சில விளக்கங்கள்



                              தரம்சில விளக்கங்கள்
                              ---------------------------------------

எழுதுவது எதற்காக? நண்பர் ஒருவர் நம் எண்ணங்களைக்கடத்தவே எழுதுகிறோம் என்று சொன்னதாக நினைவு  எனக்கு அது உடன்பாடு என்றாலும்  வாசிப்பவர்கள் எழுதப்படும் கருத்துகள் வாசிப்பவர்கள்  ஒப்புக்கொள்ளும்படி இருந்தாலேயே வாசித்துக் கருத்து இடுகிறார்கள் ஆனால் நான் சற்று மாற்றி யோசிப்பவன் பலரும் கடக்க மறுக்கும் பாதையில் பயணித்து   ஒரு சில இடங்களிலாவது எண்ணங்கள்போய்ச்சேரும்என்னும் நம்பிக்கையிலேயெ  எழுதுகிறேன் அப்படியே  எழுதுவதையே விரும்புகிறேன்  அப்படியெ என் எண்ணங்களைக் கடத்த விரும்புபவன் இதில் நான் ஊருடன் ஒத்து வாழ்வதை விரும்புவதில்லை

 இந்தபதிவு அது போல்தான்  இருக்கும்  வாயுள்ள பிள்ளையே பிழைத்துக் கொள்ளும் பல பொருட்களை நாம் வாங்குகிறோம்  ஆனால் அப்பொருள் குறித்த அறிவு நம்மில் பலருக்கும் இல்லை Have I RUFFLED SOME FEATHERS இத்தனை நாள் எழுத்திலும் நீ அதைத்தானே செய்து கொண்டிருக்கிறாய்  சோ இட் மாட்டர்ஸ் லிட்டில்
எந்தபொருளையும்  வாங்கும்போதும் நமக்கு அது பற்றிய  ஞானம்  என்ன என்று யோசிப்பதில்லை  ஒரு கலர் டி வி வாங்குகிறோம்  நமக்கு டிவி யின் வேலைப்பாடுகள்குறித்து என்ன தெரியும்  தெரிந்தவர் கோபமடைய வேண்டாம்
சுவிட்ச் போட்டால் படம்தெரிய வேண்டும் நம் வசதிக்கு ஏற்ப இருக்க வேண்டும் ஆக உற்பத்தியாளர்கள்  எப்படி வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள்என்று பார்ப்போம்
நாம்வாங்கும் பொருள் தரமுள்ளதாக  இருக்க வேண்டும் என்று  நினைக்கிறோம் ஆனால் தரம்பற்றிய நம் எண்ணங்கள்தான் என்ன ?அதிக விலை உள்ள பொருட்கள் தரமானதாக இருக்குமென்று நம்புகிறோம் விளம்பரங்களை நம்பி வாங்குகிறோம்  அதிகப்படியான விளம்பரங்கள் விலையை ஏற்றுமென்று தெரியாதவர்கள் நாம் ஒரே தயாரிக்குமிடத்திலிருந்துஒரே வகையான பல பொருட்கள்சந்தைக்கு வருகின்றன  நான் அறிந்தவரை வித்தியாசம் அதிகம்  இல்லை பாகேஜிங் மட்டும்மாறலாம் தயாரிப்பாளர்கள் ஒன்றை தெரிந்திருக்கிறர்கள் ஒரெ விஷயத்தை பலமுறை சொன்னால் அதுவே உணமை என்று எண்ணும் மனப்பான்மைநமக்கு வரும் 
 பொதுவாக தரமென்பதே வாடிக்கையாளரின் திருப்தியே  ஒரு பொருள் அதற்கான பணியை ச் செவ்வனே செய்தால் தரமானதுதான்  ஆனால் வாடிக்கையாளர்கள்திருப்தி என்னும் அளக்க முடியாத  ஒன்றும் இருக்கிறது ஒரு டையை நம்ஷர்டில் பிணைக்க ஒரு பின்  போதும் ஆனால்டைபின்கள் என்னும்பெயரில் சந்தையில்பல்வேறு வடிவில் விலையில் ஷேப்புகளில் இருக்கும் டை பின்னில் எது சிறந்தது என்பதை தீர்மானிப்பது   வாடிக்கையாளனே அதனால் அவனைக் கவர பல்வேறு உத்திகள்  தயாரிப்பாளரால் உபயோகிக்கபடுகிறது
விளம்பரம் என்பதே வியாபார உத்தி. பொருள் முதலில் சந்தையில் அறிமுகமாக விளம்பரம் ஓரளவு தேவை இருந்தாலும் அதையே ஓவராகச் செய்தால் விளைவுகள் எதிர்வினைப் பலன் தரும் எத்தனையோ விளம்பரப்படுத்தியும் படுத்துவிடும்சில திரைப்படங்கள் இதைப் புரியவைக்கும் வாடிக்கையாளன் எதிர்பார்ப்பே தரம் என்று விரிவாகவே  பதிவில் எழுதி இருக்கிறேன் விளம்பரங்கள் ஓரளவாவது நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் நம் மக்களுக்குப் பொதுவாகவே அதிக விலை அதிக தரம் என்னும் மாயை இருக்கிறது. இதை ஓரளவு எக்ஸ்ப்லாய்ட் செய்யலாம் ஆனால் குறைந்த காலத்தில் சாயம் வெளுத்து விடும் வாஷிங் பௌடருக்கான விளம்பரங்கள் முற்றிலும் தவறான எதிர்பார்ப்பைத் தருகின்றன. வாடிக்கையாளன் இம்மாதிரி பொருள்களில் தொடர்ந்து வாங்க மாட்டான் ஆகவேதான் தரம் பற்றிய புரிதல் முதலில் இருக்கவேண்டும் என்று எழுதுகிறேன்
தரம்பற்றிய புரிதலில் முக்கியமாக இருக்க வேண்டுவது  நம்மை
சோதனை எலிகளகள்கருதுகிறர்கள் என்பதே எம் ஆர் பி விலையை விட குறைந்தவிலையில் பொருட்கள்விற்பனை யாவதைக் காண்கிறோம் இன்னொரு உத்தி அதிக ஆண்டுகள்வாரண்டி என்பார்கள்நமக்குத் தெரியும்அந்தக் காகிதம் வேண்டியபோது நமக்குக் கிடைக்காது அதிக நாள் வாரண்டி என்பதில்  அந்தக்காகிதத்தின் மதிப்புகூட இருக்காது
ஒரு பொருளின் தரம் என்னவென்று யோசிக்கக்கூட விடாமல் அதே பொருளின் அடுத்த கவர்ச்சிகரமான விளம்பரம் அடுத்து வாங்குவோரை ஆக்கிரமிக்கறது. இந்த ஆக்கிரமித்தல் அடுத்து அடுத்து என்று வேகப்பாய்ச்சலில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தரம் இல்லையெனில் விற்பனை இல்லை என்கிற காலம் மாறி விட்டதாக நினைக்கிறேன்.
தரம்பற்றியபுரிதல் நமக்கு அவசியம்அதிக விலை அதிக தரம் என்பது ஒரு மாயை  அதில் பலரும்பயணிக்கிறார்களென்பதே நிஜம்  தரம் எனப்படுவதுயாதெனின் என்னும்  என்பதிவை  ஆறாயிரம் பேர்களுக்கும் அதிகமாக வாசித்துள்ளனர் அதில்  கண்டசெய்திகள் உள்வாங்கப்பட்டதா என்றுபுரியவில்லை   


    

28 comments:

  1. பொதுவா விலை அதிகம் என்றால் தரமானது என்ற மனநிலைதான் அனேகமாக எல்லோரிடமும் இருக்கு.

    அதே சமயம் ஜப்பான் பொருட்கள் தரமானவை, சைனா பொருட்கள் விலை மலிவு, தரமற்றவை என்பதும் பொது நினைப்புதான்.

    குவாலிட்டி கன்ட்ரோலில் செலவழிக்கும் பணம்தான் பொருளின் விலையை வித்தியாசப்படுத்துகிறது என நினைக்கிறேன். உணவில் இன்க்ரடியன்ட்ஸின் தரம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு சீனா ஜப்பான் பொருட்கள் பற்றி அதிக தெரியாது ஆனால் எண்ணிக்கையை உற்பத்தியில் அதிகம் சேர்ப்பது விலை குறைக்க ஒரு வழி என்பதுபுரிகிறதுகுவாலிடி இலவசம் என்று ஒரு பதிவு எழுதி இருக்கிறேன் குவாலிடி என்பத்ந்ந் ஒரு இண்டாஞ்சிபிள் விஷயம் பொடுவக நம்மில் பலரு நம் திருப்தி எதனால்என்பதை சிந்திப்பதில்லைஇத உணர்ந்துடான் ஓனர்ஸ் ப்ரைட் நெய்பர்ஸ் என்வி என்றெல்லாம்விளம்பரங்கள்

      Delete
  2. இங்கே யு.எஸ்ஸில் சீனப் பொருட்கள் தான் விற்பனையில் முதல் இடம். ஆகவே தரமற்றது எனச் சொல்ல முடியலை. இடத்துக்குத் தகுந்த தரம், விலை என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முதலில் தரமென்பது என்ன என்னும் புரிதல் அவசியம்

      Delete

    2. சீனர்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் மோசமில்லை அவர்கள் வியாபார நிறுவனங்களுக்கு ஏற்பவும் நாட்டுக்கு ஏற்பவும்தான் தயாரிக்கிறார்கள். அதற்குகேற்பதான் விலையும்...அமெரிக்காவிற்கு வரும் பொருட்கள் மற்ற நாடுகளுக்கு வரும் பொருட்களைவிட மிக தரமானது.. அப்படி வரும் பொருட்கள் தரமற்றதாக இருந்தால் அதாவது இங்குள்ள மினிமம் எதிர்பார்ப்புகளுக்கு குறைவாக இருந்தால் அந்த பொருளை வீற்பனை செய்யும் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் அதனால் தரம் குறைய வாய்ப்பு இல்லை

      Delete
    3. தரம் என்பது அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட minimum expectation க்கு உட்பட்டு தயாரிக்கபடும் பொருட்கள்

      Delete
    4. ம்னிமம் எக்ஸ்பெக்டேஷன் வாடிக்கயாளனுடையது என்பதே சரியாக இருக்கும்

      Delete
    5. விலை ஒன்றே முக்கியமென்று கருதி அதிகப்படியாக உற்பத்தி செய்த ஜப்பான் தன்நிலையை மாற்றிக் கொண்டதும்நினைவுக்கு நானெல்லாம்படிக்கும் போது ஜப்பானிய பென்கள் விலை குறைவாய் இருக்கும் ஆனால் இங்க் லீக்காகி தொல்லை கொடுக்கும்

      Delete
  3. பழைய பதிவையும் படித்தேன்.  தரமும் இடத்துக்குத் தகுந்து அமைகிறது.  உள்நாட்டில் விற்கப்படும் பொருள்கள், அதே பொருள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு கிடைக்கும்போது அதன் தரம் வித்தியாசமானதாய் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தரம்பற்றியபுரிதல் அதிகரித்துஇருக்கும் என்று நம்புகிறேன்

      Delete
  4. //தயாரிப்பாளர்கள் ஒன்றை தெரிந்திருக்கிறர்கள் ஒரே விஷயத்தை பலமுறை சொன்னால் அதுவே உணமை என்று எண்ணும் மனப்பான்மைநமக்கு வரும்//

    இது நிதர்சனமான உண்மை ஐயா.
    இருப்பினும் பழைய காலங்களில் வாழ்ந்த நல்ல எண்ணங்கள் படைத்த மனிதர்கள் குறைந்து வருவதே இதன் மூலகாரணம்.

    அதன் விளைவே தரமற்ற பொருட்கள் மற்றும் உணவு வகைகள்.

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி..பழைய காலம்னு சொல்லப்படற 40-50 வருடங்களுக்கு முன்னாலும் இப்படித்தான். என்ன ஒண்ணு..இப்போ கலப்படத்தை கண்டுபிடிக்கவும், தெரிஞ்சிக்கவும் வாய்ப்பு இருக்கு (சக்தி மிளகாய்பொடி உரம் போல)

      இன்னொரு பாயிண்ட். பழைய காலத்துல உயிர் வாழ்தல் 60 வயசுன்னா இப்போ அது 70-80ன்னு அதிகமாத்தான் ஆகுது.

      Delete
    2. /@கில்லர்ஜி /தயாரிப்பாளர்கள் ஒன்றை தெரிந்திருக்கிறர்கள் ஒரே விஷயத்தை பலமுறை சொன்னால் அதுவே உணமை என்று எண்ணும் மனப்பான்மைநமக்கு வரும்//

      அடாவது நம்பிரதமர் போல ....!

      Delete
    3. பதிவு தரம்பற்றிய புரிதல் அதிகரிக்கவே எழுதப்பட்டது

      Delete
  5. தரமான பொருட்கள் என்றாலும் தேவையான அளவு விளம்பரம் செய்தால்தான் விற்க முடியும் என்பதும் உண்மை. எதுவும் அளவோடு இருக்க வேண்டும் என்பது விளம்பரங்களுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் விளம்பரங்கள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் உ-ம் 5000 வருட பாரம்பரியம் நம்மில் பழமை வாதிகளை குறி வைக்கிறது

      Delete
  6. தரமும் நம் மனதை பொறுத்து மாறி விட்டது...!

    ReplyDelete
    Replies
    1. நம்மனம் நம்கட்டுப்பாட்டில் இல்லையே அடுத்தவன் என்ன செய்கிறான் என்படையே பார்க்கும்

      Delete
  7. //வாசிப்பவர்கள் எழுதப்படும் கருத்துகள் வாசிப்பவர்கள் ஒப்புக்கொள்ளும்படி இருந்தாலேயே வாசித்துக் கருத்து இடுகிறார்கள்..//

    அப்படியா நினைக்கிறீர்கள்? தாம் இதைப் படித்து விட்டதாக பதிவிட்டவருக்குத் தெரியப்படுத்தவே பல பின்னூட்டங்கள் அமைவதாக நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. அதற்கு ஆஜர் குட் பிரமாதம்போன்ற வரிகள்போதுமே அப்படி வரும்பின்னூட்டங்கள் எழுதுபவர் மனம்புண்படாதிருக்க எழுதப்படுகிறதாம்

    ReplyDelete
    Replies
    1. பதிவிற்கு வரும் பின்னுட்டங்களை படித்தாலே தெரியும் எது ஆஜர் ஆனதற்கு எது பதிவு சம்பந்தமாக படித்து கருத்து இட்டது என்று.... நான் சிலசமயங்களிள் விளக்கமாக கருத்து இட வேண்டும் ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் நேரம் இடம் கொடுப்பது இல்லை என்பதால் சுருக்கமாக சில வரிகளில் சொல்லிவிட்டு செல்ல நேரிடுகிறது

      Delete
    2. உங்களுக்கு வந்த சில பின்னூட்டங்கள் நினைவுக்கு வருகிறது முக்கியமாக சேட்டைக்காரனின் பின்னூட்டங்கள் பிறகு ஏனோ காணவில்லை விவாதிக்கவே முடியாதபடியான பின்னூட்டமென்றே தோன்றுகிற்து

      Delete
  9. அலைபேசியில் வாசிப்பவர்கள் பெரும்பாலும் கருத்திட மாட்டார்கள். அவர்களால் தமிழ் தட்டெழுத்து அலைபேசியில் அடிக்க முடியாது அல்லது தெரியாது. உள்வாங்கும் ஒவ்வொருவரும் அமைதியாக உள்வாங்கி விட்டு கடந்தே செல்கின்றார்கள். சிலரின் விமர்சனம் நாம் எழுதியதை விட அழகாக அருமையாக இருக்கும். நமக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வரும் பின்னூட்டங்களில் காணொளி அலை பேசியில் காண முடிய வில்லை என்றே வருகிறது

      Delete
  10. பலரும் கடக்க மறுக்கும் பாதையில் பயணிக்கும் உங்களைப் பாராட்டுகிறேன் ; அதுவே பயனுள்ள பயணம் . விலை மிகுதி என்றால் உயர்தரம் என நம்புவது தவறுதான் .

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிறு திருத்தம் பலரும் கடக்க மறுக்கும் பாதையில் என்பதைவிட அப்படிக்கடந்தாலவர்களை வெளிப்படுத்திக் கொள்ள நேரலாம் என்பதே சரியாகும்

      Delete
  11. விளம்பரங்கள் மூலம் வியாதியைப் பெருக்கும் விஷயங்களை ஆரோக்யம் என்று புகுத்தி விடுகிறார்கள். அதன் பின் நாம் மருந்தும் மாத்திரையுமாக வாங்கிக் கொண்டு இருக்கிறோம்.

    ReplyDelete
  12. இல்லாத விஷயத்தை இருப்பதுபோல் காண்பிக்கும் விளம்பாங்கள்தெரிந்தால் ஒதுக்கிவிட வேண்டும்

    ReplyDelete