Friday, October 2, 2020

காந்தி ஏன் மஹாத்மா

 

காந்தியால் வரும்  எண்ணங்கள் 

 

காந்தி என்றதும் நினைவுக்கு வருவது அவரை நான்  சிறுவனாக இருந்தபோது அரக்கோணத்தில் இருந்து அப்போதைய மதராஸுக்கு  என்னை என் தந்தை கூட்டிச் சென்றதுதான் காந்தி என்றதும் நினைவுக்கு வருவது அவரது அஹிம்சைகொள்கையும்  பொய் பேசாதிருத்தலும்தான் அதை எழுதப்பொனால் அரதப் பழசு என்பார்கள் என் ஆசிரியர் காந்தியின் வாக்காக  சொன்னது நினைவுக்கு வருகிறது the  sole justification for existence is the search for truth என்பார்   சிலருக்கு சர்ச் ஃபர் ட்ருத் என்றாலேயே கடவுளை கண்டறிவதுதான்  ஆனால் நான்  உண்மையை கண்டறிவதில் முயற்சி செய்கிறேன்மேலும் பொய் கூறுவதை தவிர்க்கிறேன்  தெரியாமல் பொய் சொல்லி இருக்கலாம் அதனால்தான் தவிர்க்கிறேன்   என்றேன் உண்மையை  அறிய கேள்விகள் கேட்பதுண்டு  ஆனல் கேள்விகள் கேட்காமலேயே பிறர்  சொல்வதை நம்ப முடியவில்லை

இதை எழுதும்போது காந்தியைப் போல் இருக்கமுடியுமா என்னும்கேள்வியும் எழுகிறதுகாந்தியைப்போல் எல்லோராலும் இருக்க முடியாததால் தானே அவருக்கு இந்தப்பெயரும் புகழும்ஒரு இண்ட்ராஸ்பெக்‌ஷன் செய்யும்போது  என்குறை எனக்கு தெரிகிறது என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லைஆனால் குறை தெரிவதே கட்டுப்படுத்த முதல்படி என்று தெரிகிறது இதுவே டூ லேட்டோ?       

 

 

 

 

 

 

  

 

24 comments:

 1. சிலரால்தான் அப்படி இருக்க முடிகிறது.  அதனால்தான் அவர் மஹாத்மா.

  ReplyDelete
  Replies
  1. மஹாத்மாவின் நற்குண்ங்களை தெரிந்து கொண்டு கடை பிடிக்கமுயல்வது தவறில்லையே

   Delete
 2. ஒரு சூரியன், ஒரு நிலவு, ஒரு மகாத்மா.

  ReplyDelete
 3. தன்னை அறிதலே ஞானம்...அதற்கான முயற்சியே வாழுவதற்கான அர்த்தம்..எனக் கொள்ளலாம்..

  ReplyDelete
 4. //என்குறை எனக்கு தெரிகிறது என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லைஆனால் குறை தெரிவதே கட்டுப்படுத்த முதல்படி என்று தெரிகிறது இதுவே டூ லேட்டோ?//நிச்சயமாக லேட் இல்லை. Better late than never.  தன்னிடம் இருக்கும் குறையை உணர்வதே ஒரு பெரிய விஷயம்.  வணங்குகிறேன்.        

  ReplyDelete
 5. தேவகோட்டையாரின் ஒரே வரி ரொம்ப ரொம்ப அழகு. அதை வாசித்த கணத்தில் பிரமித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களை என் பக்கம் காண முடிவதில்லையே ஒருசிறு கதை எழுதி இருந்தேன் வருவீர்கள் எனக் காத்து இருந்தேன்

   Delete
  2. முடிந்த பொழுது வாசிக்கும் பதிவுகளுக்கு ஏதாவது சொல்லத் தோன்றினால் சொல்கிறேன் என்ற அளவில் இணையச் செயல்பாட்டைக் குறைத்துக் கொண்டிருக்கிறேன். இது மற்ற எனது பணிகளில் சுணக்கம் ஏற்படாமலிருக்க பெருமளவு உதவுகிறது. அதான் காரணம் ஐயா.

   Delete
  3. உங்கள் சிறுகதையை வாசிக்கிறேன். நன்றி, ஐயா.

   Delete
  4. உங்கள் விமரிசனம் எதிர் நோக்கி

   Delete
 6. கேள்வி ஏழ வேண்டும் - குழந்தைகளைப் போல...!

  ReplyDelete
  Replies
  1. எளிதில் அடக்கி விடலாம்

   Delete
 7. ஒருத்தரைப் போல் இன்னொருத்தர் இருப்பது கடினம். நாம் நாமாக இருந்தாலே போதுமானது.

  ReplyDelete
 8. உண்மைதான். அவர் மஹாத்மா.

  //அவரது அஹிம்சைகொள்கையும் // - அந்த அஹிம்சை கொள்கையால், மனைவி, மகன் இவர்களை ஹிம்சிக்காமல் அவரால் இருக்க முடியவில்லையே

  ReplyDelete
  Replies
  1. நெத அஹிம்சயை புரிந்து கொள்வ்தில் இருக்கிறது

   Delete
 9. நாட்டுக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்துத் தொண்டாற்றி எளிய வாழ்க்கை வாழ்ந்து அஹிம்சை வழியில் போராடிய மஹாத்மாவை எவ்வளவு போற்றினாலும் தகும் .இறுதிக் காலத்தில் மனம் வெதும்பி ' நான் செல்லாக்காசாகிவிட்டேன் " என்றூ அறிக்கை விட வேண்டிவந்ததே!

  ReplyDelete
  Replies
  1. .இறுதிக் காலத்தில் மனம் வெதும்பி ' நான் செல்லாக்காசாகிவிட்டேன் " என்றூ அறிக்கை விட வேண்டிவந்ததே!அப்படியா தெரியாத செய்தி

   Delete
 10. குறை தெரிவதே என ஒத்துக்கொள்ளும்போதே உயர்ந்துவிடுகின்றீர்கள் ஐயா.

  ReplyDelete
 11. ஒருவர் குறை அவருக்கு தெரியாதா இது சாதாரண விஷயம்

  ReplyDelete